Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாட்களுக்கு மழை...நீடிப்பு: தொடர்ந்து கொட்டுவதால் பயிர்கள், சாலைகள் சேதம்
- ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்கும் அதிகாரிகளுக்கு 'ஜாக்பாட்': 2 சதவீத தொகை வெகுமதி என அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவிப்பு
- பிரதமருக்கு குவியும் கடிதங்கள்: பணிச்சுமையால் திணறும் தபால் ஊழியர்கள்
- ஆஸ்திரேலியாவில் ஓடுது மோடி எக்ஸ்பிரஸ்
- நேரு விழாவை மோடி எதிர்ப்பு நாளாக கொண்டாடிய காங்.,
- உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் விவகாரம்: இந்தியா - அமெரிக்கா சண்டை தீர்ந்தது
- தமிழக முதலீடுகளுக்கு குஜராத் அரசு குறி!
- மாவட்ட செயலர் பதவிக்கு மோதல்: கருணாநிதி, ஸ்டாலின் திணறல்
- த.மா.கா., பெயருக்கு சிக்கல்: புதுப்பெயரை தேர்ந்தெடுக்க இன்று ஆலோசனை
- வீடில்லாதவர்களுக்கு தங்குமிடம்மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
| Posted: 'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழை தொடர்ந்து கொட்டி வருவதால், சம்பா சாகுபடி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் சேதம் ஏற்பட்டுஉள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கில் நகர்ந்து, இலங்கை, மன்னர் வளைகுடா மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் ... |
| Posted: புதுடில்லி: ரயில்வே திட்டங் கள் நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்படாமல் தடுக்கவும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவற்றை முடிப்பதற்கான வழிமுறைகளை, அதிகாரிகள் உருவாக்கவும், புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, வெகுமதி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.கடந்த, 9ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் போது, சிவசேனாவிலிருந்து, பா.ஜ.,வுக்கு மாறிய, சுரேஷ் பிரபுவுக்கு, ரயில்வே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, ரயில்வே வாரியம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு ... |
| பிரதமருக்கு குவியும் கடிதங்கள்: பணிச்சுமையால் திணறும் தபால் ஊழியர்கள் Posted: புதுடில்லி: 'வாட்ஸ்அப், ஹைக் மற்றும் பேஸ்புக்' போன்றவை பிரபலமாகி உள்ள இந்தக் காலத்தில், கடிதம் எழுதுவது, மலையேறி விட்டது. ஆனாலும், பிரதமர் அலுவலகத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.சமீபத்தில், வானொலி மூலம், நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'உங்களின் எண்ணங்களையும், யோசனைகளையும், இ-மெயில் அல்லது இணையதளம் மூலமாக எனக்கு தெரிவியுங்கள். அப்படி முடியவில்லை எனில், கடிதமாக எழுதி அனுப்புங்கள். அந்தக் கடிதங்கள் நிச்சயம் என்னிடம் வந்து சேரும். அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்' என்றார். மோடி அப்படி ... |
| ஆஸ்திரேலியாவில் ஓடுது மோடி எக்ஸ்பிரஸ் Posted: மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வசதியாக, மோடி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் நாட்டில் நிறைவு செய்து, நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார். மெல்போர்ன் நகரம் சென்றடைந்த அவர், பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெற உள்ள, ஜி - 20 எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பின், 17ம் தேதி, சிட்னி நகரில், பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்கிறார். ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இந்தியர்கள் ... |
| நேரு விழாவை மோடி எதிர்ப்பு நாளாக கொண்டாடிய காங்., Posted: புதுடில்லி: 'நாட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள சிலர், சமுதாயத்தில் விஷத்தை பரப்பி வருகின்றனர்' என, நேரு பிறந்த நாள் விழாவில், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் மறைமுகமாக சாடியது.நாட்டின் முதல் பிரதமர், பண்டித ஜவகர்லால் நேருவின், 125வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின. ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ள இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காங்., துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது: நாட்டை இப்போது கோபக்கார மனிதர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அன்பும், சகோதரத்துவமும் அழிக்கப்படுகிறது. சாலைகளும், ... |
| உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் விவகாரம்: இந்தியா - அமெரிக்கா சண்டை தீர்ந்தது Posted: புதுடில்லி: உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்னையில், இந்தியா - அமெரிக்கா இடையே நிலவிய, முட்டுக்கட்டை தீர்ந்தது. இதனால், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, தாராள வர்த்தக ஒப்பந்தம், விரைவில் அமலுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.உலக வர்த்தக அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் ஒன்று, கடந்த ஜூலையில் ஏற்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தத்தில், 'மொத்த விவசாய உற்பத்தியில், 10 சதவீதத்திற்கு மேல், எந்த நாடும் உணவு தானியங்களை, இருப்பு வைக்கக் கூடாது, விவசாய மானியமும், 10 சதவீதத்திற்கு மேல் தாண்டக் கூடாது; ... |
| தமிழக முதலீடுகளுக்கு குஜராத் அரசு குறி! Posted: சென்னை: ''தொழில் முதலீடுகளை, இந்தியா முழுமைக்கும் திரட்டித் தருகிறோம். நாங்கள் நடத்தும், 'துடிப்பு மிக்க குஜராத்' மாநாட்டுக்கு வாருங்கள்,'' என, அம்மாநில நிதி அமைச்சர், சவுரப் பாய் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.குஜராத் தலைநகரான காந்தி நகரில், 'துடிப்பு மிக்க குஜராத் - 2015' என்ற தொழில் முதலீட்டை ஈர்க்கும் மாநாட்டை, ஜனவரி 11 முதல் 13ம் தேதி வரை, அம்மாநில அரசு நடக்கிறது. இதில், பன்னாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.ஈர்க்கும் மாநாடு: சர்வதேச அளவில் நடக்கும் இம்மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை அழைக்க, குஜராத் மாநில நிதி, ... |
| மாவட்ட செயலர் பதவிக்கு மோதல்: கருணாநிதி, ஸ்டாலின் திணறல் Posted: உட்கட்சி தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில், கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.சென்னையில் உள்ள, 4 மாவட்ட செயலர்கள் பதவியையும், தேர்தல் நடத்தாமலேயே, தன் ஆதரவாளர்கள் கைப்பற்ற வேண்டும் என, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். அவரது திட்டத்தை முறியடிக்கும் வகையில், மாவட்ட செயலர் பதவிகளுக்கு, முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என, கருணாநிதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.போட்டா போட்டி: இதனால், இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும், தீவிரமான மல்லுக்கட்டு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., உட்கட்சி தேர்தலை, ... |
| த.மா.கா., பெயருக்கு சிக்கல்: புதுப்பெயரை தேர்ந்தெடுக்க இன்று ஆலோசனை Posted: தமிழக காங்கிரசிலிருந்து வெளியேறி, முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் துவக்க உள்ள புதுக் கட்சிக்கு, பெயர் தேர்வு செய்வதற்காக, முன்னணி தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.தமிழக காங்கிரசிலிருந்து வெளியேறி, புதுக் கட்சியை துவங்க போவதாக, கடந்த 3ம் தேதி, வாசன் அறிவித்தார். புதுக் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை, வரும் 28ம் தேதி, திருச்சியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும், வாசன் சொன்னார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே வாசன் தலைமையில் இயங்கிய, தமிழ் மாநில காங்கிரஸ் பெயரையே, மீண்டும் தேர்ந்தெடுக்க வாசன் ... |
| வீடில்லாதவர்களுக்கு தங்குமிடம்மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி:நகர்ப்புறங்களில் வீடில்லாதவர்களுக்கு, தங்குமிடம் அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, இன்னும், பத்து நாட்களில், அனைத்து மாநில தலைமைச் செயலர்களை அழைத்து விவாதித்து, உரிய முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர், இ.ஆர்.குமார் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், நேற்று பிறப்பித்த உத்தர வில் கூறியதாவது:நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு தங்குமிடங்கள் அளிப்பதை விட, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |