Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...சதி? பயங்கரவாதிகள் ஒத்திகையா என விசாரணை

Posted:

மதுரை:மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து நேற்று, 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் உள்ளனரா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மதுரை நகரில், பல இடங்களில் வெடிகுண்டுகளை வைக்க, பயங்கரவாதிகள் ஒத்திகை பார்த்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே மதுரை நகரிலும், புறநகரிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வெடிக்கவும் செய்தன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சிலர் இருந்தது ...

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவது...கட்டாயம்: குஜராத் மாநிலத்தில் அதிரடி சட்டம்

Posted:

காந்தி நகர்:நாட்டிலேயே முதல் முறையாக, உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டம், குஜராத் மாநிலத்தில் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான சட்டத்துக்கு கவர்னர் ஒ.பி.கோலி ஒப்புதல் அளித்து உள்ளார்.குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாக்காளர்கள், உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு, அம்மாநில கவர்னர் ஒ.பி.கோலி ஒப்புதல் அளித்துள்ளார்.விரைவில் நடைமுறை:இதையடுத்து, 'உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பது கட்டாயம்' என்ற அறிவிக்கையை, குஜராத் மாநில அரசு ...

மன்மோகன் அரசில் - 27, மோடி ஆட்சியில் - 8 பேர்:மத்திய அமைச்சரவையில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைந்தது

Posted:

புதுடில்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தென்மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், தற்போதைய மோடி அரசில், தமிழகம் உட்பட, ஐந்து தென் மாவட்டங்களிலும் சேர்த்து, எட்டுப் பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதிலும், கேரளாவைச் சேர்ந்த யாரும், மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 2வது ஆட்சிக் காலத்தில் (2009-2014), பிரிக்கப்படாத ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில், 12 ...

கனிமொழிக்கு திடீர் பிடிவாரன்ட்

Posted:

புதுடில்லி:பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின், இறுதிகட்ட விசாரணை, அடுத்த மாதம், 19க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, நேற்று கோர்ட்டில் ஆஜராகாததால், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், அவருக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பித்து, ஒரு மணி நேரம் கழித்து அதை ரத்து செய்தது.இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை, நேற்று நடைபெறும் என, கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, ௧௭ பேர் மீதான குற்றம் ...

மோடியின் மூன்று நாடுகள் பயணம் இன்று துவக்கம் : ஜி - 20 மாநாட்டில் 15ம் தேதி பங்கேற்கிறார்

Posted:

புதுடில்லி :மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய மூன்று நாடுகளில், 10 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும், ஜி-20 மாநாட்டிலும் பங்கேற்கிறார். டில்லியில் இருந்து இன்று, மியான்மர் தலைநகர் நயே பைதா செல்லும் மோடி, அங்கு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும், 'ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார்.அதன் பின், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர் செல்லும் மோடி, அங்கு வரும், 15 ...

துறை பற்றி ஒன்றும் தெரியாது; அவகாசம் கொடுங்க! ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பாரிக்கர் ஒப்புதல்

Posted:

லக்னோ:''ராணுவத் துறை பற்றி, எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால், துறை தொடர்பான கேள்விகளுக்கு, இப்போது பதிலளிக்க மாட்டேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; துறை ரீதியான விஷயங்களை முறையாக அறிந்த பின், பதில் தருகிறேன்,'' என, புதிய ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.எம்.பி., இல்லை:மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் விஸ்தரிக்கப்பட்டது. இந்த விஸ்தரிப்பில், கோவா முதல்வராக இருந்து, பதவி விலகிய மனோகர் பாரிக்கர், ராணுவ அமைச்சராக பதவியேற்றார். அவர் தற்போது, பார்லிமென்டின் எந்த சபையிலும் உறுப்பினராக இல்லாததால், உ.பி., மாநிலத்தில் இருந்து, ...

சட்டசபையை கூட்ட ஸ்டாலின் அறிவுரை தேவையில்லை : முதல்வர் ஓ.பி.எஸ்., பதில்

Posted:

சென்னை: 'ஐந்து மீனவர்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; சட்டசபையை எப்போது கூட்டுவது என்பது எங்களுக்குத் தெரியும்; ஸ்டாலின் அறிவுரை தேவையில்லை,' என்று, முதல்வர் பன்னீர் செல்வம் பதிலளித்து உள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இலங்கை அரசால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட, ஐந்து தமிழக மீனவர்கள் விவகாரத்தை விவாதிக்க, சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று, அறிக்கை வெளியிட்டு உள்ளார்.தி.முக.,வில் தந்தைக் கும், தனயனுக்கும் உள்ள பனிப்போர் ஊரறிந்த ஒன்று. தான் தலைவராக வேண்டும் என்று, இலவு காத்த கிளி ...

சகாயம் குழுவில் சேர தயக்கம்: மறுத்து ஒதுங்கும் அதிகாரிகள்

Posted:

மதுரை: மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு ஆய்வு குறித்து, ஆய்வு செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவில் இடம் பெற, அலுவலர்கள் தயக்கம் காட்டுகின்றனர். குழுவில் சேர அழைத்தாலும், 'நமக்கேன் பொல்லாப்பு' என, பலரும் ஒதுங்குகின்றனர்.கிரானைட் கற்கள்: மதுரை மாவட்டத்தில், 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கனமீட்டர் கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 'அரசுக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு' என அப்போதைய கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பி,ன் கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா, கிரானைட் முறைகேடு தொடர்பாக, 20 வழக்குகளை ...

மீனவர்கள், இந்திய சிறைக்கு மாற்றப்படுவர் :மோடி - ராஜபக்ஷே பேசியதாக சாமி தகவல்

Posted:

'நவ., 26ம் தேதி இலங்கைக்குச் செல்லும்போது, அங்கே துாக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும், தமிழர்கள் ஐந்து பேரையும், இந்திய சிறைக்கு கட்டாயம் மாற்றம் செய்வேன். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தெரிவித்தார்.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த, மீனவர்கள் ஐவர், இலங்கை கடல் ஏரியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை ராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்டனர். போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.அந்த வழக்கில் ...

பிர்லாவுக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளது:சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அந்தர் பல்டி

Posted:

புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில், குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக, முன்னர் தெரிவித்த சி.பி.ஐ., தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது. பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பரேக் உட்பட, பலருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக தெரிவித்து உள்ளது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பரத் பராஷர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, அரசு சிறப்பு வழக்கறிஞர் சீமா கூறியதாவது:தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™