Tamil Star |
| Posted: 04 Nov 2014 01:40 AM PST
டெஸ்ட் போட்டிக்கான 'ஆல்–ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்க்) பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் 'ஆல்–ரவுண்டர்களுக்கான' பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (357 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர்(348), வங்கதேசத்தின் சாகிப் (346) உள்ளனர். யூனிஸ் கான் முன்னேற்றம்: ' பேட்ஸ்மேன்களுக்கான' தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தானின் யூனிஸ் கான் ஒரு இடம் முன்னேறி, 6வது இடத்தை பிடித்தார். இதே தொடரில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா 3 இடங்கள் முன்னேறி 8வது இடம் பிடித்தார். சக வீரர் அசார் அலி 18வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்தார். முதல் இரண்டு இடங்கள் முறையே, இலங்கையின் சங்ககரா, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் உள்ளனர். மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் உள்ளார். பவுலர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், ஆஸ்திரேலியாவின் ரியான் ஹாரிஸ் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மூன்றாவது இடத்தை இலங்கையின் ஹெராத் வகிக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

