Tamil Star |
- உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகையை வாடகைக்கு எடுத்த கூகுள் நிறுவனம்.
- பணி பெண்ணாக வெளிநாட்டு சென்று! ஊமையான பெண், உயிரிழந்த துயரம்.
- பிணவறைவில் 11 மணிநேரத்திற்குப் பிறகு எழுந்து டீ கேட்ட பாட்டி!
- ஐ.எஸ்.ஐ.எஸ்-யை தாக்கமாட்டோம்: அடம்பிடிக்கும் விமானிகள்
- மன்னிப்பு கேட்ட அமைச்சர்: புன்னகையுடன் தலையசைத்த ரஜினி
- ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி
- அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா
- ஐ.தே.கவின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன! ஜனாதிபதியானால் ரணில் பிரதமர்
| உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகையை வாடகைக்கு எடுத்த கூகுள் நிறுவனம். Posted: 21 Nov 2014 03:52 AM PST
ஒரு எட்டுமாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமான இந்த பலகை, கால்பந்து விளையாட்டுக் களம் போன்ற அளவு பரப்பளவுள்ளது. அதி-துல்லிய திரையுடன் கூடிய இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை மூலம் முதன் முதலாக மலை, பறவை , அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்றவைகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் படம் ஒன்று திரையிடப்பட்டது. இந்தப் படக்காட்சிகளுடன் பின்னணி இசையும் சேர்ந்து ஒலிப்பதை நியுயார்க் நகரவாசிகள் கண்டு களித்தனர். அடுத்த வாரத்திலிருந்து இந்த விளம்பரப் பலகையில் விளம்பரங்கள் வெளிவரத்தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பணி பெண்ணாக வெளிநாட்டு சென்று! ஊமையான பெண், உயிரிழந்த துயரம். Posted: 21 Nov 2014 03:50 AM PST
சவூதி அரேபியா நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவரின் கணவர் குருநாகல் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலி வேலை செய்து வருகின்றவர். மனைவி சவூதி நாட்டிற்கு சென்று 2 மாதம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அதன் பின் எந்தவிதமான தொடர்பும் இல்லாமையால் கணவன் பல இடங்களுக்கு சென்று மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்ததாகவும் அது பயனலிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றார். 2013.12.28 திகதி திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாருங்கள் உங்களின் மனைவி இலங்கைக்கு வந்துவிட்டார் என சவூதி நாட்டில் ஒன்றாக வேலை செய்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். கணவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது மனைவியின் கழுத்தில் பாரிய காயங்களுடனும், பேச முடியாத நிலையில் இருந்துள்ளார். குறித்த பெண் குருநாகல் , கண்டி, பேராதெனிய போன்ற வைத்தியசாலைகளில் ஒரு வருடத்திற்கு மேல் சிகிச்சை பெற்றதோடு கடந்த வாரம் வெலிங்டன் தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் அவர் வெளியில் எழுந்து சென்ற போது தவறி விழுந்ததை தொடர்ந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதே வேளை இவர் பணிப்புரிந்ததற்க்காக சம்பள பணம் எதுவும் வழங்கபடவில்லை என இவரின் கணவர் சுட்டிக்காட்டினார். இவரின் இறப்புக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என இவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். பணிப்புரிந்த இடத்தில் கழுத்திலும், தலையிலும் அடித்துள்ளதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாக கணவன் தெரிவித்தார். இதேவேளை இவர் வேலை செய்த வீட்டிற்கு தொடர்பு கொண்டபோதிலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு இவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு 38000 ரூபா பணத்தையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்திருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு நஷ்டஈடு வழங்குவதற்கு முன்வரவேண்டும் . இச்சம்பவம் குறித்து அட்டன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜே.எம்.பசீர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் போது கழுத்தில் பாரிய காயங்களுடன் இருந்துள்ளதுடன் அவரால் பேச முடியாத நிலையில் வீட்டில் தவறி கீழே விழுந்ததனால் தலைப்பகுதியில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிணவறைவில் 11 மணிநேரத்திற்குப் பிறகு எழுந்து டீ கேட்ட பாட்டி! Posted: 21 Nov 2014 03:48 AM PST
போலாந்தை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் (Janina Kolkiewicz Age-91) என்ற மூதாட்டி சுவாசிக்காமல் இருந்ததால், அவரது உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெனினா இறந்துவிட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஊழியர்கள் பிணவறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் சுமார் 11 மணி நேரத்திற்கு பிறகு, மற்றொரு உடலை வைப்பதற்காக ஊழியர்கள் பிணவறைக்கு வந்தபோது ஜெனினா பிணவறையில் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்களைப் பார்த்ததும் அமர்ந்திருந்த ஜெனினா, குடிப்பதற்கு தனக்கு சூடாக தேநீர் வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர்கள் ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ்.ஐ.எஸ்-யை தாக்கமாட்டோம்: அடம்பிடிக்கும் விமானிகள் Posted: 21 Nov 2014 03:46 AM PST
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது, தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்த சவுதி அரேபிய விமானிகள் மறுத்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஈராக்கின் அரசியல் நிபுணர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் இத்தகைய தாக்குதல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சவுதியின் முக்கிய அரசியல் தலைவர்கள் எண்ணுகின்றனர். இதுகுறித்து ஈராக் அரசியல் ஆய்வாளர் சாஜத் ஜியாத் ( Saajath Jiyaath) கூறியதாவது, சவுதி விமானிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்து வருவது உண்மை தான் என்றும் இதை அவர்கள் உறுதி செய்துள்ளனர் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மன்னிப்பு கேட்ட அமைச்சர்: புன்னகையுடன் தலையசைத்த ரஜினி Posted: 21 Nov 2014 03:44 AM PST
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் முன்னர் புதிதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர் பேசினார். அவர் தனது பேச்சில் கோவா ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டவர், விழாவின் நாயகனான ரஜினி பெயரை மறந்துவிட்டார். பின்னர் இதை உணர்ந்த அவர், ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிக்க வேண்டும். நான் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதை எடுத்து வர மறந்துவிட்டேன் என்றார். ரஜினியும் இதைப் பெரிதுபடுத்தாமல், அமைதியான புன்னகையுடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி Posted: 21 Nov 2014 03:43 AM PST
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்து வழக்கின் போக்கையே நேர் கோட்டுக்கு கொண்டு வந்தவர். இந்நிலையில் கர்நாடகாவில் சதானந்தகவுடா தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்களிடமிருந்து நெருக்கடி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்ஆச்சாரியா வெளியிட்ட அவரது சுய சரிதை புத்தகத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். நெருக்கடி அதிகரித்த நிலையில் அரசு வழக்கறிஞர், பதவியையே ஆச்சாரியா ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. அதன்பிறகுதான் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியதாக நீதிபதியாலே குற்றம்சாட்டப்பட்டு அபராத விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, ஆச்சாரியா குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதும் மத்திய அரசு, உளவுத்துறை மூலம் உண்மை தகவல்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஆச்சாரியாவை குறிப்பிட்ட காலகட்டத்தில் யார் யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர், யாரெல்லாம் அவரை நேரில் சந்தித்து பேசினர் என்பது போன்ற தகவல்களை சேகரித்துள்ளனர். அதில் கர்நாடக பாஜக தலைவர்கள், டெல்லி பாஜக தலைவர்கள் சிலரது பெயர் சிக்கியுள்ளது. தமிழக பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆச்சாரியாவுக்கு நெருக்கடி தர முனைந்ததும் உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா Posted: 21 Nov 2014 03:42 AM PST
மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் அமைச்சர் ராஜித சேனாரத்தின, இதற்கிடையே ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அர்ஜூன ரணதுங்க, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானே பொது வேட்பாளர் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக முழு நாட்டுக்கும் அறிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக தெரிவு செய்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.தே.கவின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன! ஜனாதிபதியானால் ரணில் பிரதமர் Posted: 21 Nov 2014 03:40 AM PST
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜீ20 குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் ஆதரவளிப்பதாக ஜீ20 குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால சிறிசேன தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன். அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வேன். 17ம்திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்துவேன். நிறைவேற்று அதிகாரத ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ரத்து செய்வேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- மைத்திரிபால சிறிசேன நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன் ( கண்களில் கண்ணீர்). ஆனால் முடிவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை 100 நாட்களுக்கு ஒழிக்க எனக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறேன். நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை. நான் அங்கம் வகிக்கும் பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரமான ஊடகம், ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பதை எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேர்தல் அதிகாரத்திற்கு வரும் எமது அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளேன். 17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். எனது இந்த பயணத்திற்காக உதவிய சகோதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரத்ன தேரர், சோபித தேரர் உட்பட அனைவருக்கும் கௌரவமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது. எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் குறித்து ஞாபகப்படுத்த விரும்புகிறேன் (கண்களில் கண்ணீர்). ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் கௌரவமான வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















