Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அடுத்த சர்ச்சையில் சிக்கியது அலிகார் பல்கலை

Posted:

அலிகார்: நூலகத்தில் மாணவியருக்கு அனுமதி மறுத்த அலிகார் பல்கலைக்கழகம், இப்போது, மற்றொரு சர்ச்சை யில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த பல்கலைக் கழகம் அமைய நிலம் கொடுத்த, ராஜா மகேந்திர பிரதாபின் பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டும் என, பா.ஜ., வினரும், அத்தகைய விழாவை, பல்கலைக் கழக வளாகத்தில் நடத்த முடியாது என, துணைவேந்தரும் கூறி வருவதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் அலிகார் நகரில் உள்ளது, அலிகார் பல்கலைக் கழகம். பரந்து விரிந்த இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள, பிரமாண்ட நூலகத்தில், ...

சகாயம் விசாரணை டிச., 3ம் தேதி துவக்கம்: அரசு நிதி ஒதுக்காததால் புது சிக்கல்

Posted:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரையில் கனிமவள கொள்ளை குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், டிச., 3ம் தேதி, விசாரணையை துவக்க உள்ளார்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிம வளம் முறைகேடு குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு, மதுரையில் மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது, சகாயத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் பெற, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முதலில் மதுரையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அதை ஏற்று, மதுரையில், டிச., 3ம் தேதி, விசாரணையை துவக்க, சகாயம் முடிவு செய்து ...

பத்திரிகை விளம்பரங்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு

Posted:

புதுடில்லி: மகாத்மா காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல் ஆகிய இருவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள் மட்டும் தான், மத்திய அரசின் சார்பில் அனுசரிக்கப்படும் என, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த, பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களில், பத்திரிகை விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.அனைத்து துறை செயலர்களுக்கும், கேபினட் செயலர் அஜித்குமார் சேத் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்களாவன: இப்போதுள்ள, 15 தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் விழாக்கள், குறைக்கப்பட வேண்டும். அதில், யார், யார் பெயர்கள், நாட்கள் ...

முடிவுக்கு வரும் ஜெ., - சசிகலா வருமான வரி வழக்கு: அபராதம் செலுத்த ஒப்புதல்

Posted:

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர், வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தவறியதாக, கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், அபராத தொகை செலுத்த ஒப்புக் கொண்டதால், இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரராக இருந்த, சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த, 1991-92 மற்றும் 92-93 ஆண்டுகளில், வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என, 1996ல், வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, கடந்த, 18 ஆண்டுகளாக, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து ...

சட்டசபைக்கு கருணாநிதி வருவாரா? அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபைக்கு வந்து செல்ல, தேவையான வசதிகளை, அரசு செய்து தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை விவாதங்களில் பங்கேற்கவில்லை. அடுத்த சட்டசபை கூட்டம், அடுத்த மாதம் 4ம் தேதி கூட உள்ளது. இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.இது தொடர்பாக, கருணாநிதிக்கும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே, கடந்த இரு தினங்களாக, அறிக்கை போர் நடந்து வருகிறது.'கருணாநிதிக்கு, சட்டசபை வந்து பேசக்கூடிய தைரியம் உள்ளது என்றால் வரட்டும்' ...

வகுப்பிற்குள் மாணவன் வெட்டி கொலை: கொலைக்களங்களாகி வரும் கல்விக்கூடங்கள்

Posted:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்டான்; மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், மாணவனின் உயிர் பிரிந்தது. தப்பியோடிய பள்ளியின் முன்னாள் மாணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.சகஜமான பேச்சு:பந்தல்குடி அயன்கரிசல்குளத்தை சேர்ந்த ரகு, 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 8:30 மணிக்கு பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் மாரீஸ்வரன், 19, அங்கு ...

வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி! பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறையும்

Posted:

புதுடில்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையலாம்.கடந்த ஆறு மாதங்களில், கச்சா எண்ணெய் விலை, 30 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து உள்ளது. ஜூன் மாதம், 110.42 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நடப்பு நவம்பரில், 78.27 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, சென்ற வியாழனன்று வியன்னாவில், பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (ஒபெக்), ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வந்தாலும், அதன் உற்பத்தியை, தற்போது குறைப்பதில்லை ...

அமைச்சர்களின் விருந்துகள்: பிரதமர் மோடி கட்டுப்பாடு

Posted:

புதுடில்லி: டில்லியில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகள், மோடி ஆட்சி காலத்தில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்தகைய விருந்து நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களுக்கு மோடி கட்டுப்பாடு விதித்துள்ளதால், முந்தைய கொண்டாட்டங்களை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது என, கூறப்படுகிறது.சிறப்பு விருந்து: தீபாவளி, ரம்ஜான், ஹோலி என, எந்த பண்டிகை காலமானாலும், தலைநகர் டில்லியில், விருந்தும், கொண்டாட்டங்களும் களைகட்டும். அந்தந்த பண்டிகைகளை கொண்டாடும் அமைச்சர்கள், தன் சக அமைச்சர்கள், அதிகாரிகள், ...

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொலை விவகாரத்தில் மர்மம்

Posted:

ஈராக்கில், கடந்த ஜூன் மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, இந்திய தொழிலாளர்கள், 39 பேர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதாக, உயிர் தப்பிய வங்கதேச கட்டடத் தொழிலாளர்கள் பேட்டி அளித்துள்ளனர். ஆனால், அந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்யவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.வங்கதேச நிருபரிடம், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாபி இஸ்லாம் மற்றும் ஹசன் கூறியதாவது: ஈராக்கின் பல நகரங்களை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜூன் மாதம் பிடிக்கத் துவங்கியதும், மொசூல் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, ...

ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் இருந்து திரும்பிய மும்பை இளைஞர் கைது

Posted:

மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கவாதிகளுடன் சேர்ந்து, அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சில் இறந்ததாகக் கருதப்பட்ட, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள கல்யாண் என்ற இடத்தைச் சேர்ந்த ஆரிப் மஜித் என்ற இளைஞர், அங்கிருந்து நேற்று திரும்பி வந்து விட்டார். பின்னர் அவர் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.சலீம் டாங்கி, அமன் டாண்டெல், பாகத் ஷேக் ஆகிய தன் நண்பர்கள் மூன்று பேருடன், மே மாதம், சிரியா சென்ற ஆரிப் மஜித், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சேர்ந்தார். இயந்திர துப்பாக்கி ஏந்தியபடி, அவர் ...

அதிகாரப்பூர்வமாக மின்வெட்டை அறிவிக்க மின் வாரியம் தயக்கம்: திடீர் மின்தடையால் வீடு, தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

Posted:

அதிகாரப்பூர்வமாக மின் வெட்டை அறிவிக்க தமிழக மின் வாரியம் தயக்கம் காட்டுகிறது. திடீர், திடீரென மின் தடை செய்யப்படுவதால், வீடு, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடியிருப்புகளுக்கு, முன் அறிவிப்பின்றி, பல மணி நேரம் மின் தடை செய்வதால், பொதுமக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும், அதிகம் உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, தொழிற்சாலைக்கு, 40 சதவீதம் மின் தடை அமல்படுத்தப்பட்டது. குடியிருப்புகளுக்கு, காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு; மற்ற ...

தமிழச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்

Posted:

மதிப்பிற்குரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகளே! உங்களுடைய சங்கங்கள் தொடர்பான தகவல்கள் திமனமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி சரியாக இருப்பதை என்பதைப் பார்த்து எங்களுக்கு தகவல் தர வேண்டுகிறோம். 1. உங்களுடைய தமிழ் சங்கத்தின் பெயர்2. ஊர்/ நாடு3. நிர்வாகிகள் பெயர்கள் ( படங்களுடன்)4. தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில்5. தபால் முகவரிஉலகளாவிய தமிழர்கள் தொடர்பான செய்திகளை தினமலர் இணைய தளத்தில் வெளியிட்டு, உலகத்தமிழர்களுக்கு இடையேயான பாலமாக செயல்பட தினமலர் இணையதளம் ...

காமராஜர் போல நேர்மையான வெளிப்படையான ஆட்சி: த.மா.கா., துவக்க விழாவில் வாசன் பேச்சு

Posted:

திருச்சி: காமராஜர், மூப்பனார் வழியில், தமிழக மக்களுக்காகவே துவங்கப்பட்ட கட்சியாக, தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும்,'' என, திருச்சியில், த.மா.கா.,வை துவக்கி வைத்து வாசன் பேசினார்.திருச்சி, ஜிகார்னர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தன் புதிய கட்சியின் பெயரை, 'தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)' என, அறிவித்து வாசன் பேசியதாவது:காமராஜர், மூப்பனார் காட்டிய வழியில் மீண்டும் மலர்ந்திருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ். இனி தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி எங்கே என யாரும் கேட்டால், மார் தட்டி சொல்லுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று. தேசத்தின் பாதுகாப்பு, மாநில ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™