Tamil News | Online Tamil News |
- மொத்தமாய் வீணாகி போன 5,000 கி.மீ., சாலைகள்: மழை நின்ற பிறகே கவனிக்கப்படும் என அறிவித்தது அரசு
- பெரியாறு ஷட்டர் ஓ.கே.,: 142 அடி வரை நீர் தேக்கலாம் ஆய்வு செய்த மூவர் குழு தகவல்
- தலைமையால் தகுதியை அளவிட முடியவில்லை: தனிக்கட்சி அறிவித்தார் வாசன்
- கருணாநிதி, ஸ்டாலின் தனித்தனியாக ஆர்ப்பாட்டம்
- சிக்கன முதல்வர்: பொதுமக்கள் ஆச்சர்யம்
- வேறு மாநிலங்களிலும் போர்க்கொடி உண்டா?காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
- கறுப்பு பண பட்டியலில் பழைய கணக்கு தகவல்கள்: செயல்படாத அறக்கட்டளைகள் பெயரிலும் டிபாசிட்
- பா.ஜ., ஆட்சி அமைக்காததால் டில்லி சட்டசபை கலைப்பு: ஜனாதிபதிக்கு கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை
- திட்டமிட்டபடி தனிக்கட்சி அறிவித்தார் வாசன்: ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு முழுக்கு
- ஜப்பானின் உயரிய விருதுக்கு மன்மோகன் சிங் தேர்வு
- சுகோய் விமானங்கள் மீண்டும் பறக்குமா?
- விலைபேசப்பட்ட வாரிய பதவிகள் : கர்நாடக காங்., தலைவர்கள் அதிர்ச்சி
| மொத்தமாய் வீணாகி போன 5,000 கி.மீ., சாலைகள்: மழை நின்ற பிறகே கவனிக்கப்படும் என அறிவித்தது அரசு Posted: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள, 4,000 கி.மீ., தூர சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு விட்டன; மேலும், 1,000 கி.மீ., சாலைகளும் பாதிப்படைந்துள்ளதால், மழை முற்றிலும் நின்ற பிறகே, சீரமைப்புப் பணிகள் துவங்கப்படும் என, அரசு அறிவித்து விட்டது.நெடுஞ்சாலை துறை:வடகிழக்கு பருவ மழையால், சாலைகளில் ஏற்படும் பாதிப்பை கண்காணிக்க, நெடுஞ்சாலைத் துறையில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 40 கோட்ட அலுவலகங்களிலும் அவசர கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. இங்கு, மூன்று, ... |
| பெரியாறு ஷட்டர் ஓ.கே.,: 142 அடி வரை நீர் தேக்கலாம் ஆய்வு செய்த மூவர் குழு தகவல் Posted: கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையை ஓட்டியுள்ள ஷட்டர்களின் இயக்கங்கள் சரியாகவே உள்ளதால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதில் எவ்வித பிரச்னையும் இல்லை என மூவர் குழுவின் தலைவர் நாதன் கூறினார்.முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கலாம் என கடந்த மே 7ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கும், 142 அடி நீர் தேக்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய நீர்ப்பாசன முதன்மை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார், ... |
| தலைமையால் தகுதியை அளவிட முடியவில்லை: தனிக்கட்சி அறிவித்தார் வாசன் Posted: ''மாநில பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, நான் ஆரம்பிக்கும் புது கட்சி பாடுபடும். கட்சியின் பெயர் மற்றும் கொடி, விரைவில் அறிவிக்கப்படும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.சென்னையில் நிருபர்களுக்கு, வாசன் அளித்த பேட்டி:காமராஜரின் நேர்மை, எளிமை, தூய்மையோடு செயல்பட்டு, தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், புதிய அரசியல் பாதை வகுத்து, அதன் அடிப்படையில் மக்களுக்காக பணியாற்றுவோம்.மாநில பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ஜனநாயகத்தில் இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கின்ற வகையில், எங்களது புதிய இயக்கம், தன் ... |
| கருணாநிதி, ஸ்டாலின் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் Posted: ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து, 'ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு' என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும், தி.மு.க., போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், கட்சிப் பொருளாளர் ஸ்டாலினும், சென்னையில் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.உடல்நலக் குறைவு காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தும், ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பங்கேற்றது, அக்கட்சியினர் மத்தியில், உற்சாகத்தை ஏற்படுத்தியது.பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ... |
| சிக்கன முதல்வர்: பொதுமக்கள் ஆச்சர்யம் Posted: மும்பை : மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிசும், அவரின் மனைவி அம்ரு தாவும், மும்பையில் இருந்து நாக்பூருக்கு நேற்று முன்தினம் விமானத்தில், 'எகானமி' வகுப்பில் பயணம் செய்தனர்; இது, அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.நல்ல சகுனம்: மகாராஷ்டிரா முதல்வராக, கடந்த வாரம், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். மாநிலம், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை சந்தித்து வரும் நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள பட்நாவிஸ், ஆரம்பம் முதலே சிக்கன நடவடிக்கையை கையாள துவங்கி உள்ளார்.இவர், நேற்று முன்தினம் மும்பையில் இருந்து நாக்பூருக்கு, ... |
| வேறு மாநிலங்களிலும் போர்க்கொடி உண்டா?காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை Posted: புதுடில்லி : வாசனால், தமிழக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் தவிர வேறு மாநிலங்களில், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளவர்கள் உட்பட, பல விவரங்களை கேட்டறிந்ததாக தெரிகிறது.லோக்சபா தேர்தலில் மட்டுமின்றி, கடந்த மாதம் நடந்த, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது, அந்த கட்சி மேலிட வட்டாரத்தை கலங்கடித்தது.இந்த சூழ்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக ... |
| கறுப்பு பண பட்டியலில் பழைய கணக்கு தகவல்கள்: செயல்படாத அறக்கட்டளைகள் பெயரிலும் டிபாசிட் Posted: புதுடில்லி : வெளிநாடுகளில், கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் என, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல், தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், பல கணக்குகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு உள்ளன என்பதும், தற்போது செயல்படாத நிலையில் உள்ள அறக்கட்டளைகள், பெயரில் துவங்கப்பட்டு உள்ளன என்பதும், விசாரணையில் தெரியவந்து உள்ளது.தொடர் முயற்சி: சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ள, கறுப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியல், பிரான்ஸ் அரசால், மத்திய அரசுக்கு தரப்பட்டவை. இதுதவிர, வெளிநாடுகளில் ... |
| பா.ஜ., ஆட்சி அமைக்காததால் டில்லி சட்டசபை கலைப்பு: ஜனாதிபதிக்கு கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை Posted: புதுடில்லி : டில்லியில், பா.ஜ., ஆட்சி அமைக்க, அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் விரும்பவில்லை. அதேபோல், மற்ற கட்சிகளும், டில்லி சட்டசபையை கலைக்கும்படி வலியுறுத்தியதால், அம்மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் நேற்று ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பினார்.டில்லியில், எட்டு மாதங்களுக்கு மேலாக, சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.அதேநேரத்தில், 'சட்டசபையை கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ... |
| திட்டமிட்டபடி தனிக்கட்சி அறிவித்தார் வாசன்: ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு முழுக்கு Posted: காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு டாடா சொல்லிவிட்டு, திட்டமிட்டபடி, தனிக் கட்சி அறிவிப்பை வெளியிட்டார், முன் னாள் மத்திய அமைச்சர் வாசன்.தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெறுவது கூடாது என, டில்லி காங்., தலைமை வலியுறுத்தியதாக சொல்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகன் விலகினார்.இதன் தொடர்ச்சியாக, இளங்கோவன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். ஞானதேசிகனை தொடர்ந்து, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து கோவை ... |
| ஜப்பானின் உயரிய விருதுக்கு மன்மோகன் சிங் தேர்வு Posted: புதுடில்லி : ஜப்பான் நாட்டின் உயரிய தேசிய விருதுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை பலப்படுத்த, அவர் சிறப்பான பங்காற்றிய தற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. 'தி கிராண்ட் கார்டன் ஆப் த ஆர்டர் ஆப் த பவ்லோவ்னியா பிளவர்ஸ்' என்ற, இந்த விருதை பெறும் முதல் இந்தியர், மன்மோகன் சிங்கே. இத்தகவல், டில்லியில் உள்ள, ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் உயரிய விருது அறிவிப்பு பற்றி, மன்மோகன் சிங் கூறியதாவது: ஜப்பான் அரசும், அந்நாட்டு மக்களும், என் ... |
| சுகோய் விமானங்கள் மீண்டும் பறக்குமா? Posted: புதுடில்லி:ரஷ்ய தயாரிப்பான,'சுகோய் 30 ரக போர் விமானங்கள், அடிக்கடி விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்த விமானங்களின் செயல்பாட்டை, இந்திய விமானப் படை, சமீபத்தில் அதிரடியாக நிறுத்தி வைத்தது. இதனால், 200க்கும் அதிகமான, 'சுகோய் 30 ரக விமானங்கள் விமானப் படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் நேற்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள விமானப் படை தளத்துக்கு நேற்று வந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சுகோய் ரக விமானங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இவர்களுடன், இந்திய ... |
| விலைபேசப்பட்ட வாரிய பதவிகள் : கர்நாடக காங்., தலைவர்கள் அதிர்ச்சி Posted: பெங்களூரு : கர்நாடகாவில், வாரியங்கள், கார்ப்பரேஷன் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, சிலர், பணம் பெற்று வருகின்றனர். இதனால், நேர்மையான தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில், கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனம் தாமதமாகி வருவதால், காங்., தொண்டர்கள், அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், இப்பதவிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணத்துக்காக தான், நியமனம் தாமதமாகிறது என்ற கருத்தும் வலுத்து வருகிறது.கூடுதல் 'டிமாண்ட்' : கார்ப்பரேஷன், வாரியங்கள் பதவி, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விலை நிர்ணயம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 04,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |