மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சாப்பிட்ட சப்பாத்திக்கு பணம் கேட்ட வெயிட்டர் சுட்டுக்கொலை
- சிவசேனாவுடன் பா.ஜனதா மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்–மந்திரி பட்னாவிஸ் பேட்டி
- பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
- லல்லு மகளுக்கும், முலாயம்சிங் பேரனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கிறது
- தண்டவாளத்தில் உடைப்பு: கன்னியாகுமரி–மும்பை எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது
- புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 28,699 புள்ளிகளை தொட்டது
- சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்
- 100 நாட்களுக்குள் கருப்பு பணத்தை மீட்டு வருவதாக சொன்னதே இல்லை: வெங்கையா நாயுடு விளக்கம்
- கருப்பு பணக்காரர்களின் பெயரை வெளியிடாதது ஏன்?: அருண் ஜெட்லி விளக்கம்
- சமஸ்கிருதம் 3-வது மொழியாக இருக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
- சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் தீவிரவாதி சுட்டுக்கொலை
- பணப்பற்றாக்குறை: அமைச்சரக செலவுகளை குறைக்க நிதி அமைச்சகம் ஆலோசனை
- கருத்தடை அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை பிரதமர் சந்திக்க கூடவில்லை: காங்கிரஸ்
- ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆசாத் கடும் கண்டனம்
- பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம்: நாகலாந்து எம்.பி.க்கள் உற்சாகம்
- பீகாரில் முதல் முறையாக மாவோயிஸ்டுகளின் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: அதிநவீன துப்பாக்கிகள் சிக்கின
- பீகாரில் காண்டிராக்டர் சுட்டுக் கொலை: நண்பர் படுகாயம்
- எல்லையில் 3 மாதத்தில் 400 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: வி.கே.சிங்
- எல்லையில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் துப்பாக்கி சண்டை: 10 பேர் சாவு
- காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு ராகுல் காந்தியை சந்தித்தார்
| சாப்பிட்ட சப்பாத்திக்கு பணம் கேட்ட வெயிட்டர் சுட்டுக்கொலை Posted: 27 Nov 2014 10:24 PM PST உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லிப்ரா ஓட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு கும்பல் சாப்பிட்டு முடித்தவுடன், அதற்கான பில் தொகையை தராமல் வெயிட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் துப்பாக்கியால் சுட்டதில் வெயிட்டர் கொல்லப்பட்டார். |
| சிவசேனாவுடன் பா.ஜனதா மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்–மந்திரி பட்னாவிஸ் பேட்டி Posted: 27 Nov 2014 09:45 PM PST மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பா.ஜனதா மைனாரிட்டி அரசு பதவி ஏற்றது. முதல்–மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் பதவி ஏற்றனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆதரவுடன் அரசு தப்பியது. மராட்டிய பா. ஜனதா அரசில் சேர சிவசேனா கட்சி 13 மந்திரிகளும் ஒரு |
| பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் Posted: 27 Nov 2014 09:39 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 19–ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8 நாட்களாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 9–வது நாளான நேற்று காலை 7 |
| லல்லு மகளுக்கும், முலாயம்சிங் பேரனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கிறது Posted: 27 Nov 2014 08:47 PM PST உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவும், பீகாரில் லல்லு பிரசாத் யாதவும் செல்வாக்கு மிக்க தலைவர்களாக உள்ளனர். உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் முன்பு ஆளும் கட்சியாக இருந்த |
| தண்டவாளத்தில் உடைப்பு: கன்னியாகுமரி–மும்பை எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது Posted: 27 Nov 2014 08:47 PM PST கன்னியாகுமரியில் இருந்து மும்பை புறப்பட்ட கன்னியாகுமரி–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மொளகாவல்லி–நேமக்கல் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் 1500–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நேமக்கல் அருகே தண்டவாளம் பெரிய அளவில் உடைந்து இருந்தது. இதனை |
| புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 28,699 புள்ளிகளை தொட்டது Posted: 27 Nov 2014 08:46 PM PST நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றவுடன் பங்குச்சந்தை வர்த்தகம் நாளுக்கு நாள் எழுச்சி பெற்று வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை தொட்டன. |
| சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 27 Nov 2014 08:32 PM PST பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேது சமுத்திர திட்டம் குறித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆய்வுகளை மத்திய அரசு எடுத்தது. |
| 100 நாட்களுக்குள் கருப்பு பணத்தை மீட்டு வருவதாக சொன்னதே இல்லை: வெங்கையா நாயுடு விளக்கம் Posted: 27 Nov 2014 07:07 PM PST வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீட்டு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நேற்று பாராளுமன்றத்திலும் இக்குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் |
| கருப்பு பணக்காரர்களின் பெயரை வெளியிடாதது ஏன்?: அருண் ஜெட்லி விளக்கம் Posted: 27 Nov 2014 06:43 PM PST பாராளுமன்றத்தில், கருப்பு பண விவகாரம் பற்றிய விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கருப்பு பண விவகாரத்தில், முந்தைய அரசு கண்ணாமூச்சி ஆடியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மூன்று ஆண்டுகளாக சிறப்பு புலனாய்வு குழுவை |
| சமஸ்கிருதம் 3-வது மொழியாக இருக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் Posted: 27 Nov 2014 02:07 PM PST கடந்த மாதம் 27-ந் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையிலான கேந்திரிய வித்யாலயா சங்காதன் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் |
| சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் தீவிரவாதி சுட்டுக்கொலை Posted: 27 Nov 2014 01:09 PM PST சட்டீஸ்கர் மாநிலம் பைஜாபூர் மாவட்டம் அவாபல்லி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிறப்பு அதிரடிப்படையினருடன் மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| பணப்பற்றாக்குறை: அமைச்சரக செலவுகளை குறைக்க நிதி அமைச்சகம் ஆலோசனை Posted: 27 Nov 2014 11:48 AM PST கடந்த நிதியாண்டில் பணப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் பணப்பற்றாக்குறையை போக்க சில அமைச்சரக ஆண்டு செலவுகளில் 15 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது. குறிப்பாக சமூகத்துறை அமைச்சகங்களான |
| கருத்தடை அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை பிரதமர் சந்திக்க கூடவில்லை: காங்கிரஸ் Posted: 27 Nov 2014 11:07 AM PST சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழங்குடி இனத்தை சேர்ந்த 13 பெண்கள் உடல்நலக்குறைவால் உயிரழந்தினர். கருத்தடை அறுவை சிகிச்சையால் பாதிக்கபட்டவர்கள் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க கூட |
| ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆசாத் கடும் கண்டனம் Posted: 27 Nov 2014 09:03 AM PST ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முயன்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியாகினர். பிரதமர் மோடி சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்ததால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. |
| பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம்: நாகலாந்து எம்.பி.க்கள் உற்சாகம் Posted: 27 Nov 2014 08:06 AM PST பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் நாகலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் நாகலாந்து எம்.பி.க்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்களவை எம்.பி. நிபியூ ரியோ மற்றும் மாநிலங்களவை எம்.பி. கேகிஹோ ஹிமோமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தங்களுடைய வருகை நாகலாந்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய சகாப்த்தின் ஆரம்பமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என |
| பீகாரில் முதல் முறையாக மாவோயிஸ்டுகளின் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: அதிநவீன துப்பாக்கிகள் சிக்கின Posted: 27 Nov 2014 08:01 AM PST பீகாரில் இன்று மாவோயிஸ்டுகளின் ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். முங்கர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக நக்சலைட்டுகளின் ஆயுத தொழிற்சாலை செயல்படுவதாக உளவுத்துறை அளித்த தகவலையடுத்து மாநில காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் என 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| பீகாரில் காண்டிராக்டர் சுட்டுக் கொலை: நண்பர் படுகாயம் Posted: 27 Nov 2014 06:40 AM PST பீகாரின் வைஷாலி மாவட்டம் சாய்தாபாத் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாகர் ராய். இவர் கட்டிடங்களின் கட்டுமானப் பணிக்கு தேவையான மணல் மற்றும் ஜல்லிக்கல் வினியோகிக்கும் காண்ட்ராக்டராக உள்ளார். சம்பவத்தன்று சிவசாகர் ராய் தனது நண்பர் தேவேந்திர ராய் உடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், வீட்டின் வெளியே நின்று கொண்டு சிவசாகர் ராயை பெயர் சொல்லி அழைத்துள்ளனர். |
| எல்லையில் 3 மாதத்தில் 400 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: வி.கே.சிங் Posted: 27 Nov 2014 06:39 AM PST ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 3 மாதங்களில் 400 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்லையில் கடந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல், இந்தியாவின் பதிலடி குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு |
| எல்லையில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் துப்பாக்கி சண்டை: 10 பேர் சாவு Posted: 27 Nov 2014 05:17 AM PST காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பீண்டி பகுதியில் ஆர்னியா செக்டாரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலையில், சர்வதேச எல்லையை கடந்து ஊடுருவிய 4 தீவிரவாதிகள் இந்திய ராணுவம் பயன்படுத்தாமல் விட்டிருந்த பதுங்கு குழிக்குள் புகுந்தனர். பின்னர், அங்கிருந்த ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் ராணுவ அதிகாரி ஒருவர் பலியானார். |
| காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு ராகுல் காந்தியை சந்தித்தார் Posted: 27 Nov 2014 03:45 AM PST தி.மு.க-வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த குஷ்பு, ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த அவர், திடீரென நேற்று காங்கிரசில் இணைந்தார். இதன் மூலம் அவர் மீண்டும் தீவிர |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |