Tamil News | Online Tamil News |
- அரசு பங்களாக்களை காலி செய்த 364 மாஜிக்கள்
- தமிழக அரசின் தயக்கம் யாருக்கு சகாயம்? கனிமவள கொள்ளை விசாரணை எல்லை சுருக்கம்
- பா.ஜ., ஆட்சியில் மத கலவரங்கள் குறைவு
- இந்தியா டூ சீனா விரைவு சாலை வளர்ச்சிக்கு வழி வகுக்குமா?
- சிங்கிள் 'தம்'முக்கு சிக்கல்: கடைகளில் சிகரெட் ஒன்றிரண்டாக விற்க முடியாது: பாக்கெட்டாக தான் விற்க வேண்டும் என அரசு திட்டம்
- மன்மோகனை விசாரிக்காதது ஏன்?சி.பி.ஐ.,க்கு அடுக்கடுக்கான கேள்வி
- களவு போன பின் பூட்டுவதா? கருணாநிதி
- சுகோய் ரக போர் விமானம் வேண்டும்: ரஷ்யாவிடம் இந்தியா கண்டிப்பு
- நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு எட்டாக்கனி: வழிகாட்டி மதிப்பு 20 சதவீதம் வரை அதிகரிப்பு
- நிருபர்களுடன் யாரும் அன்னம், தண்ணி கூடாது: அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு இப்படியும் கட்டளை
- லோக்சபாவில் சோனியாவுக்கு அடுத்து முலாயம்: பிஜு ஜனதா, திரிணமுல், அ.தி.மு.க., அச்சத்தால் திடீர் மாற்றம்
| அரசு பங்களாக்களை காலி செய்த 364 மாஜிக்கள் Posted: புதுடில்லி :முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்துவிட்டதாக, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.காலி செய்யப்பட்ட அரசு பங்களாக்களின் விவரத்தை தெரிவிக்கும்படி, முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அரசு பங்களாக்களின் காலி நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.கடந்த திங்கள் கிழமை, உச்ச ... |
| தமிழக அரசின் தயக்கம் யாருக்கு சகாயம்? கனிமவள கொள்ளை விசாரணை எல்லை சுருக்கம் Posted: சென்னை: 'மதுரையில் நடந்த, கிரானைட் குவாரி முறைகேட்டை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தற்போது விசாரிக்க வேண்டும்; விசாரணை வரம்பை விரிவுபடுத்துவதா, இல்லையா என்பது, பின்னர் பரிசீலிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம், தெளிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் கனிமவளக் கொள்ளை விசாரணையின் எல்லை சுருக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதுமான கனிமவள கொள்ளையின் அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்த பிறகும், விசாரணையில் தாமதம் ஏற்பட்டு, அதனால் சகாயம் அடைந்த சிலருக்கு, இத்தீர்ப்பு நிம்மதியைக் கொடுத்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'டிராபிக்' ராமசாமி, தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் ... |
| பா.ஜ., ஆட்சியில் மத கலவரங்கள் குறைவு Posted: புதுடில்லி:பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மதக் கலவரம் பெருகும் என, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியதற்கு மாறாக, அத்தகைய சம்பவங்கள் கடந்த பத்து மாதங்களில், ௨௦ சதவீதம் குறைந்து உள்ளது.உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள புள்ளி விவரத்தில், இது தெரியவந்துள்ளன.2014ல் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், 561 வகையான மத மோதல்கள் நடைபெற்றுள்ளன.2013ல் ஐ.மு., கூட்டணி ஆட்சியில், இதே காலகட்டத்தில், இது, 694 ஆக உயர்ந்து காணப்பட்டது.கடந்த 2013ம் ஆண்டு, நாடு முழுவதும் 823 மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. இது, முந்தைய 2012ம் ஆண்டில், 668 ஆக இருந்தது.இவ்வாண்டு, மத மோதல்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, ... |
| இந்தியா டூ சீனா விரைவு சாலை வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? Posted: கவுகாத்தி: இந்தியா, சீனா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் வழியே திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார விரைவு நெடுஞ்சாலை, அந்நாடுகளை சேர்ந்த பல மாநிலங்களின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இந்தியா நாடுகளின் பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு (பி.சி.ஐ.எம்.,), வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் பிரமாண்ட பொருளாதார விரைவுசாலை திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியா - சீனா ... |
| Posted: புதுடில்லி: 'கடைகளில் சிகரெட்டை, பாக்கெட்டாகத் தான் விற்க வேண்டும்; சில்லரை விற்பனையாக, ஒன்றிரண்டாக விற்கக் கூடாது' என்ற, மத்திய சுகாதாரத் துறையின், உள்கமிட்டி பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுஉள்ளது. இதையடுத்து, கடைகளில், லுாசாக சிகரெட் விற்பனைக்கு, விரைவில் தடை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2008, அக்., 2 முதல், பொது இடங்களில் புகை பிடிக்க, புகையிலை பொருட்களை பயன்படுத்த, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கலைய ரங்கங்கள், சினிமா தியேட் டர், மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், பப், ... |
| மன்மோகனை விசாரிக்காதது ஏன்?சி.பி.ஐ.,க்கு அடுக்கடுக்கான கேள்வி Posted: புதுடில்லி: 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தினீர்களா? இல்லையெனில், விசாரிக்காதது ஏன்?' என, சி.பி.ஐ.,யிடம், சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.இழப்பு: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.இதனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில், பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, உச்ச ... |
| களவு போன பின் பூட்டுவதா? கருணாநிதி Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:சட்டசபைத் தேர்தலுக்கு, ஒரு ஆண்டு உள்ள நிலையில், 2015ல் மே மாதம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, என்ன பயன் ஏற்பட போகிறது என, தெரியவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும், தமிழகத்தை குறிவைத்து, தமிழக முதலீட்டாளர்களை கவர்ந்து இழுக்க, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குதிரைகளவு போன பின், லாயத்தை பூட்டி வைத்ததை போல, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு குறிவைத்து, முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.சட்டசபையில் ஓ.பி.எஸ்., எங்கு ... |
| சுகோய் ரக போர் விமானம் வேண்டும்: ரஷ்யாவிடம் இந்தியா கண்டிப்பு Posted: புதுடில்லி : அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப திறன் கொண்ட, சுகோய் ரக போர் விமானங்களை விரைவாக சப்ளை செய்யும் திட்டத்துடன் வருமாறு, ரஷ்யாவிடம் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப திறன் கொண்ட சுகோய் ரக போர் விமானங்கள், ௬௬ ஆயிரம் கோடி ரூபாய் திட்டச் செலவில், தயாரிக்கப்பட உள்ளன.விமான வடிவமைப்பு, அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, மாதிரி விமானங்களை உருவாக்குவது, சோதனை ஓட்டம் உள்ளிட்டவற்றுக்காக, இரு நாடுகளும், தலா, 66 ஆயிரம் கோடி ரூபாய் ... |
| நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு எட்டாக்கனி: வழிகாட்டி மதிப்பு 20 சதவீதம் வரை அதிகரிப்பு Posted: சென்னை:தமிழகத்தில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, அதிகாரபூர்வ அறிவிப்பின்றி, 20 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது; இதனால், நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், சொந்த வீடு வாங்கும் திட்டம், எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், நிலத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நிலத்தின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.நிலம் விற்பனையை பதிவு செய்யும் போது, அரசுக்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக, விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை நிலங்களுக்கு, அரசு சார்பில், வழிகாட்டி மதிப்பு வெளியிடப்படுகிறது. ... |
| நிருபர்களுடன் யாரும் அன்னம், தண்ணி கூடாது: அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு இப்படியும் கட்டளை Posted: பார்லிமென்டில், அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில், 37, ராஜ்யசபாவில், 11 பேர் என, மொத்தம், 48 எம்.பி.,க்கள் உள்ளனர். லோக்சபா எம்.பி.,க்களில், மூன்று பேரை தவிர, மற்றவர்கள் எல்லாம் புதியவர்கள். பார்லிமென்ட் நடைமுறைகளை நன்கு அறியாதவர்கள்.இந்நிலையில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியதை அடுத்து, நேற்று மதியம், 1:30 மணிக்கு, அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது, அ.தி.மு.க.,வின் லோக்சபா தலைவர் வேணுகோபால், ராஜ்யசபா தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அமைதியாக அமர்ந்திருக்க, துணை ... |
| Posted: புதுடில்லி: லோக்சபாவில், காங்., தலைவர் சோனியாவுக்கு அடுத்த இருக்கையில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அமர்வார் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இருக்கை ஏற்பாட்டை, விருப்பம் இல்லாமல், முலாயம் ஏற்றுக் கொண்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.முன்வரிசை:தற்போதைய, 16வது லோக்சபாவில், முன்வரிசையில் யார் யார் அமர்வது என்பது தொடர்பாக, சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், மம்தாவின் திரிணமுல் காங்., மற்றும் அ.தி.மு.க.,வினருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு, அதுவும், காங்., தலைவர் சோனியாவுக்கு அருகே, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |