Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம்: கண்காணிப்புக்குழுத் தலைவர் பேட்டி

Posted:

கூடலூர்:''பேபி அணையை பலப்படுத்தியபின், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம்'' என கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் கூறினார்.பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு உள்ளதாகக் கூறியதன் அடிப்படையில், தமிழக, கேரள உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப்பின் குழுத் தலைவர் நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் 142 அடி நீர் தேக்கலாம். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு இல்லை. பாதுகாப்பாகத்தான் ...

பார்லியில் குரல் கொடுங்க: கருணாநிதி வேண்டுகோள்

Posted:

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:இலங்கையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் விடுதலையான மீனவர் குடும்பங்களில், பெருக்கெடுத்த மகிழ்ச்சி வெள்ளம் வடிவதற்குள், மீண்டும் இடி விழுந்ததைப் போல, கச்சத் தீவு அருகே, மீன் பிடித்து கொண்டிருந்த, 14 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.டீசல் தீர்ந்து போனதால், கச்சத் தீவு அருகே, நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, அதிலிருந்த மீனவர்கள் நான்கு பேரை, சிறை பிடித்துள்ளனர். மேலும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த, 10 மீனவர்களையும் சிறை பிடித்து ...

திறப்பு விழா இல்லாத ஓ.பி.எஸ்., ஆட்சி

Posted:

தமிழக முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று, 50 நாட்களை கடந்துள்ளார். எனினும், அடுத்தடுத்து வரும் பிரச்னைகள், அவரை திணறடித்து வருகின்றன.செப்டம்பர் முதல்...:புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம், கடந்த செப்டம்பர் 29ல் பொறுப்பேற்றார்.ஏற்கனவே, 2001 செப்டம்பர் 21ல், பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, 2002 மார்ச் வரை அப்பதவியில் இருந்தார்.இரண்டாவது முறையாக, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று, நேற்றுடன், 57 நாட்கள் நிறைவு பெற்றன.இம்முறையும், அவர் தன்னிச்சையாக செயல்படாமல், ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்.பதவியேற்ற, 50 ...

டிச., 4ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Posted:

சென்னை:'தமிழக சட்டசபை, அடுத்த மாதம், 4ம் தேதி கூடுகிறது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த ஆகஸ்ட், 12ம் தேதி முடிவடைந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தேர்தல் முடிந்த பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே உள்ள கால அளவு, ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.இதற்கிடையில், 'டிசம்பரில் சட்டசபையை கூட்ட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கோரிக்கை விடுத்தார்.இதன் காரணமாக, டிசம்பரில் கூட்டம் நடைபெற ...

பாதுகாப்பு தரும் போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து?ஆர்.டி.ஐ., மனுவில் பிரதமர் மோடி மனைவி தகவல்

Posted:

மெக்சனா:'எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்...? எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?' என, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதேநேரத்தில், 'முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்' என்றும், அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தன் சகோதரர் அசோக் மோடியுடன், மெக்சனா மாவட்டம், உஞ்ஜா ...

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் மத்திய அரசுக்கு ரூ.83 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., பகீர் தகவல்

Posted:

புதுடில்லி: செயல்படாத சிறப்பு பொருளாதார மண்டலங்களால், மத்திய அரசுக்கு ஆறுஆண்டுகளில், 83 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தெரிவித்து உள்ளது.இதுகுறித்த அறிக்கை விவரம்: நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கடந்த 2007 - 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 50 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதாவது, ...

சார்க்கில் மோடி - ஷெரீப் பேசுவார்களா?

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியும், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், 'சார்க்' உச்சி மாநாட்டில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என, தெரிகிறது. அதே சமயம், அவர்களுக்கிடையே, அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியக் கூறு உள்ளதாக கூறப்படுகிறது.நேபாளம் தலைநகர் காத்மண்டுவில், நாளை, பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு துவங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, இன்று நேபாளம் செல்கிறார். "அங்கு, அவர் தெற்காசிய நாடுகளின், பெரும்பாலான ...

காங்., உட்கட்சி பூசல் விரைவில் பெரிய அளவில் வெடிக்கும்: பலமுனை தாக்குதலை சந்திக்கும் துணை தலைவர் ராகுல்

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தலிலும், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,விடம் படுதோல்வியை சந்தித்த காங்கிர சில், தற்போது, உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரசில், பல காலம் வாய்மூடியிருந்த தலைவர்கள் எல்லாம், இப்போது, கட்சித் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கி உள்ளனர். இதனால், காங்., உட்கட்சி பூசல் வரும் நாட்களில், பெரிய அளவில் வெடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'காங்கிரசில் முக்கியமான விவகாரங்களை எல்லாம் கவனித்து வரும், கட்சியின் துணைத் தலைவரான ராகுலின் செயல்பாடுகள், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், ...

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்கள் வேண்டுமா? ஒரு மாதத்திற்குள் முடிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

Posted:

சென்னை: அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், திட்டங்கள், பாடப் புத்தகங்கள், இணையதளங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் வேண்டுமா என்ற கேள்வியுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜெ., படங்களை அகற்றக் கோரிய அந்த மனுவை, ஒரு மாதத்துக்குள், அரசு பைசல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா, தாக்கல் செய்த மனு:சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 ...

உதிரி அமைப்புகளை ஓரங்கட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.,: மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வராமல் தடுக்க தீவிரம்

Posted:

புதுடில்லி: பஜ்ரங்தளம், ராம் சேனா, இந்து ராஷ்டிர சேனா போன்ற அமைப்புகளை ஓரம் கட்ட, சங்கப் பரிவார் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., தீர்மானித்துள்ளது. இந்து மதத்திற்கு விரோதம் என்ற பெயரில், இந்த அமைப்புகள் அடிக்கும் கூத்து, மக்கள் மத்தியில் தவறான தோற்றத்தையும், எண்ணத்தையும் ஏற்படுத்துவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.'இந்து மதத்தை காப்பாற்றுகிறோம்' என்ற பெயரில், காதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, முத்தப் போராட்ட நிகழ்ச்சிகளில் ரகளை செய்வது, 'பப்'பிற்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பது உட்பட, பலவித போராட்டங்களை, பஜ்ரங்தளம், ராம்சேனா உட்பட சில இந்து ...

சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம்

Posted:

புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™