Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இன்று முதல் ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது?

Posted: 16 Nov 2014 11:02 PM PST

jothika001

jothika001தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஜோதிகா தான். இவர் நடித்த போது நம்பர் 1 என்ற இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்தார். ஆனால், ரசிகர்கள் எல்லாம் மீண்டும் இவரை திரையில் பார்க்க வேண்டும் என்று எண்ணியதால், மலையாள படமான 'ஹைவ் வோல்ட் ஆர்யூ' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஷுட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், இன்று முதல் ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷாலை எச்சரித்த போலிஸ்?

Posted: 16 Nov 2014 11:00 PM PST

vishal001

vishal001விஷால் சில நாட்களாகவே திருட்டு விசிடி கும்பல் மீது கடுங்கோபத்தில் உள்ளார். இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த அவர் தானாகவே களத்தில் இறங்கினார்.

ஆனால், இது போலிஸாருக்கு பெரும் தலைவலியை அமைந்து விட்டது. அவர்களை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் எங்களிடம் புகார் செய்யுங்கள்.

நீங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி எச்சரித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொம்ப நேரம் முழிச்சிருப்பிங்களா? புற்றுநோய் வரும்

Posted: 16 Nov 2014 10:55 PM PST

sleeping_problem_002

sleeping_problem_002மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரை தூக்கம் என்பது வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது.

இன்றைய மனிதன் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், இதற்கு குறைவான நேரம் தூங்கும் மனிதர்களுக்கு ரத்தஅழுத்தம், உடல்கொழுப்பு, உடல்பருமன், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கவே பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளொன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமீபகால ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

குறைந்த நேரம் தூங்குபவர்களில் சுமார் 12 சதவீதம் பேர் சராசரி வாழ்நாளுக்கு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹாவார்ட், மேன்செஸ்டர் உள்ளிட்ட பல்கலைக்கழங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கூறுகையில், மனித வாழ்வின் சராசரி தூக்கம் என்பது 8 மணிநேரமாகும். ஆனால், இன்றைய நவீன உலகில் கணனி, கைப்பேசி போன்வற்றிலேயே பெரும்பாலானவர்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனால் அவர்களின் தூங்கும் நேரம் குறைகிறது. நாளடைவில் அதுவே அவர்களின் வாடிக்கையாகிவிடுகிறது.

இது அவர்களின் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, இதயநோய், மனஅழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இது தவிர 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் நபரில், சுமார் 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.

அதிக நேரம் தூங்கினாலும் உடல் எடை அதிகரித்து பல்வேறு வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதேவேளை மிகவும் குறைவான நேரம் உறங்கினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

குறிப்பாக இரவு வேலைக்கு செல்பவர்கள் பகலில் சரிவர தூங்கு வதில்லை. எனவே, சரியான நேரத்தில் உறங்கி எழுந்து உடல்நலத்தை ஆரோக்கியத்துடன் வைப்போம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருவை கலைக்கும் இயற்கை உணவுகள்!

Posted: 16 Nov 2014 10:54 PM PST

abortion_food_002

abortion_food_002எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை கலைக்க இயற்கையான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது.

ஏனெனில், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும்.

இல்லாவிட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்வது நல்லது.

பட்டை

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.

அன்னாசி

கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதாலேயே தான்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

வெல்லம்

வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

கரும்பு

கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

வேர்க்கடலை

வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

எள்

எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண் சிமிட்டினாலே செல்ஃபி: அசத்தலான ஸ்மார்ட்போன்!

Posted: 16 Nov 2014 10:45 PM PST

eluga_s_001

eluga_s_001பானாசோனிக் கைப்பேசி நிறுவனம், கண் சிமிட்டினாலே செல்ஃபி எடுக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பானாசோனிக் இந்தியா தற்போது புதிதாக வெளியிட்டுள்ள எலுகா எஸ் என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,190க்கு வெளியிடப்பட்டுள்ளது.

செல்ஃபிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், செல்ஃபி அல்லது குழுவாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும்போது, உங்கள் கண்களை சிமிட்டினாலே புகைப்படம் தானாக எடுக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விவரங்கள்: எலுகா எஸ் 5 இன்ச், 1280*720 பிக்சல், எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் இதில் உள்ளது.

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கமெராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கமெராவும் உள்ளது.

மேலும் இதில் 3ஜி எஹ்எஸ்பிஏ, வைபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் இருப்பதோடு 2100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகின்றது ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்

Posted: 16 Nov 2014 10:43 PM PST

600

600இந்தியாவில் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.

இதன் விலை ரூபாய் 4,399 என நிர்னயக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 256 எம்பி ராம் கொண்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை 2 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் வசதியும் உள்ளது.

கமெராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதோடு ஜிபிஆர்எஸ்/எட்ஜ், வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதிகளோடு 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இந்நிறுவனம் சமீபத்தில் ஸ்டெல்லார் 517 மற்றும் ஸ்டெல்லார் 470 ஸ்மார்ட்போன்களை ரூ.7,999 க்கு வெளியிட்டதோடு இரண்டும் டூயல்சிம் மற்ரும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏலத்தில் 2.7-மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுத்த நெப்போலியனின் தொப்பி!

Posted: 16 Nov 2014 10:39 PM PST

hat1-600x337

hat1-600x337சரித்திர பிரசித்தி பெற்ற பிரான்ஸ் நாட்டு பேரரசர் நெப்போலியன் பொனபாட்டிற்கு சொந்தமான ஒரு இரண்டு முனைகள் கொண்ட தொப்பி பரிசிற்கு அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில் 2.7-மில்லியன் டொலர்களிற்கு ஒரு தென் கொரிய நாட்டு ஏலதாரருக்கு விற்கப்பட்டுள்ளது.

நெப்போலியனின் தொப்பி அவரது மகனான நெப்போலியன் II-ன் ஆடைகளிற்கு அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த இரு முனை தொப்பி நெப்போலியனின் ஒரு முத்திரையாக இருந்துள்ளது. இரு முனைகளும் அவரது தோள்களில் வரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்துள்ளது.

அக்கால கட்டத்தில் இத்தகைய தொப்பிகளை அணிந்தனர் ஆனால் நெப்போலியன் மட்டும் ஒரு பக்கமாக அணிய ஏனைய அனைவரும் அடுத்த பக்கமாக அணிந்திருந்தனர் என்றும் அதனால் போர்க்களத்தில் அவரது சல்யூட்டை அங்கீகரிக்க கூடியதாக இருந்ததெனவும் ஏல அதிகாரி தெரிவித்துள்ளார்.

5-வருடங்களிற்கு முன்னர் இதே ஏல வீட்டில் நெப்போலியனிற்கு சொந்தமான பட்டாக்கத்தி ஒன்று 6.8-மில்லியன் டொலர்களிற்கு விற்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா வாழ வைப்போம் அமைப்பால் தொடர்ந்தும் தாயக மக்களுக்கு பேருதவிகள்!

Posted: 16 Nov 2014 10:38 PM PST

canada-001

canada-001கனடா வாழ வைப்போம் அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கிளிநொச்சியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் மூலம் படுகாயங்களுக்கு உள்ளாகி உடல் இயக்கங்களை இழந்தும் மற்றும் கால் கைகளை இழந்தும் மாற்றுவலுவுள்ளவர்களாக தம் வாழ்நாளை கழிக்கின்றவர்களின் வாழ்வுக்கு பல ஒளிமயமான வழிகள் கிடைத்துள்ளன. கடந்த மாதமும் கனடா வாழ வைப்போம் அமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மாற்றுவலுவுள்ளவர்களுக்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கும் பேருதவிகளை நல்கியுள்ளது.

போரினால் தன் இரண்டு கண்களிலும் பார்வைகளை இழந்து தன் முயற்சியின் மூலம் கற்று பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் எஸ்.விக்னேஸ்வரனுக்கு மேலும் அவரது மாதாந்த கற்றல் நடிவக்கைக்காக ரூபா 5 ஆயிரம் உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனடா வாழ வைப்போம் அமைப்பு ஒரு மடிக்கணினி ஒன்றையும் வழங்கியிருந்தது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் ரி.குமாரதாஸன் தன் இரண்டு கண்களிலும் போரின் போது பார்வையை இழந்துள்ளார். இவருக்கு சிறு வியாபார தேவைக்காக உரூபா 15 ஆயிரத்தை கனடா வாழ வைப்போம் அமைப்பு வழங்கியுள்ளது.

கிளிநொச்சி பளையைச் சேர்ந்த எஸ்.கமலராணி தனது கணவனை இழந்த நிலையில் இவரது பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்காக ரூபா 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த ரி.விஜயலட்சுமி போரினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவருடைய வாழ்வு ஆதாரமாக கறவை மாடுகளை வாங்குவதற்கு கனடா வாழ வைப்போம் அமைப்பு ரூபா 80 ஆயிரம் உதவி வழங்கியுள்ளது.

இந்த உதவிகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் இந்த பயனாளிகளிடம் வழங்கி வைத்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பயப்படும் பன்னீர் செல்வம்: சுட்டிக்காட்டும் கருணாநிதி

Posted: 16 Nov 2014 10:35 PM PST

karunanithi_pannerselvam_002

karunanithi_pannerselvam_002முல்லை பெரியாறு, காவிரியில் தடுப்பணை கட்டுவது போன்ற பிரச்சினையில், பதவி பயத்தைப் போக்கிக் கொண்டு தமிழக நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நேற்று, 15ம் திகதி, சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. ஆனாலும் பதிவாளர் அலுவலகத்திலே கேரள அரசின் சார்பில் அவசர அவசரமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள வைகை அணைக்கு தண்ணீரைத் திறந்து விட தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க, தமிழக அரசுக்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவினை 17ஆம் திகதி திங்கள் கிழமை அன்றே விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் 17ஆம் திகதி உச்சநீதி மன்றம் இயங்கும் என்றாலும், திங்கள் கிழமைகளில் பொதுவாக புதிய மனுக்கள் விசாரிக்கப்படுவதில்லை.

இந்த மாதத் தொடக்கத்திலே கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் முல்லைப் பெரியாறு பற்றி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தபோதே, 7-11-2014 அன்று நான் அதைப் பற்றி விளக்கமாகத் தெரிவித்து, "142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது அவசியமானது.

எனவே, தமிழக அரசு 'கேவியட்' மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கேரள அரசின் இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு மத்திய அரசின் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசு இனியும் காலம் தாடிநத்தாமல், மூத்தப் பொறியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்" என்று அறிக்கை வெளியிட்டேன். பயப்படும் பன்னீர் செல்வம்: சுட்டிக்காட்டும் கருணாநிதி

அந்த அறிக்கையைப் பார்த்ததும், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கினார் தெரியுமா? அதற்கு அடுத்த நாளே என்னை எந்த அளவுக்குக் கடுமையாகத் தாக்க முடியுமோ அந்த அளவுக்குத் தாக்கி, நான் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலே துரோகம் செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை விடுத்தாரே தவிர, கேரள அரசின் முயற்சிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட நடத்தி உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை.

ஆனால் கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்த ஆலோசிப்பதற்காக மாநில அமைச்சரவைக் கூட்டம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று, டிசம்பர் 1ஆம் திகதியன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டும்படி கவர்னருக்கு பரிந்துரை செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பேரவைக் கூட்டத் தொடரில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்க, சட்ட மசோதாக்களைக் கொண்டு வர கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது? ஆட்சி இயங்குகிறதா? 'மக்கள் முதல்வர்' வழியில் ஆட்சி நடத்தும் 'தமிழக முதல்வர்' - அம்மா வழியிலேயே பிரதமருக்கு இதுபற்றி கடிதம் ஒன்றை எழுதியதோடு தன் கடமை முடிந்து விட்டதாக இருந்து விட்டார்.

பொதுப் பணித்துறை அதிகாரிகள், அவர்களால் முடிந்த அளவுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்காணிப்புக் குழுவிடம் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள்.

இது போலவே தான், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடிவெடுத்திருப்பதாக கர்நாடக மாநில அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தி ஏடுகளிலே வெளிவந்ததும், நான் அவசர அவசரமாக 12-11-2014 அன்று விடுத்த அறிக்கையில், "வீண் வம்பை விலை கொடுத்து வாங்க முற்பட்டுள்ள கர்நாடக அரசுக்கும், அந்த அமைச்சருக்கும் தமிழக அரசின் சார்பில் உடனடியாகத் தக்கப் பதிலடி கொடுக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழக விவசாயிகளின் வாடிநவாதாரம் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான உயிர்ப் பிரச்சினை குறித்து, தமிழக அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அனைவரின் கருத்துக்களை அறிந்து, உச்ச நீதி மன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் சட்டப்படி உரிய தீர்வுக்காக முறையிடுவதோடு; தமிழகச் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி, அதிலே அவசரத் தீர்மானம் ஒன்றையும் கர்நாடக அரசையும், அந்த அமைச்சரின் அறிவிப்பினையும் எதிர்த்து நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தேன்.

அணை கட்டுவதைக் கண்டித்து வரும் 22ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடையடைப்பு, மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் பிரச்சினை முற்றிவருகிறது.

ஆனால் தமிழக அரசு இந்தப் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ சட்டப்பேரவையையோ கூட்டுவதற்குத் தயாராக இல்லை.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பிரதமருக்கு 'அம்மா வழியில்' கடிதம் ஒன்றினை எழுதி விட்டால் பிரச்சினை முடிந்ததாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருதுகிறார்.

பன்னீர்செல்வத்திற்கு அமைச்சரவையையும், சட்டப் பேரவையையும் கூட்டுவதற்கு எண்ணம் கூட இருக்கலாம். ஆனால் அப்படிக் கூட்டினால் என்னவாகுமோ, இருக்கும் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணுகிறார் போலும்! அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டு தமிழ் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியிலே அவர் ஈடுபடட்டும் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யார் தோளையாவது மிதித்து தான் அரசியலில் நிற்க முடியும்: ரஜினிகாந்த் நறுக் பேச்சு

Posted: 16 Nov 2014 10:34 PM PST

BL23_RAJINI1_1339397g

BL23_RAJINI1_1339397gஅரசியல் என்பது ஆழமானது, ஆபத்தானது எனறு என்று ரஜினிகாந்த் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிங்கா படத்தின் பாடல் சிடி மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இரண்டரை வருடமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன். மீண்டும் நடிப்பேனா, நடனம் ஆடுவேனா என சந்தேகம் இருந்தது.

இதையெல்லாம் மீறி கோச்சடையான் படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் முழு சுமையும் சின்னக் குழந்தையான என் மகள் சவுந்தர்யா மீது தூக்கி வைக்கப்பட்டது.

அவளால், அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பண இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் ஒரு அனுபவம் அவளுக்கு கிடைத்தது. அவர்கள் (மகள்கள்) சம்பாதித்துதான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. நான் சம்பாதித்ததை வீணடிக்காமல் இருந்தாலே போதும்.

நான் அரசியலுக்கு வரவேண்டும் என சேரன், அமீர் இங்கே பேசினார்கள். என் உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என வைரமுத்து சொன்னார்.

உண்மை என்னவென்றால் என்னைப் பற்றி எனக்கே தெரியாது. சூழ்நிலைதான் முடிவுகளை எடுக்க வைக்கும்.

அரசியல் என்பது ஆழமானது, ஆபத்தானது. எவர் தோளையாவது மிதித்துதான் அங்கே நிற்க வேண்டும். அப்படி வரவேண்டும் என நினைக்கவில்லை.

வேர் உருவாவதுதான் முக்கியம். அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை. தயங்குகிறேன். ஆண்டவன் காட்டிய வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஆண்டவன் விரும்பினால், நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்களுக்கு நல்லதை செய்வேன் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேய்களாக மாறிய ஐ.எஸ்.ஐ.எஸ்: ஒபாமா கண்டனம்

Posted: 16 Nov 2014 10:32 PM PST

OBAMA-AP PHOTO_8

OBAMA-AP PHOTO_8அமெரிக்க உதவிப் பணியாளர் அப்துல் ரஹ்மான் கசீக், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கசீக் கொலை செய்யப்பட்டமை முற்றாக பேய்யின் செயற்பாடு எனவும் ஒபாமா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கசீக் உடையது என தெரிவிக்கப்படும் தூண்டிக்கப்பட்ட தலையொன்றுடன் ஆயுததாரி ஒருவர் தோன்றும் காட்சி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட தலை கசீக் உடையது என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை சிரிய மக்களின் மீதுள்ள அன்பினால் தனது மகன் உயிர்தியாகம் செய்துள்ளதாக கசீக்கின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

26 வயதான கசீக் அகதிகளுக்கான குழுவொன்றுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த போது கடந்த ஆண்டு கடத்தப்பட்டிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசிய விமானத்தை சுட்ட உக்ரைன் விமானம்: புகைப்படத்துடன் சிக்கிய ஆதாரம்

Posted: 16 Nov 2014 10:30 PM PST

ukraine_shootmalyisa_002

ukraine_shootmalyisa_002உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தை உக்ரைனைச் சேர்ந்த போர் விமானம் தாக்கியதாக ரஷ்ய தொலைக்காட்சி சேனல் புகைப்படத்துடன் கூடிய செய்தியை ஒளிபரப்பியுள்ளது.

கடந்த யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்ய புரட்சிப்படை ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.

இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.

மலேசிய விமானத்தை உக்ரைனின் போர் விமானம் தான் தாக்கியது என்று ரஷ்யா தெரிவித்தது. ஆனால் மலேசிய விமானத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை வீசி ரஷ்ய புரட்சிப்படை தான் தாக்கியது என்று உக்ரைன் அரசு தெரிவித்தது, இதை அமெரிக்காவும் உறுதிபடுத்தியது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒட்நாகோ என்ற செய்தி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் தாக்கியதாகக் கூறி அதற்கான புகைப்படங்களையும் காண்பித்தனர்.

அந்த புகைப்படங்கள் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் படித்த ரஷ்ய நிபுணரான ஜார்ஜ் பில்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிமிட்ரி போரிசோவ் கூறுகையில், மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டுத்தள்ளப்பட்டபோது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஷ்யவானொளி நிலையத்தில் பணிபுரியும் வர்ணனையாளரான ஆன்ட்ரே மென்ஷெனின் கூறுகையில்,தொலைக்காட்சியில் காட்டப்பட்ட புகைப்படங்கள் உண்மையாக இருக்காது.

அதில் உள்ள இடம் விமானம் தாக்கப்பட்ட இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த புலன்விசாரணை பத்திரிக்கை இணையதளமான பெல்லிங்கேட்டில் கூறுகையில், இது பொய்யான புகைப்படங்கள். அது 2012ம் ஆண்டு கூகுள் எர்த் புகைப்படங்கள் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்! பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: குமார் குணரட்ணம்

Posted: 16 Nov 2014 10:28 PM PST

AVN27_RAJAPAKSA_19951f

AVN27_RAJAPAKSA_19951fஇலங்கையில் ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை, இன்றுள்ள மகிந்த அரசை அழித்து மக்கள் வாழ்க்கையை சுமுகமாக மற்றுவதே எமது நோக்கம் என முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான குமார் குணரட்ணம் தெரிவித்தார்.

அத்துடன், பொது வேட்பாளர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை இதற்கு எம்மிடம் திட்டம் உண்டு என லங்காசிறி வானொலியில் அரசியற்களம் வட்ட மேசையில் குமார் குணரட்ணம் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக வந்தால் நானே தோற்கடிப்பேன்!- உபேக்ஷாவின் திமிர்

Posted: 16 Nov 2014 10:27 PM PST

Upeksha-Swarnamali-accident-Newsfirst

Upeksha-Swarnamali-accident-Newsfirstஎதிர்க்கட்சிகளின் சார்பில் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அவரைத் தோற்கடிக்க தான் மட்டுமே போதும் என்று உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. விலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கரு ஜயசூரியவை அறுபதினாயிரம் வாக்குகளையும் நான் எண்பத்தோராயிரம் அளவிலான வாக்குகளையும் பெற்றுள்ளோம்.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்திலேயே நான் அவரைவிட அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளேன்.

அதுவும் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட போது எனக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்கினால் அவரை எதிர்த்துப் போட்டியிட நான் தயார்.

நாடு முழுவதும் அவரை கூடுதலான வாக்குகளை என்னால் பெற முடியும்.

அப்படியிருக்க இவர்கள் எப்படி ஜனாதிபதிக்கு எதிராக வெற்றிபெற முடியும் என்றும் உபேக்ஷா சுவர்ணமாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™