Tamil News | Online Tamil News |
- மும்பையில் முதலீடு செய்ய விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட் இந்தியர்கள்
- சிலை அமைத்த மாயாவதிக்கு சிக்கல்
- செய்தி துறைக்கு யார் முதல்வர்? இணையதளத்தில் குழப்பம்
- மின்சார ஆணையத்திற்கு உத்தரவு போடுகிறாரா அமைச்சர்? பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு
- மோடியை துரத்துபவர்கள் 80 லட்சம் பேர்
- அன்பழகன் ஆதங்கம்; கருணாநிதி மவுனம்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
- புகாருக்கு உள்ளானவரிடமே புகாரை அனுப்பும் அரசு: முதல்வரின் தனி பிரிவு 'லொள்ளு' தாங்க இது
- இன்று நள்ளிரவில் 142?
- அழுத்தம் கொடுத்தனரா பா.ஜ.,வினர்? ரகசிய விசாரணையில் உளவு துறை
- குஜராத் கலவரங்களுக்கு மோடி பொறுப்பல்ல: நானாவதி கமிஷன்
- இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு
| மும்பையில் முதலீடு செய்ய விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட் இந்தியர்கள் Posted: துபாய்: ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக, மும்பை நகரையே தங்கள் முதல் தேர்வாக கருதுகின்றனர்.உலக நாடுகளின், எந்த நகரில், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள் என, அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற ஏழு மன்னராட்சி நாடுகளில் வேலை பார்க்கும், 22 ஆயிரம் இந்தியர்களிடம், தனியார் நிறுவனம் ஒன்று, கருத்து கேட்டது. அதில், 35 சதவீதம் இந்தியர்கள், தங்களின் முதல் தேர்வாக மும்பை நகரை தேர்ந்தெடுத்தனர். அதற்கு அடுத்த இடத்தில், பெங்களூரு உள்ளது. 24.13 சதவீதம் பேர், மும்பையை ... |
| சிலை அமைத்த மாயாவதிக்கு சிக்கல் Posted: லக்னோ: உத்தர பிரதேசத்தில், 2007 - 12 வரை, மாயாவதி முதல்வராக இருந்த போது, லக்னோ மற்றும் நொய்டா நகரங்களில் அமைக்கப்பட்ட நினைவிடங்கள், பூங்காக்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கான பணிகளில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்து, மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநலன் வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு, கோர்ட் நேற்று உத்தரவிட்டது. மாயாவதி சார்ந்துள்ள, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமுக்கு, பிரமாண்ட நினைவிடம், பல இடங்களில் நினைவு மண்டபங்கள், கட்சியின் சின்னமான யானை உருவச் சிலைகள், ஏராளமான இடங்களில் ... |
| செய்தி துறைக்கு யார் முதல்வர்? இணையதளத்தில் குழப்பம் Posted: சென்னை: ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்து, ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணையதளத்தில், 'முதல்வர் ஜெயலலிதா' என, இடம்பெற்றுள்ளது.அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணி. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும், அவரது புகைப்படம், துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.முதல்வரின் அதிகாரபூர்வ புகைப்படம், இத்துறை மூலம் மற்ற துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும். புதிய முதல்வராக, கடந்த செப்டம்பரில், ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். புதிய முதல்வர் ... |
| மின்சார ஆணையத்திற்கு உத்தரவு போடுகிறாரா அமைச்சர்? பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு Posted: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, உத்தரவு போடும் வகையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதற்கு, பல்வேறு தரப்பினரிடமும், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தன்னாட்சி அமைப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நீதிமன்றம் போல் செயல்பட கூடிய தன்னாட்சி அமைப்பு. இந்த ஆணையம், ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், மின் உற்பத்தி, மின் வினியோகம், மின்சாரம் கொண்டு செல்லுதல் உள்ளிட்டவற்றிற்கு, கட்டணம் நிர்ணயித்தல்; மின் வாரியம், மின் உற்பத்தி நிறுவனங்கள் இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ... |
| மோடியை துரத்துபவர்கள் 80 லட்சம் பேர் Posted: புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின், ட்விட்டர் சமூக வலைதளத்தை, 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் போப் பிரான்சிஸ்சுக்கு அடுத்த இடத்தை மோடி பிடித்துள்ளார்.உலக அளவில்,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின், ட்விட்டர் சமூக வலைதளத்தை பின்தொடர்பவர்கள் தான் அதிகம். 4.3 கோடி பேர் அவரை பின்தொடர்கின்றனர்.அவருக்கு அடுத்த இடத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான, போப் பிரான்சிசை, 1.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.உலக அளவில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடியின், ட்விட்டர் ... |
| அன்பழகன் ஆதங்கம்; கருணாநிதி மவுனம்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: ''சீரமைப்பு குழு கொடுத்த அறிக்கையை, உடனடியாக நிறைவேற்றினால் தான், கட்சியை காப்பாற்ற முடியும்; அதனால், அதை விரைந்து செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் கூறியதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.சீரமைப்பு குழு:லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்ததும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிவதற்காக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, ஆறு பேர் அடங்கிய, சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, அறிக்கை கோரப்பட்டது.அந்தக் குழு, பல்வேறு நிலைகளிலும் ... |
| புகாருக்கு உள்ளானவரிடமே புகாரை அனுப்பும் அரசு: முதல்வரின் தனி பிரிவு 'லொள்ளு' தாங்க இது Posted: சென்னை : முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வரும் புகார் மனுக்கள், புகாருக்குள்ளானவரிடமே விசாரணைக்கு அனுப்பப்படுவது, பொதுமக்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு கோரிக்கை மனு கொடுக்க, மாநிலம் முழுவதுமிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.உள்ளூரில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, இங்கு மனு கொடுக்கின்றனர்.ஆனால், இங்கு கொடுக்கப்படும் மனுக்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடமே, ... |
| Posted: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று நள்ளிரவு, 142 அடியை எட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 141.55 அடி. நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்துள்ளது. எனவே, அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு, 828 கனஅடியாக குறைந்துள்ளது.நேற்று முன்தினம், நீர்வரத்து அதிகம் இருந்ததால், நேற்றே அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும் என, பலரும் கருதினர். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதிக்கு சென்றனர்.ஆனால், நீர்மட்டம், 142 அடியை எட்டாததால், அங்குள்ள மணி மண்டபத்தில், பென்னிகுவிக் சிலைக்கு மாலை ... |
| அழுத்தம் கொடுத்தனரா பா.ஜ.,வினர்? ரகசிய விசாரணையில் உளவு துறை Posted: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து செயல்பட்ட பி.வி.ஆச்சாரியா, சமீபத்தில் சுயசரிதை எழுதி வெளியிட்டார். அதில், தன்னை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகச் சொல்லி, கர்நாடக பா.ஜ., அரசு அழுத்தம் கொடுத்தது என்றும், ஜெயலலிதா தரப்பில், தன்னை பலமுறை, நேரிலும், போனிலும் அச்சுறுத்தினர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.தீவிர விசாரணை:இந்த விவகாரம், கர்நாடக பா.ஜ.,வில், தற்போது கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா வரையில் கொண்டு ... |
| குஜராத் கலவரங்களுக்கு மோடி பொறுப்பல்ல: நானாவதி கமிஷன் Posted: ஆமதாபாத்: குஜராத் மத கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஜி.டி.நானாவதி அளித்துள்ள அறிக்கையில், 'மத கலவரங்களுக்கும், மோடி அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில், 2002ம் ஆண்டில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல நாட்கள் பயங்கர கலவரம் நடைபெற்றது. அங்குள்ள கோத்ரா ரயில் நிலையத்தில், கரசேவகர்கள் ரயில் பெட்டியில், உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் மூண்டது.அது குறித்து விசாரிக்க, நீதிபதி, ஜி.டி.நானாவதி தலைமையில், இரு நீதிபதிகள் கமிட்டியை மாநில அரசு, 2002ல் ... |
| Posted: கொழும்பு: போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த, ஐந்து மீனவர்களை, இலங்கை அதிபர் ராஜபக்ேஷ விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, மீனவர்கள் ஐவரும் சிறையிலிருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டு, இந்திய ஹைகமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த, மீனவ இளைஞர்கள், எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோருடன், இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களும், கடந்த 2011ல், இலங்கை கடலில் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |