Tamil Star |
- மம்மியா பின்னி எடுக்கும் மயிலு
- தமன்னாவிடம் யாரையும் நெருங்க விடாதீர்கள்!
- முட்டையிலிருந்து வெளிவரும் குருவிகுஞ்சின் அற்புத தருணம்!
- இறந்த நண்பனை எழுப்ப நடக்கும் போராட்டம்…. நெகிழ வைக்கும் காட்சி!
- கனடாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் பனி அதிக காற்று!
- கணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா? இதோ சூப்பர் டிப்ஸ்
- உடல் முழுவதும் ஒரே அரிப்பா? இதோ சூப்பர் மருந்து
- ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்!
- பூமியை நோக்கி வந்த விண்கற்கள் வெடித்து சிதறிய வியக்கத்தக்க காட்சி!
- பிலிப் ஹியூக்ஸூன் மரணம்: மருத்துவமனையில் கதறி அழுத சீன் அப்போட்
- சாதனைகளில் புரளும் மெஸ்ஸி!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத தமிழர் வாக்குகள் கிடைக்கும்!- சுப்ரமணிய சுவாமி
- பாக்.ஜனாதிபதி- இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு!
| மம்மியா பின்னி எடுக்கும் மயிலு Posted: 28 Nov 2014 06:29 AM PST
பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ''இங்கிலீஷ் விங்கிலீஷ்'' என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனையடுத்து இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ரீதேவி, வளர்ப்பு தாயாக நடிக்கிறார். வளர்ப்பு தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை, அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்குகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், இப்படத்தின் கதை ஒரு பெண்ணுக்கும், அவளது 18வயது வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கிற கதை. ஸ்ரீதேவி மகளாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளோம். இதுபோன்ற கதையில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று ரொம்பநாளாக ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான நேரம் இப்போது தான் வந்துள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவர் அதை சரியாக செய்வார் என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமன்னாவிடம் யாரையும் நெருங்க விடாதீர்கள்! Posted: 28 Nov 2014 06:27 AM PST
பாலிவுட் பறந்து சென்று எண்டர்டெய்மெண்ட் என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்து பிரபலமாகிவிட்டார் தமன்னா. இவர் வீரம் படத்திற்கு பிறகு தமிழில் ஆர்யாவிற்கு ஜோடியாக 'வாசுவும் சரவணனும் ஒன்றாக படித்தவர்கள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஷுட்டிங் தளத்தில் எந்த மீடியாவும் தமன்னாவை நெருங்க கூடாது என இயக்குனர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் மீடியா அவரது பழைய காதல் கதையை தூண்டிவிட்டால், மூட் ஸ்பாயில் ஆகி சீன் நன்றாக வராது என்பதால் தானாம் இந்த அதிரடி முடிவு.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முட்டையிலிருந்து வெளிவரும் குருவிகுஞ்சின் அற்புத தருணம்! Posted: 28 Nov 2014 04:57 AM PST |
| இறந்த நண்பனை எழுப்ப நடக்கும் போராட்டம்…. நெகிழ வைக்கும் காட்சி! Posted: 28 Nov 2014 04:52 AM PST |
| கனடாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் பனி அதிக காற்று! Posted: 28 Nov 2014 04:38 AM PST
இரண்டு தனித்தனியான புயல் அமைப்புக்களினால் கடும் பனி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய குளிர் காலம் நாட்டின் இரு எல்லைகளிலும் எட்டிவிட்டது. நியு பிறவுன்ஸ்விக் மற்றும் பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் பகுதிகளில் பலத்த ஈரமான பனி மற்றும் அதிக காற்று போன்ற காலநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சஸ்கற்சுவானிலிருந்து றொக்கீஸ் வரையிலான பிரதேசங்களிற்கு குளிர் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கனடா சுற்றுச்சூழல் பிரிவு வியாழக்கிழமை கரையோர மாநிலங்களிற்கு காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. நியு பிறவுன்ஸ்விக்கின் சில பகுதிகள் 30-சென்ரிமீற்றர்கள் பனிக்கு கீழ் புதையுண்டுள்ளள. 40,000-ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். பனி மிகவும் ஈரப்பதன் உடன் பாரம் நிறைந்ததாக காணப்படுவதால் மக்கள் அதனை வழிப்பதற்கு சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என கருதப்படுகின்றது. நியு பவுன்லாந்து பகுதிகள் கடும் பனியினால் அடிபட்டுள்ளது. இன்றய நாள் முடிவடைவதற்கு முன்னர் 15-20 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்பட்டது. றொக்கி மலைப்பகுதிகளில் 75-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா? இதோ சூப்பர் டிப்ஸ் Posted: 28 Nov 2014 04:28 AM PST
ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்கலாம். கணனியில் வாட்ஸ்- அப் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 1. கணனியில் வாட்ஸ்- அப் பயன்படுத்த முதலில் (bluestacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். 2. பதிவிறக்கம் செய்த ப்ளூஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 3. ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும். 4. ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்-அப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும். 5. வாட்ஸ் அப் அப்ளிகேஷன் பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள். 6. அடுத்து உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ்-அப்பில் என்டர் செய்யுங்கள். 7. உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்த ரெடியாகி விடும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடல் முழுவதும் ஒரே அரிப்பா? இதோ சூப்பர் மருந்து Posted: 28 Nov 2014 04:21 AM PST
வேம்பு இலை மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், வாதாளி போன்றவை வேம்பு இலையின் மற்ற பெயர்கள் ஆகும். இதன் இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியவை பயன்படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் தேய்தால் உடல் அரிப்பு, ஆறாத ரணம், கட்டி, வீக்கம் ஆகிய பிரச்சனைகள் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். வேப்பம்பழ சர்பத் குடித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்! Posted: 28 Nov 2014 04:08 AM PST
அமெரிக்காவின் கறுப்பின போராளிகளை தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது இயக்கத்தில் ஆள் சேர்க்கும் பணியை சமூக வலைதளங்களின் மூலம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பெர்குசன் (Ferguson) மாகாணத்தில் வெடித்துள்ள கறுப்பின வன்முறையை தங்களுக்கு சாதகமாக பயப்படுத்தி கொண்டு ஆள் சேர்க்க நினைத்த ஐ.எஸ்.ஐ.எஸ், டுவிட்டரில் கறுப்பின போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் டுவிட்டரில் கூறியதாவது, எங்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து, இஸ்லாமிய மதத்திற்கு மாறி தலைவர் அல்பாக்தாதியிடம் சரணடையுங்கள் என்றும் கறுப்பர்களே.. உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை வீழ்த்தவே கறுப்பின போராளிகளை இவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ் மூளைச்சலவை செய்வதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூமியை நோக்கி வந்த விண்கற்கள் வெடித்து சிதறிய வியக்கத்தக்க காட்சி! Posted: 28 Nov 2014 04:05 AM PST
பூமியின் வளிமண்டலத்தை நோக்கி விண்கற்கள் வேகமாக நெருங்கி வந்த வியக்கத்தக்க காட்சிகளை தெற்கு டக்கோடாவில் ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துள்ளார். தெற்கு டகோடாவில் கஸ்டர் என்ற இடத்தில் உள்ள காடுகளுக்கு வெஸ் (Wes Eisenhauer) என்ற புகைப்படக்காரர் குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தார். அப்போது பால்வெளி மண்டலத்தில் நடந்த ஒரு தெளிவான காட்சிகளை தனது கமெரா மூலம் இரவில் படம்பிடித்துள்ளார். இதுபற்றி புகைப்படக்காரர் வெஸ் கூறுகையில், கண்சிமிட்டும் நேரத்தில் விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து, திடீரென வெடித்து சிதறியது. இந்த நிகழ்வின்போது, வளையத்துக்குள் தூசியை போன்ற ஃபிளாஷ் அடிப்பது போல் வானத்தில் தோன்றியது. வானம் நம்பமுடியாத அளவிற்கு தெளிவாக மற்றும் எந்தவித ஒளி மாசும் இல்லாமல் இருந்ததால் எனது கமெராவை வெளியில் அமைத்து கிளிக் செய்துவிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. மேலும் விண்கற்கள் வெடிக்கும் போது வினாடிக்கு 50 மைல்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், நான் இந்த மாதிரியான ஒரு அரிய வகை புகைப்படங்களை பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிப் ஹியூக்ஸூன் மரணம்: மருத்துவமனையில் கதறி அழுத சீன் அப்போட் Posted: 28 Nov 2014 01:22 AM PST
அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுக்ஸின் மரணம் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதைப்போலவே அவருக்கு பந்து வீசிய சீன் அப்போட்டும் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார். அப்போட் 22 வயதேயான இளைஞர் என்பதால் இந்த சம்பவத்தை இலகுவாக அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பந்தில் அடிபட்டு தலைகுப்புற பிலிப் ஹியுக்ஸ் கீழே விழுந்தவுடன் அப்போட் பதறிப் போனார். ஹியூக்ஸை தூக்கிச் சென்ற ஸ்ட்ரக்சரின் பின்னாலேயே ஓடிச் சென்றார். மருத்துவமனைக்கு சென்றும் நலம் விசாரித்தார். ஆனால் ஹியூக்ஸ் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அப்போட்டால் மீண்டு வர முடியவில்லை. இது அவரது மனதில் அப்படியே பதிந்துள்ளது. சீன் அப்போட்டும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஹியூக்ஸின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக வீரர்கள் தேற்றினார்கள். இதையடுத்து அணியின் சார்பில் மனோதத்துவ மருத்துவர்களை கொண்டு அப்போட்டுக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. அன்றைய போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுமே கவுன்சலிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கிளன் மெக்ராத், பிரெட்லீ, ஷான் பொல்லாக் போன்றோர்களும், அப்போட்டுக்காகவும் வேண்டிக்கொள்வதாகவும், அவர் சோர்ந்து விட கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளரின் மனநிலை, அவர் எதற்காக பந்தை பவுன்சராக வீசினார் என்பவையெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குதான் நன்கு தெரியும் என்பதால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அப்போட்டுக்கு ஆதரவளித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Nov 2014 01:19 AM PST
சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி. சைப்ரஸின் நிகோஸியா நகரில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணியும், ஏபோல் நிகோஸியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் கோலடித்த மெஸ்ஸி 72 கோல்களுடன் சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ஸ்பெயினின் ராவ்ல் 71 கோல்கள் (142 ஆட்டங்கள்) அடித்ததே சாதனையாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் லீக்கில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்த மெஸ்ஸி, இப்போது அடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத தமிழர் வாக்குகள் கிடைக்கும்!- சுப்ரமணிய சுவாமி Posted: 28 Nov 2014 01:13 AM PST
இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ள இவ்விடயத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தாமும் உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாக்.ஜனாதிபதி- இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு! Posted: 28 Nov 2014 01:11 AM PST
பாகிஸ்தானிய ஜனாதிபதி மன்மூன் ஹுசைன் அட் அய்வான் இ சதார் நேற்று இலங்கையின் விமானப்படை தளபதி எயார் மார்சல் கோலித அரவிந்த குணதிலக்கவை சந்தித்துள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதியுயர் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையவேண்டும் பயங்கரவாத ஒழிப்பில் இலங்கையின் அனுபவத்தை பாகிஸ்தான் வரவேற்பதாகவும் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி இலங்கை விமானப்படை தளபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்கலாம். கணனியில் வாட்ஸ்- அப் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 1. கணனியில் வாட்ஸ்- அப் பயன்படுத்த முதலில் (bluestacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். 2. பதிவிறக்கம் செய்த ப்ளூஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 3. ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும். 4. ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்-அப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும். 5. வாட்ஸ் அப் அப்ளிகேஷன் பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள். 6. அடுத்து உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ்-அப்பில் என்டர் செய்யுங்கள். 7. உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்த ரெடியாகி விடும்.









இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ள இவ்விடயத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தாமும் உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
