Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தொடரும் கருப்பின மக்கள் போராட்டம்! வலைவிரிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!

Posted: 27 Nov 2014 05:11 AM PST

terrorist

terroristஅமெரிக்கா வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் "கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகட்னாம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்து உள்ளது ஐ.எஸ்.ஐ. தீவிரவாத இயக்கம். பிரச்சனை என்ன? அமெரிக்காவில் மிசோரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின இளைஞர் டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. வெடித்தது எதனால்? அதுவும் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என நடுவர்கள் குழு 24-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பானது ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொந்தளிப்பில் கருப்பின மக்கள் இதனால் பெர்குசானில் கலவரம் நடந்து வருகிறது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தொடர் பதற்றம் காரணமாக அங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 170 இடங்களில் போராட்டம் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேண்ட், அட்லாண்டா ஆகிய நகரங்களிலும் வன்முறை பரவி உள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 170 இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். அழைப்பு இந்த நிலையில்தான் கருப்பினத்தவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலைவீசி வருகிறது. "கருப்பினத்தவரே! எங்களுடன் இணையுங்கள்- நங்கள் உங்களை பாதுகாப்போம்!" என பெர்குசன் போராட்டக்காரர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. அதிர்ச்சியில் அமெரிக்கா சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஐ எஸ். இயக்கம் கருப்பினத்தவருக்கு இத்தகைய அழைப்பை தொடர்ந்து விடுத்து வருவது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர் சமையல் செய்ற அழகைப் பாருங்க…. எந்த பெண்ணிற்காவது பிடிக்காமல் இருக்குமா?

Posted: 27 Nov 2014 05:01 AM PST

wpid-Cooking

wpid-Cooking

This posting includes an audio/video/photo media file: Download Now

வெங்காயத்தை சுத்தம் செய்து வெட்டி விற்பனைக்கு அனுப்பும் காட்சி!

Posted: 27 Nov 2014 04:57 AM PST

How It's Made - Onions

How It's Made - Onions

This posting includes an audio/video/photo media file: Download Now

நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள்!

Posted: 27 Nov 2014 04:33 AM PST

amula

amulaநெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது, ஆயுளை அதிகரிக்கும். வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது. சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக் காய்களை போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து கண்களை நன்குகழுவினால் , கண்சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை இது குணப்படுத்தும். நெல்லியில் உடலுக்குஅவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிகளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. உயிர்ச் சத்தான வைட்டமின் 'சி' சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன. பட்டை, வேர்,இலைகள், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப்பயனுள்ள பகுதியாகும். இலைகளின் சாறு நாட்பட்டபுண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினை தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மைகொண்டவை. சிறுநீரகக்கோளாறு, இரத்தச்சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரணநோய்களுக்கு நன் மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற நெல்லிக்காய் உதவும். நெல்லிப்பழங்களை விதைநீக்கி இடித்துச் சாறு பிழிந்து சமஅளவு சர்க்கரைசேர்த்து மணப்பாகு தயார்செய்து அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்தசம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கைநடுக்கம் குணமாகிறது. நெல்லிக் காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன்குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டு சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்டஆயுளும் நெல்லிக்காய் தருகிறது. நெல்லிக் காய் இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற் புண், இரத்தப் பெருக்கு, நீரிழிவு, கண்நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக் கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவகுணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்னவேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். இவ்வளவு மருத்துவ பலன்களை கொண்ட நெல்லிக்காயை தினசரி வாழ்வில் பயன்படுத்தி உடல்நலத்தை பெறுவோம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பிளின் அதிரடி மாற்றம்!

Posted: 27 Nov 2014 04:30 AM PST

Apple

Appleஅப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன்படி 2015ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடைகின்றது. எனவே 2015ம் ஆண்டிலிருந்து Yahoo அல்லது Bing இனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் இயல்புநிலை தேடுபொறியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதேவேளை மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்துடன் சிறந்த உறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை!

Posted: 27 Nov 2014 04:28 AM PST

nochi

nochiசாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது. இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப் புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித் தழைகளை உடன் வைத்து விடுவர். மேலும் இது பூச்சிகள் வருவதை தடுக்கும் மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம். தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம். இந்த இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும். இந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும். முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும். பிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி. பயன்கள் இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும். இதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்துவிடும். மேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம். நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.

This posting includes an audio/video/photo media file: Download Now

சார்ஜா டெஸ்ட்: ஹபீஸ் சதம்- வலுவான நிலையில் பாகிஸ்தான்!

Posted: 27 Nov 2014 04:16 AM PST

pakistan

pakistanபாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. ஆரம்ப வீரர்களாக முகமது ஹபீஸ், ஷான் மசூத் களம் இறங்கினார்கள். மசூத் 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அசார் அலி 39 ஓட்டங்களிலும், யூனிஸ்கான் 5 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு ஹபீஸ் உடன் மிஸ்பா-உல்-ஹக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இந்த இருவரும் ஆட்டம் முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். பாகிஸ்தான் அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹபீஸ் 178 ஓட்டங்களுடனும், மிஸ்பா 38 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பெற்ற வெட்டோரி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடுநடுங்கும் குளிரில் விமானத்தை தள்ளிய பயணிகள்!

Posted: 27 Nov 2014 04:10 AM PST

Flight

Flightரஷ்யாவில் உறைபனியில் சிக்கிய விமானத்தை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பயணிகள் தள்ளிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவாக உள்ளதால், திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. இந்நிலையில் சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) இருந்து புறப்பட்டபோது ஓடுதளத்தில் உள்ள உறைபனியில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு பதிவாகியிருந்த மைனஸ் 61 டிகிரி குளிரையும் கண்டுக்கொள்ளாமல் விமானத்திலிருந்த 74 பயணிகளும், உடனடியாக கீழே இறங்கி விமானத்தை திருப்பும் அளவுக்கு சில மீட்டர் தூரம் விமானத்தை தள்ளியுள்ளனர். இதன்பின் அதிகாரிகள் விமானத்தை பழுதுபார்த்து சரி செய்ததையடுத்து, விமானம் பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பனி அதிகமாக இருந்ததால் விமானத்தின் சாஸிஸ் பிரேக் உறைந்துவிட்டதாகவும், விமானத்தை இழுவை வாகனத்தால் நகர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்தமாக இசையை கேட்ட சிறுமி சுட்டுக்கொலை! பாகிஸ்தானில் கொடூரம்

Posted: 27 Nov 2014 04:07 AM PST

Gun

Gunபாகிஸ்தானில் இசையை சத்தமாக கேட்ட சிறுமியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சுக்வால் மாவட்டத்தில் உள்ள கல்லார் கஹார் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர் 17 வயதான ரெஹானா பீபி. குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அதிக சத்தமாக இசை கேட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவரின் உறவினரான ஒருவர் சத்தத்த குறைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு ரெஹானா மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் அடைந்த உறவினர் சிறுமியை சரமாரியாக சுட்டுக்தள்ளினார். இதனையடுத்து குறித்த சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 30 வயதான முகமது குல்லிஸ்கான் என்ற உறவினரே இந்த கொடூர செயலை செய்துள்ளார். முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை! மொயீன் சதம் வீண்!

Posted: 27 Nov 2014 12:02 AM PST

srilanka_england

srilanka_englandஇங்கிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்று கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டில்ஷான் 88 ஓட்டங்களும், குஸல் பெரேரா 59 ஓட்டங்களும் எடுத்தனர். ஜெயவர்த்தனே 55 ஓட்டங்களும், மேத்யூஸ் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் வோக்ஸ், டிரெட்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 318 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மொய்ன் அலி சதம் கடந்து 119 ஓட்டங்களும், போபரா 65 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த போட்டியின் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா சென்று வந்தபின்னர் மாறிவிட்டார் மைத்திரிபால- மஹிந்த ராஜபக்ச

Posted: 26 Nov 2014 11:31 PM PST

Maithripala-in-US

Maithripala-in-USமைத்திரிபால சிறிசேனெ, அமெரிக்கா ஹவாட் பல்கலைக்கழக விருதுக்காக சென்று வந்த பின்னர் மனம் மாறிவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் "2013 ஹெல்த் லீடர்" விருது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்று வந்த பின்னரே அரசியலில் மனம் மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று கூறுகிறது. இதன்போது மைத்திரிபாலவுடன் இலங்கையின் அரசாங்கம் மாற்றம் குறித்து உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கலாம் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்துள்ளது. எனினும் 2011ம் ஆண்டு இலங்கைக்கான மெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டின்ஸை சந்தித்த பின்னர் அந்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்தே அமெரிக்கா இலங்கையின் உள்விடயங்களில் தலையிடுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார் என்பதையும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பொறுத்தவரை அமரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக குற்றம் சுமத்தி வருகிறது. முன்னர் சரத் பொன்சேகாவை பயன்படுத்தி அதில் தோல்விகண்ட பின்னர் தற்போது மைத்திரிபாலவை அமெரிக்கா தெரிவு செய்துள்ளதாகவும் அந்த முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில் மைத்திரியை பின்னால் இருந்து இயக்குவது அமெரிக்காவாக இருந்தால், வரும் நாட்களில் பல சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். அவை, உண்மை சம்பவங்களை வெளிக்கொணருவதாக அமையும் என்றும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க பிரித்தானியாவின் எம்.பிமார் பரிந்துரை!

Posted: 26 Nov 2014 11:25 PM PST

Flag

Flagபோர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் குழுவுக்கு இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காவிட்டால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை கொண்டு வருமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு நேற்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய போதும் அதனை இலங்கை நிராகரித்துள்ளது. இந்தநிலையில் பொருளாதார தடை உட்பட்ட பொருத்தமான எதிர்நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஆராய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காது போனால், ஐரோப்பிய பங்காளிகளுடன் பேசி ஜிஎஸ்பி வரிச்சலுகையை ரத்து செய்வது உட்பட்ட எதிர்நடவடிக்கைகளை இலங்கை தொடர்பில் எடுக்குமாறு குறித்த குழு, நேற்று கையளித்த அறிக்கையில் கேட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்க புதிய இந்திய அரசாங்கத்துக்கு ஊக்கம் அளிக்குமாறும் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு, அரசாங்கம், எதிர்க்கட்சி உட்பட்டவர்களின் 11 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுதி கவுன்சில் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்ட மிசிசாகாமேயர் Hazel McCallion!

Posted: 26 Nov 2014 11:19 PM PST

Hazel McCallion

Hazel McCallionகனடா- Hazel McCallion அவர்களின் 36-வருட மேயர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

தனது கடைசி நகர சபை கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை 93-வயதுடைய மேயர் தலமை வகித்தார்.

"சூறாவளி ஹேசல்" என்ற புனை பெயர் கொண்ட இவர் 1978-தொடக்கம் மேயர் பதவி வகித்துள்ளார்.

2010-ல் வெற்றி பெற்றதன் பின்னர், இது காரியாலயத்தில் தனது கடைசி தவணையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். கவுன்சிலர்கள், சமூக மற்றும் வர்த்தக தலைவர்கள், உள்ளக ஹொக்கி அணிகளை சேர்ந்த சிறுவர்கள் போன்றவர்களிடமிருந்து உணர்ச்சிகரமான பாராட்டுக்கள் பொழியப்பட்டன.

"நவம்பர் மாதம் 30-ந்திகதி வரை நான் மேயர். நாளையும் வெள்ளிக்கிழமையும் எனக்கு கூட்டங்கள் உள்ளன. நான் தெரிவு செய்யப்பட்ட அன்றே வேலை செய்ய ஆரம்பித்தேன். அதே போன்ற எனது கடைசி நாள் வரை வேலை செய்வேன் கடந்த 36-வருடங்கள் போன்று" என கூறினார்.

தனது எதிர்கால திட்டத்தில் ஒன்ராறியோ பெண்கள் ஹொக்கி சங்கத்தில் பெண்கள் ஹொக்கி ஆதரவாளராக பணிபுரிவதும் அடங்கும் என தெரிவித்தார்.

ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ஒரு வகை தலமை பொறுப்பை வழங்கினார் எனவும் ஆனால் தான் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவரின் தலைமையின் கீழ் மிசிசாகா ஒரு கிராமப்புற நகராட்சியில் இருந்து ஒன்ராறியோவின் 3-வது பெரிய நகரமாக உயர்ந்ததோடு 734,000 சனத்தொகையுடன் கனடாவின் 6வது பெரிய நகரமாகவும் வளர்ந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™