Tamil News | Online Tamil News |
- சட்டசபை கூட்ட தொடர் ஜனவரியில் துவக்கம்?
- பாலில் குளித்து பாயாசம் தந்த சாமியார்: அரியானா ராம்பாலின் 'அடேடே' லீலைகள்
- பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது
- எம்.பி.,க்களுக்கு சலுகை இல்லை: ஏர் - இந்தியா கைவிரிப்பு
- அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.5,000 கோடி மிச்சம்: டீசல் விலை வீழ்ச்சியால் நஷ்டம் குறைய வாய்ப்பு
- காவிரி, பாம்பாறு பிரச்னைகளை மறந்த விஜயகாந்த்: தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கொதிப்பு
- சென்னை மேயர் சைதை துரைசாமி ராஜினாமாவா? அ.தி.மு.க.,வில் பரபரப்பு
- பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது 'ஓபி' அடிக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு
- வரி ஏய்ப்பு செய்பவர்களை விடமாட்டோம்: நிதி மந்திரி ஜெட்லி உறுதி
- வெகுளிகள் தமிழ் மக்கள்: கருணாநிதி புது விளக்கம்
| சட்டசபை கூட்ட தொடர் ஜனவரியில் துவக்கம்? Posted: சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தை, அடுத்த ஆண்டு கூட்ட, அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக சட்டசபையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதனால், சட்டசபையின் முந்தைய கூட்டத்தொடர், ஆகஸ்ட், 12ம் தேதி முடிவடைந்தது. ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்த கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே உள்ள கால அளவு, ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும். அதன்படி, டிசம்பரில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. எனவே, 2015 ஜனவரியில், கவர்னர் உரையுடன், ... |
| பாலில் குளித்து பாயாசம் தந்த சாமியார்: அரியானா ராம்பாலின் 'அடேடே' லீலைகள் Posted: ஹிசார்: அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது, 'கம்பி எண்ணி' வரும் சாமியார் ராம்பாலுக்கு, அவரின் ஆசிரமத்தில் பால் குளியல் நடந்ததாகவும், அந்த பாலில் பக்தர்களுக்கு பாயாசம் தயாரித்து வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த மனோஜ் என்பவர் கூறியதாவது: சாமியார் ராம்பாலுக்கு, ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும், பக்தர்கள் சார்பில் பால் குளியல் நடத்தப்படும். குடம் குடமாக அவர் மீது பால் ஊற்றப்படும். பின், அந்த பால் முழுவதையும், பாத்திரத்தில் பிடித்து, பால் பாயாசம் தயாரிக்கப்படும். இந்த பால் பாயாசம், ... |
| பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது Posted: புதுடில்லி: அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:கடிதம்:யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் ... |
| எம்.பி.,க்களுக்கு சலுகை இல்லை: ஏர் - இந்தியா கைவிரிப்பு Posted: புதுடில்லி: 'சாதாரண வகுப்பு டிக்கெட் எடுத்து விட்டு, சொகுசு வகுப்பில் பயணிக்க அனுமதி கேட்கும் எம்.பி.,க்களின் கோரிக்கையை இனி ஏற்க முடியாது' என, ஏர் - இந்தியா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.ஏர் - இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரோகித் நந்தன், பார்லிமென்ட் செயலகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தற்போது, எம்.பி.,க்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க, பார்லிமென்ட் கமிட்டிகள் சார்பில், ஏர் - இந்தியா நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் அனைத்துமே, சாதாரண ... |
| அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.5,000 கோடி மிச்சம்: டீசல் விலை வீழ்ச்சியால் நஷ்டம் குறைய வாய்ப்பு Posted: டீசல் விலையில் லிட்டருக்கு, 6.06 ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு, 5,000 கோடி ரூபாய் வரை செலவு குறைவு ஏற்பட்டுள்ளது.கடந்த, 2011 வரை, பஸ் கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள், பஸ்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்தும் பணிகள் துவங்கின.ஜப்தி பஸ்கள்: கடந்த, 2012ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு, நீதிமன்றங்களில் ஜப்தி பஸ்களை மீட்கவும், புதிய பஸ்களை கொள்முதல் செய்யவும் நிதியுதவி வழங்கியது. அரசு நிதியுதவி அளித்து வந்த ... |
| காவிரி, பாம்பாறு பிரச்னைகளை மறந்த விஜயகாந்த்: தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கொதிப்பு Posted: காவிரி மற்றும் பாம்பாறு பிரச்னைகளை விஜய காந்த் கண்டு கொள்ளாமல், மலேசியாவில் முகாமிட்டுள்ளதால், தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கொதித்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.பாதிக்கப்படும்: காவிரி ஆற்றின் குறுக்கே, 48 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்கும் வகையில், இரண்டு அணைகளை கட்டுவதற்கு, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.இப்பணிகளை துவக்கு வதற்கு, ஒப்பந்தப் புள்ளியையும் கோரியுள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இத்திட்டம் நிறைவேறினால், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, 'டெல்டா' மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ... |
| சென்னை மேயர் சைதை துரைசாமி ராஜினாமாவா? அ.தி.மு.க.,வில் பரபரப்பு Posted: சென்னை மேயர் பதவியில் இருந்து சைதை துரைசாமியை, அ.தி.மு.க., தலைமை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாக, நேற்று, தமிழகம் முழுவதும் பரவிய வதந்தியை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகிழ்விக்கும் வகையில்...:சென்னை மேயராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த சைதை துரைசாமி உள்ளார். சென்னை மாநகராட்சியின், முதல் அ.தி.மு.க., மேயர் என்ற பெருமை பெற்றவர்.கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கி, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தோல்வியை தழுவினார்.அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், அவர் சென்னை மேயர் ... |
| Posted: புதுடில்லி: 'பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. அதனால், பா.ஜ., உட்பட, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் அனைவரும், சொந்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, ஒழுங்காக, பார்லிமென்ட் நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவர்களைப் போல, சரியாக காலை, 11:00 மணிக்கு வந்து விட்டு, சபை முடியும் போதுதான் வெளியே போக வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி, டிச., 23ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில், மொத்தம், 21 ... |
| வரி ஏய்ப்பு செய்பவர்களை விடமாட்டோம்: நிதி மந்திரி ஜெட்லி உறுதி Posted: புதுடில்லி: ''மாதச்சம்பளம் பெறுவோர் மற்றும் மத்திய தர வகுப்பினர் மீது, அதிக வரி விதித்து, அவர்களின் சுமையை அதிகரிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், வரி ஏய்ப்பு செய்வோரை விடமாட்டேன். அவர்களை, வரி செலுத்துவோர் வட்டத்திற்குள் கொண்டு வருவேன்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.டில்லியில், பி.டி.ஐ., செய்தி நிறுவன தலைமையகத்தில், செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர் கூறியதாவது:வரி செலுத்துவோர் கையில், அதிக பணம் புரள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தாராளமாக பணம் செலவழிப்பர். அதனால், மறைமுக வரி ... |
| வெகுளிகள் தமிழ் மக்கள்: கருணாநிதி புது விளக்கம் Posted: சென்னை: வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெகுளிகள் தமிழ் மக்கள்' என, கருணாநிதி புது விளக்கம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா மீது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த, சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து, அந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய ஆச்சாரியா, 'அனைத்தும் நினைவுகளிலிருந்து' என்ற நுாலை எழுதி உள்ளார்.அதில், வழக்கை எப்படி எல்லாம் இழுத்தடித்து, வாய்தா வாங்கினர் என்றும், அரசு வழக்கறிஞரான தனக்கு, எப்படி எல்லாம் நெருக்கடி கொடுத்தனர் என்றும் கூறியுள்ளார். நெருக்கடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |