Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காவிரி நீர் பயன்பாட்டில் முந்தும் கர்நாடகா: அரசியல் 'ஈகோ'வால் பின்தங்கிய தமிழகம்

Posted:

மேட்டூர்: காவிரி நடுவர் நீதிமன்றத்தில், காவிரி நீர் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், இறுதி தீர்ப்பு வழங்கிய பின்பும், காவிரி நீர் ஆதாரத்தை பயன்படுத்துவதில், கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில், அரசியல்வாதிகள், 'ஈகோ' பிரச்னையால், தமிழகம் பின்தங்கியுள்ளது, விவசாயிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.தமிழகம்-கர்நாடகம் இடையே, ஒரு நுாற்றாண்டாக காவிரி நீர் பங்கீடு பிரச்னை நீடிக்கிறது. கடந்த, 1924ல், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகம்-கர்நாடகா இடையில் போடப்பட்ட ஒப்பந்தம், 1974ல் காலாவதியான பின்பே, காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. 1980ம் ...

ரஜினியின் அரசியல் அல்வா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted:

''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என, லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவரது ரசிகர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கொந்தளிப்பு: நடிகர் ரஜினி நடித்து வெளியாக இருக்கும், 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் அமீர் ஆகியோர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினர்.விழாவில், ரஜினி பேசுகையில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், ...

கடிதம் எழுதி விட்டால் போதுமா? பன்னீருக்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை :தி.மு.க., தலைவர் கருணாநிதியின், நேற்றைய அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்வது பற்றி, முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்யவில்லை.ஆனால், கேரள சட்டசபை கூட்டத்தொடரில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்க, சட்ட மசோதா கொண்டு வர, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.இதுபோல், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பிரச்னையிலும், தமிழக அரசு கவனம் செலுத்தி, அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் சட்டசபை கூட்டத்தை கூட்ட தயாராக இல்லை. ...

முல்லை பெரியாறு விவகாரத்தில் தலையிடாதீங்க! உம்மன் சாண்டிக்கு தமிழக முதல்வர் பதில் கடிதம்

Posted:

சென்னை : 'முல்லைப் பெரியாறு நீர்மட்டம் தொடர்பான விவகாரத்தில், கேரள அரசு தலையிட வேண்டாம்; 142 அடியாக உயர்த்த ஒத்துழைப்பு தாருங்கள்' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்துவதை தடுக்க, பல்வேறு முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், தமிழக முதல்வருக்கு, கேரள அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது.அனுமதி:இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தமிழக முதல்வர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ...

கூட்டணிக்கு புதிய கட்சிகளை பிடிக்க காங்கிரஸ் மேலிடம் அதிரடி திட்டம்

Posted:

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐ.மு., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, இன்று துவங்கும் நேரு தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளுக்கு, காங்., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.சர்வதேச மாநாடு:நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின், 125வது பிறந்த நாளையொட்டி, காங்., கட்சி சார்பில், இன்றும், நாளையும், டில்லியில் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.இந்த மாநாட்டில், நேருவின் சிந்தனைகள், கொள்கைகள் குறித்த கருத்தரங்கங்களும் ...

குடிக்கு அடிமையாகாதீங்க; குடும்பத்துக்காக உழையுங்க!

Posted:

நெல்லுார் : ஆந்திராவில் உள்ள கிராமத்தை தத்தெடுத்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அவர்களிடையே, ''குடிப் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்; குடும்பத்துக்காக உழையுங்கள்,'' என, அறிவுறுத்தினார்.கிராம தத்தெடுப்பு: 'ஒவ்வொரு எம்.பி., யும், ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, எம்.பி.,க்களில் பெரும்பாலானோர், கிராமங்களை தத்தெடுக்க துவங்கியுள்ளனர். இதன் ஒரு ...

நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு

Posted:

புதுடில்லி : நுகர்வோருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், இப்போதுள்ள நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கவும், திருப்தி இல்லாத வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரவும், புதிய வழிமுறைகள் விரைவில் எளிதாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல துறைகளிலும், புதிய திட்டங்களையும், அதிரடி மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில், நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ...

கறுப்பு பண விவகாரத்தில் மோடி யோசனை ஏற்றது ஜி - 20

Posted:

பிரிஸ்பேன்:'கறுப்பு பணத்தை மீட்பதற்கான நாடுகளின் முயற்சிக்கு, ஜி - 20 உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; அந்த முயற்சிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.விசாரணை குழு:'வெளிப்படையான நடைமுறை பின்பற்றப் படும்; தகவல்கள் பரிமாற்றம் தானாக மேற்கொள்ள ஏதுவான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு கூடவுள்ள, அடுத்த, ஜி - 20 மாநாட்டில் மேற்கொள்ளப்படும்' என, ஜி - 20 மாநாட்டின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில வெளிநாடு களில் இந்தியர்கள் சிலர் பதுக்கி ...

பார்லிமென்டில் கேள்வி கேட்க தமிழக எம்.பி.,க்கள் தயக்கம்: நடைமுறைகள் பற்றி தெரியாமல் விழிக்கும் பரிதாபம்

Posted:

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசின் பல துறைகளின் திட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் கேள்விகள் எழுப்புவதற்கான தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து, கேள்விகள் எழுப்ப, தமிழக எம்.பி.,க்கள் தயக்கம் காட்டுவதாகவும், நடைமுறைகள் பற்றி தெரியாததால், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.பார்லிமென்ட் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது கேள்வி நேரம். ஒவ்வொரு நாளும், காலை, 11:00 மணிக்கு துவங்கி, 12:00 மணி வரை கேள்வி நேரம் நடக்கும். அப்போது, லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும், ...

கறுப்பு பண விசாரணை: பல நாடுகளுக்கு விரிவடைகிறது

Posted:

புதுடில்லி: இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில வெளிநாடுகளில் முடக்கியுள்ள இந்தியர்கள் குறித்து, விசாரணை நடத்தி வரும் இந்திய அமைப்புகள், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மேற்கொண்ட விசாரணை, இப்போது, சிங்கப்பூர், துபாய், கரீபியன் கடல் குட்டி நாடுகள் என, விரிவடைந்து வருகிறது.முரண்டு பிடித்தது:தங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கிய, இந்தியர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க மாட்டோம் என, முதலில் முரண்டு பிடித்த சுவிட்சர்லாந்து நாடு, சற்றே இறங்கி வந்து, சில வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்தது.இதுகுறித்து, சுவிட்சர்லாந்து உட்பட ...

எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலும் நியமனங்கள் செல்லும்: அட்டர்னி ஜெனரல்

Posted:

புதுடில்லி:'எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் யாரும் இல்லாததால், லோக்பால் அமைப்பின் நிர்வாகிகள், தலைமை ஊழல் கண்காணிப்பு கமிஷனர் போன்ற நியமனங்கள் செல்லாததாகி விடாது' என, அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.10 சதவீதம்:லோக்சபாவின் மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், குறைந்தபட்சம், 10 சதவீத எம்.பி.,க்களை வைத்திருக்கும் கட்சிக்குத் தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும். ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் உட்பட எந்த எதிர்க்கட்சிக்கும் அந்த இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, காங்கிரசுக்கு ...

இலங்கை:பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் ராணுவ தளபதி பங்கேற்பு

Posted:

கொழும்பு:கொழும்பில் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த ராணுவ தளபதிகளின் மாநாடு-2014,வரும் நவம்பர் 27 முதல் தொடங்கி 29 ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கவுள்ளது. கொழும்பில் நடக்கவுள்ள இந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், இலங்கை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாநாடு கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஓட்டலில் நடக்கிறது.இம்மாநாட்டில் சார்க் மற்றும் ஆசிய கூட்டமைப்புகளை சேர்ந்த 18 நாடுகளின் பாதுகாப்புதுறை தளபதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இது போல சீனா மற்றம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™