Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உயிர் நீயடா… ‘TUM HI HO’ தமிழ் மீளிசை!

Posted:


இசையும் காதலும் மீள் நிரம்புதலுக்குரியவை. அதிலும், காதலைப் பொழியும் இன்னிசை என்பது மொழிகள் கடந்தும் வீச்சம் பெற்று மனங்களை வசீகரிப்பவை. அப்படி கடந்த ஆண்டு வெளியான ஆஷிக்கி 2 (Aashiqui 2) என்கிற ஹிந்தி படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகவும் பிரபலம் பெற்றன. அதிலும், TUM HI HO என்கிற காதல் பாடல் காதலர்களின் ஆன்மா கீதமாகவே ஒலித்தது. 


Read more ...

சட்டீஸ்கரில் பண ஆசை காட்டி குடும்பக்கட்டுப்பாடு செய்ய பழங்குடியினப் பெண்களை அழைத்து சென்ற அவலம்!

Posted:

சட்டீஸ்கரில் பண ஆசை பழங்குடியினப் பெண்களை குடும்பக்கட்டுப்பாடு செய்ய
சுகாதாரத்துறை அலுவலர்கள் அழைத்துச் சென்ற அவலநிலை அம்பலமாகியுள்ளது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் வெளியீடு!

Posted:

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளக் கூடிய பலம் யாருக்கும் கிடையாது: சுசில் பிரேமஜயந்த

Posted:


எதிரணியின் பொது வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடையாது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

உபி பிருந்தாவனத்தில் மிகப்பெரிய கிருஷ்ணன் கோயில்:பிரணாப் அடிக்கல் நாட்டினார்

Posted:

உத்திரப் பிரதேசம் பிருந்தாவன் நகரில் மிகப்பெரிய கிருஷ்ணன் கோயில் கட்ட
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று அடிக்கல் நாட்டினார்.


Read more ...

காங்கிரஸ் நடத்தும் சர்வதேச மாநாட்டில் பிரதமருக்கு அழைப்பு இல்லை : புதிய சர்ச்சை

Posted:

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி நடத்தும் சர்வதேச மாநாட்டில் பிரதமர்
நரேந்திர மோடிக்கு அழைப்பு இல்லை.இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.


Read more ...

கறுப்புப் பணம் குறித்த பிரதமர் மோடியின் உலகளாவிய புதியத் திட்டத்துக்கு ஆதரவு!

Posted:

கறுப்புப் பணம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய புதியத்
திட்டத்துக்கு ஜி 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


Read more ...

பொது எதிரணிக்கிடையிலான ஒப்பந்தம் நாளை மறுதினமே கைச்சாத்து!

Posted:

பொது எதிரணியாக இணையவுள்ள கட்சிகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த ஒப்பந்தம், நாளை மறுதினம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

வடக்கு- கிழக்கில் போரின் பின்னரும் மக்களின் வாழ்வில் மாற்றமில்லை: சுனில் ஹந்துன்நெத்தி

Posted:

வடக்கு- கிழக்கில் போர் முடிவுற்ற போதிலும் மக்களின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 


Read more ...

நாம் காணும் மேற்குலகம் 9 : மனித வரலாற்றின் மிகப்பெரும் நிகழ்வொன்று இவ்வருடம் டிசம்பரில் நடைபெறுகிறது!

Posted:

Artificial Intelligent என்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் செயற்கை அறிவுத்திறன் என்கின்றனர்.


Read more ...

ஆஞ்சலோ மத்திவ்ஸின் 139 ஓட்டங்களை முறியடித்த விராத் கோலியின் 139 ஓட்டங்கள்

Posted:

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என தொடரை வென்றுள்ளது. இதன் மூலம் இன்னமும் இரு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள உலக கோப்பை போட்டித் தொடருக்கான இலங்கை அணி குறித்து தயக்க நிலை உருவாகியுள்ளது. 


Read more ...

கடந்த 5 மாத காலத் தாக்குதல்களில் 1200 போராளிகள் கொல்லப் பட்டுள்ளனர்:பாகிஸ்தான் இராணுவம்

Posted:

பாகிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராகக் கடந்த 5 மாத காலமாக இராணுவம் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் இதுவரை 1200 போராளிகள் கொல்லப் பட்டிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதன் மூத்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

பிரிஸ்பேன் G20 மாநாட்டில் ரஷ்யா மீது பலத்த குற்றச்சாட்டு!:பாதியில் வெளியேறிய புதின்

Posted:

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பலத்த குற்றச்சாட்டை சுமத்தியதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யாவின் தலையீடு மேற்குலக நாடுகளுக்குக் கடும் பொருளாதார சிக்கல்களைக் கொண்டு வருவதாகவும் இதைத் தடுக்க புதின் முன்வர வேண்டும் என ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் கூறியிருந்தார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூன் கூறுகையில், உக்ரைன் பிரச்சினையைப் பல்வேறு வழிகளில் திசை திருப்பும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என்பதுடன் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதரத் தடைகளை அதிகரிப்பது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பெர் உக்ரைனை விட்டு வெளியேறுக என சற்றுக் காட்டமாகவே புதினிடம் தெரிவித்தார். இதையடுத்து ரஷ்ய அதிபர் புதின் கோபத்துடன் மாநாட்டைப் புறக்கணித்து வெளியேறினார். மேலும் அவர் உடனடியாக விமானத்தில் மாஸ்கோவுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் ரஷ்ய அதிபர் மாளிகை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் புதினுக்குப் பல அரசாங்கப் பணிகள் காத்திருப்பதாலும் G20 மாநாடு நேற்றுடன் முடிவுக்கு வருகின்றது என்பதாலும் தான் புதின் நேரத்துக்குக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

ஆயினும் பின்னர் அவுஸ்திரேலியப் பிரதமர் ஊடகப் பேட்டியின் போது பல்வேறு சர்ச்சைகள் நிலவிய போதும் புதின் மிகவும் மரியாதையாகவே G20 மாநாட்டில் நடத்தப் பட்டார் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ பொய்யுரைக்கிறார்: எரிக் சொல்ஹெய்ம்

Posted:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயின் முன்னைய அரசாங்கம் குறித்தும், தன்னைக் குறித்து பொய்யுரைக்கிறார் என்று இலங்கை அரசாங்கத்துக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்டவரும், நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்கத் தொண்டு ஊழியர் உட்பட 18 சிரியர்கள் சிரச்சேதம்!:இஸ்லாமிய தேசம் அறிவிப்பு

Posted:

சில நாட்களுக்கு முன் சிரியாவில் கடத்தப் பட்ட அமெரிக்கத் தொண்டு ஊழியரான பீட்டர் கஸ்ஸிக் மற்றும் தாம் கைது செய்திருந்த சிரிய இராணுவ வீரர்களில் 18 பேர் உட்பட 19 பேரை தாம் சிரச்சேதம் செய்திருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய தேச ஜிஹாதிஸ்ட் போராளிகள் அறிவித்துள்ளதுடன் இது தொடர்பான வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் அமெரிக்காவுக்கு தமது எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளனர்.


Read more ...

சாரதா நிதி நிறுவன முறை கேடில் ஈடுபட்டவர்கள் வெளியில், குற்றமறியாத நான் உள்ளே:குணால் கோஷ்

Posted:

சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட குணால் கோஷ் எம்பி, முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள், ஏதுமறியாத நான் சிறையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Read more ...

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் பாஜக பக்கமிருப்பேன்:ஜித்தன் ராம் மஞ்ஷி

Posted:

பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் நான் பாஜக பக்கம் சாய்ந்து விடுவேன் என்று, பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்ஷி கூறியுள்ளார்.


Read more ...

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு,தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™