Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிறுநீரக கோளாறு பாதிப்பு: திருப்பதி எம்.எல்.ஏ.வுக்கு சென்னையில் தீவிர சிகிச்சை

Posted: 20 Nov 2014 11:15 PM PST

திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வெங்கட்ரமணா. காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக இருந்த இவர் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் திருப்பதி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் மாயம்

Posted: 20 Nov 2014 10:57 PM PST

நேபாளத்தில் புட்சவுர் பகுதியில் உள்ள ஜார்கோட்டில் இருந்து சுர்கெட் என்ற இடத்துக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை சுர்கெட் அருகே பெரி ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டருக்கு வழி கொடுக்க பஸ்சை டிரைவர் திருப்பினார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளராக ஸ்மிருதி நிறுத்தம்: பா.ஜனதா முடிவு

Posted: 20 Nov 2014 10:04 PM PST

கடந்த ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரி ஆனார்.

திருப்பதி மலையை சுற்றி 10 கி.மீ. தூரம் இரும்பு வேலி

Posted: 20 Nov 2014 09:49 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. இதனால் பாதுகாப்பை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலையை சுற்றி பாதுகாப்பு கவசம் போல இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு இப்போது தேவஸ்தானம் இறுதி வடிவம் கொடுத்து பணியை தொடங்க

மிசோரமில் நில நடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு

Posted: 20 Nov 2014 08:58 PM PST

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 5.4 ஆக பதிவாகி இருந்தது.

தெலுங்கு தேசம் கட்சியில் எனக்கு மரியாதை இல்லை: நடிகர் சுமன் வேதனை

Posted: 20 Nov 2014 08:50 PM PST

தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக இருக்கும் நடிகர் சுமன் தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக உள்ளார். திருப்பதி வந்த சுமன் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையின்போது ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் 36 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். தெலுங்கு, தமிழ், கன்னடம்,

எபோலா தாக்கியவர்கள் 3 மாதம் இந்தியாவுக்குள் நுழைய தடை: மத்திய அரசு முடிவு

Posted: 20 Nov 2014 08:50 PM PST

லைபீரியா, கினியா, சியாரா லியோன் நாடுகளில் பரவியுள்ள எபோலா நோய்க்கு இதுவரை 5438 பேர் பலியாகி உள்ளனர். எபோலா நோய் நேரடியாக கிட்னியையும் நுரையீரலையும் தாக்கி உயிரை பறிக்கும் கொடூரம் கொண்டது. இந்த நோயை குணப்படுத்த இதுவரை முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா நோய் இந்தியாவுக்குள் வராமல் இருப்பதை தடுக்க மத்திய அரசு

காதல் தகராறில் 10–ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை: பள்ளி தோழர்கள் 2 பேர் கைது

Posted: 20 Nov 2014 08:28 PM PST

கேரள மாநிலம் காசர் கோட்டை அடுத்த காஞ்சாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், மீனவர். இவரது மகன் அபிலாஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அபிலாஷ் கடந்த 15–ந்தேதி பள்ளிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல

நேபாள சுற்றுப்பயணத்தின்போது சீதை பிறந்த இடத்துக்கு பிரதமர் மோடி செல்ல மாட்டார்: மத்திய அரசு

Posted: 20 Nov 2014 08:26 PM PST

நேபாள தலைநகர் காட்மண்டுவில் அடுத்த வாரம் 26, 27–ந்தேதிகளில் 2 நாட்கள் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 25–ந்தேதி நேபாளத்துக்கு செல்கிறார். நேபாள சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி ஜனக்பூர் மற்றும்

முல்லைப்பெரியாறு விவகாரம்: டெல்லியில் இரு மாநில அமைச்சர்கள் கூட்டம்-மத்திய அரசு ஏற்பாடு

Posted: 20 Nov 2014 07:46 PM PST

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரள அரசும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும் என்று தமிழக அரசும் வலியுறுத்தி வருகின்றன.

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு

Posted: 20 Nov 2014 04:13 PM PST

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி உள்ளது.

சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி

Posted: 20 Nov 2014 11:54 AM PST

சென்னையில் ரூ.3,267 கோடி செலவில் மோனோ ரெயில் சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில்

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: உமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல்

Posted: 20 Nov 2014 11:06 AM PST

காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல்தலைவருமான உமர் அப்துல்லா பீர்வா மற்றும் சோனாவார் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பீர்வா தொகுதியில் 3-வது கட்டமாக

எபோலாவை கண்டுபிடிக்க ஏர்போர்ட்களில் தெர்மல் ஸ்கேனர் கருவிகள்

Posted: 20 Nov 2014 10:40 AM PST

எபோலா போன்ற கொடிய வைரஸ் நோய்களை அடையாளம் காண நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் 24 புதிய தெர்மல் ஸ்கேனர்களை பொருத்த மத்திய அரசின் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற 18 கருவிகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய (குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில்

பாக்சிங் அகாடமிக்காக மேரி கோமுக்கு ரூ.5 லட்சம் நிதி: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது

Posted: 20 Nov 2014 08:26 AM PST

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதற்காக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி பெற்றார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மேரி கோம், இன்று தனது கணவருடன் சென்று எடல்விஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ்

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்: பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்

Posted: 20 Nov 2014 06:53 AM PST

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்கெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் 2011-ம் ஆண்டு கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, போதைப் பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பைக் கண்டித்தும், மீனவர்களை விடுதலை

அசாமில் தேசிய பூங்கா அருகே காட்டெருமைகள் தாக்கியதில் 4 பெண்கள் படுகாயம்

Posted: 20 Nov 2014 05:12 AM PST

அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் தேசிய பூங்கா அருகில் காட்டெருமைகள் தாக்கியதில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மனாஸ் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய பூங்கா அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்

டெல்லி ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சோயிப் இக்பால் காங்கிரசில் இணைந்தார்

Posted: 20 Nov 2014 04:50 AM PST

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சோயிப் இக்பால் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புதுடெல்லியில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாட்டியா மகால் தொகுதி எம்.எல்.ஏ.வான இக்பால் இன்று தனது மகன் முகமது இக்பால், மருமகன் குர்ரம் இக்பால் (இவர்கள்

2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி

Posted: 20 Nov 2014 02:42 AM PST

2ஜி ஊழல் வழக்கு குறித்த விசாரணை செய்யும் பொறுப்பிலிருந்து சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்காவை நீக்கவேண்டும் என்று கூறி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் சின்காவுக்கு எதிராக பூஷண் தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதாக

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு 28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

Posted: 20 Nov 2014 02:14 AM PST

அரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால் (63). அரசாங்கம் போல தனது ஆசிரமத்தை நடத்தி வந்த ராம்பால், கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், விசாரணைக்காக மீண்டும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. அவர் மீது பஞ்சாப், அரியானா கோர்ட்டுகளை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™