Tamil News | Online Tamil News |
- முதலாளித்துவம் பற்றி ஸ்டாலின் பேசலாமா? குடும்பத்தினர் தொழில்களை பட்டியலிட்டு சாமி பதிலடி
- பா.ஜ., கொள்கை: ஸ்டாலின் விமர்சனம்
- 7 பள்ளிகள் தாரை வார்ப்பா; 'ஏழரை' நடவடிக்கையா? ஜெ., வாக்குறுதியை மீறும் சென்னை மாநகராட்சி
- திருவள்ளுவர் பிறந்த தின விழா: மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி
- புற்று நோய் மருந்து விலை உயர்கிறது: நடுத்தர, ஏழை மக்களின் பாடு இனி திண்டாட்டம்
- காவு வாங்கும் ரயில் தண்டவாளங்கள்: ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பலி
- போலீசாரை வில்லன்களாக சித்தரிப்பதா? போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மோடி காட்டம்
- நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்
- தமிழக பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,வுக்கு கல்தா?மோடியை விமர்சிக்கும் வைகோவால் தலைவர்கள் எரிச்சல்
- கொலை, கற்பழிப்பே ஈராக் பயங்கரவாதிகளின் வேலை: திரும்பி வந்த கல்யாண் இளைஞன் போலீசில் வாக்குமூலம்
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
- வெளிநாட்டு கோயில் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்
| முதலாளித்துவம் பற்றி ஸ்டாலின் பேசலாமா? குடும்பத்தினர் தொழில்களை பட்டியலிட்டு சாமி பதிலடி Posted: ''மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவது போல இருப்பதாக, ஸ்டாலின் குறிப்பிட்டு, அது ஏழைகளை பாதிக்கும் என, கூறியுள்ளார்.அது குறித்தெல்லாம் சொல்வதற்கு, அவர் எந்த பல்கலைக் ... |
| பா.ஜ., கொள்கை: ஸ்டாலின் விமர்சனம் Posted: 'தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பதில் அளித்தார்.ஸ்டாலின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி:வரும், 2016 சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி, இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது. அதற்கு சரியான நேரம் இது அல்ல.சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 16 மாதங்களே உள்ளதால், நான், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறேன். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் ... |
| 7 பள்ளிகள் தாரை வார்ப்பா; 'ஏழரை' நடவடிக்கையா? ஜெ., வாக்குறுதியை மீறும் சென்னை மாநகராட்சி Posted: 'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதியில்லை' என்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறும் வகையில், மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தரை வார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது, கல்வித் துறையினரிடம், பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.'மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்' என, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு அறிவித்தது. இதன் மூலம், பள்ளி துவங்க, 60 சதவீத பணத்தை ... |
| திருவள்ளுவர் பிறந்த தின விழா: மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்று. இதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. திருக்குறளை தேசிய நுாலாக அறிவித்து, தமிழர்களின் மற்றொரு நீண்ட காலக் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.சட்டசபையில் எனக்கு, சிறப்பு இருக்கை அமைத்து தர வேண்டும் என, தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர் குமரி அனந்தனின் மகள். அவருக்குரிய அரசியல் பண்போடு, அதை ... |
| புற்று நோய் மருந்து விலை உயர்கிறது: நடுத்தர, ஏழை மக்களின் பாடு இனி திண்டாட்டம் Posted: சென்னை : அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுப்பாட்டில் இருந்து, சில மருந்துகள் நீக்கப்பட்டுள்ளதால், புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட முக்கிய மருந்துகளின் விலை, பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வால், ஏழை, நடுத்தர மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டதால், 'உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, முந்தைய மத்திய அரசு, அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, 348 மருந்துகளுக்கான, விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், 108 மருந்துகளை ... |
| காவு வாங்கும் ரயில் தண்டவாளங்கள்: ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பலி Posted: புதுடில்லி: ரயில்வே துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், கடந்த சில ஆண்டுகளாக, ரயில் தண்டவாள விபத்துகள் அதிகரித்து வருகின்றன.கடந்த ஓராண்டில் மட்டும், தண்டவாளங்களை கடப்பது, ரயிலில் இருந்து விழுவது, ரயில் விபத்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்களில், 19,997 பேர் உயிரிழந்து உள்ளனர்.ரயில்வே தண்டவாளத்தை கடப்பது, சட்டப் பிரிவு 147ன் கீழ், தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், மக்கள் சர்வசாதாரணமாக, தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.பொதுமக்களிடம், ரயில்வே துறை, தீவிர விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு ... |
| போலீசாரை வில்லன்களாக சித்தரிப்பதா? போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மோடி காட்டம் Posted: கவுகாத்தி: அசாமில், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காவல் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக, 'ஸ்மார்ட் போலீஸ்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.இதில், பிரதமர் மோடி பேசியதாவது:போலீஸ் என்றாலே கெட்டவர்கள் என்ற எண்ணம், பெரும்பாலானோர் மனதில் பதிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சினிமாக்களே.ஒவ்வொரு ஆண்டும், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு, டில்லியில் நடைபெறும். வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு கவுகாத்தியில் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில், மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது உறுதி ... |
| Posted: புதுடில்லி : இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு ... |
| Posted: பிரதமர் நரேந்திர மோடியை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், அவரை, தமிழக பா.ஜ., தலைவர்களும் மாறி மாறி விமர்சிப்பது தொடர்வதால், பா.ஜ., கூட்டணியில், வைகோ நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விமர்சன பிரச்னை, இரு கட்சிகளிலும், அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதால், கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், பா.ஜ.,வில் எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., கூட்டணியில் முதல் ஆளாக இடம் பிடித்த வைகோ, தற்போது, மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, இலங்கை ... |
| கொலை, கற்பழிப்பே ஈராக் பயங்கரவாதிகளின் வேலை: திரும்பி வந்த கல்யாண் இளைஞன் போலீசில் வாக்குமூலம் Posted: மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள கல்யாண் என்ற நகரைச் சேர்ந்த, ஆரிப் மஜித், பாகத் ஷேக், அமான் தான்டெல் மற்றும் சாஹீம் டாங்கி ஆகியோர், கடந்த மே மாதம், ஈராக் சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன்இணைந்தனர். அவர்களில், மஜித் ஆரிப் கடந்த வெள்ளியன்று, கல்யாண் திரும்பினார்; கைது செய்யப்பட்டுள்ள அவரிடம்,மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. மீதமுள்ள, மூன்று பேரும் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம், ஆரிப் மஜித் அளித்துள்ள வாக்குமூலம்:முஸ்லிம் இளைஞனான நான், இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து ... |
| பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Posted: புதுடில்லி:எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.01 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 96 காசுகள் குறைக்கப்பட்டு, 66.05 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 56.84 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 91 காசுகள் குறைக்கப்பட்டு, 55.93 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை, பெட்ரோல் விலை, ஏழு ... |
| வெளிநாட்டு கோயில் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் Posted: உலகம் முழுவதும் உள்ள முக்கிய இந்து கோயில்கள் தொடர்பான தகவல்கள் தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள்/ பட்டர்கள் தங்களுடைய தொடர்பு எண் மற்றும் முகவரியைத் தெரிவித்தால் அவற்றையும் இந்த பகுதியில் வெளியிட இருக்கிறோம். இதன் மூலம் உலகின் பிற பகுதிகளிலிருந்து உங்கள் பகுதிக்கு வரும் தமிழர்கள், உங்கள் கோயிலுக்கு வர எளிதாக இருக்கும். இந்த பகுதியில் உங்கள் கோயில் தொடர்பான தகவல்கள் விடுபட்டிருந்தாலும் அதையும் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அதையும் உடனடியாக சேர்க்க ஏற்பாடு செய்கிறோம். உலகம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |