ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிந்திப்பாய் மனிதா!!
- ஆண் திமிர்...!! - Mano Red
- காதல் கவிதை தருவீர்களா
- நெஞ்சைப் பிழியும் செக்கு !
- கவிதை க. .;பே 2 தொடர்பதிவு
- தகவல் துணுக்குகள்
- நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு
- ஆண்மை தன்மை அதிகரிக்கும் : செவ்வாழை
- "தேஜஸ் பிவி6' போர் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை
- நடிகர் மீசை முருகேசன் மரணம்
- சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...!!
- எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்
- தொப்புள் கொடி உறவு
- போராட்டம்! - (கவிதை) - — ஏ.வி.கிரி,
- தம்பிக்காக ...
| Posted: 09 Nov 2014 08:43 AM PST எண்ணில் அடங்கா குறைகள் என்னில் அதிகமதிக மிருக்குது கண்ணில் தெரிந்தும் பிழைகள் மண்ணில் தவறிடாமல் நடக்குது!! விண்ணில் இருந்து ஈசன் அவனின் அறிவுரைகள் இருக்குது பாவி மனதில் பதிந்திடாமல் தள்ளி தூர இருக்குது!! எண்ணி மனதில் தன்னை உயர்த்த சின்னவிடம் நாடுது நல்ல குணம் அவனை விட்டு தூர விலகி ஓடுது!! கவசம் அது நல்லவைகள் களைந்து ஓடிப் போகுது தீயவைகள் தானாய் வந்து அவனைப் பிடித்து ஆட்டுது!! கண்ணியதில் சிக்கியவன் சிதைந்து வீழ்ந்து மடியத்தானே போகிறான் எழுந்து துணிந்து மீண்டிடவே மனிதா ... |
| Posted: 09 Nov 2014 08:08 AM PST இன்று கண்ணீர் வந்தது... ஆனந்தத்தில் அல்ல, அவனுடன் முதலிரவில் வரதட்சணைக்காக முதல் வாக்குவாதம் அரங்கேறிய போது, அவன் தீ நாக்கினால் என்னைப் பொசுக்கினான் என்பதற்காக... இன்றும் கண்ணீர் வந்தது... சாதாரணமாக அல்ல, நேற்றிரவு நான்கு சுவருக்குள் அதிகம் படித்த மயிலிறகு என்னை அவன் மாடாய் நடத்திய போது, இது தான் இந்தப் பிறவியின் பாவம் என்பதற்காக.... இன்றும் கண்ணீர் வந்தது... இது இரக்கமும் அல்ல-யாரும் இறக்கவும் அல்ல, நேற்றிரவு நடத்தையில் சந்தேகப்பட்டு இரக்கமின்றி அவன் இதயத்தில் ... |
| Posted: 09 Nov 2014 07:55 AM PST அன்பு உறவுகளே, இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில் தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம். பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன். முதலில் நான் விரும்பும் கவிதை "யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" -செம்புலப் பெயல்நீரார் குறுந்தொகை பொருள்: "என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் ... |
| Posted: 09 Nov 2014 07:44 AM PST நெஞ்சைப் பிழியும் செக்கு ! - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் நன்றி - தினத் தந்திச் சிறுவர் தங்கமலர் 7-11-2014 , ப. 7 |
| Posted: 09 Nov 2014 07:18 AM PST |
| Posted: 09 Nov 2014 06:09 AM PST - முதுமையில் காலையில் காபி நல்லது - அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் காலையில் ஒரு கப் காபி குடிப்பது நல்லது. காபியில் உள்ள காஃபைன் முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகசக்தி குறைவைத் தடுக்கிறதாம். போர்த்துகல் நாட்டு மருத்துவத் துறை விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு இதைத் தெரிவிக்கின்றது. முதுமையில் ஏற்படும் அல்சிமிர் என்ற ஞாபக சக்தி குறைவு நோய் ஏற்படுவது 60 சதவீதம் தடுக்கப் படுகிறதாம். - ---உ.ராமநாதன், நாகர்கோவில். ----------------------------------------------------------- - முரண்பாடு! - சமாதானத்திற்கான ... |
| நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு Posted: 08 Nov 2014 11:43 PM PST - தொடர்பு எண்ணை மாற்றாமலேயே நாட்டின் எந்தவொரு பகுதியில் இருக்கும் வட்டத்துக்கும் விரும்பிய தொலைத்தொடர்பு நிறுவன சேவைக்கு சந்தாதாரர் மாறிக் கொள்ளும் வசதியை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது "நம்பர் போர்ட்டபிளிட்டி' எனப்படும் விரும்பிய தொலைத் தொடர்பு நிறுவன சேவைக்கு சந்தாதாரர் மாறிக் கொள்ளும் வசதி ... |
| ஆண்மை தன்மை அதிகரிக்கும் : செவ்வாழை Posted: 08 Nov 2014 11:42 PM PST -- நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். - குழந்தை பேறு தரும் : திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். ... |
| "தேஜஸ் பிவி6' போர் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை Posted: 08 Nov 2014 11:40 PM PST - உள்நாட்டிலேயே முதல்முறையாக தயாரிக்கப்பட்ட 2 இருக்கைகளைக் கொண்ட "தேஜஸ் பிவி6' என்ற சிறிய ரக போர்ப் பயிற்சி விமானம், சனிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன் மூலம் சிறிய ரக போர் விமானத் தயாரிப்பில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. விமானிகளான விவர்த் சிங், அனூப் கபத்வால் ஆகியோர் இந்த விமானத்தை சனிக்கிழமை வெற்றிகரமாக இயக்கினர். இரு விமானிகளும் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: விமானம் ... |
| Posted: 08 Nov 2014 11:35 PM PST பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார். இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன. தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் ... |
| சாமியாரா ப் போய்த் தொலைய வேண்டியதுதானே...!! Posted: 08 Nov 2014 11:33 PM PST - |
| எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Posted: 08 Nov 2014 11:32 PM PST பெயர்:ரமேஷ் லெ சொந்த ஊர்:திருநெல்வேலி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலமாகத்தான் பொழுதுபோக்கு:கவிதை எழுதுவது தொழில்:ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் படித்துள்ளேன் இப்பொழுது தான் முடித்தேன் மேலும் என்னைப் பற்றி: தமிழ் மட்டுமே தெரிந்ததால் நான் பயின்ற துறையில் முன்னேற முடியாத இளைஞன் |
| Posted: 08 Nov 2014 11:26 PM PST இரு துளை வழியாக ஆக்ஸிஜனை கஷ்டப்பட்டு இழுத்து குவியமில்லா இடத்தில் ஒழிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறாள் சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறாள் சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா ஆரம்பித்தான் அவன் வேலையை அப்படியே சுழியை போட்டான் சினுங்கல் சததத்துடன் பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் ... |
| போராட்டம்! - (கவிதை) - — ஏ.வி.கிரி, Posted: 08 Nov 2014 05:59 PM PST - மாநிலங்களைப் பிரித்தாலும் போராட்டம் பிரிக்காவிட்டாலும் போராட்டம்! நதி நீரை திறந்தாலும் போராட்டம் திறக்காவிட்டாலும் போராட்டம்! அணுநிலையத்தை இயக்கினாலும் போராட்டம் இயக்காவிட்டாலும் போராட்டம்! சேதுக் கால்வாய்திட்டம் துவங்கினாலும் போராட்டம் துவங்கா விட்டாலும் போராட்டம்! கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட்டாலும் போராட்டம் போடா விட்டாலும் போராட்டம்! இந்தி மொழியை திணித்தாலும் போராட்டம் திணிக்கா விட்டாலும் போராட்டம்! ராமர் கோவிலை கட்டினாலும் போராட்டம் கட்டாவிட்டாலும் போராட்டம்! ஊழல் ... |
| Posted: 08 Nov 2014 05:31 PM PST - - காலை விழித்திடு தம்பி - பாட நூலைப் படித்திடு தம்பி - கடமை முடித்திடு தம்பி - பொய் மடமை தவிர்த்திடு தம்பி - வேலையைப் பொன்னாக தம்பி - உன வேலையை முடித்திடு தம்பி - பெற்றோரைப் போற்ற வேண்டும் தம்பி - நீ கற்றபடி நடக்க வேண்டும் தம்பி - கூடாப் பழக்கம் வேண்டாம் தம்பி - நீ கூடி வாழ வேண்டும் தம்பி - நன்மையே செய்திடு தம்பி - நாளும் உண்மையே பேசிடு தம்பி - பொய்மையே களைந்திடு தம்பி - என்றும் வாய்மை வழி நடந்திடு தம்பி - ------------------------------------------------------------ >க.இளங்கோவன் தாய்மொழி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |