Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஓவியமாக காட்சியளிக்கும் மீன் சுனாமி…. உங்க கண்ணை உங்களாலே நம்ப முடியலையா?

Posted: 06 Nov 2014 03:45 AM PST

fish_tsunami

fish_tsunami

This posting includes an audio/video/photo media file: Download Now

மிரள வைக்கும் மின்னல் வேக சாகசங்கள்

Posted: 06 Nov 2014 03:39 AM PST

magig

magig

This posting includes an audio/video/photo media file: Download Now

யாருக்கெல்லாம் இந்த பேருந்தில் செல்ல ஆசை?

Posted: 06 Nov 2014 03:31 AM PST

amphibian bus

amphibian bus

This posting includes an audio/video/photo media file: Download Now

மோட்டோரோலா மோட்டோ Maxx ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Posted: 06 Nov 2014 02:47 AM PST

moto-maxx

moto-maxxமோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ Maxx ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் விரைவில் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில் வருகிறது என்று உறுதி செய்துள்ளது. இது BRL 2,199 (சுமார் ரூ. 54,000) என்கிற விலையில் 64GB மாடல் கிடைக்கும். மோட்டோ Maxx ஸ்மார்ட்போன், மிகவும் டிரயோடு டர்போ போன்று, ஒரு 'பாலிஸ்டிக் நைலான்' கட்டமைப்பு கொண்டுள்ளது. குறிப்பாக, மோட்டோ Maxx ஸ்மார்ட்போன் ஒரு த்யூபொன்ஃபைபர்ஸ் கெவ்லர் ஃபைபர் லேயர் அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் உள்ளே மற்றும் வெளியே நீரை விரட்ட நானோ கோட்டிங் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன், டிரயோடு டர்போ போல் ஒரே மாதிரியாக குறிப்புகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3900mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் டிரயோடு டர்போ போலவே மோட்டோ Maxx, மோட்டோரோலா டர்போ சார்ஜர் ஆதரிக்கிறது, இதனால் வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் போட்டால் 8 மணி நேரம் பேட்டரி தாங்கும் என்று கூறப்படுகிறது. மோட்டோ Maxx ஸ்மார்ட்போன் மற்ற குறிப்புகள், ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் கொண்டுள்ளது. இதில் 565ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடடிங் லேயர் உடன் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் QHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 420 ஜி.பீ.யூ மற்றும் ரேம் 3GB உடன் இணைந்து 2.7GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 805 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் f / 2.0 aperture மற்றும் டூயல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 21 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. மோட்டோ Maxx இணைப்பு விருப்பங்கள், LTE கேட் 4 கொண்ட 4G LTE, ப்ளூடூத், Wi-Fi, மைக்ரோ-USB மற்றும் ஜிஎஸ்எம் / எட்ஜ் / எச்எஸ்பிஏ+ ஆகியவை அடங்கும். மேலே குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போன் ஒரே ஒரு 64GB சேமிப்பு மாறுபாடுடன் வருகிறது. மோட்டோ Maxx, பரிமாணங்கள் 143.5x73.3x11.2mm, மிகவும் மெல்லிய 8.3mm நடவடிக்கைகளை கொண்டு வருகிறது. இது 176 கிராம் எடையுடையது. கைபேசியில் அச்செலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், இ-காம்பஸ், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், மற்றும் ப்ரோக்சிமிட்டி சென்சார்கள் உள்ளடக்கியது. மோட்டோ Maxx ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்: 565ppi பிக்சல் அடர்த்தி, 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் QHD டிஸ்ப்ளே, ரேம் 3GB, 2.7GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 805 பிராசசர், 21 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 64GB சேமிப்பு, LTE கேட் 4 கொண்ட 4G LTE, ப்ளூடூத், Wi-Fi, மைக்ரோ-USB, ஜிஎஸ்எம் / எட்ஜ் / எச்எஸ்பிஏ+ , ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட், 3900mAh பேட்டரி, 176 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

2வது ஒருநாள் போட்டி : இந்தியா – இலங்கை மோதல்

Posted: 06 Nov 2014 02:38 AM PST

india srilanka

india srilankaஇந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, அகமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 169 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் ரகானே, தவான் இருவரும் சதம் விளாசியதுடன் முதல் விக்கெட்டுக்கு 231 ரன் சேர்த்து அசத்தினர். ரெய்னா அரை சதம் அடித்தார். கோஹ்லி, ராயுடு ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளதால் இந்தியா உற்சாகமாக உள்ளது. காயம் அடைந்துள்ள வருண் ஆரோனுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி வெற்றியைத் தொடரும் முனைப்புடன் களமிறங்கும் நிலையில், இலங்கையும் பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணியில் அனுபவ வீரர்கள் தில்ஷன், சங்கக்கரா, ஜெயவர்தனே, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இளம் ஸ்பின்னர் அக்சர் பட்டேலை சமாளிப்பதில் இலங்கை பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அகமதாபாத் மைதானத்தில் இந்தியா விளையாடியுள்ள 14 ஒருநாள் போட்டிகளில் 6ல் மட்டுமே வென்றுள்ளது, இலங்கை அணிக்கு ஊக்கமளிக்கும் புள்ளி விவரமாக உள்ளது. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்தியா மீண்டும் ரன் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிரடியில் ரைலீ தெ.ஆப்ரிக்கா வெற்றி!

Posted: 06 Nov 2014 02:32 AM PST

Raili

Railiமுதல் டி20 போட்டியில், தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஆஸி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. வாட்சன் 47, பாக்னர் 41, ஒயிட் 24 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. ஹெண்ட்ரிக்ஸ் டக் அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு டி காக் - ரைலீ ரோஸ்ஸோ ஜோடி 129 ரன் சேர்த்தது. டி காக் 46, ரைலீ 78 ரன் (50 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் டுமினி 6, மில்லர் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரைலீ ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய மாணவர்கள் பாதிப்பு அமெரிக்க போலி பல்கலை: நிறுவனருக்கு 16 ஆண்டு சிறை!

Posted: 06 Nov 2014 01:12 AM PST

Jail

Jailஅமெரிக்காவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 1,500 பேர் அங்கிருந்து விரட்டப்படுவதற்கு காரணமாக இருந்த போலி பல்கலை நிறுவனருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு டிரை வாலி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதனை சூசன் ஜியோ பிங் சூ (44) என்ற பெண்மணி தொடங்கினார். குறைந்த கல்வி கட்டணம், மேலும் கடினமான எப்-1 விசாவையும் பல்கலைக்கழகமே பெற்றுத்தர உதவி செய்யும் என்பதால் இந்தியாவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலையில் சேர்ந்தனர். 11 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் ஒரே ஆண்டில் 939 மாணவர்களுடன் அசுர வளர்ச்சி அடைந்தது. இதற்கிடையே, 2011ம் ஆண்டு அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், டிரை வாலி பல்கலைக்கழகம் போலியானது என்றும், அதில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெற்றிருப்பது போலி விசா என்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை மூடி, இந்திய மாணவர்கள் 1,500 பேரையும் வலுக்கட்டாயமாக நாட்டுக்கு திருப்பி அனுப்பினர். பல்கலை நிறுவனர் சூசன் மீது விசா மோசடி, போலி பல்கலை, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் 3 ஆண்டுக்கு பிறகு தற்போது தீர்ப்பளித்துள்ளது. போலி விசா, போலி பல்கலைக்கழகம் என 1500 இந்திய மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த சூசனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கு, சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

செல்வாக்கு மிக்க தலைவர்களில் உலகில் மோடிக்கு 15-வது இடம்!

Posted: 06 Nov 2014 12:44 AM PST

Modi

Modiஉலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 15-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு பரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நமது இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். இதே போல இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் அசிஸி உட்பட 12 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மோடி குஜராத் மாநிலத்தை முன்னேற்றிய விதத்தை போர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது . மேலும் கடந்தாண்டு இதே பட்டியலில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 21-வது இடம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™