Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமரின் 'முன் மாதிரி கிராம' திட்டம்: 5 பா.ஜ., - எம்.பி.,க்கள் ஆர்வமின்மை

Posted:

பெங்களூரு: கிராம வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள, 'முன் மாதிரி கிராமம்' திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்களில், ஐந்து பேர் ஆர்வம் காட்டவில்லை.சில பிரச்னைகள்: கடந்த, ஆக., 15ம் தேதி, டில்லி செங்கோட்டையில், தேசிய கொடியேற்றி உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தொகுதி எல்லையில், குறைந்த பட்சம், ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று, நாட்டின் அனைத்து எம்.பி.,க்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். பிரதமரின் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், சில பிரச்னைகள் இருந்தாலும், கர்நாடகாவின், 17 பா.ஜ., - ...

சிவில் சர்வீஸ் தேர்வர்களின் உச்ச வயது வரம்பு குறைப்பு?

Posted:

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தற்போதைய நடைமுறையின் படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள், 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - ...

பா.ஜ.,வுக்கு எதிராக அணி சேர்க்க முயன்ற மம்தாவுக்கு பளார்

Posted:

கோல்கட்டா: ''மத்தியில், பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்க வேண்டும். அந்த அணியில் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற வேண்டும்; அதில் நானும் பங்கேற்பேன்,'' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி கூறினார். அதை, இடதுசாரிகள் நிராகரித்து, காரசாரமாக பதிலளித்தனர்.காங்கிரசில், 20 ஆண்டு களுக்கும் மேலாக பல பொறுப்புகளை வகித்த மம்தா பானர்ஜி, கடந்த, 1998ல், திரிணமுல் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கி, நடத்தி வருகிறார். பொதுவாக, அவரின் அரசியல் செயல்பாடுகள், காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. அக்கட்சிக்கு, 543 உறுப்பினர்களை கொண்ட ...

கர்நாடகாவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு: காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு

Posted:

புதுடில்லி: காவிரி நதியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் இரண்டு புதிய அணைகள் கட்ட, கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அணை கட்ட கர்நாடகாவுக்கு தடை விதிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.'கர்நாடகா அரசின், மேகதாது கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, 48 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், காவிரி நதியின் குறுக்கே, புதிதாக இரண்டு அணைகள் கட்டப்படும்' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சமீபத்தில் அறிவித்தார்.'மேகதாது கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, ...

பாதுகாப்பு, வர்த்தகத்தில் இணைந்து செயல்பட சம்மதம்: ஆஸ்திரேலிய பார்லிமென்டில் உரை நிகழ்த்தினார் மோடி

Posted:

கேன்பெரா: பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்களில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானித்து உள்ளன. அத்துடன், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, தாராள வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை, விரைவாக முடிக்கவும் திட்டமிடப்பட்டது.ஆஸ்திரேலியா சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, அந்நாட்டு பிரதமர் டோனி அபாட் உடன், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். பின், சமூக பாதுகாப்பு, தண்டனை பெற்ற கைதிகளை இடம் மாற்றம் செய்வது, போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பது, சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத்தை ...

மனு வாபஸ்: விடுவிக்கப்படுவரா மீனவர்கள்?

Posted:

புதுடில்லி:இலங்கை நீதிமன்றத்தால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள், ஐந்து பேரை மீட்க, மத்திய அரசின் சார்பில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, வாபஸ் பெறப்பட்டது.போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இலங் கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு, அந்நாட்டு கோர்ட், தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, இலங் கை அதிபர் ராஜபக்ேஷ வை தொடர்பு கொண்டு, ...

பவார் திடீர் ஆப்பு: மகாராஷ்டிராவிற்கு விரைவில் தேர்தல் வரலாம்: பா.ஜ.,வுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள முகாந்திரம்?

Posted:

மும்பை: ''மகாராஷ்டிரா சட்டசபைக்கு, திடீர் தேர்தல் வரலாம்; தேர்தலை சந்திக்க கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், நேற்று கூறினார்.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தின், ராய்காட் என்ற இடத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும், பா.ஜ., அரசின் சில சக்திகளின் போக்கால் தான், இரண்டு தொகுதிகளில், எம்.ஐ.எம்., என்ற கட்சிக்கு வெற்றி கிட்டியது. மாநிலத்தில் ஸ்திரமான ஆட்சி அமைவது, தேசியவாத காங்கிரசின் பொறுப்பு அல்ல. எந்த நேரமும் தேர்தல் ...

கருணாநிதி அறிவுரை தேவையில்லை: முதல்வர் பதிலடி

Posted:

சென்னை:முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு, கடமை முடிந்து விட்டதாக இருந்து விட்டேன் என்ற பொய்யை, தி.மு.க., தலைவர் கருணாநிதி அவிழ்த்து விட்டிருக்கிறார். 'முல்லைப் பெரியாறு அணையில், முதல் கட்ட மாக, 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவு, ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, பிரமருக்கு தற்போது எந்த கடிதமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்ற ...

கார்டனுக்கு தகவல் சொல்லும் அமைச்சர்கள்: தடுமாறும் முதல்வர் அலுவலகம்

Posted:

பெரும்பான்மையான அமைச்சர்கள், தங்களது வெளியூர் நிகழ்ச்சிகள் குறித்து, முதல்வருக்கோ அல்லது முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை என்பதால், அமைச்சர்களின் கோட்டை வருகை பற்றிய குழப்பம், அதிகாரி கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.பயணங்கள்: முதல்வராக ஜெயலலிதா இருந்த வரையில், அமைச்சர்களின் நிகழ்ச்சிகள், பயணங்கள் பற்றிய அனைத்து விவரங்களும், அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடும். அவரது அனுமதிக்கு பிறகே, அமைச்சர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்வதை கூட, வழக்கமாக வைத்திருந்தனர்.கோட்டைக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால், அவர் ...

பிரதமரின் 'ஜன் தன்' திட்டம் கின்னஸ் சாதனையாகுமா?

Posted:

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின், முக்கிய திட்டங்களில் ஒன்றான, ஜன் தன் திட்டம், கின்னஸ் சாதனை படைக்க உள்ளது.7.25 கோடி வங்கி கணக்கு:மத்திய அரசு வழங்கும் மானியம் மற்றும் பிற பண பலன்களை, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த உதவியாகவும், ஒரு லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு, 5,000 ரூபாய் கடன் வசதி போன்ற அம்சங்களை உள்ளடக்கிய, ஜன் தன் திட்டத்தை, ஆக., 28ல், பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.அதன்படி, நாடு முழுவதும் புதிதாக வங்கிக் கணக்குகள் துவக்கப்படுகின்றன. இதுவரை, 7.25 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. ...

தெலுங்கானாவில் 400 விவசாயிகள் தற்கொலை: எம்.எல்.ஏ.,க்களுக்கோ 100 சதவீதம் சம்பள உயர்வு

Posted:

ஐதராபாத் : தெலுங்கானாவில், வறட்சி யால், விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், எம்.எல்.ஏ.,க்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வை அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவிலிருந்து பிரிந்து புதிதாக உருவாகியுள்ள தெலுங்கானா மாநிலத்தில், விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி, கடன் தொல்லை, ஏழ்மை போன்ற பல காரணங்களால், 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், விலைவாசி உயர்வை காரணம் காட்டி, முதல்வர் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ்., கட்சி ...

பெரியாறு அணையில் பாதுகாப்பு பணி:தமிழக அரசு நடவடிக்கை என்ன?

Posted:

தேனி : பெரியாறு அணையில், 142 அடி நீரை நிலைநிறுத்த, அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கோருவதுடன், பொதுப்பணித் துறையில் போதிய பணியாளர்களை, தமிழக அரசு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு அணை நீரால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பலன் அடைகின்றனர்; இந்த அணை, குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 'அணையில் 142 அடி நீர் தேக்கலாம்' என, மே 7ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும், 142 அடி தேக்குவதை கண்காணிக்கவும், எல்.ஏ.வி.நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.அணையில் எந்த பணிகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™