Tamil News | Online Tamil News |
- பல மாவட்டங்களில் யூரியா உர தட்டுப்பாடு; விவசாயிகள் கலக்கம்
- பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வு ஆக்கிரமிப்புகள் வெட்ட வெளிச்சமாகும்: கேரளவின் திடீர் எதிர்ப்பில் உள்நோக்கம்
- ஊர் சுற்றும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்: நன்கொடை கேட்டு மக்கள் நச்சரிப்பதால் பீதி
- வெட்கம், சூடு, சொரணை எதுவும் இல்லை
- முல்லை பெரியாறு நீர்மட்டம் உயரும்; நீங்க கவலைப்படாதீங்க!கருணாநிதிக்கு பன்னீர்செல்வம் பதில்
- ஸ்ரீரங்கம் தொகுதி காலி வெளியானது அறிவிப்பு
- கறுப்பு பணம் பதுக்கல் குறித்து தகவல் தெரிவிக்க புது வசதி
- அமைச்சரவை விரிவாக்கத்தில் பிரதமர் மோடி சாதுர்யம்: ஆட்சிக்கும் முக்கியத்துவம், அரசியலுக்கும் முக்கியத்துவம்
- '2ஜி' ஊழல் வழக்கில் முடிவு விரைவில் தெரியும்:இறுதிகட்ட விசாரணை இன்று துவக்கம்
- புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு: சதானந்தா, ஹர்சவர்தன், பொன்.ராதாகிருஷ்ணன் இலாகா மாற்றம்
| பல மாவட்டங்களில் யூரியா உர தட்டுப்பாடு; விவசாயிகள் கலக்கம் Posted: களை எடுத்த பிறகும், யூரியா கிடைக்காததால், பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இரு ஆண்டுகளாக ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு போதிய அளவில் பெய்துள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் உள்ள நீர் ஆதாரங்களில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. விவசாயிகளும், உற்சாகம் அடைந்து சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர். டெல்டா மாவட்டங்களான, திருவாரூரில், 4.08 லட்சம் ஏக்கர், நாகையில், 1.51 லட்சம், தஞ்சாவூரில், 3.19 லட்சம், கடலுாரில், 1.46 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடக்கிறது. திருச்சியில், 79,200 ஏக்கர், ... |
| Posted: கூடலுார் : 'முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் போது நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தானாக தெரியவரும்' என முல்லைப்பெரியாறு மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த 1979ல் 136 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக நீர்மட்டம் அதிகரிக்கப்படாததால் தேக்கடி, குமுளி, ஆனைவச்சால் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் உருவாகின. ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட ஓட்டல், விடுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி வரி வசூல் செய்து வருகிறது.தற்போது அணையில் 142 அடி நீர் தேக்கும் போது ... |
| ஊர் சுற்றும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்: நன்கொடை கேட்டு மக்கள் நச்சரிப்பதால் பீதி Posted: 'ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊருக்குச் சென்று, தொகுதி மக்களின் பிரச்னைகளை கட்டாயம் கேட்க வேண்டும்' என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்ற முற்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களிடம், பொதுமக்கள் நன்கொடைகள் கேட்டு நச்சரிப்பதால், தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மகன் பட சூட்டிங்கிற்காக, மலேசியா சென்றுள்ளார். அங்கிருந்தபடி, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.அதில், 'எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊருக்கு சென்று, ... |
| வெட்கம், சூடு, சொரணை எதுவும் இல்லை Posted: காஞ்சிபுரம்: 'தமிழக ஆட்சியாளர்களுக்கு, வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.காஞ்சிபுரத்தில், திருமண விழா ஒன்றில், ஸ்டாலின் பேசியதாவது:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சட்டப்பேரவை செயலர் முறைப்படி அறிவிக்கவில்லை.இந்த நிலையில், நேற்று, இணையதளம் மூலமாக சட்டமன்ற செயலர் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜெயலலிதா பதவி ... |
| முல்லை பெரியாறு நீர்மட்டம் உயரும்; நீங்க கவலைப்படாதீங்க!கருணாநிதிக்கு பன்னீர்செல்வம் பதில் Posted: சென்னை : 'பருவ மழைக்காலம் முடிந்ததும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்; இதைப்பற்றி, கருணாநிதி கவலை கொள்ள தேவையில்லை' என, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து உள்ளார்.'செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?' என்ற தலைப்பில், கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு, முதல்வரின் பதில்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக, 2006ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், முழு நீர்மட்ட அளவு, 136 அடி என, கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த ... |
| ஸ்ரீரங்கம் தொகுதி காலி வெளியானது அறிவிப்பு Posted: சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அதனால், அவர் வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக சட்டசபை செயலர் தகவல் தெரிவித்து உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, ஜாமினில் வெளிவந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தண்டனை பெற்றவர், எம்.எல்.ஏ., ... |
| கறுப்பு பணம் பதுக்கல் குறித்து தகவல் தெரிவிக்க புது வசதி Posted: புதுடில்லி : 'கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்' என, சிறப்பு புலனாய்வு குழுவான, எஸ்.ஐ.டி., தெரிவித்துள்ளது.நீண்டகால புகார்: இந்தியர்களால், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை ... |
| Posted: புதுடில்லி : பிரதமர் மோடி, திறமையானவர்கள் அடங்கிய தன்னுடைய நெருங்கிய வட்டத்தை மையப்படுத்தி ஆட்சி நடத்த விரும்புபவர் என்பது, நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்திலும் வெளிப்பட்டது. திறமையானவர்களை திரட்டும் அதே நேரத்தில், அரசியலில் இருந்தும் தன்னுடைய கவனம் திசை திரும்பவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மோடியின், இணை அமைச்சர்கள் தேர்வு அமைந்திருந்தது.கடந்த மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், நேற்று, 21 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய அமைச்சர்களுக்குறிய இலாக்காகள் இன்று தெரியவரும் என, கூறப்படுகிறது. ... |
| '2ஜி' ஊழல் வழக்கில் முடிவு விரைவில் தெரியும்:இறுதிகட்ட விசாரணை இன்று துவக்கம் Posted: புதுடில்லி : நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அரசியல் சூழ்நிலையே மாறுவதற்கு காரணமாக இருந்த, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு ஊழல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேருக்கு எதிரான இந்த வழக்கில், இன்று இறுதி வாதங்கள் துவங்குகின்றன. இவை ஓரிரு மாதங்களில் முடிவடைந்து, விரைவில் தீர்ப்பு கொடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2008ல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக, 2009ல் ஒரு தொண்டு நிறுவனம் புகார் அளித்தது. அதன்படி ... |
| புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு: சதானந்தா, ஹர்சவர்தன், பொன்.ராதாகிருஷ்ணன் இலாகா மாற்றம் Posted: புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் நேற்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான இலாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பிரபுவிறகு ரயில்வேத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் இலாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சதானந்த கவுடா, ஹர்சவர்தன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் இலாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 4 பேர் மத்திய அமைச்சர்களாகவும், 17 பேர் இணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |