Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மழையால் 14 மரங்கள் சாய்ந்தன

Posted: 13 Nov 2014 01:51 PM PST

சென்னையில் பெய்த தொடர் மழையால் வியாழக்கிழமை மட்டும் 14 மரங்கள் வேரோடு விழுந்தன.

689 பெண்களுக்கு ரூ. 1.28 கோடி வைப்புத்தொகை

Posted: 13 Nov 2014 01:51 PM PST

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 689 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

அபாகஸ் போட்டி: 17 மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

Posted: 13 Nov 2014 01:51 PM PST

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் அரியலூர் மாணவர்கள் சாதனை நிகழ்த்தினர்.

ஐசன் நிறுவன டேப்லெட் அறிமுகம்

Posted: 13 Nov 2014 01:50 PM PST

சென்னையில் ஐசன் (ஐநமச) நிறுவனம் தயாரித்த டேப்லெட் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் வரும் இளங்கோவனுக்கு வரவேற்பு அளிக்க முடிவு

Posted: 13 Nov 2014 01:50 PM PST

அரியலூருக்கு நவ. 24-ம் தேதி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அரியலூர் நகர காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 13 Nov 2014 01:50 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 கணக்கு மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மின் ஆளுமை மேலாளர் பணிக்கான தேர்வு நவ. 29க்கு ஒத்திவைப்பு

Posted: 13 Nov 2014 01:50 PM PST

அரியலூர் மாவட்ட மின் ஆளுமைச் சங்க மேலாளர் பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 13 Nov 2014 01:49 PM PST

அரியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பூலாம்பாடி எரிவாயு நிறுவனத்தில் கணினி, செல்போன் திருட்டு

Posted: 13 Nov 2014 01:49 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 13 Nov 2014 01:49 PM PST

அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

காவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 13 Nov 2014 01:48 PM PST

அரியலூர் மாவட்டக் காவல் துறை சார்பில் பாதுகாப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி சாவு

Posted: 13 Nov 2014 01:48 PM PST

அரியலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

பயணி தவறவிட்ட பையுடன் நகை, பணம்: மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

Posted: 13 Nov 2014 01:47 PM PST

சென்னை பெருங்களத்தூரில் பயணி தவறவிட்ட நகை, பணம் இருந்த பையை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.

தொடர் மழை: சென்னை ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

Posted: 13 Nov 2014 01:46 PM PST

கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் வழிக் கல்வியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்: கருணாநிதி

Posted: 13 Nov 2014 01:44 PM PST

பஞ்சாபி மொழியில் மருத்துவப் படிப்பை பயில, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதுபோல, அதிமுக அரசும் தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

கோயம்பேட்டில் சாலை மறியல்

Posted: 13 Nov 2014 01:42 PM PST

சென்னை கோயம்பேட்டில் சாக்கடையுடன் கலந்த மழை நீரை அகற்றக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

Posted: 13 Nov 2014 01:29 PM PST

சேலம்

Posted: 13 Nov 2014 01:29 PM PST

பெங்களூரு

Posted: 13 Nov 2014 01:29 PM PST

ஆம்பூர்

Posted: 13 Nov 2014 01:28 PM PST

மதுரை

Posted: 13 Nov 2014 01:28 PM PST

திருநெல்வேலி

Posted: 13 Nov 2014 01:28 PM PST

ஈரோடு

Posted: 13 Nov 2014 01:28 PM PST

கோவை

Posted: 13 Nov 2014 01:27 PM PST

நவம்பர் 15 மின் தடை

Posted: 13 Nov 2014 01:27 PM PST

தொகுப்பு துணைமின் நிலையப் பராமரிப்புப் பணி காரணமாக தஞ்சாவூர் நகரில் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, மாதாக்கோட்டை, வல்லம் உள்ளிட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை (நவ.15) மின் விநியோகம் இருக்காது.

காவிரியில் புதிய அணை கட்டினால் போராட முடிவு

Posted: 13 Nov 2014 01:27 PM PST

காவிரியில் புதிய அணைகள் கட்ட கர்நாடகம் அடிக்கல் நாட்டினால் அங்கே சென்று மறிப்பது எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.

மதுக்கூரில் 93.6 மி.மீ. மழை

Posted: 13 Nov 2014 01:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 93.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன்

சிட்டா அடங்கல் கிடைப்பதில்லை எனப் புகார்

Posted: 13 Nov 2014 01:20 PM PST

சிட்டா அடங்கல் கிடைக்காததால் பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கும், மரக்கன்று வாங்கவும் சிரமமாக இருப்பதாக தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் இருவர் தாற்காலிக பணி நீக்கம்

Posted: 13 Nov 2014 01:20 PM PST

பணிமனை வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டதில் குளறுபடி இருப்பதாக புதுக்கோட்டை, அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் இருவர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம்

புதுகையில் முதியோருக்கு விரைவில் மனஆற்று சிகிச்சை மையம்

Posted: 13 Nov 2014 01:20 PM PST

புதுக்கோட்டையில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தவர்களை பராமரிக்கும் வகையில், 5 படுக்கைகள் கொண்ட மனஆற்று சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர் செ. மனோகரன்.

சுற்றுச்சூழல், சுகாதார விழிப்புணர்வு முகாம்

Posted: 13 Nov 2014 01:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

10 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம்

Posted: 13 Nov 2014 01:10 PM PST

தெலங்கானா சட்டப் பேரவையிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 10 பேர் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சேஷாசல வனத்தில் அத்துமீறி நுழைபவர்களைச் சுட உத்தரவு

Posted: 13 Nov 2014 01:10 PM PST

ஆந்திர மாநில சேஷாசல வனத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கண்டவுடன் சுட்டுத்தள்ள, மாநில வனத்துறை உத்தரவுப் பிறப்பித்துள்ளதாக திருப்பதி வனத்துறை அதிகாரி சீனிவாசலு தெரிவித்தார்.

அரசு வீட்டைக் காலி செய்ய சிரஞ்சீவிக்கு நோட்டீஸ்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 13 Nov 2014 01:09 PM PST

மத்தியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், தில்லியில் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளைக் காலி செய்யும்படி தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி உள்பட ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு: சில்லறை விலையில் மாற்றமில்லை

Posted: 13 Nov 2014 01:08 PM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.50 வீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எனினும், இதன் காரணமாக சில்லறை விற்பனையில் அவற்றின் விலை உயர்த்தப்படமாட்டாது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு

Posted: 13 Nov 2014 01:07 PM PST

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று வழங்குவதற்காக 15 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெட்டன்விடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 13 Nov 2014 01:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடைமடை விவசாயத்தைக் காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்க வேண்டும்

Posted: 13 Nov 2014 01:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக்கால்வாய் பாயும் கடைமடை பகுதி விவசாயத்தைக் காப்பாற்ற, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அறந்தாங்கி ஒன்றியக் கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காவிரியின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு

Posted: 13 Nov 2014 01:07 PM PST

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை கண்டித்து கும்பகோணத்தில் குறைதீர் நாள் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுகை மாவட்டத்தில் 1990 டன் யூரியா விநியோகம்

Posted: 13 Nov 2014 01:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா உரத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைக்கும்விதமாக கூட்டுறவு மற்றும் தனியார்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 13 Nov 2014 01:07 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்பு விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்

Posted: 13 Nov 2014 01:07 PM PST

உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கல்வித் துறை ஒழுங்குமுறை அமைப்புகள் மறு ஆய்வு: ஸ்மிருதி இரானி

Posted: 13 Nov 2014 01:06 PM PST

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக மனோகர் பாரிக்கர் தேர்வு

Posted: 13 Nov 2014 01:05 PM PST

உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து, பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சமான மனோகர் பாரிக்கர்,

"கண்ணி வெடிகளை அகற்றும் போர்க் கப்பல்கள் தேவை'

Posted: 13 Nov 2014 01:04 PM PST

இந்தியக் கடற்படைக்கு கண்ணி வெடிகளை அகற்றும் போர்க் கப்பல்கள் உடனடியாக தேவைப்படுகின்றன என கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே. தோவான் கூறினார்.

ஒடிஸாவில் சுரங்க வருவாய் சரிவு: இரும்புத் தாது உற்பத்தியை அதிகரிக்க முடிவு

Posted: 13 Nov 2014 01:03 PM PST

ஒடிஸாவில் சுரங்கத் துறை மூலம் அரசுக்குக் கிடைத்து வந்த வருவாய் குறைந்து வருவதால், இரும்புத் தாது உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

குழந்தைகள் கடத்தல் வழக்கு: ம.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 13 Nov 2014 01:02 PM PST

பிகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் காணாமல் போன குழந்தைகளை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடிக்கவும், இது தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, மத்தியப் பிரதேச மாநில தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மத்திய அமைச்சரின் மதிப்பெண் சான்றிதழ் போலி என்று சர்ச்சை

Posted: 13 Nov 2014 01:02 PM PST

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கட்டேரியாவின் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் அவர் இதை மறுத்துள்ளார்.

கர்நாடகத்துக்கு திருமாவளவன் கண்டனம்

Posted: 13 Nov 2014 12:53 PM PST

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட முயற்சிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.

பராமரிப்புப் பணிகள்: சென்னை-திருச்சி ரயில் சேவையில் இன்று மாற்றம்

Posted: 13 Nov 2014 12:53 PM PST

செங்கல்பட்டு - விழுப்புரம் வழித் தடத்தில் வெள்ளிக்கிழமை தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், சென்னை எழும்பூர் - திருச்சி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை அருகே இரட்டைக் கொலை

Posted: 13 Nov 2014 12:52 PM PST

திருநெல்வேலியை அடுத்த மூன்றடைப்பு அருகே புதன்கிழமை இரவு கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், காவலாளி ஒருவரும் அதே இரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது.

நல்லகண்ணுவுடன் இளங்கோவன் சந்திப்பு

Posted: 13 Nov 2014 12:52 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூர் வரை நீட்டிப்பு

Posted: 13 Nov 2014 12:51 PM PST

சென்னை வண்ணாரப்பேட்டை வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிப்பதற்கான அனுமதி புதன்கிழமை (நவம்பர் 12) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ரஷியாவில் உதவித் தொகையுடன் உயர் கல்வி பெற வாய்ப்பு

Posted: 13 Nov 2014 12:51 PM PST

ரஷியாவில் உதவித் தொகையுடன் உயர் கல்வி பெறுவதற்கான "ஒலிம்பியாட்' தேர்வுத் திட்டத்தை சென்னைக்கான ரஷியத் துணைத் தூதரகம் வியாழக்கிழமை அறிவித்தது.

பேருந்து - ஆட்டோ மோதல்: 5 பேர் காயம்

Posted: 13 Nov 2014 12:31 PM PST

திருவாரூர் அருகே புதன்கிழமை ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

பயிர்க் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

Posted: 13 Nov 2014 12:31 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடிப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவ. 15) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

Posted: 13 Nov 2014 12:31 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டியில் 139 மில்லி மீட்டர் மழை

Posted: 13 Nov 2014 12:30 PM PST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 139 மில்லி மீட்டர் மழை பெய்தது.

பெட்ரோல் மீதான கலால் வரி உயர்வுக்கு கண்டனம்

Posted: 13 Nov 2014 12:29 PM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

Posted: 13 Nov 2014 12:25 PM PST

பிளஸ் 2 தனித் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் காலை 11 மணிக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன.

அமைச்சர் கோகுல இந்திரா மருத்துவமனையில் அனுமதி

Posted: 13 Nov 2014 12:23 PM PST

தமிழக கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கால் டாக்ஸி கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி வழக்கு: பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Posted: 13 Nov 2014 12:23 PM PST

தமிழகத்தில் இயங்கும் கால் டாக்ஸியின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

ஆதார் அட்டை பதிவுக்கு 469 நிரந்தர முகாம்கள்

Posted: 13 Nov 2014 12:21 PM PST

தமிழகத்தில் ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் நிரந்தர முகாம்கள் அனைத்தையும் சனிக்கிழமைக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நாளில் அன்று 14.11.1991; ஐ.நா. சபை கமிட்டியில் பாகிஸ்தான் தீர்மானம் ஏற்பு; இந்தியா எதிர்த்து வாக்களித்தது

Posted: 13 Nov 2014 12:18 PM PST

இந்த நாளில் அன்று 14.11.1991; ஐ.நா. சபை கமிட்டியில் பாகிஸ்தான் தீர்மானம் ஏற்பு; இந்தியா எதிர்த்து வாக்களித்தது

நாடு சிறிது; உலகம் பெரிது

Posted: 13 Nov 2014 12:15 PM PST

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்திருப்பது, இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

சர்க்கரை நோயற்ற சமுதாயம் படைப்போம்!

Posted: 13 Nov 2014 12:14 PM PST

பன்னாட்டு சர்க்கரை நோய்க் குழுமம் (International Diabetes Federation) கடந்த ஐந்து ஆண்டுகளாக "சர்க்கரை நோய் கல்வி மற்றும் தடுப்பு' (Diabetes Education and Prevention) என்ற தலைப்பை உலக சர்க்கரை நோய் தினத்திற்கு கொடுத்தது.

கருத்தடையிலும் மனத்தடை!

Posted: 13 Nov 2014 12:09 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில், ஒரு கிராமத்தில் அரசு நடத்திய கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்திருக்கும் சம்பவம் வேதனைக்குரியது.

"ஜிஹாதி' பயங்கரவாதி தென் மாநிலங்களில் பதுங்கல்?

Posted: 13 Nov 2014 12:03 PM PST

மேற்கு வங்க மாநிலத்தின் புர்த்வான் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி சஹனூர் அலோம்,

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்

Posted: 13 Nov 2014 12:01 PM PST

அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பேராசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் நிரப்பியாக வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் தயாநிதி மாறன் திடீர் முகாம்

Posted: 13 Nov 2014 12:00 PM PST

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் தில்லியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் முகாமிட்டுள்ளார்.

2ஜி: அமலாக்கத் துறை அரசுத் தரப்பு சாட்சியாக செல்வி: குற்றம்சாட்டப்பட்டவர்களாக தயாளு அம்மாள், கனிமொழி

Posted: 13 Nov 2014 11:59 AM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னணி கட்சியாக இருப்போம்: ஜி.கே. வாசன் நம்பிக்கை

Posted: 13 Nov 2014 11:55 AM PST

தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சியாக தங்களின் புதிய கட்சி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறை: அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த ஆலோசனை

Posted: 13 Nov 2014 11:55 AM PST

தனியார் கல்லூரிகளில் உள்ளதுபோல, பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறையை அரசுக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார்.

காவிரியில் அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம்

Posted: 13 Nov 2014 11:50 AM PST

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார் அதன் தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன்.

ஊராட்சித் தலைவரை தாக்கிய இருவர் கைது

Posted: 13 Nov 2014 11:46 AM PST

 சீர்காழி அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரசுப் பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்: 8 பேர் காயம்

Posted: 13 Nov 2014 11:46 AM PST

நாகப்பட்டினம், கீழ்வேளூரில் அரசுப் பேருந்தும், லாரியும் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் 8 பேர் காயமடைந்தனர்.

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு

Posted: 13 Nov 2014 11:46 AM PST

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே மின் இணைப்பை சரி செய்யச் சென்ற மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

நாகையில் தொடர் மழை: கடல் சீற்றம்

Posted: 13 Nov 2014 11:45 AM PST

நாகையில் புதன்கிழமை மாலையில் பெய்யத் தொடங்கிய மழை வியாழக்கிழமை காலை வரை நீடித்தது.

21 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

Posted: 13 Nov 2014 11:45 AM PST

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 சமையல் எரிவாயு உருளைகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

Posted: 13 Nov 2014 11:45 AM PST

தஞ்சாவூர்

Posted: 13 Nov 2014 11:44 AM PST

விபத்தில் ஒருவர் சாவு: 2 பேர் காயம்

Posted: 13 Nov 2014 11:43 AM PST

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறைச் சேர்ந்தவர்கள் செந்தில் மகன் அருண் (19), கணேஷ்குமார் (25), பழனிக்குமார் (50). இவர்கள், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு வருவதற்காக, தேவதானப்பட்டியில் இருந்து போடிக்கு மினி வேனில் சென்றுள்ளனர்.

கணவனை தாக்கிய மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

Posted: 13 Nov 2014 11:43 AM PST

சின்னமனூர் அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 4 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

மீருசமுத்திரம் கண்மாயில் மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

Posted: 13 Nov 2014 11:43 AM PST

தேனி மீருசமுத்திரம் கண்மாயில் விவசாய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளதால், கண்மாயின் முழு கொள்ளளவில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வெளிநடப்பு

Posted: 13 Nov 2014 11:39 AM PST

மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தின் சட்டம் -ஒழுங்குப் பிரச்னை குறித்துப் பேச, அவைத் தலைவர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து, அந்த மாநில சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் ஷமிக் பட்டாச்சார்யா வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தார்.

ஜம்மு - காஷ்மீர் பேரவைத் தேர்தல்: 3% மட்டுமே பெண் வேட்பாளர்கள்

Posted: 13 Nov 2014 11:38 AM PST

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில், 3 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். இதில் அதிகபட்சமாக, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் 5 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

தில்லி தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

Posted: 13 Nov 2014 11:38 AM PST

தில்லி சட்டப்பேரவைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஆம் ஆத்மி கட்சி. 22 பெயர்களைக் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.

வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புங்கள்: நக்ஸல்களுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted: 13 Nov 2014 11:37 AM PST

வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகத்தின் வழியாக சமூக முன்னேற்றத்துக்கு பாடுபடுங்கள் என்று நக்ஸல்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கு: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Nov 2014 11:36 AM PST

குஜராத் கலவரத்தில் ஒன்றான "குல்பர்க் சொசைட்டி படுகொலை' வழக்கு தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மகாராஷ்டிரத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநரிடம் சிவசேனை வலியுறுத்தல்

Posted: 13 Nov 2014 11:35 AM PST

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அரசை சிறுபான்மை அரசு என அறிவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் சி. வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து சிவசேனைத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இடப்பிரச்னையால் மோதல்: 5 பேர் மீது வழக்கு

Posted: 13 Nov 2014 11:34 AM PST

உத்தமபாளையம் அடுத்த கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி வீரம்மாள் (எ) வீரமணி (29). இதே பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(45). இவர்களுக்குள் இடப் பிரச்சனை

மாவட்ட அளவிலான கேரம் போட்டி:பள்ளி மாணவர்கள் 300 பேர் பங்கேற்பு

Posted: 13 Nov 2014 11:34 AM PST

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், 35 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு போட்டிகள்

Posted: 13 Nov 2014 11:33 AM PST

கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்ற 24 பேர் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் ராஜ்குமார் சிலைக்குத் தீ: பெங்களூருவில் பதற்றம்

Posted: 13 Nov 2014 11:33 AM PST

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சேதம் செய்ததையடுத்து, பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 15 மின் தடை

Posted: 13 Nov 2014 11:33 AM PST

விருதுநகர் மின் கோட்டத்தைச் சேர்ந்த விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (நவ. 15) மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நுண்கலைப் பள்ளி தொடக்க விழா

Posted: 13 Nov 2014 11:33 AM PST

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பள்ளி தொடக்க விழா வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசுகையில், இசை தான் மனதை அமைதிப்படுத்தி, ஆழமாக சிந்திக்கத்

ஸ்ரீவிலி.யில் அடுத்தடுத்து வழிப்பறி

Posted: 13 Nov 2014 11:32 AM PST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை மாலை 2 இடங்களில் பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதே போல் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 14 பவுன்நகைகளை திருடிச்

தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்ற சிங்கம்புணரி மாணவி

Posted: 13 Nov 2014 11:32 AM PST

தமிழகக் கபடி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, தேசியப் போட்டியில் விளையாடிய பல்கலை மாணவி பாராட்டப்பட்டார்.

வஞ்சினிப்பட்டியில் பிடிபட்ட மலைப்பாம்பு

Posted: 13 Nov 2014 11:32 AM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மலைப்பாம்பு பிடிபட்டது.

புதிய கார் திருட்டு

Posted: 13 Nov 2014 11:31 AM PST

பழனி அருகே பதிவெண் பெறாத நிலையில், புதிய கார் திருடப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™