Tamil Star |
- ரொறொன்ரோ பூராகவும் அவசர நேர போக்குவரத்தை மந்த கதிக்கு தள்ளிய பனி!.
- கனேடிய யுத்த விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆயுதக் கிடங்குகளை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தன!
- விண்ணில் திரியும் ரஷ்யாவின் மர்ம விண்கலம்! அதிர்ச்சியில் உலக நாடுகள்
- ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளம் அம்பலம்: திடுக்கிடும் தகவல்கள்
- வாடகைத் தாய் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
- ஜெயலலிதாவை நீக்க முடியவில்லையே! ஏங்கும் செய்தித்துறை
- ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினமா?
- தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
| ரொறொன்ரோ பூராகவும் அவசர நேர போக்குவரத்தை மந்த கதிக்கு தள்ளிய பனி!. Posted: 20 Nov 2014 05:03 AM PST
கனடா- ஒன்ராறியோவின் தென்பகுதி நகரங்கள் ரொறொன்ரோ உட்பட்ட பெரும்பாலானவற்றிற்கு கனடா சுற்றச்சூழல் பிரிவு விசேட காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 5-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஹமில்ரன், ஒட்டாவா, கோன்வால், ஹால்ரன், கிங்ஸ்ரன், லண்டன், நயாகரா, ஒக்ஸ்வோட்-பிரான்ட், பீற்றபொறோ, சானியா, வாட்டலூ, வின்சர் மற்றும் யோர்க் பிரதேசம் போன்றன இதில் அடங்குகின்றன. புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த பனி பொழிவு ரொறொன்ரோ பெரும்பாக முழவதிலும் அவசர நேர போக்குவரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ளது. நியு யோர்க்கின் பல மாநிலங்கள் 5-அடிகளிற்கும் மேலான பனியினால் போர்த்தப்பட்டுள்ளது. பவ்வலோ நகரம் உட்பட்ட எறிக் கவுன்ரி பகுதிகளில் பெருந்தொகை பனி காரணமாக அவசர காலநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய யுத்த விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆயுதக் கிடங்குகளை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தன! Posted: 20 Nov 2014 05:01 AM PST
ஐ.எஸ்ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் குண்டுகளை தயாரிக்க பயன்படுத்தி வந்த தொழிற்சாலை கட்டிடத் தொகுதி ஒன்றின் மீது கனேடிய யுத்த விமானங்கள் குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளன. ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை மீது கனேடிய போர் விமானங்களுடன், ஏனைய அங்கத்துவ நாடுகளின் விமானங்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் அந்த ஆயுத தொழிற்சாலை தரைமட்டமானதாக கூறப்படுகின்றது. ஈராக்கிய படையினர் மீது தாக்குதலை நடாத்துவதற்கான கண்ணிவெடிகள், வீதியோர குண்டுகள், பொறி வெடிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு அந்த தொழிற்சாலை பயன்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூல் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றமை தொடர்பான தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ரொப் நிக்கோல்சனின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. கனடாவின் CF-18 வகை போர் விமானங்கள் நான்கு குறித்த அந்த இலக்கின் மீது எட்டு குண்டுகளை துல்லியமாக வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதனை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தமது தளங்களுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பிலான விபரங்களை நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள போதிலும், தாக்குதல் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விண்ணில் திரியும் ரஷ்யாவின் மர்ம விண்கலம்! அதிர்ச்சியில் உலக நாடுகள் Posted: 20 Nov 2014 04:58 AM PST
ரஷ்யா ரகசியமான முறையில் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கடந்த மே மாதம் இந்த இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. தெற்கு பசிபிக் கடலின் மீது பறந்த போது இது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இது விண்ணில் சுற்றி வரும் விண்கலன்களை கண்காணிக்கவும், விண்வெளியில் உடைந்து மிதக்கும் விண்கலன் இடிபாடுகளை அகற்றவும் உதவும் என கருதப்பட்டது. தற்போது அது எதிரி நாட்டு விண்கலன்களை அழிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விண்கலன் போன்ற மர்ம எந்திரத்துக்கு 2014–28 இ என பெயரிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளம் அம்பலம்: திடுக்கிடும் தகவல்கள் Posted: 20 Nov 2014 04:56 AM PST
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட அமெரிக்க சமூக தொண்டு நிறுவன ஊழியர் பீட்டர் காசிக் (Pater kassig Age-26) சமீபத்தில் தலைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இவருடன் பிணைக்கைதிகளாக பிடிபட்ட 18 சிரியா ராணுவ வீரர்களும் தலைத் துண்டித்து கொல்லப்பட்டனர். இந்த படுகொலை காணொளியில் பிணைக்கைதிகளின் தலைத் துண்டிக்க, அவர்களின் பின்புறம் கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் மேக்ஸிம் ஹவுசார்ட் (Maxime Hauchard Age-22) மற்றும் மைக்கில் டோஸ் சாண்டோஸ் (Michael Dos Santos) என்ற பிரான்சை சேர்ந்த இரு நபர்கள் இருப்பதாக பிரான்ஸ் அதிகாரி பிரான்கோயிஸ் மொலின்ஸ் (Francois Molins) கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் கார்டிப் மருத்துவக்கல்லூரியில் (Cardiff University) பயின்ற நசீர் முத்தன்னா (Nasser Muthana Age-20) என்பவனும் காணொளியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாடகைத் தாய் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. Posted: 20 Nov 2014 04:54 AM PST
அதில் ஒன்று வாடகைத் தாய் முறை. குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு தனது கருப்பையில் குழந்தை வளர்த்து, பெற்றுத்தருபவரே வாடகைத்தாய். பல நாடுகள் இம்முறைக்கு தடை விதித்திருக்கின்றன. என்றாலும் இந்தியாவில் இதற்கு தடை இல்லை. பணத்துக்காக மற்றொருவரின் கர்ப்பத்தை தாங்குவதற்கு ஏராளமான வாடகைத்தாய்கள் இங்கு முன் வருகின்றனர். வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகைத்தாய்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளை பெற்றெடுத்து செல்கின்றனர். இந்தியாவில் இரண்டரை கோடி கருத்தரிக்க இயலாத தம்பதிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பலர் வாடகைத்தாய்கள் மூலம் தங்களுக்கு குழந்தைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். குழந்தை பேறு இல்லாத வெளிநாட்டு தம்பதிகளும் வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகளும் இந்தியா வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் இதற்கான செலவு குறைவு என்பது முக்கிய காரணம். எல்லாமே மலிவாக கிடைப்பது போல வாடகைத்தாயும் இங்கு மலிவாக கிடைக்கிறார்கள் என்பதே வெளிநாட்டினரின் அதிக அளவிலான வரவுக்கு காரணம். டெல்லி செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வருபவர்களில் 40 சதவீதத்தினர் வெளிநாட்டினர். 30 சதவீதத்தினர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். ஏனைய சதவீதத்தினர் மட்டுமே இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயலலிதாவை நீக்க முடியவில்லையே! ஏங்கும் செய்தித்துறை Posted: 20 Nov 2014 04:52 AM PST
செய்தித்துறை தளத்தில் முதல்வர் ஜெயலலிதா என்றுதான் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்பான செய்திகளும், படங்களுமே இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தது, நிதியுதவி அளித்தது உள்ளிட்ட படங்கள்தான் இடம் பெற்றுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரோ, படமோ, அவர் குறித்த செய்திகளோ இல்லை. அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பணி இந்தத் துறையிடம் உள்ளது. ஆனால் அந்தத் துறையோ தவறான தகவல்களுடன் காணப்பட்டது. இந்த துறைதான் முதல்வர், அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ படங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இத்துறையின் இணையதளத்திலேயே இவ்வாறு தவறான படங்கள் இடம் பெற்றிருந்தது ஆச்சரியமாக உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினமா? Posted: 20 Nov 2014 04:50 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 20 Nov 2014 03:56 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















