Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


செலவு கணக்கு காட்டாத கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை: 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இறுதி நோட்டீஸ்

Posted:

புதுடில்லி : லோக்சபா தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத, பா.ஜ., காங்கிரஸ் உட்பட, 20 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. 15 நாட்களுக்குள் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனில், கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.90 நாட்களுக்குள்...: பொதுநல அமைப்பு ஒன்றுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் முடிந்த, 90 நாட்களுக்குள், தேர்தல் செலவு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள், 75 ...

பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதில் மும்பை நிர்வாகம்அலட்சியம்:குண்டு துளைக்காத உடைகள் வாங்குவதில் மெத்தனம்

Posted:

மும்பை: மும்பையில், தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, ஆறு ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், மும்பை தீயணைப்பு படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் வாங்குவதில், மும்பை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டு வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.கடந்த, 2008ல், பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய, அஜ்மல் கசாப் உள்ளிட்ட, 10 பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டு ...

பாரதிக்கும் நாடு முழுவதும் பிறந்த நாள் விழா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி உறுதி

Posted:

'திருவள்ளுவரை தொடர்ந்து, பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் அரசின் சார்பில் கொண்டாட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், 'திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யான தருண் விஜய், நேற்று முன்தினம், ராஜ்யசபாவில் பேசும் போது, 'திருவள்ளுவர் பிறந்த நாளை, நாடு முழுவதும் கொண்டாட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். அவர் பேசி முடித்த தும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ...

இந்தியாவில் ஆதிக்கத்தை விஸ்தரிக்க பயங்கரவாதிகள் சதி: அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Posted:

கவுகாத்தி: ''பல வகையான தந்திரங்கள் மூலம், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் வேலைகளில், பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பாதகமான செயல்களில் ஈடுபடுவதை, அந்நாடு கைவிடவில்லை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக, இதுபோன்ற மாநாடுகள் எல்லாம், டில்லியில் தான் நடைபெறும். தற்போது, முதன்முறையாக, டில்லிக்கு வெளியே நடந்துள்ளது.மாநாட்டை துவக்கிவைத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ...

வில்லங்கமான கேள்வியை கேட்காதீங்க: எம்.பி.,க்களுக்கு பா.ஜ., மேலிடம் தடை

Posted:

புதுடில்லி: 'நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், வில்லங்கமான, கடின மான கேள்விகளாக கேட்டு, அமைச்சர்களை திணறடிக்க வேண்டாம்' என, தங்கள் கட்சி எம்.பி., க்களுக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.மழைக்கால கூட்டத் தொடர்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் போது, பா.ஜ., - எம்.பி.,க் கள் சிலர், அமைச்சர்களிடம், உடனடியாக பதில் அளிக்க முடியாத கேள்விகளாக கேட்டு, திணறடித்தனர். பீகார் மாநிலத்திலிருந்து பா.ஜ.,வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சேடி பஸ்வான் என்ற எம்.பி., வாரணாசி - அவுரங்காபாத் தேசிய நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்த கேள்வியை, அமைச்சர் சந்தோஷ் ...

நொய்டா தலைமை பொறியாளரிடமிருந்து ரூ.10 கோடி பறிமுதல்: வரித்துறை அதிரடி

Posted:

லக்னோ: நொய்டா நகரில் உள்ள, நொய்டா ஆணையத்தின் தலைமை பொறியாளர், யாதவ் சிங்கிடம், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அவரின் காரில் இருந்த, 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்த, 2 கிலோ தங்க நகைகளும், மற்றொரு காரிலிருந்த, 10 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று அவரது கூட்டாளியான மெக்கான் நிறுவனத்தின் இயக்குனர், அனில் பெஷ்வாரிடமிருந்தும், 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை இயக்குனர் கிருஷ்ணா சைனி தெரிவித்தார்.யாதவ் சிங், அனில் பெஷ்வார் ஆகிய இருவருமே, என்.சி.ஆர்., நகர்ப்புற இட விற்பனை ...

12 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

Posted:

கவுகாத்தி : 'வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், மென்டிபதர் - கவுகாத்தி இடையேயான பயணிகள் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடு சுதந்திரமடைந்து, 60 ஆண்டுகளுக்கு பின், மேகாலயா மாநிலத்திற்கு துவக்கப்படும் முதல் ரயில் சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில், கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வடகிழக்கு ...

எல்லா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: 7ம் தேதி டில்லி மாநாட்டில் ஓ.பி.எஸ்., பங்கேற்பாரா?

Posted:

புதுடில்லி: திட்ட கமிஷனுக்கு பதிலாக அமைய உள்ள புதிய அமைப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வரும், 7ம் தேதி, அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி கூட்டியுள்ளார். இதில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஐந்தாண்டு திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை, மத்திய திட்ட கமிஷன் செய்து வந்தது. 'இந்த திட்ட கமிஷனால், எந்த பயனும் இல்லை' எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி, அதை ரத்து செய்தார். இதற்கு பதிலாக, 'நீதி ஆயோக்' என்ற பெயரில், புதிதாக ...

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியலாமா?

Posted:

சென்னை: 'கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு, கல் எறியலாமா?' என, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பினாமி ஆட்சி, மைனாரிட்டி ஆட்சி, ஆலோசகர், துணை முதல்வர் போன்றவற்றுக்கு, கல்லூரி முதல்வர் போல, முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். உறுப்பினர்கள் உரிமையைப் பறிக்கும் வகையிலும், சட்டசபைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், தி.மு.க.,வினர் நடந்து கொண்டால், அதற்குரிய பலனை அவர்கள் பெறுவர் என, மிரட்டியிருக்கிறார். இந்த சலசலப்புக்கு அஞ்சாமல், எங்கள் கடமையை ...

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விஷயத்தில் இரட்டை வேடம்: ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மீது அதிருப்தி

Posted:

முதியோர் உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கானோர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விஷயத்தில், ஆளுங்கட்சியினரின் பரிந்துரையை ஏற்றதால், அதிகாரிகள், இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முறைகேடு: வறுமைக்கோட்டில் வசிக்கும் நலிந்த, ஏழை, எளிய மக்களுக்காக, இந்திராகாந்தி தேசிய முதியோர், மாற்றுத்திறனுடையோர், விதவைகள், ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர், ஆதரவற்ற விதவைகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு, கணவரால் கைவிடப்பட்ட பெண், உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண் ...

திருமண நிதி உதவி திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சரிவு: பெண்கள் ஓட்டு வங்கி அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா?

Posted:

தமிழகத்தில் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜெ., கைது நடவடிக்கைக்கு பின், இத்திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பெண்கள் ஓட்டு வங்கி, அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை கவரும் வகையில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி திட்ட மதிப்பில் உயர்வு செய்வதாக, அ.தி.மு.க., அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அறிவித்த படி திட்டங்களை செயல்படுத்தியது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் ...

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆதரவுக்கு நன்றி

Posted:

மதிப்பிற்குரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகளே! உங்களுடைய சங்கங்கள் தொடர்பான தகவல்கள் தினமலர் இணையதளத்தில் பகுதி வாரியாக( அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வளைகுடா,தென் கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான்) வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து எங்களுக்கு தகவல் தர வேண்டுகிறோம். கடந்த 24 மணி நேரத்தில், உலகின் பல பகுதிகளில் இருந்து எங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது சங்கங்கள் குறித்த விபரங்களை தெரிவித்த தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு எங்களது மனமார்ந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™