Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


த்ரிஷாவிற்கு தைரியம் இல்லை! வம்புக்கு இழுத்த ராய் லட்சுமி

Posted: 19 Nov 2014 04:56 AM PST

trishal_railakshmi001

trishal_railakshmi001த்ரிஷா தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக். இவரின் நிச்சயதார்த்தம் நடந்ததா? இல்லையா? என்று குழப்பம் நிலவி வருகிறது.

ஆனால், வருன் மணியுடன் எடுத்த புகைப்படங்கள் மட்டும் அரை மணி நேரத்திற்கு ஒன்று வருகிறது. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் ராய் லட்சுமி.

இதில் 'உண்மையை ஒப்புக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும், அந்த தைரியம் இல்லாதவர்களே உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர்' என டுவிட் செய்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாஸ் படத்தில் யுவனின் புதிய பரிமாணம்!

Posted: 19 Nov 2014 04:54 AM PST

mass_yuvan001

mass_yuvan001கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை தற்போது பிரபலமாகிவிட்டார் யுவன்.

இவர் தற்போது தமிழில் இடம் பொருள் ஏவல், மாஸ், தரமணி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இதில் மாஸ் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரிஸ்க் எடுத்துள்ளாராம். இப்படத்தின் பாடல் பதிவு நேற்று இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

முதல் பாடலை பாடகி தன்வியை வைத்து ரெக்கார்ட் செய்துள்ளார். இப்படத்தில் இதுவரை யுவன் தான் தொடாத இசையை கையாள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் பலத்த காற்றினால் விளம்பர பதாகைகள் கிளம்பி பறப்பதால் ரொறொன்ரோ டவுன்ரவுன் வீதிகள் சில மூடப்பட்டடது.

Posted: 19 Nov 2014 04:53 AM PST

snow51-600x342

பிசிsnow51-600x342யான டவுன்ரவுன் ரொறொன்ரோ வீதிகள் சில பலமான காற்றினால் விளம்பர பதாதைகள் கிளப்பபட்டு பறக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் மூடப்பட்டன.

வெலிங்டன் மற்றும் வுறொன்ட் வீதிக்கிடைப்பட்ட ஜோன் வீதி பகுதிகளில் உள்ள சில வினைல் விளம்பர பதாதைகள் வேகமான காற்றினால் கிளப்ப பட்டு பறந்ததால் ரொறொன்ரோ பொலிசார் அப்பகுதிளை தற்காப்பு காரணமாக மூடியுள்ளனர்.

இவை உயர்மின்அழுத்த கம்பிகள் மீதும் விழலாமென அஞ்சப்படுகின்றது. பாதைகள் எவ்வளவு நேரம் மூடப்பட்டிருக்கும் என்பது தெரிவிக்கப் படவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடர்மாடிக் கட்டிடத்தில் எரிவாயு வெடிப்பு. போதை மருந்து ஆய்வகம் காரணம்?

Posted: 19 Nov 2014 04:52 AM PST

meth1-600x399

meth1-600x399கனடா- ரொறொன்ரோவில் லிபெர்ட்டி வில்லேஜ் கொண்டோவில் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்ததுடன் போதை மருந்து ஆய்வகம் ஒன்றில் இருந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்மாடிக்கட்டிட யுனிட் ஒன்று திருட்டுத்தனமான ஆய்வகம் ஒன்றாக பயன்படுத்தப் பட்டிருந்ததென அதிகாரிகள் நம்புகின்றனர்.

36-வயதுடைய அன்ட்றே ஹாகென் என்பவர் மீது கடத்தல் நோக்கங்களிற்காக போதை பொருட்கள் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 6-வது மாடியில் உள்ள யுனிட் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் சாதாரண காயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகரிக்கும் அனாதைகள்: அவலநிலையில் அமெரிக்கா

Posted: 19 Nov 2014 04:49 AM PST

homeless_children_003

homeless_children_003அமெரிக்காவில் வறுமையின் காரணமாக வீடிலில்லாமல் தெருவில் அனாதையாக திரியும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளில் மிகவும் வல்லரசு நாடு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

வறுமை அந்நாட்டை வாட்டி எடுப்பதால், குடும்பத்தில் தனி நபர் வருமானம் போதுமானதாக இல்லையென்பதால் கணவன், மனைவி இருவரும் ஊழியம் செய்து வருவாய் ஈட்டும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வீடிழந்த குடும்பத்தினருக்கான தேசிய மையம் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாகாணங்கள், நகரங்கள், கிராமங்கள் என சர்வே நடத்தி கடந்த 2012-2013-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கடந்தாண்டு 2.5 மில்லியன் குழந்தைகள், குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் அனாதையாகவிடப்படுவது அதிகரித்து வருகிறது என்றும் இதன் மூலம் நாட்டில் வறுமை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 30 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீடின்றி தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் இளைஞர்கள் பள்ளி சென்று கல்வி கற்க பெரும் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குனர் கர்மீலா டிகேன்டியா (karmila Decandiya) கூறுகையில், வரும் 2020ம்ஆண்டிற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என ஒபாமா அரசு நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பரிதவிக்கும் இளம்பெண்: விலைபேசும் தீவிரவாதிகள்

Posted: 19 Nov 2014 04:47 AM PST

last_hostage_002

last_hostage_002அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களுக்கு எதிராக வான் வழிதாக்குதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து தலைத் துண்டிப்பை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 26 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதியாக உள்ளார். ஆனால் இவரது பெயரை தீவிரவாதிகள் வெளியிடவில்லை.

சிரியாவில் உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு உதவி செய்து வந்த இவர், கடந்தாண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரை விடுவிக்க வேண்டும் என்றால் 6 மில்லியன் டொலர்களை தங்களுக்கு தரவேண்டும் என்றும் இல்லையேல் இவரை தலையை கொய்து படுகொலை செய்வோம் எனவும் அமெரிக்க அரசுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயலலிதா சிறையில் சீருடை அணியாதது ஏன்? பின்னணி தகவல்

Posted: 19 Nov 2014 04:46 AM PST

jeyalaitha_jaildress_003

jeyalaitha_jaildress_003சிறையில் ஜெயலலிதா சீருடை அணியாததற்கான காரணம் குறித்த பதிலை சிறைத்துறை அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நரசிம்மமூர்த்தி சிறைத்துறைக்கு ஐந்து கேள்விகள் கேட்டுள்ளார்.

அதற்கான பதிலை சிறைத்துறை அனுப்பியுள்ளது.

1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?

பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.

2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?

பதில்: தண்டனைக் கைதியாக ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து வெளியே சென்றதுவரை சிறைத் துறை அவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை.

3. ஜெயிலுக்குள் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை நபர்களைச் சந்தித்தார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் உறவினர்களா? வழக்கறிஞர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? மந்திரிமார்களா? என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்?

பதில்: அவரை யாரும் சந்திக்கவில்லை.

4. ஜெயலலிதா சிறைக்குள் எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?

பதில்: ஜெயலலிதா பெண் தண்டனைக் கைதி என்பதால் பெண்களுக்கான ப்ளாக்கில் அடைக்கப்பட்டார்.

அவரை பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் மேற்பார்வையில் இருந்தார்.

5. தண்டனைக் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட வேண்டியது சிறைத் துறை விதி. அப்படிச் சீருடை கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதிப்படி ஒரு தண்டனைக் கைதிக்குச் சீருடை களும், படுக்கை விரிப்புகளும் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால், சாதாரண தண்டனைக் கைதிகள் இந்தச் சீருடைகளை அணியத் தேவையில்லை. ஆனால், கொடூரமான தண்டனைக் கைதிகள் கட்டாயம் இந்தச் சீருடைகளைத்தான் அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண தண்டனைக் கைதி என்பதால், அவர் வெள்ளைச் சீருடை அணியவில்லை எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை

Posted: 19 Nov 2014 04:45 AM PST

fishermans_released_002

fishermans_released_002இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் எமர்சன் (35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30)மற்றும் லாங்லெட் (22).

மீனவர்களான இவர்கள், கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் திகதி தூக்குத் தண்டனை விதித்து தீர்பளித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் இவர்கள் 5 பேரும் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் – மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! விக்டர் ஐவன்

Posted: 19 Nov 2014 04:44 AM PST

rajapaksa

rajapaksaஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் பங்கேற்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது குறித்த உத்தியோகபூர்வ ஆவணம் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! அடித்துச் சொல்கின்றார் விக்டர் ஐவன்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விக்டர் ஐவன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

தற்போதைய அரசியல் சூழலில் அதுரலியே ரத்ன தேரர் அருமையான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியத்தில் தங்கியுள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் மிகப் பிரபலமான ஹோட்டல் ஊழியர் மரணம்

Posted: 19 Nov 2014 04:42 AM PST

kuttan_famus_hotel_servent_002

kuttan_famus_hotel_servent_002உலகில் மிகப் பிரபலமான ஹொட்டல் ஊழியரான கோல் போஸ் ஹோட்டலின் நுழைவாயில் காப்பாளராக பணியாற்றி வந்த கொட்டாரப்பட்டு சட்டு என்று அழைக்கப்படும் குட்டன் தனது 72வது வயதில் நேற்று காலமானார்.

1920 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்த குட்டன், இளமை காலத்திலேயே தலைமன்னாருக்கு வந்தார்.

1938 ஆம் ஆண்டு கொழும்பு வந்த அவர் கோல் போஸ் ஹோட்டலில் உபசரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னர் கொழும்பில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் சேவையாற்றியுள்ளார்.

உதவியாளராக ஹோட்டலில் பணிக்கு சேர்ந்த அவர், பின்னர் சமையல் அறை ஊழியராக பிரபலம் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் நுழைவாயில் காப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 72 ஆண்டுகளாக அந்த பணியில் நீடித்தார்.

94 வயதான குட்டன் உலகில் ஹோட்டல்களில் பணியாற்றும் வயதான ஊழியர் என்ற பெருமையை பெற்றவர்.

உலகில் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர் மற்றும் உலகில் பிரபலமான ஹோட்டல் ஊழியர் என்ற ரீதியிலும் புகழ்பெற்றிருந்தார்.

குட்டனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை வெளியிடுவோரும் வந்த சந்தித்துள்ளனர்.

கோல் போஸ் ஹோட்டலின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவரது இறுதி விருப்பமாக இருந்த போதிலும் அந்த கனவு நனவாகாமல் போனதாக ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™