மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கள்ளக்காதலிக்கு பிறந்த குழந்தையை விற்ற வாலிபர் புரோக்கருடன் கைது
- ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஒரே கவர்னர்: குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் சர்ச்சை
- மராட்டிய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு 10 மந்திரி பதவி: பா.ஜனதா முடிவு
- ஒரு வாரத்துக்கு பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
- உத்தரபிரதேசத்தில் என்ஜினீயர் காரில் ரூ.12 கோடி, 2 கிலோ தங்கம் சிக்கியது
- என்.டி.ராமராவ் மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்: மனைவி சிவபார்வதி கடிதம்
- சமூக பணியாற்றுவதில் பெண் போலீஸ் அதிகாரிகளே உண்மையான கதாநாயகிகள்: குஷ்பு பேச்சு
- பார் கவுன்சில் விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால் வக்கீல் உரிமம் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு
- வடமாநிலங்களில் திருவள்ளுவர் தினம்: தருண் விஜயின் கோரிக்கை மத்திய அரசு ஏற்றது
- பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு மனு
- காஷ்மீரில் ராணுவம்-தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது: பலி 12 ஆக உயர்வு
- இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: தங்கம் விலை மேலும் குறையும்
- ஜப்பான் பிரதமருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: ஆந்திர பிரதேச வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கை
- காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு
- கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவது எளிது அல்ல: தேவேகவுடா
- தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறை
- ஒரே நாளில் 300 இளைஞர்கள் உறுப்பு தானம்
- பீகாரை ஆட்டிப் படைக்கும் நுரையீரல் அழற்சி நோய்: தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகும் பரிதாபம்
- வேலை கொடுப்பதாக உறுதியளித்த மோடி கையில் துடைப்பத்தை கொடுத்துவிட்டார்: ராகுல்
- பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி: ராணுவ அமைச்சகம் ஆலோசனை
| கள்ளக்காதலிக்கு பிறந்த குழந்தையை விற்ற வாலிபர் புரோக்கருடன் கைது Posted: 28 Nov 2014 10:13 PM PST கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த பனங்காளை பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. |
| ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஒரே கவர்னர்: குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் சர்ச்சை Posted: 28 Nov 2014 10:03 PM PST மாநில தலைநகரில் நடக்கும் குடியரசு தின விழாவில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவது வழக்கம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்துக்கு ஒரே கவர்னராக நரசிம்மன் உள்ளார். ஜனவரி 26–ந் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில் கவர்னர் நரசிம்மன் எந்த மாநிலத்தில் கொடியேற்றுவார்? என்பது சர்ச்சையாக கிளம்பி உள்ளது. |
| மராட்டிய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு 10 மந்திரி பதவி: பா.ஜனதா முடிவு Posted: 28 Nov 2014 10:01 PM PST மராட்டியத்தில் பா.ஜனதா மந்திரி சபையில் சிவசேனாவை இடம் பெறச்செய்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று மாலை மும்பையில் நடந்தது. இதில் பா.ஜனதா மேலிட பிரதிநிதியாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அவரும் மாநில பொதுப்பணித்துறை மந்திரி சந்திர காந்த் பண்டிட்டும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயை அவரது வீட்டுக்குப்போய் |
| ஒரு வாரத்துக்கு பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு Posted: 28 Nov 2014 09:50 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரமோற்சவம் நடந்து வந்ததால் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்பட்டது. பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம் நேற்று நிறை வடைந்தது. |
| உத்தரபிரதேசத்தில் என்ஜினீயர் காரில் ரூ.12 கோடி, 2 கிலோ தங்கம் சிக்கியது Posted: 28 Nov 2014 09:42 PM PST உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்–மந்திரியாக இருந்த போது, உள்கட்டமைப்பு பணிகளுக்கான தலைமை என்ஜினீயராக இருந்தவர் யாதவ்சிங். நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இவர் என்ஜினீயராக இருந்துள்ளார். நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் திட்டங்களில் ரூ. 954 கோடிக்கு ஊழல் |
| என்.டி.ராமராவ் மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்: மனைவி சிவபார்வதி கடிதம் Posted: 28 Nov 2014 09:13 PM PST ஐதராபாத்தில் உள்ள சம்சாபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு விமான நிலைய முனையத்துக்கு ராஜீவ்காந்தி பெயரை மாற்றி என்.டி.ராமராவ் பெயர் சூட்டப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்துக்கு எங்களது அனுமதி இல்லாமல் மத்திய அரசு பெயர் சூட்டியிருப்பதை தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பெயரை மாற்றக் கூடாது |
| சமூக பணியாற்றுவதில் பெண் போலீஸ் அதிகாரிகளே உண்மையான கதாநாயகிகள்: குஷ்பு பேச்சு Posted: 28 Nov 2014 09:07 PM PST திருவனந்தபுரத்தில் தேசிய பெண் போலீஸ் அதிகாரிகளின் மாநாடு நடந்து வருகிறது. கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். |
| பார் கவுன்சில் விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால் வக்கீல் உரிமம் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு Posted: 28 Nov 2014 06:52 PM PST மராட்டிய ஓமியோபதி கவுன்சில் வழங்கிய 'எல்.சி.இ.எச்.' பட்டம் பெற்று, பின்னர் 'எல்.எல்.பி.' சட்டப்படிப்பு படித்த அர்ச்சனா கிரிஷ் சாப்னிஸ் என்பவருக்கு வக்கீல் தொழில் நடத்த உரிமம் வழங்க இந்திய பார் கவுன்சில் மறுத்து விட்டது. அவர் பார் கவுன்சிலால் பட்டமாக அங்கீகரிக்கப்படாத |
| வடமாநிலங்களில் திருவள்ளுவர் தினம்: தருண் விஜயின் கோரிக்கை மத்திய அரசு ஏற்றது Posted: 28 Nov 2014 06:40 PM PST உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவரும், டெல்லி மேல்-சபை பா.ஜனதா எம்.பி.யுமான தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்தும், வடஇந்தியப் பள்ளிகளில் தமிழை அறிமுகம் செய்வது பற்றியும் தொடர்ந்து வடமாநிலங்களில் பேசி வருகிறார். அண்மையில் இதற்காக தருண் |
| பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு மனு Posted: 28 Nov 2014 06:27 PM PST தமிழக அரசு வழக்கறிஞர் பி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- அமராவதி நதியின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி என்ற இடத்தில் 2 டி.எம்.சி. கொள்ளளவில் ஒரு அணை கட்டுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள அரசின் இத்திட்டம் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய |
| காஷ்மீரில் ராணுவம்-தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது: பலி 12 ஆக உயர்வு Posted: 28 Nov 2014 06:16 PM PST பிரதமர் மோடியின் காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன் கடந்த 26, 27-ந்தேதிகளில் இந்திய எல்லையில் உள்ள ஆர்னியா பகுதியில் 4 தீவிரவாதிகள் ராணுவ சீருடையில் அங்கிருந்த காந்தார் கிராமத்துக்குள் ஊடுருவினர். |
| இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: தங்கம் விலை மேலும் குறையும் Posted: 28 Nov 2014 06:09 PM PST கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தொடக்கத்தில் தங்கம் இறக்குமதி குறைந்தபோதிலும், கடந்த ஏப்ரல் மாதம், கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதால், தங்கம் இறக்குமதி அதிகரித்தது. கடந்த மாதம், |
| Posted: 28 Nov 2014 02:25 PM PST ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர பிரதேச முதல் மந்திரி என். சந்திரபாபு நாயுடு நேற்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஆந்திர பிரதேசத்தில் உலகத்தரம் வாய்ந்த தலைநகரை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பை ஜப்பான் அளிக்கும் |
| காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு Posted: 28 Nov 2014 11:54 AM PST காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ஆர்னியா என்ற இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று சிறிய அளவிலான துப்பாக்கிசூடு நடத்தியது. ஆனால் இந்த துப்பாக்கி சூட்டுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித பதில் அடியும் கொடுக்காமல் அமைதி காத்தனர். |
| கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவது எளிது அல்ல: தேவேகவுடா Posted: 28 Nov 2014 11:18 AM PST "கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவது என்பது எளிதான விஷயம் அல்ல" என்று தேவேகவுடா கூறினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– |
| தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறை Posted: 28 Nov 2014 08:12 AM PST சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சாகிர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளியை சில மாதங்களுக்கு முன்னர் தமிழக போலீசார் கைது செய்தனர். சென்னையில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இவன், கொழும்புவில் உள்ள ஒரு பாகிஸ்தான் உளவாளிக்கு சென்னையில் இருந்து பல தகவல்களை அனுப்பி வைத்து, தென்னிந்தியாவின் சில முக்கிய |
| ஒரே நாளில் 300 இளைஞர்கள் உறுப்பு தானம் Posted: 28 Nov 2014 07:51 AM PST வாழ்ந்து முடித்து மரணமடைந்த ஒரு நபரின் உடல் உறுப்புகள் ஒரே நேரத்தில் பலருக்கு புது வாழ்வு அளிக்கிறது. பிறவிக் குருடர்கள் பார்வை பெறவும், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பலர் மறுவாழ்வு பெறவும் ஒரு இறந்த மனிதரின் உறுப்பு தானம் பேருதவி செய்கிறது. |
| Posted: 28 Nov 2014 07:21 AM PST பீகார் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 5 வயதுக்குட்பட்ட 40,480 குழந்தைகள் இறந்துள்ளதாக மெலின்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதிலும் 18 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் நுரையீரல் அழற்சி நோய்க்கு பலியாகியுள்ள நிலையில், பீகாரில் உள்ள 5 மாவட்டங்களின் பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக |
| வேலை கொடுப்பதாக உறுதியளித்த மோடி கையில் துடைப்பத்தை கொடுத்துவிட்டார்: ராகுல் Posted: 28 Nov 2014 07:02 AM PST பாராளுமன்ற தேர்தலின்போது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று உறுதியளித்த மோடி தற்போது கையில் துடைப்பத்தை கொடுத்து விட்டார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ஜார்க்கண்ட் மாநில பிரசாரத்தின் போது குற்றம்சாட்டினார். ராகுல்காந்தி ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலின்போது நான் வேலைவாய்ப்பை |
| பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி: ராணுவ அமைச்சகம் ஆலோசனை Posted: 28 Nov 2014 07:01 AM PST சீனாவில் நடைமுறையில் உள்ளது போல் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் இந்திய இளைஞர்களுக்கும் ராணுவப் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் இன்று தெரிவித்துள்ளார். 15 வயதை அடைந்த மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |