Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கோழை கேப்டன் - ராணி காமிக்ஸ்.

Posted: 05 Nov 2014 10:11 AM PST

ராணி காமிக்ஸ் - கோழை கேப்டன் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/wkc7v4cqo6dgx00/koolai+captain.pdf

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Posted: 05 Nov 2014 07:35 AM PST

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் ...

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -65

Posted: 05 Nov 2014 07:32 AM PST

வணக்கம் வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே . நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது.( 1. பழமொழி சொன்னார்கள் அன்று , நவீன விளக்கம் எழுதுவோம் இன்று ,2.கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் , 3.கதை எழுவோம் வாங்க ) இந்த திரிகளின் வெற்றிக்கு மிக்க நன்றி அன்பு உறவுகளே . புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும். பொன் மொழி சவால் 1 "தூய்மை, ...

காந்த கண்கள்

Posted: 05 Nov 2014 07:26 AM PST

கடலுக்கு சும்மா இருக்கத்தான் ஆசை
ஆனால் அலைகள் தான் விடுவதில்லை!
வானம் சும்மா இருக்கத்தான் ஆசை
ஆனால் மேகங்கள் தான் விடுவதில்லை
மரத்துக்கு சும்மா இருக்கத்தான் ஆசை
ஆனால் காற்று தான் விடுவதில்லை
நானும் சும்மா இருக்கத்தான் ஆசைப்பட்டேன்
ஆனால் எனது விழிகள் உன்னை படம் பிடித்துவிட்டதே!

‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்

Posted: 05 Nov 2014 07:23 AM PST


என் 'பட்டாம்பூச்சிகள்' தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே.

சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018.

21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு.



விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!!

Posted: 05 Nov 2014 07:18 AM PST

ஒரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கும் போது. இன்று இந்திய அணியின் துணைக்கேப்டனாக மாறி இருக்கும் விராட் கோஹ்லி, நாளைய இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் கேப்டனாக கணிக்கப்படுகிறார். இந்த வளர்ச்சிக்கு பின்னால் கோஹ்லி எனும் கிரிக்கெட் வீரனின் பயணம் வியக்கத்தக்கது. நவம்பர் 5,1988ம் ஆண்டு டெல்லியில் பிறந்த விராட் கோஹ்லி,சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட வீரராக திகழ்ந்தார். மேற்கு டெல்லிக்கான ...

என்ன அழகு....?

Posted: 05 Nov 2014 07:18 AM PST

நீ தூங்கும் அழகை ரசிப்பதற்காக காலையில் மலரும் பூக் கூட மலர மறுக்கிறது மலரும் போது வரும் வாசத்தால் நீ எழுந்து விடுவாயோ என்று! நிலவு கூட தன்னை மறைத்து சூரியனைக் கூப்பிட மறுக்கிறது விடியற்காலையில் அது வந்தால் வெளிச்சம் பட்டு நீ எழுந்து விடுவாயோ என்று! காற்று கூட வெற்றொளியில் வீசி பசுந்தலைகளை அசைக்க மறுக்கிறது அசையும் சத்தம் கேட்டு நீ எழுந்து விடுவாயோ என்று! நானும் அதை ரசிப்பதற்காக தவமிருக்கிறேன் தூங்கா வரம் வேண்டி!

கம்பந்தயிர்

Posted: 05 Nov 2014 07:15 AM PST


-
--மல்லிகா பதிரிநாத்

கத்தரி முருங்கைகீரை சாதம்

Posted: 05 Nov 2014 07:11 AM PST


-
நன்றி-- மல்லிகா பத்ரிநாத்

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Posted: 05 Nov 2014 07:07 AM PST

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? விரை வீக்கம் பரம்பரை நோயல்ல. பிறவியிலேயே அல்லது அதற்குப் பிறகோ விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் சுரக்கிற சவ்வுச் சுரப்பு நீர் அதிகமாக சுரந்தால் விரை வீக்கம் உண்டாகும். சிலருக்கு இந்தச் சுரப்புநீர் சாதாரண அளவில் சுரந்தாலும், அது உடம்புக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை சமயங்களில் அடைத்துக் கொள்ளும். அதனாலும் அவர்களுக்கு விரைவீக்கம் உண்டாகும். குறிப்பாக யானைக்கால் (Filariasis) நோயில் இந்த மாதிரியான விரைவீக்கம் ஏற்படுவது ...

சகாயம் ஐ.ஏ.எஸ் தமிழக முதல்வராக வேண்டும் - பரபரபு கிளப்பும் பேஸ்புக்

Posted: 05 Nov 2014 06:13 AM PST

- "சகாயம் ஐ.ஏ.எஸ். முதல்வராக நாங்கள் விரும்புகிறோம்" ( We want U Sahayam IAS as CM ) என்ற முகவரியோடு புரபைல் ஒன்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற வாசகம் அலங்கரிக்க, ஆரம்பித்த 2 வது நாளான இன்று மாலை 5 மணி வரை 4,588 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் லைக்குகளோடும், இந்த யோசனைக்கு ஏராளமான வரவேற்புகளுடனும் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறது அந்த ஃபேஸ்புக் தளம். - --- --நியூஸ் விகடன்

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம்; மோடியை பழிவாங்குவோம்: தலிபான் மிரட்டல்!

Posted: 05 Nov 2014 05:31 AM PST

கடந்த 1 ஆம் தேதி பாகிஸ்தானின் வாகா எல்லையில் தற்கொலைப் படை நடத்திய திடீர் தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், "இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம். எங்களின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருக்கலாம்" என தலிபான் தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து, தலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ''பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ...

வேலன்:-யூடியூப் வீடியொக்களை விளம்பரம் இல்லாமல் பார்க்க

Posted: 05 Nov 2014 05:20 AM PST

எந்த பத்திரிக்கை வாங்கினாலும் விளம்பரங்கள் இல்லாமல் இல்லை.வீடியோக்களிலும் விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள் வருவதில்லை. நாம் அடிக்கடி பார்க்கும் யூடியூப் வீடியோக்களில் சிலவற்றில் ஆரம்பத்திலும் சிலவற்றில் நடுவிலும் விளம்பரங்கள் வந்து நமது பொறுமைய சோதிக்கும். ஆனால் விளம்பரமே வராமல் யூடியூப் வீடியோக்களை பார்க்க இந்த இணைய தளம் பயன்படுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் பார்க்கவேண்டிய யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை ...

திருமூலருக்கு குரு பூஜை சாத்தணூரில்

Posted: 05 Nov 2014 05:17 AM PST

திருமூலருக்கு குரு பூஜை சாத்தணூரில்

இளமையாக இருக்க நெல்லிக்காய்

Posted: 05 Nov 2014 04:52 AM PST

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. 2.நோய் வாய்ப்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் முக்கியமான சிகிச்சைகளுள், காயகற்ப சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையானது, நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் ...

சர்க்கரை / நீரிழிவாளர்களின் உணவு முறை

Posted: 05 Nov 2014 04:50 AM PST

நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை? தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம். தங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருதல். தினமும் உடலுழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், அல்லது உடற் பயிற்சி செய்தல், தங்களுக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்த மருந்துகளை ஒழுங்கான முறையில் உட்கொள்ளுதல் ஆகியவையே ஆகும். இக் கட்டுரையில் முக்கியமாக நீரிழிவாளர்களின் உணவு முறை பற்றியே பேச உள்ளோம். நீரிழிவாளர்களுக்கான ...

உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா

Posted: 05 Nov 2014 04:47 AM PST

உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. "கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்" வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய இரத்த சீனியின் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். உருளைக்கிழங்கு கொடுக்காத தன்னுடைய கெட்டித்தனத்தால்தான் அவ்வாறு நடந்தது என பெரிய கடகத்தில் புகழைத் தன் தலையில் சுமந்து கொண்டார். நொட்டைச் ...

உடல் மொழி அறிவோம்

Posted: 05 Nov 2014 04:33 AM PST



உடல் மொழி அறிவோம்

மூட்டு வலி - மருத்துவ குறுந்தகவல்

Posted: 05 Nov 2014 04:25 AM PST



மூட்டு வலி - மருத்துவ குறுந்தகவல்

கொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில்

Posted: 05 Nov 2014 04:17 AM PST

கொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில் உங்கள் சில கேள்விகள் கொலஸ்டரோலும் உணவு முறையும்; கொலஸ்டரோல் பிரச்சனை என்று அறிந்தாலே எதைச் சாப்பிடுவது எதைக் கைவிடுவது என்ற சந்தேகம் எவருக்கும் கிளம்பிவிடும். உங்களுக்கா, உங்கள் கணவனுக்கா, அம்மா அப்பாவிற்கா? யாருக்கு கொலஸ்டரோல் பிரச்சனை இருக்கிறது? கொலஸ்டரோல் உணவு முறையில் உங்களுக்குள்ள சந்தேகங்கள் என்ன? ஆனால் அவருக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. எண்ணையைத் தொடக் கூடாது என்பது மட்டுமே அவருக்கு தெரிந்த ஒரே விடயம். பொரியல், வதக்கல், ...

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Posted: 05 Nov 2014 04:12 AM PST

[b] - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்-  டாக்டர் ராஜேந்திர பிரசாத் - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் -மௌண்ட்பேட்டன் பிரபு - பதவியை ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய் - இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் ‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்) - இந்தியாவின் முதல் அணு சோதனை 1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான் -[color=#006400]b]

நீங்களும் Game Creators ஆகலாம் Tutorials

Posted: 05 Nov 2014 04:09 AM PST

இதோ நீங்களும் Game Creators ஆகப் போகிறீர்களா? ஆர்வமிருந்தால் வாருங்கள் நாம் நவீனரக 3D யில் ஒரு Call Duty போன்ற விளையாட்டு முற்று முழுதாக செய்து பார்ப்போம். உங்களுக்கு Game Script எழுதத் தெரியாது என்கிறீர்களா ? தேவையில்லை முப் பரிமாண ( 3D ) விளையாட்டு விளையாடிய அனுபவமுண்டா அதுபோதும் .இலவச மென்பொருள் ஒன்று கொண்டு இந்த.விளையாட்டினை முழுதாக தயாரிக்கப் போகிறோம் ஒரு தடவையில் முடியாது எத்தனை பகுதிகளில் இது முடியும் என்று இப்போது திட்டமிடவில்லை பல பகுதிகளாக தருவேன் சேர்ந்துவாருங்கள். முதலில் ...

மலவாயிலில் அரிப்பு எடுத்தால் அது பூச்சித் தொல்லைதான் என்றே பலரும் நம்புகிறார்கள். அது உண்மையா?

Posted: 05 Nov 2014 04:02 AM PST

மலவாயில் அரிப்பு "சரியான அரிப்பு" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை" என அலுத்துக் கொண்டார். "இவளுக்கு போன மாதம்தான் பூச்சிக் குளிசை குடுத்தனாங்கள். பிறகும் பின் பக்கமாகக் கையைப் போட்டு சொறியிறாள்" இதைச் சொன்னது 4-5 வயது மதிக்கத்தக்க குழந்தையின் தாய். இவர்களுக்கெல்லாம் உண்மையில் பூச்சித் தொல்லைதானா? மலவாயிலில் அரிப்பு எடுத்தால் ...

பதின்ம வயதுகளில் தூக்கம்

Posted: 05 Nov 2014 03:59 AM PST

பதின்ம வயதுகளில் தூக்கம் தூக்கம் அனைவருக்கும் அவசியமானது. பச்சிளம் பாலகர் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை எல்லோருக்குமே போதுமான தூக்கம் இல்லாவிடத்து பிரச்சனைகள் எழும் அதே போல பள்ளிக்கூடம், விளையாட்டு, ரியூசன், நண்பர்கள் கூட்டு என பொழுது பூராவும் ஓடித் திரியும் பதின்ம வயதினருக்கும் மிக மிக அவசியமாகும். போதிய தூக்கம் இல்லாதவிடத்து அவர்களுக்கு ஏற்றடக் கூடிய பாதகங்கள் எவை? மனதை ஒரு முகப்படுத்துவது சிரமமாகலாம். இதனால் பாடங்களை செவிமடுப்பது, கற்பது, முக்கிய விடயங்களையும் பாடங்களையும் நினைவில் ...

"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா?

Posted: 05 Nov 2014 03:35 AM PST

"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? மனித வாழ்வில் ஓற்றைத் துணை வாழ்வு உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழி வந்ததா, பொருளாதார காரணிகளுக்கானதா? 'அன்றிலும் பேடும் போல' இணையாக வாழ்ந்தார்கள் என்கிறோம். சீதைக்கு இராமன், நளனும் தமயந்தியும், சிவனும் உமையும் எனக் கொண்டாடுகின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனித இனத்தின் மாண்பு என எண்ணுகிறோம். ஆனால் கோவலனுக்கு கண்ணகியும் மாதவியும் இருக்கவே செய்தார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். குந்தவி சூரியனுடன் ...

பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

Posted: 05 Nov 2014 03:23 AM PST

அண்மையில் நான் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறிய ஒரு தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய மகனுடன் அவர் பேசி இரண்டு மாதமாகிவிட்டது என்று கூறினார். அந்த நண்பர் நன்கு படித்தவர். ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனைவி அவர்களுடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது, பழகுவது என்பதை உளவியல் ரீதியாக அறிந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள். நண்பரின் மகன் தன்னுடைய தந்தையிடத்தில் சரியாக பழகவில்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், ...

பால், வெண்ணை , நெய் , முட்டை - சத்துகள் அறிவோம்!!

Posted: 05 Nov 2014 03:23 AM PST



பால், வெண்ணை , நெய் , முட்டை - சத்துகள் அறிவோம்!!

உங்க குட்டி !! படு சுட்டியா !! - கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் -- சில தீர்வுகள்

Posted: 05 Nov 2014 03:09 AM PST

சுறுசுறுப்பாக... எப்போதும் விறுவிறு என அங்கே இங்கே என்று ஓடி விளையாடுவதே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஓடி விளையாடுவது... பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு, ஆபத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக தலையில் அடிபடுவது என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சைக்கிள் ஓட்டும்போது... விளையாடும்போது கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் என்பது குழந்தைகளுக்கே உரிய பிரச்சினைகள். சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. ...

கொழுகொழு குண்டுஸ் குழந்தையா -மத்தவங்களோட கிண்டலும் கேலியும் வேண்டாமே !!1

Posted: 05 Nov 2014 03:01 AM PST

கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம்' என்கிற எண்ணம், காலங்காலமாக அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம். குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது அதன் புசுபுசு உடல்வாகில்லை என்பதில் படித்த பெண்களுக்கே இன்றளவும் விழிப்புணர்வு இல்லை. பருமன் என்பது பெரியவர்களுக்கு எந்தளவு ஆபத்தானதோ, அதே போன்றதுதான் குழந்தைகள் விஷயத்திலும்! வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிற குழந்தைகளை சமீபகாலமாக பரவலாக பல வீடுகளிலும் பார்க்கிறோம். "குழந்தைதானே... வளர வளர சரியாயிடும்" என்கிற சமாதானத்துடன் அதை அலட்சியப்படுத்துகிற ...

நம்ம வீட்டு குட்டிஸ்!! பாதுகாப்புக்கு!! தேவையான பாடங்கள் !!

Posted: 05 Nov 2014 02:50 AM PST

பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பேரிடர் சூழல் மேலாண்மை, முதலுதவி பயிற்சி களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன். குடும்பம், பள்ளி, சமூகம் என்று குழந்தைகளைச் சுற்றி மூன்று வட்டங்கள் இருக்கின்றன. சமூகத்தில் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குடும்பமும் பள்ளியுமே பயிற்றுவிக்க வேண்டும். மழை பெய்யும்போது மரங்களின் அருகில் நிற்கக்கூடாது. இடி இடிக்கும்போது, மின்கம்பங்களுக்கு பக்கத்தில் நிற்கக்கூடாது என்று ...

"குழந்தை பாய்ல உச்ச போச்சா - இத படிங்க முதலில !!"

Posted: 05 Nov 2014 02:42 AM PST

'பெட் வெட்டிங்' பிரச்னைக்கு டயட் டிப்ஸ்: ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அடிப்படை. அதில் குறைபாடு ஏற்படும் போது 'பெட் வெட்டிங்' போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் சரிவிகித சத்துகள் அவசியம். மூளை வளர்ச்சியடைய, 5 வயது வரை கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அடிக்கடிச் சேர்க்க வேண்டும். உணவின் மூலமே பெட் வெட்டிங் பிரச்னையை சரி செய்ய முடியும். காலை உணவை மிஸ் பண்ணுகிற குழந்தையால் மாலை வரை எந்த விஷயத்தையும் சரியாகச் செய்ய முடியாது. ...

கால்நடை செல்வங்களுக்கான தடுபூசிகள்

Posted: 05 Nov 2014 02:38 AM PST



கால்நடை செல்வங்களுக்கான தடுபூசிகள்

தில்லி சட்டப்பேரவை கலைப்பு : பிரணாப் முகர்ஜி உத்தரவு

Posted: 05 Nov 2014 02:26 AM PST

தில்லி சட்டப்பேரவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் தில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், தில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், தில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக ...

அதிகம் கேட்ட வார்த்தைகள்...!!

Posted: 05 Nov 2014 02:24 AM PST

இன்னொரு ஜென்மம் இருந்தால் அதிலாவது ஒன்று சேருவோம்...!! பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்...!! அடுத்த முறை கண்டிப்பாக நடத்திக் காட்டுவோம்...!! மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்...!! கடைசியாக ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்..!! சுடுகாடுகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்...!! வாழ்ந்தால் இவர்களைப் போல் வாழ வேண்டும்...!! ஏழை ஜன்னல்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்...!! என்ன நடந்தாலும் நம் நாட்டை திருத்தவே முடியாது...!! டீக்கடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்...!! உங்களை போல் ...

தேனருவி - ரசித்த பாடல் வரிகள் & காணொளிகள்

Posted: 05 Nov 2014 02:23 AM PST

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே - உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே --

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Posted: 05 Nov 2014 02:20 AM PST

முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு இந்தி படம் சேலத்தில் திரையிடப்பட்டது. - அப்படத்திற்கு போஸ்டரில் ஆங்கிலத்தில் Naked truth of dressed up society - என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது... - படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. எதை எதிர்பார்த்து வந்தார்களோ அவர்களுக்கு ஏமாற்றம்... ஆனால் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடித்துப் போக நீண்ட நாட்கள் அந்தப்படம் ஓடியது. - படத்தின் கதை இதுதான்: - கதாநாயகி சோசியல் சர்வீஸ் செய்பவள், இந்துக் கோயில்களுக்கும் போவாள், சர்ச், மசூதிக்கும் செல்வாள்... - ஒரு ...

மருதாணி....!! -Mano Red

Posted: 05 Nov 2014 02:19 AM PST

ஆத்தாடி பேரழகி...!! அத்தனை நிலவையும் அள்ளிக் கொண்டு வந்து அத்துடன் கொஞ்சம் அமிலம் ஊற்றி அரங்கேறும் அவள் அழகு..!! பெரிய போராளி அவள், பொதுவாகச் சொன்னால் பொம்மைகள் காட்டும் பொய் கோபத்தில் கூட பொசுக்கென அழுதிடுவாள்..!! காதலை மதிக்காதவள், கவிதைக்கு மட்டும் கண்ணடித்து கவிதையை இன்னும் குழைத்து அழகு செய்வாள்..!! பார்த்தவுடன் பற்றி எரிய வைக்கும் பழுப்பு நிற பார்வை அவளுக்கு, பக்கம் வந்தால் போதும் பயத்திற்கும் பயம் காட்டுவாள்..!! அத்தனை மெல்லிய அதிர்வலை கூந்தல் கொண்டவள், அய்யோ ...

தன்னைத்தானே செல்லில் படம் எடுத்த 1100 பெண்களின் 'செல்ஃபி’ சாதனை முயற்சி

Posted: 05 Nov 2014 02:15 AM PST

ஜெய்ப்பூரில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த 1100 பெண்கள், ஒரே நேரத்தில் தங்களைத் தாங்களே செல்போனில் படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி சாதனை முயற்சியில் இறங்கினர். - குர்ஜா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை நேற்று பிர்லா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள், தங்கள் நண்பர்களுடன் செல்பி - தங்களைத் தாங்களே படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் பொதுச் செயலர் விக்ரம் சிங் கூறுகையில், ஒரு சாதனைக்காக ...

வாசனுக்கு வேறு வழியில்லை: சோ கருத்து

Posted: 05 Nov 2014 02:15 AM PST

சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதை தவிர வாசனுக்கு வேறு வழியில்லை என சோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வாசன் காங்கிரசை விட்டு வெளியேறி இருப்பது ஒரே நாள் எடுக்கப்பட்ட முடிவல்ல. அவர் நீண்ட காலம் யோசித்து முடிவை எடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் வாசனின் ஆதரவாளர்களே அதிகளவில் இருந்துள்ளனர். இருப்பினும் கட்சியின் மேலிடத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர் என கூறினார். மேலும் தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இளங்கோவனுக்கு இது ஒரு கடினமான ...

தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கான தேர்தல் : இந்திய வம்சாவளிப் பெண் மீண்டும் வெற்றி

Posted: 05 Nov 2014 02:15 AM PST

- அமெரிக்காவின் செனட் சபைக்கும், மாகாண ஆளுநர்களுக்கான பதவிக்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆளுநரான நிக்கி ஹாலே, இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று ஆளுநர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஷீஹீனை 1,78,930 வாக்குகள் வித்தியாசத்தில் ...

10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?

Posted: 05 Nov 2014 02:00 AM PST

ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார். பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார். வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™