மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பெங்களூரில் இளம்பெண்ணை கத்திமுனையில் கற்பழித்த கொள்ளை கும்பல் 4 பேர் கைது
- திருப்பதி விடுதியில் கைக்குழந்தை தவிப்பு
- டெல்லி சட்டசபை தேர்தல்: ஷீலா தீட்சித் தலைமையில் மீண்டும் காங். களம் இறங்குகிறது
- கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜனதாவை முறியடிக்க லல்லு–நிதிஷ் கூட்டாக பிரசாரம்
- சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு
- தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை
- கொல்கத்தா துறைமுகத்துக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: மத்திய அரசு எச்சரிக்கை
- சாரதா சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் பிஜு ஜனதாதள எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.கள் 2 பேர் கைது
- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை சிறையில் சந்தித்தார் இந்திய தூதர்
- இருட்டறையில் இயங்கும் உணவகம்-தியேட்டர்: ஆமதாபாத் நகரில் தொடக்கம்
- காஷ்மீரில் 2 வாலிபர்கள் சுட்டுக்கொலை: 15 ராணுவ வீரர்கள் இடமாற்றம்
- மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் விருது: சோனியாகாந்தி பாராட்டு
- செங்கல் சூளையில் கல் குவியல் சரிந்ததில் 2 குழந்தைகள் பலி
- முத்தத் திருவிழா நடத்த முயன்ற 100 பேர் மீது வழக்குப் பதிவு
- வதோதராவில் முஹர்ரம் ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்து உபசரித்த இந்து பூசாரி
- ஊட்டச்சத்து குறைபாடு: அட்டப்பாடியில் குழந்தைகள் பலி 16 ஆக உயர்வு
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும்: சுப்பிரமணியசாமி போர்க்கொடி
- ஐ.பி.எல். போட்டிகளை அசாமில் நடத்தியிருக்க வேண்டும்: தருண் கோகாய்
- ஆக்ஸிஜன் இல்லாததால் பிரசவித்த குழந்தையை பறிகொடுத்த தாய்க்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு
| பெங்களூரில் இளம்பெண்ணை கத்திமுனையில் கற்பழித்த கொள்ளை கும்பல் 4 பேர் கைது Posted: 04 Nov 2014 09:40 PM PST பெங்களூர் எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கணவன்–மனைவி, மாமியார் ஆகியோர் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நள்ளிரவில் அவர்களது வீட்டுக் கதவை தட்டினார்கள். உடனே கணவர் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தார். கத்தியுடன் நின்றிருந்த 4 பேரும் அவரை மிரட்டி வீட்டுக்குள் தள்ளிச் சென்றனர். |
| திருப்பதி விடுதியில் கைக்குழந்தை தவிப்பு Posted: 04 Nov 2014 09:37 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கும் விடுதியில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக தவித்தபடி கிடந்தது. சேஷாத்திரி நகர் தங்கும் விடுதி அறை எண்.481–ல் உள்ள படிக்கட்டில் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கிடந்தது. |
| டெல்லி சட்டசபை தேர்தல்: ஷீலா தீட்சித் தலைமையில் மீண்டும் காங். களம் இறங்குகிறது Posted: 04 Nov 2014 09:30 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் களம் இறங்குகிறது. ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் நிலவி வந்த டெல்லியில் சட்டசபையை கலைக்க ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அதை ஏற்றுக் கொண்டு மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி |
| கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் Posted: 04 Nov 2014 09:21 PM PST கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தற்கொலைகளில் ஐந்தில் ஒன்றிற்கு நோயால் ஏற்படும் வலி மற்றும் அவமானம் காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் சேகரித்துள்ள தகவலின் படி, 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் புற்று நோய், எய்ட்ஸ், பக்கவாதம் போன்ற பாதிப்பிற்கு ஆளாகி, அவதிப்பட்ட 26,426 பேர் தங்கள் வாழ்க்கையை |
| ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜனதாவை முறியடிக்க லல்லு–நிதிஷ் கூட்டாக பிரசாரம் Posted: 04 Nov 2014 08:48 PM PST காஷ்மீர் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கும் வருகிற 25–ந்தேதி முதல் 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துடன் பீகாரின் சில பகுதிகள் இணைந்து இருப்பதால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் ஜார்க்கண்ட் தேர்தலில் கவனம் செலுத்துகின்றன. இங்கு மாநில கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, |
| சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு Posted: 04 Nov 2014 08:34 PM PST கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதா நாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுபற்றி சரிதாநாயர் போலீசில் புகார் செய்ததோடு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். |
| தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை Posted: 04 Nov 2014 07:39 PM PST தெலுங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதிவி ஏற்ற ஐந்து மாத காலத்தில் வறட்சி, எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமைக்கு ஆளானதாக கூறப்படும் சுமார் 350 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கொல்கத்தா துறைமுகத்துக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: மத்திய அரசு எச்சரிக்கை Posted: 04 Nov 2014 06:47 PM PST மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகத்தில் இந்த வாரம் பாகிஸ்தான் கப்பல் படையின் உதவி பெறும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த தகவல் துறைமுக பாதுகாப்பை கவனித்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டது. |
| சாரதா சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் பிஜு ஜனதாதள எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.கள் 2 பேர் கைது Posted: 04 Nov 2014 06:36 PM PST இந்தியா முழுவதும் பல நகரங்களில் கிளைகளை அமைத்து நடத்தப்பட்ட சாரதா சீட்டு கம்பெனியில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி அந்த கம்பெனியின் தலைமை நிர்வாக இயக்குனர் அஞ்சான் |
| இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை சிறையில் சந்தித்தார் இந்திய தூதர் Posted: 04 Nov 2014 06:18 PM PST ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினர். அவர்களுடன் இலங்கை மீனவர்கள் 3 பேரும் பிடிபட்டனர். |
| இருட்டறையில் இயங்கும் உணவகம்-தியேட்டர்: ஆமதாபாத் நகரில் தொடக்கம் Posted: 04 Nov 2014 01:57 PM PST உணவகங்களுக்குச் சென்றால் பளிச்சென்று விளக்குகள் ஒளிரும் காட்சியைத்தான் நாம் காண்போம். தியேட்டரிலும் கண்களைக் கவரும் வண்ண விளக்குகள் ஜொலிக்கும் காட்சியை பார்ப்போம். இவை எதுவுமே இல்லாத இருட்டறையில் இயங்கும், உணவகத்துடன் கூடிய தியேட்டர் ஒன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் அண்மையில் திறக்கப்பட்டு |
| காஷ்மீரில் 2 வாலிபர்கள் சுட்டுக்கொலை: 15 ராணுவ வீரர்கள் இடமாற்றம் Posted: 04 Nov 2014 12:07 PM PST காஷ்மீர் மாநிலம் பத்கம் மாவட்டம் சாட்டர்காம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் ஒரு மாருதி கார் மீது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில், உள்ளே இருந்த 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்களில், 2 பேர் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து, காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை |
| மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் விருது: சோனியாகாந்தி பாராட்டு Posted: 04 Nov 2014 11:50 AM PST முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, ஜப்பான் நாட்டின் மிக உயரிய தேசிய விருது ('தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்') அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, அவர் ஜப்பான்-இந்தியா இடையேயான உறவு தழைப்பதற்கும், வலுப்படுவதற்கும் 35 ஆண்டுகளுக்கு மேலாக பங்களிப்பு செய்ததற்காக வழங்கப்படுவதாக ஜப்பான் கூறுகிறது. |
| செங்கல் சூளையில் கல் குவியல் சரிந்ததில் 2 குழந்தைகள் பலி Posted: 04 Nov 2014 09:04 AM PST ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் சிலர் அதே மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டம், கதசுங்குடா கிராமத்தில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளிகள் குடும்பத்துடன் சூளை அமைந்துள்ள பகுதியிலேயே தங்கியுள்ளனர். அங்கு களிமண்ணை பிசைந்து வடிவமாக அறுத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான பச்சைக் கற்கள் சூளையில் தீயிட்டு கொளுத்தி வேக வைப்பதற்காக திப்பைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. |
| முத்தத் திருவிழா நடத்த முயன்ற 100 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 04 Nov 2014 08:40 AM PST கேரளாவில் முத்தத் திருவிழா நடத்த முயன்ற 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சம் செய்தனர். அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், |
| வதோதராவில் முஹர்ரம் ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்து உபசரித்த இந்து பூசாரி Posted: 04 Nov 2014 08:25 AM PST மதங்களால் நாம் வேறுபட்டு இருப்பினும், உணர்வினால் நாம் அனைவரும் ஒரு கொடியில் பூத்த மலர்களே என்பதை நிரூபிக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக கோயில் பூசாரியாக இருக்கும் ஒருவர், முஹர்ரம் ஊர்வத்துக்கு வரவேற்பு அளித்த நிகழ்ச்சி சான்றாக |
| ஊட்டச்சத்து குறைபாடு: அட்டப்பாடியில் குழந்தைகள் பலி 16 ஆக உயர்வு Posted: 04 Nov 2014 08:13 AM PST ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அட்டப்பாடியில் மேலும் ஒரு குழந்தை இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக கேரளாவின் அட்டப்பாடி பழங்குடியின பகுதியில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு |
| தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும்: சுப்பிரமணியசாமி போர்க்கொடி Posted: 04 Nov 2014 07:22 AM PST பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இலங்கையின் கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது போன்றவற்றுக்கு மோடியின் தலைமையிலான |
| ஐ.பி.எல். போட்டிகளை அசாமில் நடத்தியிருக்க வேண்டும்: தருண் கோகாய் Posted: 04 Nov 2014 06:07 AM PST ஐ.பி.எல். போட்டிகளை அசாமில் நடத்தியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுகாத்தியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அசாம் மாநிலத்தில் உள்ள மைதானங்களில் சமீபத்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் நடந்த மைதானங்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. |
| ஆக்ஸிஜன் இல்லாததால் பிரசவித்த குழந்தையை பறிகொடுத்த தாய்க்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு Posted: 04 Nov 2014 05:09 AM PST ஒடிசா மாநிலத்தின் பட்ரக் மாவட்டத்தில் உள்ள சண்ட்பாலி நகர மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் மருத்துவர்களின் மெத்தனப்போக்கால் அடுத்தடுத்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |