Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமெரிக்க பொது தேர்தல் முடிவால் ஒபாமாவுக்கு சிக்கல்

Posted:

வாஷிங்டன் : அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதிபர் பராக் ஒபாமாவின், ஆளும் ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந்தது. பார்லிமென்டின் இரு சபைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில், பெரும்பான்மை இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதனால், ஒபாமாவின் மிச்சமிருக்கும், இரண்டாண்டு பதவி காலம், அவருக்கு சோதனையான காலகட்டமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில், நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதிக அதிகாரம் மிக்க, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்களுக்கும், 100 இடங்களை கொண்ட செனட் சபைக்கும், ...

தேர்தல் தகராறில் அடி வாங்கிய சித்தராமையா

Posted:

பெங்களூரு : "கடந்த, 1971 - -72ல், பனுமய்யா கல்லூரியில் படிக்கும் போது, மாணவர் சங்க தேர்தல் நேரத்தில், என் நண்பரை, மற்றொரு கோஷ்டி தாக்குவதாக, கேள்வி பட்டு, அங்கு சென்ற போது, எனக்கும் அடி விழுந்தது. இது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்," என, முதல்வர் சித்தராமையா கூறினார்.சங்க தேர்தல் : மைசூரு சயாஜிராவ் சர்க்கிள், பனுமய்யா கல்லூரியில், புதிதாக துவங்கப்பட்டுள்ள, எம்.காம் முதுகலை பிரிவை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது: கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், நானும் கூட, பல முறை, மாணவர் சங்கத்தேர்தலில் கலந்து கொண்டேன். கடந்த, 1971ல், ...

புதிய ராணுவ அமைச்சராக மனோகர் பாரிக்கர் நியமனம்?

Posted:

புதுடில்லி : புதிய ராணுவ அமைச்சராக, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு நிலவும் நேரத்தில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவை நேற்று, பாரிக்கர் சந்தித்து பேசினார்.நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவ அமைச்சராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்படும் அவரால், இரண்டு பெரும் துறையை நிர்வகிக்க முடியாது என்பதால், ராணுவ அமைச்சர் பொறுப்பை, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கருக்கு வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை உண்மை என்பது நிரூபிப்பது போல, மாநில அமைச்சரவை ...

ஓட்டு வீட்டுக்கு மின் கட்டணம்: ரூ.52 ஆயிரம் நிர்ணயம்!

Posted:

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், ஆட்டோ டிரைவரின் ஓட்டு வீட்டுக்கு, மின் கட்டணமாக, தமிழ்நாடு மின்சார வாரியம், 52,700 ரூபாய் நிர்ணயித்து உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம், 45. இவருக்கு, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகத்துக்கு சொந்தமாக, இரண்டு அறைகள் கொண்ட ஓட்டு வீடு உள்ளது.இரண்டு அறைகளில் தலா, ஒரு சி.எப்.எல்., பல்பு மற்றும் ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பை, ஆறுமுகம் பயன்படுத்தி வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன், 'டிவி' பழுதடைந்ததால், அதுவும் இயங்காமல் உள்ளது. இது தவிர, ஆறுமுகத்தின் வீட்டில், ...

கிரானைட் முறைகேடு:சகாயத்தின் வேலை என்ன

Posted:

மதுரை : கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தின் வேலை என்ன? என சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை 'சிறப்பு அதிகாரி, சட்ட ஆணையராக'வே ஐகோர்ட் நியமித்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் சட்டவிரோதமாக கனிமவளங்களை எடுத்தது குறித்து மத்திய கண்காணிப்புக்குழு விசாரணை தேவை என டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், 'இந்த வழக்கில் வேறு எந்த சுதந்திரமான ஆய்வும் தேவையில்லை. ...

டில்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல்: கதிகலங்கும் தே.மு.தி.க., நிர்வாகிகள்

Posted:

சென்னை :டில்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான, வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் கதிகலங்கி உள்ளனர்.கடந்தாண்டு, டிசம்பர் மாதம் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில், காங்., பா.ஜ., -ஆம் ஆத்மி கட்சிகளை எதிர்த்து, தே.மு.தி.க.,வும் 11 இடங்களில் போட்டியிட்டது.வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது பேசிய விஜயகாந்த்,'இனி டில்லியில் நடக்கும் அனைத்து தேர்தலிலும் தே.மு.தி.க., போட்டியிடும்' என அறிவித்தார்.இத்தேர்தலில், தே.மு.தி.க., வெற்றி பெறுவது உறுதி என ...

ஜெ., படம் நீக்கும் போராட்டம்: கட்சியினரை உரமூட்டும் கருணாநிதி

Posted:

'தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு கூட்டங்களில் தொடர்ந்து தி.மு.க.,வுக்கு எதிரான நடவடிக்கைகளில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தி.மு.க., தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என, கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதும், அவர் பதவி பறிபோனது. இதனால், தமிழகம் முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளிலும், அரசு அலுவலகங்களிலும் அவரது படம் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தமிழகம் ...

சுப்ரீம் கோர்ட் அனுமதித்தும் கேரளா ஆலோசிப்பது ஏன்?

Posted:

திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 137 அடியை எட்டியுள்ள நிலையில், ''முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்கான சட்டப்பூர்வமான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்,'' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளது, தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 152 அடி. தற்போது, 142 அடி உயரம் வரை, நீர் தேக்கலாம் என, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம், 137 அடியை தொட்டுள்ளது. இதை, 136 அடியாகக் குறைக்கும்படி, கேரளா ...

மானியங்களை ரத்து செய்ய மாட்டோம்

Posted:

புதுடில்லி : ''நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் தான் தனியார் மயமாக்கப்படும்; மானியங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.உலக பொருளாதார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, இந்திய பொருளாதாரம் குறித்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதி மற்றும் ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: பொருளாதார சீரமைப்பு நடவடிக்கை என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்; அதனால் எந்த பயனும் இருக்காது. மாறாக, எந்த சீரமைப்பு நடவடிக்கை முதலில் மேற்கொள்ள வேண்டும்; எதற்கு ...

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி மீண்டும் சொதப்பல்: குழப்பம் நிறைந்த கட்சிக்கு ஓட்டளிப்பதா என மக்கள் கேள்வி

Posted:

புதுடில்லி : டில்லியில், சட்டசபையைக் கலைத்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கட்சியும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சி புரிந்த கட்சியுமான காங்கிரஸ், தேர்தலுக்கான வியூகம் வகுத்து, பிரசாரம் செய்ய, இரண்டு நபர்களின் பெயரை அறிவித்தது. 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பது போல், இந்த பிரசாரகர்களுக்கு, துணைத் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்து, சொதப்பல் வேலையைத் துவக்கினார். சில மணி நேரங்களுக்குப் பின், அவரே, அவர்கள் இருவரும் பிரசாரத்தில் ஈடுபடுவர் என, அறிவித்தார்.டில்லியில், 1984ல் ...

எங்களுடன் பேச்சா... பிரிவினைவாதிகளுடனா யாருடன்?வாலாட்டும் பாகிஸ்தானிடம் இந்தியா கேள்வி: "மோடிக்கு மிரட்டல் எழுந்ததால் ஜெட்லி ஆவேசம்

Posted:

புதுடில்லி:காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் அவ்வப்போது நடத்தும் பேச்சு; இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல்;இந்தியாவை ஒட்டிய பாக்., எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்; அதைத் தொடர்ந்து, அந்த அமைப்புகளில் ஒன்று, இந்திய பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள மிரட்டல் ஆகியவற்றை கண்டு, இந்தியா வெகுண்டெழும் நேரம் வந்துள்ளதை வலியுறுத்தும் வகையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, சில கேள்விகளை, பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளார்.''நீங்கள் யாருடன் பேச விரும்புகிறீர்கள்... எங்களுடனா, பிரிவினைவாதிகளுடனா? முதலில் அதை முடிவு ...

மோடிக்கு 15-வது இடம்: போர்ப்ஸ் வெளியீடு

Posted:

நியூயார்க்: உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் வரிசையில் மோடிக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் பிற விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு பரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இந்த வரிசையில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் ...

3-வது முறையாக இலங்கை அதிபராவாரா : சுப்ரீம் கோர்ட் கருத்தை கேட்கிறார் ராஜபக்சே

Posted:

கொழும்பு: இலங்கை அதிபராக மூன்றாவது முறையாக போட்டியிட தகுதி உண்டா என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கருத்தை கேட்டு கடிதம் எழுதியுள்ளார் அதிபர் ராஜபக்சே.தீவு நாடான இலங்கையில் இலங்கை சுதந்திரா கட்சி தலைவர் ராஜபக்சே ,அந்நாட்டு அதிபராக கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 19 -ம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் போட்டியிட்டுஅதிபராக பதவியேற்றார். அப்போது அரசியலமைப்புசட்டத்தின் 18-வது திருத்த்தில் மாற்றம் கொண்டுவந்து பார்லி.யில் நிறைவேற்றினார்.தற்போது அதிபர் ராஜபக்சேயின் பதவிக்காலம் வரும் நவம்பரில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™