Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தாஜ்மகால் மவுசு குறைகிறதா? பயணிகள் வருகை வீழ்ச்சி

Posted:

ஆக்ரா: உலக அற்புதங்களில் ஒன்றாக கருதப்படும், காதல் நினைவுச் சின்னங்களில் ஒன்றான, உ.பி.,யின் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மகாலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் பார்க்க விரும்பும் இந்த பிரமாண்ட கட்டடத்தின் பொலிவு, ஆக்ராவை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் மாசடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருவதாக, அந்த மாநில சட்ட சபையில், சுற்றுலா துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங் கூறியுள்ளார். கடந்த, 2012ல், இந்த இடத்தை, 4.5 ...

சாரதா சிட்பண்ட் முறைகேடு: திரிணமுல் எம்.பி., கைது

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற, சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், திரிணமுல் ராஜ்யசபா எம்.பி., ஸ்ரீரின்ஜோய் போஸ், நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.விசாரணை: முன்னதாக நேற்று, கோல்கட்டாவில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், ஆறு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எம்.பி., ஸ்ரீரின் ஜோய் போஸ், அதன் பிறகு கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சாரதா சிட்பண்ட் முறைகேட்டில், ஏற்கனவே, திரிணமுல் முன்னாள் எம்.பி., ...

பணக்காரர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து? பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி விரைவில்

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அடுத்த அதிரடியாக, பணக்காரர்களுக்கு சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ஆனாலும், இந்த பணக்காரர்களுக்கான வரைமுறை என்ன என்பது குறித்து, அதிகாரபூர்வமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.தற்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமே மானிய விலையில் தான் தரப்படுகிறது. பெரும் பணக்காரர்களும் இந்த சலுகையை அனுபவிக்கின்றனர்.இதை முறைப்படுத்தும் வகையில், பணக்காரர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு ...

மின் இழப்பை தவிர்க்க கருவிகளுக்கான ஒதுக்கீடு ரூ.25 ஆயிரம் கோடி: வினியோக கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை

Posted:

புதுடில்லி: நாட்டின் மின் இழப்பை சரிசெய்ய தேவையான கருவிகள் வாங்கவும், மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தவும், மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது.'உற்பத்தி துறையில், வளர்ச்சியை எட்ட வேண்டும்' என்பதை, இலக்காக கொண்டு செயல்படும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, உற்பத்திக்கு அவசியமான, மின்சாரத்தை தங்கு தடையின்றி, நாடு முழுவதும் வினியோகிக்க, அடிப்படையான விஷயத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. சமீபத்தில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மின் பகிர்மானத்தின் போது ஏற்படும் இழப்பு, மின் ...

குடியரசு விழா சிறப்பு விருந்தினர் இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா

Posted:

புதுடில்லி: 'டில்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தின், சிறப்பு விருந்தினராக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருப்பார்' என, மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், கடந்த ஆண்டு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்றார். இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்வார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பரில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற, ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை, வெள்ளை மாளிகைக்கு ...

சின்காவுக்கு நெருக்கடி முற்றுகிறது: விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கின் விசாரணையிலிருந்து சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு எதிராக விசாரணை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய சிலரை, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா, தன் வீட்டில் சந்தித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவரை நீக்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், சின்காவுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கின் விசாரணை யில் அவரின்நடவடிக்கைகள் ...

மீனவர்களின் விடுதலையை அரசியலாக்குவது வேதனை

Posted:

சென்னை: 'மீனவர்களின் விடுதலைக்கு, தாங்கள் தான் காரணம் என, இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழக மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.பொய் வழக்கு: அவரது அறிக்கை: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட், ஆகியோர், 2011 நவம்பர், 28ம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, போதைப்பொருள் கடத்தல் குற்றப்பிரிவின் கீழ், பொய் வழக்கு தொடரப்பட்டது. அவர்களை விடுவிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்கள் குடும்பத்திற்கு, ...

அ.தி.மு.க.,வுக்கு உளவு பார்த்த பா.ஜ.,வின் கறுப்பு ஆடு

Posted:

கட்சியில் இருந்தபடி, அ.தி.மு.க.,வுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்த தலைவர்கள் குறித்து கண்டறியப்பட்டு, மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருப்பதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், 'கிலி'யில் இருப்பதாக கூறப்படுகிறது.தினந்தோறும்: தமிழகத்தில், 2016ல் ஆட்சி அமைக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து, தமிழக பா.ஜ., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'தனித்தே போட்டியிடும் அளவுக்கு, கட்சியை தயார்படுத்துங்கள்' என்றும் சொல்லப்பட்டுஇருக்கிறது. இதை தொடர்ந்து தான், தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் தவறுகளை, தினந்தோறும் சுட்டிக்காட்டி ...

பருப்பு கொள்முதலில் டெண்டரை ரத்து செய்யாத மர்மம் என்ன?சத்து மாவில் கலப்படம் செய்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு

Posted:

தனியாரிடம், அதிக விலைக்கு, பருப்பு கொள்முதல் செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'டெண்டரை' ரத்து செய்யாமல் இருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கனடியன் லென்டில் பருப்பு - ஒரு லட்சம் டன்; உளுந்தம் பருப்பு - ஒரு லட்சம் டன்; துவரம் பருப்பு - 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய, 2013 மார்ச் மாதம், 'டெண்டர்' வெளியிட்டது. இதன் மதிப்பு, 1,500 கோடி ரூபாய்.இரண்டு தேர்வு:'அரசுடன், ஒரே தவணையில், 60 கோடி ரூபாய்க்கு மேல், வியாபாரம் செய்திருக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு, ...

ஒரு நாளைக்கு ரூ.80 லட்சம்; ஒரு மாதத்திற்கு ரூ.24 கோடி: முட்டை கொள்முதலில் பெரும் முறைகேடு? உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

Posted:

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்கப்படும், முட்டை கொள்முதலில், பெரும் முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. குழந்தை மையங்களில், 13.88 லட்சம் குழந்தைகள், 2 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்டோர், பள்ளி சத்துணவு மையங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டப் பயனாளிகள் உட்பட, 54.62 லட்சம் மாணவர்கள், சத்துணவு சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு, சத்துணவுடன், ...

எனக்கு தூக்கம் வருவதில்லை புலம்புகிறார் கருணாநிதி

Posted:

சென்னை:பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற கவலையால் எனக்கு நல்ல தூக்கம் இல்லை' என தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.அவரது அறிக்கை: எனக்கு 91 வயதாகிறது. இந்த வயதிலும் என்னால் தூங்க முடிவதில்லை. எனக்கு நல்ல தூக்கம் வருவதில்லை. அதற்கு காரணம் தி.மு.க.,வுக்கு வாளும் கேடயமாக இருந்து வரும் பிரசாரக் கூட்டங்களில் சில காலம் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற கவலையே.பிரசார பணியில் காடு, மேடு கழனியில், சைக்கிள், கட்ட வண்டியிலும் கரடு முரடான பாதைகளிலும் பயணம் செய்து பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பிரசாரக் கூட்டங்களில் பேசியுள்ளேன். கடந்த 2006 - 11ல், தி.மு.க., ...

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி

Posted:

மும்பை: இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அதனை உடைக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியது.எச்.எம்.எஸ். ஹர்குலிஸ் என்ற பெயரில் விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டன் கப்பற்படையான ராயல் நேவி படையில் சேர்க்கப்பட்டது . 1945-ல் செயல்பட துவங்கி இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு இந்தியாவிற்கு விற்கப்பட்டது. 1959-ம் ஆண்டு இந்திய கப்பற்படையில்சேர்க்கப்பட்டது. பின்னர் மறு கட்டுமானம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™