Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ.,வை கடுப்படிக்கிறது சிவசேனா

Posted:

மும்பை: 'மகாராஷ்டிரா மக்களின் நம்பிக்கையை, பா.ஜ., சீர்குலைத்து விட்டது' என, சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில், எதிர்க்கட்சியாகச் செயல்படத் தீர்மானித்துள்ளது, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி. அதேநேரத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்றதில் கடுப்பாகி உள்ளது.இந்நிலையில், சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் கூறப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிராவில், 15 ஆண்டு காலமாக நடந்த, காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி அரசு, சிவசேனா மீது சேற்றை வாரி வீசியது. ...

எச்.எம்.டி., வாட்ச் நிறுவனத்துக்கு கெட்ட நேரம்: நஷ்டத்தில் தள்ளாடுவதால் இழுத்து மூடப்படுகிறது

Posted:

புதுடில்லி: பிரசித்தி பெற்ற பொதுத் துறை நிறுவனமான, எச்.எம்.டி., வாட்ச் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதை அடுத்து, விரைவில் அந்த நிறுவனத்துக்கு மூடு விழா நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.'நாட்டில் உள்ள பல பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. எனவே, அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சமீபத்தில் அறிவித்தார். தற்போது, 79 பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களால், ஆண்டுக்கு, 28,260 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், இவற்றில் அதிக நஷ்டத்தில் ...

தெலுங்கானா மந்திரிகளுக்கு புல்லட் புரூப் கார்கள்: நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் எதிரொலி

Posted:

ஐதராபாத்: நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால், தெலுங்கானா மாநில கேபினட் அமைச்சர்கள் அனைவருக்கும், புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக பல கார்கள் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், ஜூன் மாதம் பதவியேற்றார். அதன்பின், நிருபர்களிடம் பேசிய அவர், 'தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை' என்றார். ஆனால் தற்போது, தெலுங்கானா மாநில கேபினட் அமைச்சர்கள் ...

இந்திய காரில் பயணிக்க மாட்டேன்: பாக்., பிரதமர் நவாஸ் பிடிவாதம்

Posted:

காத்மாண்டு: 'நேபாளத்தில் நடக்கவுள்ள, 'சார்க்' நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய அரசால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காரில் பயணிக்க மாட்டார்' என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், நவ., 26, 27ம் தேதிகளில், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடக்கிறது. இதில், கூட்டமைப்பில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை, பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கஉள்ளனர்.இந்த தலைவர்கள் பயணிப்பதற்காக, மத்திய அரசு சார்பில், குண்டு துளைக்காத கார்கள் நேபாளத்துக்கு அனுப்பி ...

இந்திய தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம்: வளைகுடா நாடுகளிடம் அரசு வலியுறுத்தல்

Posted:

புதுடில்லி : 'இந்திய தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, வளைகுடா நாடுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், பல கோடி ரூபாய் பணம் இந்தியாவுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.50 லட்சம் பேர்: குவைத், சவுதி அரேபியா, கத்தார் உட்பட, எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில், இந்தியர்கள், 50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில், 20 லட்சம் பேர், அபாயகரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேடில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், 'வளைகுடா ...

சட்டசபை இணையதளத்தில் மாற்றம்: ஜெ.,க்கு பதில் ஓ.பி.எஸ்., பெயர்

Posted:

சென்னை : புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று, ஒன்றரை மாதங்களுக்கு பின், சட்டசபை செயலக இணையதளத்தில், அனைத்து பகுதிகளிலும், ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால், ஜெ., முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பதவியையும் இழந்தார். அதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியும், சட்டசபை இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதா என்றே இருந்தது. பலதரப்பில் இருந்தும், நீண்ட வலியுறுத்தல்களுக்குப் பின், கடந்த வாரம், ஸ்ரீரங்கம் ...

ஏமாற்றத்தில் முடிந்த காங்., மாநாடு

Posted:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, டில்லியில் காங்., நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு, பா.ஜ., தவிர அனைத்துக் கட்சிகளுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், பல கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், 'இந்தியா போன்ற நாட்டிற்கு, மதச்சார்பின்மை கட்டாய தேவை' என, மாநாட்டில் பேசிய சோனியா தெரிவித்தார்.கானா அதிபர்: டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த மாநாட்டில், வெளிநாட்டு தலைவர் தரப்பில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், கானா அதிபர் ஜான் குபுர், நேபாள முன்னாள் பிரதமர் மாதவ், பூடான் ...

கிராம தத்தெடுப்புக்கு எம்.பி.,க்கள் ஆர்வம்: பச்சைக்கொடி காட்டுமா அ.தி.மு.க., தலைமை?

Posted:

பிரதமர் மோடியின், கிராம தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் எம்.பி.,க்கள், கிராமங்களை தத்தெடுக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், இதில் ஆர்வமாக இருக்கின்றனர். தலைமையிடம் இருந்து உத்தரவு வராததால், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.முதல் நபராக...: எம்.பி.,க்கள் கிராம முன் மாதிரி திட்டத்தை, சமீபத்தில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். வாரணாசி தொகுதியில் உள்ள ஜெய்ப்பூர் கிராமத்தை, இந்தியாவிலேயே முதல் நபராக தேர்ந்தெடுத்து, அந்த கிராமத்தை எல்லா நிலைகளிலும் முன்னேற்ற, ஏற்பாடுகளை ...

அடி மேல் அடி வாங்கியதால் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கலைப்பு: நிதிஷ்குமாரின் ஐ.ஜ.த., உடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டம்

Posted:

பாட்னா: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, பீகார் மாநில அரசியல்வாதிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது. அதனால், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் விரைவில் இணைய உள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கலைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற பிரமாண்டமான வெற்றி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. கணிசமான தொகுதிகள்:அதனால், ...

தமிழக அதிகாரிகளை தள்ளி விட்ட அவலம்: பெரியாறு அணையில் கேரளா அத்துமீறல்: அணை பாதுகாப்பு கேள்விக்குறி:

Posted:

கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையில் நேற்று பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் தலைமையில் சென்ற கேரள பத்திரிகையாளர்கள், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை கீழே தள்ளிவிட்டு பேபி அணைக்குள் அத்துமீறி நுழைந்து போட்டோ எடுத்தனர். அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார் இதை கண்டுகொள்ளாததால் அணைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்குப்பின் நீர்மட்டம் நேற்று 141 அடியைக் கடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அணையில் தண்ணீர் ...

இந்தியா எதற்காக வளர்ச்சியில் பின்தங்க வேண்டும்? சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிப்பூர்வ பேச்சு

Posted:

சிட்னி : ''இந்தியாவில், 35 வயதுக்குட்பட்ட இளைஞர் களின், 200 கோடி கரங்கள் உழைக்க தயாராக இருக்கும்போது, நாம் ஏன் வளர்ச்சி யில் பின்தங்கியிருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.ஜி - 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநாடு முடிவடைந்ததும், நேற்று, சிட்னி நகருக்கு வந்தார். அங்கு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சமர்ப்பிக்கிறேன்:அங்குள்ள அல் போன்ஸ் மைதானத்தில் திரண்டிருந்த, 20 ...

கலைஞர் 'டிவி'க்கு ரூ.200 கோடி வந்த வழக்கில் விசாரணை ஆரம்பம்: ராஜா, கனிமொழி நாளை கண்டிப்பாக ஆஜராக கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில், கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் கைமாறிய வழக்கின் விசாரணை, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆரம்பமாகியது. 'தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், நாளை கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும்' என, சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை, டில்லி ...

ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம் வேட்பாளர்கள்: தீவிரமாக களமிறங்குகிறது பா.ஜ.,

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., 40 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வரும் 25ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறஉள்ளது. மொத்தமுள்ள, 87 தொகுதிகளில், 70 மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 32 முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. காஷ்மீர் பகுதியில், 25 முஸ்லிம்களும், ஜம்மு பகுதியில், ஆறு முஸ்லிம்களும், லடாக்கில் ஒருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தவிர, காஷ்மீர் பண்டிட்டுகள், புத்த மதத்தை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™