Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சிறந்த கணித மேதைகளை உருவாக்கும் இந்தியா: ராஜ்நாத் சிங்கிடம் இஸ்ரேல் பிரதமர் பாராட்டு

Posted:

டெல் அவிவ்:'சிறந்த கணித மேதைகள் எல்லாம், எப்போதும், இந்தியாவிலிருந்தே உருவாகின்றனர். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில், இந்தியாவின் திறமை பாராட்டத்தக்கது' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, டெல்அவிவ் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் நேதன்யாகு கூறியதாவது:என் மாமா ஒரு கணித நிபுணர். சிறந்த கணித மேதைகள் எல்லாம், இந்தியாவில் ...

போதிய நிதியின்றி தடுமாறும் தேசிய புலனாய்வு அமைப்பு

Posted:

புதுடில்லி: பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் போன்ற நாடு தழுவிய குற்றச் செயல்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) போதிய நிதியுதவி, வாகன வசதி, வல்லுனர்கள் இல்லாமல் செயல்படுகிறது.

பல நூறு கோடி சொத்துகள்:மும்பையில், கடந்த 2008 நவம்பரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து, நான்கு நாட்கள் நடத்திய கோர தாண்டவத்தில், 166 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்; பல நூறு கோடி சொத்துகள் சேதமடைந்தன. அந்த தாக்குதலுக்குப் பின், என்.ஐ.ஏ., ...

எம்.சி.ஐ., லஞ்ச ஒழிப்பு அதிகாரி அதிரடி நீக்கம்: மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்

Posted:

புதுடில்லி : இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யில், லஞ்ச ஊழல் விவகாரங்களை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த, தலைமை கண்காணிப்பு அதிகாரியை, அந்தப் பதவியிலிருந்து நீக்கி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உத்தரவிட்டுள்ளார். இது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே, டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றிய, சஞ்சீவ் சதுர்வேதி என்பவர், சில நாட்களுக்கு முன், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பா.ஜ., மேல் மட்டத் தலைவர்கள் சிலரின் யோசனையை ஏற்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ...

சகாயத்திற்கு உதவ நான்கு அதிகாரிகள்: புவியியல், சுரங்கத் துறை ஒதுக்கியது

Posted:

சென்னை : கனிமவள முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு உதவ, நான்கு அதிகாரிகளை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை வழங்கி உள்ளது.புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் நாமக்கல் மாவட்ட உதவி இயக்குனர், முருகானந்தம், சென்னை சுரங்கத் துறை கமிஷனர் அலுவலக, உதவி இயக்குனர் சுதர்சனம், திருவள்ளுவர் மாவட்ட, உதவி புவியியலாளர் பெருமாள் ராஜா, புதுக்கோட்டை மாவட்ட உதவி புவியியலாளர் ரமேஷ் ஆகிய நால்வரும், சகாயத்திற்கு உதவியாக அனுப்பப்படுகின்றனர்.மேலும், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஒருவர், ஒரு கம்ப்யூட்டர் ...

இளைஞர்களை அங்கீகரிப்பேன்: ஆலோசனை கூட்டத்தில் வாசன்

Posted:

''என்னை சுற்றி இளைஞர்கள் வர வேண்டாம்; அவர்களை சுற்றி நான் வருவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளங்கோவன் பேசுகையில், 'எங்களிடம் தான், இளைஞர் காங்கிரசார், 90 சதவீதம் பேர் உள்ளனர்' என்றார்.இதற்கு போட்டியாக, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.அதில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, முன்னாள் பொது ...

'கேவியட்' போடுங்கப்பா... : சொல்கிறார் அனுபவஸ்தர்

Posted:

சென்னை : 'கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 136 அடியாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசு, 'கேவியட்' மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பெயர் வந்து விடுமோ என, ஜெயலலிதா கருதுகிறாரோ என்ற சந்தேகம், அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக, எல்லா குளங்களும் நிரம்பி, எல்லா நிலங்களிலும் ...

நிழல் கமிட்டிகள் அமைத்து நிம்மதி தேடிய காங்கிரஸ்

Posted:

புதுடில்லி:லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காத வருத்தத்தில் உள்ள காங்கிரஸ், தங்களுக்கு தாங்களே கேபினட் குழுக்களை அமைத்து, மத்திய அரசை கண்காணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 450க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், குறைந்தபட்சம், 10 சதவீத இடங்களை பெற்றிருக்கும் கட்சிக்குத் தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்பதால், காங்கிரசுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை.இதற்காக, மத்திய அரசுடன் பல விதங்களில் முட்டி ...

வாரணாசி தொகுதியில் கிராமத்தை தத்தெடுத்தார் மோடி: பெண் சிசுக்களை கொல்ல வேண்டாம் என வேண்டுகோள்

Posted:

வாரணாசி : உ.பி., மாநிலம், வாரணாசி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஜெயபூர் கிராமத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தத்தெடுத்தார். அதை, மாதிரி கிராமமாக மாற்ற முடிவு செய்துள்ளார். 'கிராம மக்கள், தங்கள் ஊரின் பிரச்னைகளைத் தீர்க்க அரசையே சார்ந்திருக்கா மல், தாங்களே தீர்க்க முன்வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார்.லோக்சபா தேர்தலின் போது, நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, வாரணாசி. பிரதமர் பதவியை ஏற்றுள்ள அவர், அந்தத் தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்பதில், தீவிர அக்கறை காட்டி வருகிறார்.இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, தன் தொகுதியான வாரணாசிக்கு ...

மோடியின் தீவிர கண்காணிப்பில் வசதியான துறை அமைச்சர்கள்: ஊழலை முளையிலேயே கிள்ளி எறிய ரகசிய ஏற்பாடு

Posted:

புதுடில்லி : வளம் கொழிக்கும் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் எல்லாம், ஏதாவது தப்பு, தண்டாவில் ஈடுபடுகின்றனரா என, பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக கண்காணித்து வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் துணையோடு, ஒவ்வொரு மத்திய அமைச்சரின் செயல்பாடுகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதால், அமைச்சர்கள், மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகின்றனர்.அமைச்சர்களில் யாரும், 'கறுப்பு ஆடு'களாக உருவாகி விடக்கூடாது என்பதில், மோடி தீவிரமாக உள்ளார். அதனால், மத்திய அமைச்சரவையில் தற்போது இடம் பெற்றுள்ள, 44 அமைச்சர்களையும் தீவிரமாக கண்காணித்து ...

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட் ரத்து

Posted:

'மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும்' என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. 'ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதா, வேண்டாமா என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு; அதில் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது' என,உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், '2010ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிகாரத்தை மீறிய செயல்; அத்தகைய தீர்ப்பை வெளியிட சென்னை கோர்ட்டுக்கு அனுமதியில்லை' என, நேற்று உத்தரவிட்டது. இதன் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு இப்போதைக்கு கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.கடந்த, 2012ல் ...

நாயுடு மீது சித்தராமையா குற்றச்சாட்டு: தங்கள் தொழில்களை வளைப்பதாக புகார்

Posted:

பெங்களூரு:பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்படும், இன்போசிஸ் கம்ப்யூட்டர் சேவை நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்தை, ஆந்திரா அபகரிக்க விடாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்ட, கர்நாடக முதல்வர் சித்தராமையா,'ஆந்திராவுக்கு சிறப்புசலுகைகள் வழங்கக் கூடாது' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்தார்.முன்பணம்:கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில், இன்போசிஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி தகவல் தொழில்நுட்ப பூங்காவில், பெரும்பாலான இடத்தை ஒதுக்குமாறு, மாநில அரசை இன்போசிஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™