Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரூ. 200 கோடி பணபரிமாற்றம் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு

Posted: 16 Nov 2014 10:53 PM PST

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்த பணப்பரிமாற்றம் பற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 16 பேர் மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

உமர் அப்துல்லா வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பாதுகாப்பு படைவீரர் கைது

Posted: 16 Nov 2014 10:52 PM PST

காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லாவின் வீடு ஸ்ரீநகரில் உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அந்த வீட்டுக்கு எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 7.10 மணி அளவில் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திடீரென வெடித்தது. அந்த துப்பாக்கியில் இருந்து 5 குண்டுகள்

திருவனந்தபுரத்தில் முத்தப் போராட்டக்காரர்கள் திடீர் ஊர்வலம்

Posted: 16 Nov 2014 10:44 PM PST

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் 'காபி ஷாப்'பிற்கு இளம்பெண்களும், வாலிபர்களும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் இளம்ஜோடிகள் நமது கலாசாரத்திற்கு எதிரான வகையில் ஒருவருக்கு ஒருவர் பொது இடத்தில் முத்தமிட்டு கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

சத்தீஸ்கரில் சிகிச்சையின் போது பலியான 14 பெண்களின் குழந்தைகளை தத்தெடுத்தது மாநில அரசு

Posted: 16 Nov 2014 10:05 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த குடும்பநல அறுவை சிகிச்சை முகாமில், மோசமான சிகிச்சை காரணமாக 14 பெண்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குப்தா கைது செய்யப்பட்டார்.

மனைவிகளை அடித்து உதைக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் பேச்சு

Posted: 16 Nov 2014 09:58 PM PST

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் 2 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் உள்ள துர்ப்பிதாலு, வெதாம்யினா வானிகலங்கா கிராமத்தை தத்து எடுத்துள்ள நிர்மலா சீதாராமன் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றார். தனது கணவரும் ஆந்திர அரசு ஆலோசகருமான பரகால பிரபாகருடன் கிராமத்தை தூய்மை செய்தார். பின்னர் கிராம மக்கள் மத்தியில் நிர்மலா

சார்க் மாநாட்டில் இந்தியா அனுப்பும் காரை நவாஸ் பயன்படுத்தமாட்டார்: பாகிஸ்தான் அறிவிப்பு

Posted: 16 Nov 2014 09:52 PM PST

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் வரும் 26, 27–ந் தேதிகளில் 2 நாட்கள் தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சார்க் மாநட்டுக்கு வரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்

நேரு பிறந்தநாள் மாநாடு: திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மீண்டும் காங்கிரசுடன் கை கோர்ப்பு

Posted: 16 Nov 2014 09:50 PM PST

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 125–வது பிறந்தநாளை முன்னிட்டு 2 நாள் மாநாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஜனநாயகத்தில் மக்களுக்கு அதிகாரம் அளித்தல், நேருவின் சர்வதேச பார்வையும் ஜனநாயக அடிப்படையிலான உலகமும் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி 55 நாட்டுத் தலைவர்களுக்கு

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பூஞ்ச் பகுதியில் துப்பாக்கி சூடு

Posted: 16 Nov 2014 08:25 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட சாசியான் பகுதியில் நேற்றிரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை வரை பாகிஸ்தான் தொடர்

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது

Posted: 16 Nov 2014 07:51 PM PST

பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான 'இஸ்கான்' அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூ.300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர். 'பிருந்தாவன் சந்தி

பா.ஜனதா உறவை துண்டிக்க விரும்பாத சிவசேனா: மத்திய மந்திரி ஆனந்த் கீதே தகவல்

Posted: 16 Nov 2014 06:53 PM PST

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒரே மந்திரி ஆனந்த் கீதே. பாரதீய ஜனதாவுடன் உறவை முறித்துக் கொள்ள தங்கள் கட்சி விரும்பவில்லை என்பதை

காஷ்மீரில் நடைபாதையில் வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 16 Nov 2014 06:18 PM PST

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்திற்கு உள்பட்ட தாங்கர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அம்ரி கிராம பகுதியில் நடைபாதையில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் எடை தலா 4 கிலோ ஆகும். போலீசார்

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

Posted: 16 Nov 2014 04:21 PM PST

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். புகழ்பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சோனியாவின் அழைப்பை ஏற்ற மம்தா பானர்ஜி

Posted: 16 Nov 2014 03:44 PM PST

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தவர், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. இதே போன்று காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே மேற்கு வங்காளத்தில் 2012-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு இணக்கம் இல்லாமல் இருந்து வந்தது.

கட்சி நிர்வாகிகளுக்கு மந்திரி பதவி: பாஜக.வில் முக்கிய பொறுப்புகளில் புதுமுகங்கள்

Posted: 16 Nov 2014 03:19 PM PST

பா.ஜனதாவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கட்சியின் பிரதான பொறுப்புகளில் புதுமுகங்களை சேர்க்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை கடந்த வாரம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பா.ஜனதாவின் பொதுச்செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் பிரதாப் ரூடி, ராம் சங்கர் கத்தேரியா ஆகியோர் மந்திரி பதவி பெற்றனர்.

நேருவின் 125-வது பிறந்த நாளையொட்டி காங். கட்சி நடத்தும் 2 நாள் சர்வதேச மாநாடு

Posted: 16 Nov 2014 02:20 PM PST

நேருவின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள 2 நாள் சர்வதேச மாநாடு, டெல்லியில் இன்று தொடங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள் நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் 125-வது பிறந்த நாளை மத்திய அரசு பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சியும் தனியாக 2 நாள் உலகளாவிய

பிலாஸ்பூர் கருத்தடை மரணங்கள்: பணம் தருவதாக ஆசை காட்டி பெண்களை பலியாக்கியது அம்பலம்

Posted: 16 Nov 2014 07:49 AM PST

சத்திஸ்கர் மாநில அரசின் சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 13 பெண்கள் பலியான நிலையில், இந்த ஆபரேஷனுக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் 'நிறைய பணம் கிடைக்கும். ஏராளமான

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால்தான் மக்கள் வளமடைய முடியும்: ராஜ்நாத் சிங் பிரசாரம்

Posted: 16 Nov 2014 07:28 AM PST

சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால்தான் மக்கள் வளமடைய முடியும் என்று வலியுறுத்தினார்.

தீ விபத்தில் 3 குழந்தைகளுடன் மனைவி பலி: சந்தேகத்தின் பேரில் கணவரிடம் போலீஸ் விசாரணை

Posted: 16 Nov 2014 07:25 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரத்தின் அருகே வீடு தீக்கிரையாகிய விபத்தில் தாயுடன் சேர்ந்து 3 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை அடுத்துள்ள பித்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். சிற்றுண்டி

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

Posted: 16 Nov 2014 07:24 AM PST

மகராஷ்டிரா மாநிலத்தில் பஸ்சுக்காக சாலையோரம் காத்திருந்த பயணிகள் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் இருந்து புனேவிற்கு கரும்புகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பார்கான்- கந்தாலா இடையே வரும்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திக்கொண்டு செல்ல முயன்றது.

இறந்தவருக்கு பிடி வாரண்ட்: அப்பாவி கைது-ஒடிசா போலீசாரின் குளறுபடி

Posted: 16 Nov 2014 06:58 AM PST

15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட குற்றவாளிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து அவருக்கு பதிலாக ஒரு அப்பாவியை கைது செய்த ஒடிசா மாநில போலீசாரின் 'சாமர்த்தியம்' மனித உரிமை ஆர்வலர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசாவின் கேண்ட்ரபாரா மாவட்டத்தில் குற்றவழக்கு ஒன்றில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™