Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரஷ்யா மீது பொருளாதார தடை! பிரித்தானியா எச்சரிக்கை

Posted: 14 Nov 2014 11:48 PM PST

russian_tank_001

russian_tank_001உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரேன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் கருத்து வெளியிடுகையில்,

'உக்ரேன் நாட்டை ஒரு சுதந்திர நாடாக செயல்பட ரஷ்யா அனுமதிக்கும் என நான் இன்னும் நம்புகிறேன்.

உக்ரேனின் சுதந்திர விவகாரத்தில் சாதகமான போக்கை ரஷ்யா கையாண்டால், அதன் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படும். மாறாக ரஷ்யாவின் தவறான நடவடிக்கைகள் தொடருமானால், அதன் மீதான பொருளாதார தடைகள் மேலும் அதிகரிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இதேவேளை உக்ரேன் விவகாரத்தில், ரஷ்யாவின் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் தண்டனை வழங்கும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆங் சான் சூகியை கட்டியணைந்த ஒபாமா! தேர்தல் குறித்து எச்சரிக்கை

Posted: 14 Nov 2014 11:47 PM PST

obama_aung_002

obama_aung_002மியான்மர் ஜனாதிபதி தேர்தலில், அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட தடை விதிப்பது அர்த்தம் அற்றது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்தார். மியான்மரில் அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு, ஜனநாயக மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்த எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூகி தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது மகன்கள் இருவர், வெளிநாட்டு குடிமகன்கள் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டப்பிரிவு தடையாக இருக்கிறது. இந்த நிலையில், கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு மியான்மர் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, யாங்கோனில் எதிர்க்கட்சி தலைவர் சூ கி-யை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறும் விதத்தில் கட்டித்தழுவி முத்தமிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிட தடையாக சட்டப்பிரிவை காட்டுகிறார்கள். ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது பிள்ளைகளை தடையாக காட்டுகிற சட்டப்பிரிவு அர்த்தம் அற்றது என ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜனநாயக கண்ணோட்டத்தில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக பாரபட்சம் காட்டுவது என்பது சரியானது அல்ல" எனவும் ஒபாமா கருத்து தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கரு, சந்திரிக்கா பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார்!– சஜித் பிரேமதாச

Posted: 14 Nov 2014 11:45 PM PST

Sajith-Premadasa

Sajith-Premadasaஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்சி யாரை பொது வேட்பாளராக தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது எனது கடமையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதி மற்றும் ஆசீர்வாதத்துடன் போட்டியிடும் நபருக்கு நான் ஆதரவளிப்பேன்.

தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டாலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுவேன்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது பலமாக அமையும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடாவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்.

எனினும், கட்சித் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் கட்சியின் பூரண ஆதரவும் அவசியம் என சஜித் பிரேமதாச சர்வதேச ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புலம்பெயர் தமிழர்களுடன் அராசங்கம் போராடுகின்றது! சஜின் வாஸ்

Posted: 14 Nov 2014 11:41 PM PST

AG6K0765 copy.jpg

AG6K0765 copy.jpgவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாக சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டாலும் அதன் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றது. எங்களது அரசாங்கம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களுடன் எதுவித தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பயங்கரவாதிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கூட புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களைச் சந்தித்திருந்தார்.

இன்று நம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவும், இந்தியாவும் நிதியுதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நிதி முழுவதும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே செலவழிக்கப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி என்று வரும்போது நாங்கள் பூகோள அமைவிடம் பார்த்து முடிவுகள் எடுப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திக்கு யார் உதவியளித்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வோம். அது சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™