மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்
- ஐதராபாத்தில் வேலை கிடைக்காததால் திருடனாக மாறிய என்ஜினீயரிங் மாணவர்
- பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடுகிறது: 67 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு
- சபரிமலையில் விடிய விடிய மழை: பக்தர்கள் அவதி
- திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு நவீன எந்திர வசதிகளுடன் புதிய மண்டபம்
- சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
- முத்தப் போராட்டம் நடத்தி பதட்டம் ஏற்படுத்த வேண்டாம்: மோகன்லால் கருத்து
- ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்
- தலித்துக்கள் கொலை: சிபிஐ விசாரணை வேண்டும் - பெங்களூரில் திருமாவளவன் பேச்சு
- பிரபாகரன் பிறந்த நாள் விழாவுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு சுப்பிரமணிய சாமி கோரிக்கை
- பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்
- முல்லைப்பெரியாறு விவகாரம்: டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் ரத்து
- ஜார்கண்டில் குடும்ப ஆட்சியை அகற்றுங்கள்: மோடி பேச்சு
- கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
- 2ஜி வழக்கை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா விசாரிப்பார்
- துப்பாக்கிகளை தூக்கி எறிந்து-நாட்டை கட்டமைக்க முன்வாருங்கள்: நக்சல்களுக்கு மோடி அழைப்பு
- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதியர் பலி
- காஷ்மீர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீச்சு: வாலிபரை ராணுவம் கைது செய்தது
- சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்க மந்திரியிடம் விசாரணை- திரிணாமுல் எம்.பி கைது
- பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சிறப்பு சட்டம்: கேரள உள்துறை தீர்மானம்
| மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம் Posted: 21 Nov 2014 11:41 PM PST கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் பிரின்ஸ் பயன்படுத்தப்பட்டது. 10 வயதான இந்த நாய் போலீஸ் மோப்ப நாய் பிரிவை சேர்ந்தது. இதன் உதவியால் 45 குண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு |
| ஐதராபாத்தில் வேலை கிடைக்காததால் திருடனாக மாறிய என்ஜினீயரிங் மாணவர் Posted: 21 Nov 2014 10:33 PM PST ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீனியய்யா சுந்தர் (28). எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்த பி.டெக் மாணவர். இவர் வேலை தேடி ஐதராபாத் வந்தார். அமீர் பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதடு என்ற சினிமா படத்தை பார்த்தார். அதில் வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிப்பது எப்படி என்பதை அறிந்தார். |
| பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடுகிறது: 67 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு Posted: 21 Nov 2014 10:24 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றம் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) கூடுகிறது. டிசம்பர் 23–ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது 22 அமர்வுகளை கொண்டதாக இருக்கும். இதில் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. |
| சபரிமலையில் விடிய விடிய மழை: பக்தர்கள் அவதி Posted: 21 Nov 2014 10:20 PM PST வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் தென் கேரள பகுதிகளிலும் மழை பெய்கிறது. திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் பெய்த மழை சபரிமலையிலும் கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று இரவிலும் மழை நீடித்தது. |
| திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு நவீன எந்திர வசதிகளுடன் புதிய மண்டபம் Posted: 21 Nov 2014 10:14 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் தினமும் எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக கருவறை உள்ள ஆனந்த நிலையத்தின் வடக்கு–தெற்கு திசையில் 135 அடி பரப்பளவில் பரக்காமணி என்று அமைக்கப்படும் உண்டியல் எண்ணும் இடம் உள்ளது. |
| சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை Posted: 21 Nov 2014 09:38 PM PST சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரை விசாரணையில் இருந்து நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ. இயக்குனரை சந்தித்த 2ஜி வழக்கில் தொடர்புடையவர்களின் வருகை பதிவேடு பட்டியலையும் கோர்ட்டில் ஒப்படைத்தார். |
| முத்தப் போராட்டம் நடத்தி பதட்டம் ஏற்படுத்த வேண்டாம்: மோகன்லால் கருத்து Posted: 21 Nov 2014 09:23 PM PST கேரள மாநிலம் கொச்சியில் சில அமைப்பினர் கடந்த 2–ந்தேதி அன்பின் முத்தம் என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கு கல்லூரி மாணவ–மாணவிகள் மத்தியில் ஆதரவும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. |
| ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண் Posted: 21 Nov 2014 08:59 PM PST உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் 30 வயதான ஓர் இளம்பெண் நுழைந்தார். அவர், தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒரு குண்டை |
| தலித்துக்கள் கொலை: சிபிஐ விசாரணை வேண்டும் - பெங்களூரில் திருமாவளவன் பேச்சு Posted: 21 Nov 2014 08:37 PM PST மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் அக்டோபர் 20–ம் தேதி தலித் குடும்பத்தை சார்ந்த 3 பேர் சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். அவ்வழக்கில் இதுவரை மராட்டிய காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் அவ்வழக்கை சிபிஐ விசார |
| பிரபாகரன் பிறந்த நாள் விழாவுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு சுப்பிரமணிய சாமி கோரிக்கை Posted: 21 Nov 2014 07:43 PM PST விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாள், வரும் 26-ந் தேதி வருகிறது. இந்த நாளை உலகமெங்கும் கொண்டாடும்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். |
| பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம் Posted: 21 Nov 2014 04:34 PM PST பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி |
| முல்லைப்பெரியாறு விவகாரம்: டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் ரத்து Posted: 21 Nov 2014 03:53 PM PST தமிழ்நாடு மற்றும் கேரள அரசு அனுப்பிய கடிதங்கள் எதிரொலியாக, டெல்லியில் இன்று நடக்க இருந்த, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி நேற்று முன்தினம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'தமிழ்நாடு மற்றும் |
| ஜார்கண்டில் குடும்ப ஆட்சியை அகற்றுங்கள்: மோடி பேச்சு Posted: 21 Nov 2014 03:20 PM PST ஜார்கண்ட் மாநிலம் வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டுமானால் குடும்ப ஆட்சியை அகற்றுமாறு தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசினார். ஜார்கண்டில் சட்டமன்றத்துக்கான முதற்கட்ட தேர்தல் 25-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பா.ஜனதா சார்பில் நேற்று டல்டான்கஞ்ச் |
| கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு Posted: 21 Nov 2014 11:55 AM PST மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஜெர்மன் கற்று தரப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த ஜெர்மனை நீக்கி விட்டு மத்திய அரசு சமஸ்கிருதத்தை அறிமுகம் செய்தது. இது |
| 2ஜி வழக்கை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா விசாரிப்பார் Posted: 21 Nov 2014 10:17 AM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா நடத்தி வந்தார். இதனிடையே, 2 ஜி முறைகேடு விவகாரத்தில் செல்வாக்கு பெற்ற குற்றவாளிகள் சிலரை காப்பாற்றும் நோக்கத்தில் ரஞ்சித் சின்கா செயல்படுவதாகவும், எனவே அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் |
| துப்பாக்கிகளை தூக்கி எறிந்து-நாட்டை கட்டமைக்க முன்வாருங்கள்: நக்சல்களுக்கு மோடி அழைப்பு Posted: 21 Nov 2014 07:21 AM PST துப்பாக்கியை தூக்கி எறிந்து வன்முறைப் பாதையை கைவிட்டு, நாட்டை கட்டமைக்கும் நன்முறைப் பாதையின் பக்கம் வாருங்கள் என நக்சலைட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 25-ம்தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 20-ம் தேதிவரை 5 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த மாநிலத்தில் நக்சலைட்களின் வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்ட லட்டேஹர் மாவட்டத்தின் சண்டுவா பகுதியில் இன்று |
| மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதியர் பலி Posted: 21 Nov 2014 06:56 AM PST உத்தர பிரதேச மாநிலம், பிலிப்பட் மாவட்டத்தை சேர்ந்தவர் மான்சிங் (26). இவரும் இவரது மனைவி தன் வர்ஷா (24) என்பவரும் இன்று பிலிப்பட்-லக்கிம்பூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த ஒரு வாகனம் மான்சிங்கின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கணவன்- மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
| காஷ்மீர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீச்சு: வாலிபரை ராணுவம் கைது செய்தது Posted: 21 Nov 2014 06:34 AM PST ஜம்மு-காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீசிய நபரை ராணுவம் கைது செய்துள்ளது. நூராபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் அப்துல் மஜித் பத்தார் இன்று நோகாமா என்ற இடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி |
| சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்க மந்திரியிடம் விசாரணை- திரிணாமுல் எம்.பி கைது Posted: 21 Nov 2014 06:15 AM PST கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன அதிபர்கள், இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. |
| பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சிறப்பு சட்டம்: கேரள உள்துறை தீர்மானம் Posted: 21 Nov 2014 05:57 AM PST கேரள மாநிலத்தில் சமீபகாலமாக புதையல் எடுப்பதற்கு நரபலி கொடுப்பது, பில்லி, சூனியம் வைத்து பிறரை வசியப்படுத்தவும், கொல்லவும் முயற்சித்தல் போன்ற கொடும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. *குடும்பத் தகராறு, குழந்தயின்மை போன்றவற்றுக்கு கூட மாந்திரீகத்தின் மூலம் தீர்வு காண சிலர் முயற்சிப்பதால், இதன் காரணமான உயிரிழப்புகளும் தற்போது அதிகரித்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |