Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கடற்படை அதிகாரிக்கு பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 06 Nov 2014 11:34 PM PST

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள கடற்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் சுனில்குமார் ஷாகு. இவருக்கு மனநலம் பாதித்திருப்பதாக உயர் அதிகாரிகள் புகார் கூறினர். இதற்கு சுனில்குமார் ஷாகுவின் மனைவி ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். உயர் அதிகாரிகள் முறைகேடு செய்வதாக கணவர் புகார் கூறியதால் அவரை வெளியேற்ற அவருக்கு மனநலம் பாதிப்பு என்று குற்றம் சாட்டுவதாக

மோடியின் அதிரடி மாற்றங்கள்: மத்திய மந்திரி சபையில் புதிதாக 20 மந்திரிகள்

Posted: 06 Nov 2014 11:33 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. தற்போது பிரதமர் மோடி உள்பட 44 பேர் மந்திரிகளாக உள்ளனர். இவர்களில் 22 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள். மீதமுள்ள 22 பேரும் ராஜாங்க மந்திரிகள். இந்த 22 பேரில் 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இலாகா

நிதிஷ்குமாருடன் அதிருப்தி: சில நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பேன்- முதல்–மந்திரி பேச்சு

Posted: 06 Nov 2014 11:25 PM PST

பீகார் முதல்–மந்திரியான நிதிஷ்குமார் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததால் பதவி விலகினார். அவர் தனக்கு பதில் ஜிதன்ராம்மன்ஞ்சியை முதல்–மந்திரி ஆக்கினார். இந்நிலையில் சமீபகாலமாக நிதிஷ்குமாருக்கும், ஜிதன் ராம் மன்ஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜிதன்ராம் மீது நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்தார். இதனால் முதல்–மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நிதிஷ்குமார்

நகரசபை கூட்ட ரகளையில் கைதான ஒய்.எஸ்.ஆர்.காங். எம்எல்ஏ உயிருக்கு ஆபத்து

Posted: 06 Nov 2014 10:03 PM PST

ஆந்திர மாநிலம் நந்தியாலா நகரசபை கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ. பூமாநாகி ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே நகர சபை கூட்டம் முடிந்ததாக அறிவித்ததால் கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்–தெலுங்குதேசம் கவுன்சிலர்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது.

நில மோசடி வழக்கு பாயும் என்பதால் 6 நிறுவனங்களை மூடிய வதேரா

Posted: 06 Nov 2014 09:51 PM PST

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் நடந்து வந்த காங்கிரஸ் ஆட்சியைப் பயன்படுத்தி இந்த நில முறைகேடுகளை ராபர்ட் வதேரா செய்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டுள்ளதால்,

மும்பையில் அக்டோபர் மாதம் மட்டும் 4000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்

Posted: 06 Nov 2014 09:42 PM PST

மும்பையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 4000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்களுக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் பரேல் பகுதியில் உள்ள கே.இ.எம். மருத்துவமனை

ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்

Posted: 06 Nov 2014 09:37 PM PST

சூரத் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையில், எருமையின் மீது மோதியதால் அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திலிருந்து எஸ்.ஜி. 662 என்ற விமானம், நேற்று மாலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டது. 140 பயணிகளுடன் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென அங்கிருந்த எருமை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Posted: 06 Nov 2014 09:36 PM PST

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக் கழகத்தில் தெலுங்கு பேராசிரியராக இருப்பவர் அப்பாராவ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை காலையில் இவரது வீட்டுக்கு சாதாரண உடையில் வந்த 8 பேர் அப்பாராவிடம் ''நாங்கள் போலீசார். உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்'' என்று அழைத்துச்

திருப்பதியில் ஒரே மாதத்தில் 19 லட்சத்து 88 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Posted: 06 Nov 2014 08:37 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து தருகிறது.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக பூடான் புறப்பட்டார்

Posted: 06 Nov 2014 08:05 PM PST

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று காலை தனி விமானத்தில் பூடான் புறப்பட்டார். இந்திய குடியரசுத்தலைவராக உள்ள ஒருவர் 26 வருடங்களுக்கு பின் தற்போது தான் முதன் முறையாக அந்நாட்டுக்கு பயணம் செல்கிறார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்சக்கின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் பிரணாப்புடன், ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்கா மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட நான்கு எம்.பி.க்களும் சென்றனர்.

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கடற்படை மீட்பு கப்பல் நீரில் மூழ்கியது: ஒருவர் பலி

Posted: 06 Nov 2014 08:00 PM PST

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான மீட்பு கப்பல் கடலில் மூழ்கியதில் அதில் இருந்தவர்களில் ஒருவர் பலியானார், நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கடலில் உள்ள நிலைகள் மீது தாக்க ஏவப்படும் டோர்படோசை(ஒரு வகையான வெடிபொருள்) மீட்கும் இக்கப்பல் 370 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் மூழ்கியது.

அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா அறிவுரை

Posted: 06 Nov 2014 07:44 PM PST

காங்கிரஸ் கட்சி தலைமை மீது ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தனி கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார். இதனால் காங்கிரசில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக

கருப்பு பணம் விவகாரம்: பெயர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை

Posted: 06 Nov 2014 02:32 PM PST

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண முதலைகள் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது.

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9 ஆக பதிவு

Posted: 06 Nov 2014 12:55 PM PST

நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு 9.16 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புதுடெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் குறித்த தகவல்கள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பேச்சுவார்த்தைக்காக எந்த நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம்: அருண்ஜெட்லிக்கு பாகிஸ்தான் பதில்

Posted: 06 Nov 2014 12:11 PM PST

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி கூறும்போது, ''பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா? அல்லது இந்திய பிரிவினைவாதிகளுடன் பேச விரும்புகிறதா? என்ற தெளிவான முடிவுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு

Posted: 06 Nov 2014 10:26 AM PST

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களை நியமித்தார். அதில் சல்மான் கானும் ஒருவர் ஆவர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு

இந்திய பகுதிக்குள் தவறுதலாக அடியெடுத்து வைத்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி

Posted: 06 Nov 2014 07:36 AM PST

வாகா எல்லைப் பகுதிக்கு இன்று வந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள பாகிஸ்தான்

சட்டவிரோதமாக தங்கியிருந்த மாலத்தீவு வாலிபர் கைது

Posted: 06 Nov 2014 06:57 AM PST

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மாலத்தீவு வாலிபர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். மாலத்தீவைச் சேர்ந்த அசீம் உசைன் (வயது 23) என்பவர் டெல்லியில் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த

மகாராஷ்டிராவில் போலீஸ்காரரை அறைந்த கொலை குற்றவாளி

Posted: 06 Nov 2014 05:50 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர், போலீஸ்காரரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசிக்சைச் சேர்ந்தவர் சபீர் அலி சையத் (வயது 21), இவர், தானே மாவட்டம் மும்பரா நகரில் வசிக்கும் தனது உறவினரான ஆரிப் கானின் 16 வயது

தாய்-மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த கடற்படை மாலுமி

Posted: 06 Nov 2014 03:55 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் கடற்படை மாலுமி ஒருவர் இன்று தனது தாய் மற்றும் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பாரத்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு பவானி சங்கர் கூறியதாவது:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™