Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


Android சாதனம் பயன்படுத்தக்கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள்.

Posted: 10 Nov 2014 11:57 AM PST

Android சாதனம் பயன்படுத்தக்கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள். 1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#* 2. IMEI Number – *#06# 3. Enter Service Menu On NewerPhones – *#0*# 4. Detailed Camera Information –*#*#34971539#*#* 5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service –*#*#197328640#*#* 8. Back-light Test – *#*#0842#*#* 9. Test the Touchscreen –*#*#2664#*#* 10. ...

மிதக்கும் திமிங்கலங்கள்

Posted: 10 Nov 2014 10:10 AM PST

கோ வி.மணிசேகரனின் சரித்திர நாவல் http://www.mediafire.com/view/pnzmvaa5zpcwqc2/Kovi_manisegaran-Mithakkum_Thimingilangal.pdf

சாபம் - கவிதை - கண்மணி ராசா

Posted: 10 Nov 2014 10:10 AM PST

அனுதாப அம்மா

Posted: 10 Nov 2014 10:02 AM PST

கையெழுத்துக்கூட
போடத்தெரியாத அம்மா
தன மகன் கற்றுக்கொண்டு வந்த
'மம்மி' என்கிற
வார்த்தையைக் கேட்டு
'அம்மி'யைத்தான்
அப்படிச் சொல்கிறான் என்று
அடுத்தவரிடம் சொல்லி
அனுதாபப்பட்டுக் கொண்டாள்!

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Posted: 10 Nov 2014 09:59 AM PST

மனைவியைப் போற்றுங்கள் காதலித்து மணம் முடித்தவர்கள், பெரியவர்கள் ஏற்பாடு செய்த மணத்தின் மூலம் இணைந்தவர்கள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள். வாரிசுகளை உருவாக்கித் தருபவர்கள் அவர்கள். கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கட்டளைகளை சிரமேற்கொண்டு இல்லத்தை பரிபாலனம் செய்பவர்கள். வேலைக்குப் போகும் மனைவியும் சரி; இல்லத்தரசியாக பரிணமிக்கும் மனைவியும் சரி; இருவரும் குடும்ப பாரத்தைச் சமமாக உடனிருந்தே சுமந்து வருகின்றனர். மனைவியின் சமையல், அலங்காரம், ...

கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Posted: 10 Nov 2014 09:52 AM PST

- ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கோலா கம்பெனி விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதே கம்பெனிக்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்களே. இது ஏற்புடையதா? எனக் கேட்டிருந்தார். அதற்கு விஜய் கூறிய ட்விட்டரில் கூறிய பதில்: " ஆம் . அந்த விளம்பர கம்பெனியின் ப்ராண்ட் அம்பாசிடராக இருந்தேன் , நான் மட்டுமல்ல இந்தியாவின் பிரபலங்களான சச்சின், அமீர்கான் உள்ளிட்டோரும் இந்த விளம்பரங்களில் நடித்துள்ளனர். - 'கத்தி' கதையை கேட்டபோதுதான் எனக்கு ...

அடம்

Posted: 10 Nov 2014 09:49 AM PST

எழுத்துக்களைக்
கற்றுக்கொண்ட
தன் தாயிடம்
அவளின் கையெழுத்தைப்
போடச் சொல்லி - மகன்
அடம்பிடித்தான்...
சொத்துப் பத்திரத்தில்!

அந்தக்காலம் இனி வருமா?

Posted: 10 Nov 2014 09:40 AM PST

பாவாடையைத் தூக்கிக்கட்டி
பச்சை நாற்றுகளை
நட்டு வைக்கும் வேளையில்,
தன் பால்வாடை கண்டு
குழந்தையின் வாய்க்குள்
உயிர்(ச)முத்தான முலைப்பாலைத்
திணிக்கும் தாய்மார்களின்
அந்தக்காலம் இனி வருமா?

என்ன நியாயம்

Posted: 10 Nov 2014 09:33 AM PST

அந்த அரங்கத்தில்
ஓர் ஆணும் பெண்ணும்
'அந்தரங்க'த்தில் ஈடுபட
பிரச்சினை வெளியே கசிந்தது!
பெண் மட்டும் பிடிபட்டாள்....
விபச்சார வழக்கில்!

ஹைக்கூ

Posted: 10 Nov 2014 09:33 AM PST

அறுபதிலும் ஆசை குறைவதில்லை
பேருந்தில் பெண்களை உரசும்
பெருங்கிழவனுக்கு!

’செக்ஸ் டேப்’ எச்சரிக்கை! - திரைப்பட விமரிசனம்

Posted: 10 Nov 2014 05:59 AM PST

- உலகம் முழுக்கவே இருக்கும் ஒரு பிரச்னை. அதில் காமெடி சேர்த்து எல்லோருக்கும் அதன் தீவிரத்தைப் புரிய வைத்திருக்கும் படம்தான் ஜேக் கஸ்டன் இயக்கியிருக்கும் 'செக்ஸ் டேப்'. - படத்தின் பெயரைக் கேட்டதும் இந்த படத்தைப் பார்த்தேன் என்று சொல்லக்கூடத் தயங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனால் படம் கூறியிருக்கும் விஷயம் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிப்பது தான். - கேமரூன் டயஸும், ஜேசனும் காதல் திருமணம் செய்தவர்கள். திருமணத்துக்கு முன் அவர்களுக்குள் இருந்த தாம்பத்ய உறவு ...

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?

Posted: 10 Nov 2014 05:59 AM PST

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்? கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். 'கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?' என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் ...

மிதக்கும் திமிங்கலங்கள்

Posted: 10 Nov 2014 05:52 AM PST

கோ வி.மணிசேகரனின் சரித்திர நாவல் http://www.mediafire.com/view/pnzmvaa5zpcwqc2/Kovi_manisegaran-Mithakkum_Thimingilangal.pdf

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -116)

Posted: 10 Nov 2014 05:41 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ...

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Posted: 10 Nov 2014 05:32 AM PST

ஹெல்த்தி சூப்! நீங்கதான்  முதலாளியம்மா! இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு... இப்படி நம் வீட்டு சமையலறையே ஒரு குட்டி மருத்துவமனைதான். ஆனாலும், கைகளுக்கு எட்டிய இடத்தில் இருக்கும் இந்த மருந்துப் பொருட்களின் மகத்துவம் தெரியாமல், தும்மலுக்கும் தலைவலிக்கும் கூட மருத்துவரைத் தேடிப் போய் மொய் எழுதினால்தான் பலருக்கும் திருப்தியே. ''மூலிகைகளை மருந்தா நினைச்சு சாப்பிடறது தான் சிரமம். அதையே சுவையான ஒரு உணவா சாப்பிட்டுப் பழகிட்டா, ஆரோக்கியத்தைத் தக்க வச்சுக்கிறது ...

மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகும் லிங்கா

Posted: 10 Nov 2014 05:30 AM PST

- கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். - சந்தானம் , சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். - ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'லிங்கா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளின் இசை வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. - மிழ், தெலுங்கு மொழியில் 'லிங்கா' இசை வெளியீட்டு ...

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Posted: 10 Nov 2014 05:26 AM PST

டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது. இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் ...

மிடறு மிடறாக - கவிதை - ப.தியாகு

Posted: 10 Nov 2014 04:57 AM PST

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

Posted: 10 Nov 2014 04:23 AM PST

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் ...

நவீன சோலார் தொழில்நுட்பங்கள் தெளிவான விளக்கங்கள்

Posted: 10 Nov 2014 03:59 AM PST

நவீன சோலார் தொழில்நுட்பங்கள் தெளிவான விளக்கங்கள் வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, தற்போது நடைமுறையில் உலக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். அதன்பின் அவை காலியாகிவிடும். என்றைக்குமே காலியாகாத வற்றாத சக்தியை தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இன்றைக்கு உள்ளது. அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் ...

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

Posted: 10 Nov 2014 03:55 AM PST

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்... செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்... ''பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால்தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும்'' என்பது பெரும்பாலான கால்நடைத் துறை வல்லுநர்களின் கூற்று. ''நூத்துக்கு நூறு சதவிகிதம் இது சரி. இதையெல்லாம் முழுக்க முழுக்க நான் தவறாம கடை-பிடிக்கிறதாலதான்... ...

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? கண்டிப்பாக இதை படியுங்கள்.

Posted: 10 Nov 2014 03:53 AM PST

கட்டாயம் படிக்க வேண்டியது அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் ...

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்? பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-”குடிஅரசு” – 06.08.1939

Posted: 10 Nov 2014 03:43 AM PST

தோழர்களே! தலைவர் அவர்கள் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள். முதலில் நான் அவரது பாராட்டுதலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். தமிழ் பாஷை நான் ...

கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Posted: 10 Nov 2014 03:28 AM PST

- ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கோலா கம்பெனி விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதே கம்பெனிக்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்களே. இது ஏற்புடையதா? எனக் கேட்டிருந்தார். அதற்கு விஜய் கூறிய ட்விட்டரில் கூறிய பதில்: " ஆம் . அந்த விளம்பர கம்பெனியின் ப்ராண்ட் அம்பாசிடராக இருந்தேன் , நான் மட்டுமல்ல இந்தியாவின் பிரபலங்களான சச்சின், அமீர்கான் உள்ளிட்டோரும் இந்த விளம்பரங்களில் நடித்துள்ளனர். - 'கத்தி' கதையை கேட்டபோதுதான் எனக்கு ...

குதிரையில் பறக்கும் நயன்தாரா!

Posted: 10 Nov 2014 03:24 AM PST

- 'ஜெயம்' ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, நயன்தாரா நடிக்கும் படம் 'தனி ஒருவன்'. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். - இந்தப் படத்தில் நயன்தாரா ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படத்துக்காக நயன் முதன்முறையாக காக்கி உடை அணிந்து நடிக்க இருக்கிறாராம். - படத்தில் நயன்தாராவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருப்பதால் குதிரை சவாரியும் கற்றுக்கொண்டிருக்கிறாராம். படம் ஜனவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -

உ.பி.கிராமத்தைத் தத்தெடுத்தார் ஹேம்மாலினி

Posted: 10 Nov 2014 03:23 AM PST

- - உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராவல் கிராமத்தை நடிகை ஹேமமாலினி எம்பி தத்தெடுத்தார். உத்தரப் பிரதேச மாநில ராவல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை ஹேமமாலினி எம்பி, யமுனை நதியோரத்தில் அமைந்துள்ள இந்த ராவல் கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.ஆனால் தற்போது யாரும் அறியாத கிராமமாக இருக்கிறது. - எனவே இதன் பெருமையை மீட்டு மீண்டும் வரலாற்றுப் பக்கங்களிலும் இந்திய சுற்றுலா வரைபடத்திலும் இடம் பெறச் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்" என்றார். - ராவல் கிராமம், ...

குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்

Posted: 10 Nov 2014 03:14 AM PST

குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள். பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் . நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள். எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை . இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு ...

நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்!!குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.....

Posted: 10 Nov 2014 03:09 AM PST

நல்ல குழந்தைகளை உருவாக்குவோம் குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே. கேட்பதை எல்லாம் வாங்கித் தர நம்மிடம் பணம் கிடையாது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தகப்பனார் நினைக்கிறார். அவர் சொல்வது நிஜம் என்று நம்புகிறது. நிறையப் பொய்களைக் கேட்டு இறுதியில் " ஏம்பா ! பொய் சொல்ற !" என்று அவரையே திரும்பிக் கேட்கும். கேட்கும் பொருளை முடிந்தால் வாங்கித் தாருங்கள். இல்லையெனில் நாளைக்கு வாங்கித் தருகிறேன் என்று சொல்ல வேண்டாம். பிஞ்சு மனங்களில் எதிர்பார்ப்புகளை ...

பதட்டம் அடையாதீர்கள்!

Posted: 10 Nov 2014 03:06 AM PST

பதட்டம் அடையாதீர்கள் வாழ்க்கையில் பதட்டமாகவே வாழ்பவர்கள் துன்பங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பவர்கள். எல்லாவற்றிற்கும் பதட்டம் கொள்பவர்களிடையே மன அமைதி இல்லாமல் தவிப்பர். ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் இவர்களிடம் சுலபமாக உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் என்ன ! மருத்துவர்களை சந்திப்பதும், மாத்திரைகள், மருந்துகள் என்று வாழ்க்கையை வீணடித்துக் கொள்வார்கள். பர்ஸில் அதிகமாகப் பணம் வைத்திருந்தார். காலை அலுவலகம் செல்லுமுன் பர்ஸைத் தேடுகிறார். பணம் நிறைய இருக்கிறதே ...

"ஒழுக்கமான வாழ்க்கை"

Posted: 10 Nov 2014 03:04 AM PST

ஒழுக்கமான வாழ்க்கை ஒழுக்கம் மேன்மை தருவதால் அது உயிரை விட முக்கியம். ஒழுக்கக் குறைவால் ஏற்படும் தீமைகள் தெரிந்தவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள். இவைகள் திருவள்ளுவரால் சொல்லப்பட்ட நியதிகள். ஒழுக்கமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் இக்காலத்தில் சரியான தன்டனையை அனுபவிக்கின்றனர் சட்டம் அவர்களைத் தண்டிக்கவில்லை. இயற்கையே அத்தகையோருக்கு தன்டனை வழங்குகிறது. 'எய்ட்ஸ்' ஆம்! இதுவே ஒழுக்க மற்றவர்களுக்கு வரும் உயிர் கொல்லி நோயாகும். போதை ஊசி உபயோகிப்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள் எச்.ஐ.வி.யைப் ...

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு

Posted: 10 Nov 2014 02:49 AM PST

கடையம், : தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் முடங்கி வரும் கோழி வளர்ப்புத் தொழிலை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என கோழி பண்ணையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் நாமக்கல், பல்லடத்திற்கு அடுத்த படியாக நெல்லை மாவட் டம் சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள பண்ணையாளர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்த்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள், பண்ணையாளர்களுடன் ...

முத்தப்போராட்டத்தை அடுத்து கட்டிப்புடி போராட்டம்

Posted: 10 Nov 2014 02:47 AM PST

முத்தப்போராட்டத்தை அடுத்து கட்டிப்புடி போராட்டம். 10 கேரள மாணவ மாணவிகள் கைது.

நெருஞ்சியின் மருத்துவ பயன்கள்

Posted: 10 Nov 2014 02:36 AM PST

சிறிய தாவரமாக இருந்தாலும் அறிய மருத்துவ குணங்கள் கொண்ட நெருஞ்சியை பற்றி இங்கே பார்ப்போம். நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து 1/2 லிட்டர் நீரிலிட்டு பகுதியாக காய்ச்சி 60மில்லி அளவு உட்கொண்டுவர பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேரு ஏற்படும். நெருஞ்சி வேரையும், காயையும் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டிய கஞ்சியுடன் சர்க்கரை சேர்த்து ...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

Posted: 10 Nov 2014 02:34 AM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், ...

செல்பி

Posted: 10 Nov 2014 02:28 AM PST

தனக்கு தானே போட்டோ எடுத்து கொள்ளும் 'செல்பி' முறை தற்போது பிரபலமாகி விட்டது. செல்போன்–காமிரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். 'செல்பி' குறித்து சினிமா பாடல்களும் வர தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு 'செல்பி' தற்போது பிரபலமாகி விட்டது. ஆனால், இந்த 'செல்பி' போட்டோ எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839–ம் ஆண்டில் முதல் 'செல்பி' போட்டோ எடுத்தார். இவர் தனது தந்தையின் ...

குழந்தைகளுக்கு -விளக்கெண்ணை?

Posted: 10 Nov 2014 02:09 AM PST

என் கைக்குழந்தைக்கு, வாரம் ஒருமுறை விளக்கெண்ணையை நன்றாக சூடுபடுத்தி, ஆறவைத்து குடிக்க வைக்கிறோம். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதனால் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா? இயற்கைக்கு ஈடு இணையான செயற்கை எதுவும் கிடையாது. இருப்பினும் குழந்தை என்பதால் நாம் சிலவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் போன்ற பொருட்கள் கசப்பு தன்மையுள்ளவை. அதன்அடர்த்தி அதிகம். ஆகவே அவற்றை கொடுக்கும்போது, மூச்சுத் திணறி நுரையீரலுக்குள் சென்றால் பிரச்னைதான். அங்கு காற்று செல்லும் பைகளை அவை சூழ்ந்துகொள்ளும். ...

அத்திக்காய் -மருத்துவ பயன்

Posted: 10 Nov 2014 02:00 AM PST

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும். அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் ...

'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02)

Posted: 10 Nov 2014 01:39 AM PST

'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02) இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம். சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் ...

'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க! - 1

Posted: 10 Nov 2014 01:38 AM PST

'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க!'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க! உடல் வளர்க்க... உயிர் வளர்க்க! இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன. 'தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; ...

தடுப்பூசி ரகசியங்கள்

Posted: 10 Nov 2014 01:32 AM PST

நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, ...

கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Posted: 10 Nov 2014 01:19 AM PST

இன்றைய நிலையில் பணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் கார்டுகள் (கிரெடிட், டெபிட் கார்டுகள்) பர்ஸை ஆக்கிரமித்துவிட்டன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் மேற்கொள்வது, உணவகங்களில் பில் செலுத்துவது, வண்டிக்கு பெட்ரோல் போடுவது, சினிமா மற்றும் ரயில்,விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற செயல்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுகிறோம். பிளாஸ்டிக் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துவதற்குக் காரணம், பணத்தைப் பர்ஸ்களில் வைத்துக்கொண்டு சுற்றும்போது அதற்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஆனால், ...

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Posted: 10 Nov 2014 12:10 AM PST

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை ...

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்

Posted: 10 Nov 2014 12:01 AM PST

வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி. மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி. சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு ...

சுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள்

Posted: 09 Nov 2014 11:58 PM PST

சென்னை: நல்ல லாபம் சம்பாதிக்க மற்றும் தன் சொந்த காலில் நிற்க புதிதாக தொழில் தொடங்க பலர் முனைவர். வேலையில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட இந்த எண்ணம் இருக்கும். சரி அப்படி ஆரம்பித்த அனைவரும் சாதித்து விட்டனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் பதில் வரும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக பார்க்கப்படுகிற காரணம் முன் அனுபவம் இல்லாமை. எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் தொழிலை நடத்த பலவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறை தொழில் செய்பவர்கள் பணத்தை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். ...

சிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள்

Posted: 09 Nov 2014 11:50 PM PST

சிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள் நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட்டியாக இருந்து தொழிலை தொடங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலிருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம். கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா? பதில்: சிறு வாகன கடன் ...

கொழுப்பு குறைக்கும் வழிகள்

Posted: 09 Nov 2014 11:45 PM PST

கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம். * பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். * ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, ...

நீங்க 3டி பிரியரா.. ?????

Posted: 09 Nov 2014 11:44 PM PST

நீங்க 3டி பிரியரா.. அப்போ உங்களுக்கே உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. இப்போது எங்கு பார்த்தாலும் 3டி வெர்ஷன் என்கிற அளவிற்கு 3டி மோகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவதார் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஹாலிவுட்காரர்கள் கூட 3டி மோகம் கொண்டு ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் சீரியஸ்களை 3டியில் ரிலீஸ் செய்தார்கள். அதுவே ஓவர்டோஸ் ஆகி 3டி டிவியையே டிவி கம்பெனிகள் அறிமுகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் '3டி பார்க்காதீங்க' என்று அபயக்குரல் எழுப்பியிருக்கிறது பிரான்ஸ் நாட்டைச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™