Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்திய எல்லை அருகே பாக்.ராணுவ வீரர்களுக்கு சீனா பயிற்சி

Posted: 14 Nov 2014 10:43 PM PST

தீவிரவாதிகள் மூலம் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் எல்லையிலும் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இதற்கிடையே இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சீனா பயிற்சி அளித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காசர்பர் பகுதியில் உள்ள ரஜூரி அருகே சீன ராணுவத்தினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

திருப்பதி கோவில் தங்க டாலர் விற்பனை ஊழல்: ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

Posted: 14 Nov 2014 10:20 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டு அது ஏழுமலையான் மற்றும் பத்மாவதி உருவம் பொறித்த தங்க டாலராக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திராவில் கிராமம் தத்தெடுப்பு: கலெக்டரின் ஆசையை நிறைவேற்றிய தெண்டுல்கர்

Posted: 14 Nov 2014 09:58 PM PST

பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு எம்.பி.க்களும் ஒரு கிராமத்தை தத்து எடுத்து வருகிறார்கள். இதேபோல் பிரபல கிரிக்கெட் வீரரும், டெல்லி மேல்–சபை எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலத்தில் உள்ள புத்தம் ராஜு கண்டிகை கிராமத்தை தத்து எடுத்து உள்ளார்.

நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 92 சதவீதம் பேரிடம் ஆதார் அடையாள அட்டை

Posted: 14 Nov 2014 09:54 PM PST

நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், இந்த பணி நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கி உள்ளது. ஆதார் அடையாள அட்டை மூலம் அரசின் மானியங்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கவும் அரசு ஏற்பாடு செய்தது.

மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கிராமத்தை தத்தெடுத்தார்

Posted: 14 Nov 2014 09:40 PM PST

மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை தத்தெடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.யும், ஒவ்வொரு கிராமத்தை தத்து எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஜெயாப்பூர் கிராமத்தை தத்து எடுத்தார். அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சபரிமலையில் நாளை நடை திறப்பு: சாமி தரிசனத்திற்கு 7 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் முன் பதிவு

Posted: 14 Nov 2014 09:37 PM PST

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17–ந்தேதி தொடங்குகிறது. இதற்காக நாளை மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது கோவிலில் இதுவரை மேல் சாந்தியாக இருந்த நாராயணன்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு-லல்லு மீதான கூட்டு சதி குற்றச்சாட்டு நீக்கம்: ஜார்க்கண்ட் கோர்ட்டு

Posted: 14 Nov 2014 09:31 PM PST

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லல்லு மீதான கூட்டு சதி குற்றச்சாட்டை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் முதல்– மந்திரியாக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் சுப்ரீம்

ராஞ்சியில் நாளை கடைசி ஆட்டம்: இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா?

Posted: 14 Nov 2014 09:09 PM PST

இந்தியா–இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதுவரை நடந்த 4 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 4–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் (கட்டாக்) 169 ரன் வித்தியாசத்திலும், 2–வது போட்டியில் (அகமதாபாத்) 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3–வது ஆட்டத்தில் (ஐதராபாத்) 6 விக்கெட்டிலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 4–வது ஆட்டத்தில் 153 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க தமிழக முதல்-அமைச்சருக்கு உம்மன் சாண்டி கடிதம்

Posted: 14 Nov 2014 06:24 PM PST

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதைத் தொடர்ந்து நேற்று மாலை இடுக்கி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தனது கவலையை தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர்

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை

Posted: 14 Nov 2014 02:49 PM PST

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதியன்று, தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக

மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக வழக்கு: புகாரை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வேன்- மத்திய மந்திரி பேட்டி

Posted: 14 Nov 2014 01:51 PM PST

கல்விச் சான்றிதழை திருத்தியதாக கூறப்படும் வழக்கில் என் மீதான புகாரை நிரூபித்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று மத்திய மந்திரி கத்தேரியா கூறினார். கடந்த 9-ந் தேதி பிரதமர் மோடி மந்திரிசபையை விரிவு படுத்தியபோது, மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரியாக பதவி

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 14 Nov 2014 01:31 PM PST

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் தாக்கல் செய்த மனுவின் மீது 17-ந் தேதி பதிலளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழகத்தை சேர்ந்த மாணவி கே.சாகித்யா மற்றும் மாணவர் எல்.கணபதி நாராயணன் ஆகிய இருவரும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீவிரவாதிகளுடன் மதத்தை தொடர்புப்படுத்துவதா? மம்தா காட்டம்

Posted: 14 Nov 2014 09:47 AM PST

மேற்கு வங்காள மாநில சட்டசபையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்புப்படுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் அனுமதி பெறாமல் இயங்கிவரும் மதரசாக்களில் இருந்து எத்தனை தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்

Posted: 14 Nov 2014 07:55 AM PST

கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016-ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள் மேலும் 2 கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மேம்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த

பிரதமர் பதவிக்கு வர முடியாததில் வருத்தம் இல்லை: அத்வானி பேட்டி

Posted: 14 Nov 2014 07:46 AM PST

பீகார் மாநிலத்தில் வாழும் அட்டவணை இனத்தவருக்காக தலைநகர் பாட்னாவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எல்.கே.அத்வானி (வயது 87) பங்கேற்றார்.

கருப்பு பணம் வழக்கு: தொழில் அதிபர் பங்கஜ் லோதியாவுக்கு அமலாக்கப்பரிவு சம்மன்

Posted: 14 Nov 2014 07:30 AM PST

கருப்பு பணம் வழக்கில் குஜராத் மாநிலம் ராஜகோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லோதியாவுக்கு அமலாக்கப் பரிவு சம்மன் அனுப்பியுள்ளது. கருப்பு பணம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 27-ந்தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த அறிக்கையில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் சிலரது பெயரை வெளியிட்டது. இதில் பங்கஜ் லோதியா, ராதா டிம்போ மற்றும் பிரதிப் பர்மன் ஆகிய முன்னணி தொழிலதிபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

காஷ்மீர் என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சாவு: கிராமவாசியும் பலி

Posted: 14 Nov 2014 07:29 AM PST

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டம், செனிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்தபோது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

ஆஸ்திரேலியாவில் மோடிக்கு விருந்து அளித்த ஜப்பான் பிரதமர்

Posted: 14 Nov 2014 07:22 AM PST

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இன்று விருந்து அளித்தார். நாளை பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும்

இந்தியாவுடனான உறவுகளுக்கு முக்கிய முன்னுரிமை: மோடியிடம் கேமரூன் தகவல்

Posted: 14 Nov 2014 07:15 AM PST

இந்தியாவுடனான உறவுகளுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நாளை ஜி-20 உச்சிமாநாடு தொடங்க உள்ளது. இதில், பங்கேற்பதற்காக பிரிஸ்பேன் சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று

சாரதா ஊழலில் பிடிபட்ட எம்.பி. சிறையில் தற்கொலை முயற்சி: ஜெயில் சூப்பிரெண்ட், டாக்டர் சஸ்பெண்ட்

Posted: 14 Nov 2014 07:12 AM PST

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சுமார் 200 துணை நிறுவனங்களை உள்ளடக்கிய சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. கூட்டு முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி பரிமாற்றங்களை நடத்திவந்த சாரதா நிறுவனத்தின் தலைவராக சுதிப்தா சென், மேலாண்மை இயக்குனராக தேப்ஜானி முகர்ஜி, தலைமை செயல் இயக்குனராக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™