மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2ஜி வழக்கை சீர்குலைக்க திட்டம்: சி.பி.ஐ. இயக்குனர் மீது அரசு வக்கீல் பரபரப்பு புகார்
- ஐதராபாத் தொழில் அதிபரை கடத்த முயன்ற போலீஸ்காரர்: கண்காணிப்பு கேமிரா காட்டி கொடுத்தது
- சமூக இணைய தளங்களில் ஆதரவாளர்கள்: ஒபாமாவுக்கு அடுத்தப்படியாக மோடி பிரபலமானவர்
- 9 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது: மோடி டெல்லி திரும்பினார்
- ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது
- கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: சாமியார் ராம்பால் கோர்ட்டில் ஆஜர்
- ஆந்திராவில் புதிய தலைநகர் அமைக்க சந்திரபாபு நாயுடு 23–ந்தேதி ஜப்பான் பயணம்
- டெல்லியில் காதல் திருமண விவகாரம்: கல்லூரி மாணவி கவுரவ கொலை
- காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை
- மத்திய மந்திரிகள் பீகாருக்குள் நுழையக்கூடாது: முதல்–மந்திரி எச்சரிக்கை
- வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயர் ஆபாச படத்தை பரப்பிய 4 கேரள வாலிபர்கள் கைது
- 2ஜி ஸ்பெக்ட்ரம்: மேலும் 5 பேரிடம் விசாரிக்க சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு அனுமதி
- பெரியாறு அணை: சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 1: தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாள்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு
- 5 மீனவர்கள் விடுதலை: மாபெரும் சரித்திர சாதனையை மோடி நிகழ்த்தி இருக்கிறார்- பொன்.ராதாகிருஷ்ணன்
- மகாராஷ்டிரா அரசை நாங்கள் கவிழ்க்க போவது இல்லை: சரத்பவார்
- பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்
- குஜராத் மந்திரிசபை விரிவாக்கம்: 4 புதிய மந்திரிகள் பதவியேற்பு
- கொலை வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பால் அதிரடி கைது
| 2ஜி வழக்கை சீர்குலைக்க திட்டம்: சி.பி.ஐ. இயக்குனர் மீது அரசு வக்கீல் பரபரப்பு புகார் Posted: 20 Nov 2014 12:01 AM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா விசாரணையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் வக்கீல் பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குனரை சந்தித்த முக்கிய புள்ளிகளின் |
| ஐதராபாத் தொழில் அதிபரை கடத்த முயன்ற போலீஸ்காரர்: கண்காணிப்பு கேமிரா காட்டி கொடுத்தது Posted: 19 Nov 2014 11:36 PM PST ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா ரெட்டி (50). நாட்டின் 10 மருந்து கம்பெனிகளில் ஒன்றாக திகழும் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை தனது சகோதரர் பிரசாத் ரெட்டியுடன் ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் வாக்கிங் சென்றார். பின்னர் வீடு திரும்ப தனது காரில் ஏறிய போது ஏ.கே. 47 துப்பாக்கியுடன் |
| சமூக இணைய தளங்களில் ஆதரவாளர்கள்: ஒபாமாவுக்கு அடுத்தப்படியாக மோடி பிரபலமானவர் Posted: 19 Nov 2014 11:23 PM PST சர்வதேச அளவில் சமூக இணைய தளங்களில் அதிக ஆதரவாளர்களை பெற்றவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி 3–வது இடத்தில் உள்ளார். ஒபாமா, போப்புக்கு அடுத்தப்படியாக பிரபலமானவர் இடத்தை நரேந்திர மோடி பெற்று உள்ளார். நரேந்திரமோடிக்கு பேஸ் புக் இணைய தளத்தில் உலகம் முழுவதும் இருந்து 70 லட்சம் ஆதரவாளர்கள் உள்ளனர். 5 மாதத்தில் மட்டும் இவ்வளவு |
| 9 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது: மோடி டெல்லி திரும்பினார் Posted: 19 Nov 2014 10:47 PM PST பிரதமர் நரேந்திரமோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி நாடுகளில் 9 நாள் சுற்றுப் பயணம் செய்தார். ஏசியான் மற்றும் 'ஜி.20' உச்ச மாநாட்டில் கலந்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா, மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். நேற்று பிஜி தீவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி நேற்று தலைநகர் |
| ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது Posted: 19 Nov 2014 10:32 PM PST திருவனந்தபுரம் அருகே வழுதகாடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள இடபால் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் திருச்சூர் செல்வதற்காக திருவனந்தபுரம்–கோழிக்கோடு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் |
| கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: சாமியார் ராம்பால் கோர்ட்டில் ஆஜர் Posted: 19 Nov 2014 10:10 PM PST அரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால் (63). ஒரு அரசாங்கம் போல ஆசிரமத்தை நடத்தி வந்த ராம்பால், ஒரு கொலை வழக்கில் சிக்கினார். இதில் ஜாமீனில் வெளி வந்தார். ஆனால் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. அவர் மீது பஞ்சாப், அரியானா கோர்ட்டுகளை அவமதித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. |
| ஆந்திராவில் புதிய தலைநகர் அமைக்க சந்திரபாபு நாயுடு 23–ந்தேதி ஜப்பான் பயணம் Posted: 19 Nov 2014 10:08 PM PST ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா–குண்டூர் இடையே அமைக்கப்படும் எனறு முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். புதிய தலைநகர் சிங்கப்பூர், ஜப்பான் போல் நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் அழகுடன் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். |
| டெல்லியில் காதல் திருமண விவகாரம்: கல்லூரி மாணவி கவுரவ கொலை Posted: 19 Nov 2014 09:52 PM PST டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மகள் பாவனா யாதவ் டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இறுதி ஆண்டு படித்து வந்தார். பாவனாவுக்கும் அபிஷேக்சேத் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் முதலில் பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக சந்தித்தனர். |
| காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை Posted: 19 Nov 2014 09:13 PM PST மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததால் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய |
| மத்திய மந்திரிகள் பீகாருக்குள் நுழையக்கூடாது: முதல்–மந்திரி எச்சரிக்கை Posted: 19 Nov 2014 09:13 PM PST பீகார் மாநிலத்தை சேர்ந்த ராதா மோகன்சிங், ரவி சங்கர் பிரசாத், ராம் விலாஸ் பாஸ்வான், ராஜீவ் பிரதாப் ரூடி, உபேந்திர குஷ்வாகா, ராம்கிருபால் யாதவ், கிரிராஜ் சிங் ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்–மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி பேசியதாவது:– மத்திய அரசு பீகாரின் நலனை புறக்கணித்து வருகிறது. இந்த சகோதரர்கள் 7 |
| வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயர் ஆபாச படத்தை பரப்பிய 4 கேரள வாலிபர்கள் கைது Posted: 19 Nov 2014 08:27 PM PST கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் சரிதா நாயரின் ஆபாச படம் செல்போன்களில் வாட்ஸ் அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| 2ஜி ஸ்பெக்ட்ரம்: மேலும் 5 பேரிடம் விசாரிக்க சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு அனுமதி Posted: 19 Nov 2014 06:52 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் சி.பி.ஐ. தரப்பில் 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. எதிர்தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. |
| பெரியாறு அணை: சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு Posted: 19 Nov 2014 06:51 PM PST முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்கியதால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். கடந்த 17-ந் தேதி மாலை கேரளாவின் பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜுமோள் தலைமையில் சிலர் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தமிழக |
| Posted: 19 Nov 2014 06:26 PM PST கடந்த 2001-2002 ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி நடராஜன் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த |
| 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு Posted: 19 Nov 2014 02:26 PM PST 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தேர்வு செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது. ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் கோபி அனான், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், |
| 5 மீனவர்கள் விடுதலை: மாபெரும் சரித்திர சாதனையை மோடி நிகழ்த்தி இருக்கிறார்- பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 19 Nov 2014 12:04 PM PST இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் விடுதலைக்காக இந்திய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே நேரத்தில் அவர்களின் விடுதலைக்காக அரசு ரீதியான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து கொண்டு இருந்தன. நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபருடன் நேரிடையாக பேசினார். இந்த இடையறாத முயற்சியால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரும் |
| மகாராஷ்டிரா அரசை நாங்கள் கவிழ்க்க போவது இல்லை: சரத்பவார் Posted: 19 Nov 2014 09:48 AM PST மகராஷ்டிராவில் திடீர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதால் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இன்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். |
| பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள் Posted: 19 Nov 2014 09:32 AM PST சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து போப் பிரான்சிஸ்-க்கு 1.40 கோடி ஆதரவாளர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. |
| குஜராத் மந்திரிசபை விரிவாக்கம்: 4 புதிய மந்திரிகள் பதவியேற்பு Posted: 19 Nov 2014 08:57 AM PST குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆனந்திபென் பட்டேல், தனது அமைச்சரவையை முதல் முறையாக இன்று விரிவாக்கம் செய்துள்ளார். அவரது அமைச்சரவையில் இன்று 2 கேபினட் மந்திரிகளும், 2 இணை மந்திரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முன்னாள் |
| கொலை வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பால் அதிரடி கைது Posted: 19 Nov 2014 08:23 AM PST கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சாமியார் ராம்பால், கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு இன்று இரவு கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலத்தில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல சாமியார் ராம்பாலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி ஐகோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவைப் பிறப்பித்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |