மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தென் மாநிலங்களில் கடல் வழியாக தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு படை உஷார்
- பொது மக்கள் புகார் செய்ய கியோஸ்க்: நாடு முழுவதும் புதிய திட்டம் வருகிறது
- கொல்லத்திலும் பறவை காய்ச்சலால் 200 கோழிகள் சாவு
- ஒன்றாக டிக்கெட் எடுத்து தனித்தனியாக சென்றதால் திருப்பதியில் தரிசனத்துக்கு மறுப்பு
- ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தில் வரதீட்சை பூஜை: மனிஷா கொய்ராலா–ஹேமமாலினி பங்கேற்றனர்
- திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்
- சித்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்
- ஐதராபாத்தில் கல்லூரி வகுப்பறையில் மாணவர் அடித்துக்கொலை
- பம்பையில் வெள்ளம்: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
- இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
- அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
- இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம்: ஸ்மிரிதி இரானி அறிவிப்பு
- மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட்: அடுத்த மாதம் ஏவப்படுகிறது
- நிலக்கரி துறையை தனியார் மயமாக்க மோடி அரசு திட்டம்: சோனியா காந்தி
- ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு: பிரதமர் மோடி தகவல்
- டெல்லியில் தேசிய போலீஸ் நினைவிடம்: ராஜ்நாத் சிங் தகவல்
- வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் இந்தியா வளர்ச்சி அடைய முடியாது: பிரதமர் மோடி
- பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு மக்களவை சபாநாயகர் ஆதரவு
- எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு ஆபரேசன்
- விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட பத்திரப் பதிவாளர் கைது
| தென் மாநிலங்களில் கடல் வழியாக தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு படை உஷார் Posted: 29 Nov 2014 10:54 PM PST இந்தியாவின் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதையடுத்து தீவிரவாத இயக்கங்களையும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும் மத்திய அரசின் உளவு துறை அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அப்போது வட மாநிலங்களை குறிவைத்த தீவிரவாதிகளின் கவனம் தென் மாநிலங்கள் பக்கம் திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது. |
| பொது மக்கள் புகார் செய்ய கியோஸ்க்: நாடு முழுவதும் புதிய திட்டம் வருகிறது Posted: 29 Nov 2014 10:45 PM PST போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல் புகார்களை பதிவு செய்யும் எந்திரங்கள் நாடு முழுவதும் நிறுவப்படுகிறது. தற்போது பொது மக்கள் புகார்களை போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முறையிடும் நிலை உள்ளது. பலர் போலீஸ் நிலையத்துக்கு செல்வதை அவமானமாக கருதுகிறார்கள். இதனால் பல புகார்கள் போலீசின் கவனத்துக்கு செல்வது இல்லை. |
| கொல்லத்திலும் பறவை காய்ச்சலால் 200 கோழிகள் சாவு Posted: 29 Nov 2014 10:01 PM PST கேரள மாநிலம் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் எச்–5 என்ற வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களிலும் நோய் பாதித்த வாத்துகள் மற்றும் கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பறவை காய்ச்சல் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களிலும் முதற்கட்டமாக |
| ஒன்றாக டிக்கெட் எடுத்து தனித்தனியாக சென்றதால் திருப்பதியில் தரிசனத்துக்கு மறுப்பு Posted: 29 Nov 2014 09:57 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் வீடு திரும்பும் வழியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் சீதா நகரத்தை சேர்ந்த 42 அய்யப்ப பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் |
| ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தில் வரதீட்சை பூஜை: மனிஷா கொய்ராலா–ஹேமமாலினி பங்கேற்றனர் Posted: 29 Nov 2014 09:55 PM PST ஆந்திர மாநிலம் சித்தூரில் வரதய்யா பாளையம் பகுதியில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கல்கி பகவானை தரிசித்து செல்கிறார்கள். நேற்று கல்கி ஆசிரமத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை வரதீட்சை பூஜை நடைபெற்றது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், அனைவரும் நலன் பெறவும், நடைபெற்ற இந்த பூஜையில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஹேமமாலினி, |
| திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர் Posted: 29 Nov 2014 09:31 PM PST திருவனந்தபுரம் அருகே மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள காலனி என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது தாயார் மகளை பல இடங்களிலும் தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு |
| சித்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம் Posted: 29 Nov 2014 09:26 PM PST திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் அன்பு என்கிற 'புல்லட்' செல்வம் (வயது45). கஞ்சா வியாபாரியான இவர், கடந்த ஜூன் மாதம் 6–ந்தேதி திருப்பதியை அடுத்த சந்திரகிரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் |
| ஐதராபாத்தில் கல்லூரி வகுப்பறையில் மாணவர் அடித்துக்கொலை Posted: 29 Nov 2014 09:26 PM PST ஐதராபாத்தில் பிரகதி மகா வித்யாலயா கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படிக்கும் மாணவர் கே.எஸ்.ஹர்ஷவர்தன் ராவ். இவருடன் படிக்கும் மாணவியை அதே கல்லூரியைச் சேர்ந்த மூத்த மாணவர் சதீஷ் கோட்கர் என்பவர் கேலி கிண்டல் செய்து வந்தார். |
| பம்பையில் வெள்ளம்: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Posted: 29 Nov 2014 08:59 PM PST மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளதால் இருமுடி கட்டிய அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று சபரிமலையில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் காரணமாக அய்யப்ப பக்தர்கள் தங்கள் குழுவை விட்டு பிரிந்து தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களை குழுவுடன் சேர்ப்பதற்கு தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், |
| இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு Posted: 29 Nov 2014 08:22 PM PST அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் தொடங்கியது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது கூறியதாவது:- தீவிரவாதிகள் என்ற போர்வை பயன்படுத்திக் கொண்டே இந்தியாவின் |
| அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு Posted: 29 Nov 2014 07:08 PM PST நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, டெல்லி மேல்-சபையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அவினாஷ்ராஜ் கன்னா, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். |
| இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம்: ஸ்மிரிதி இரானி அறிவிப்பு Posted: 29 Nov 2014 05:55 PM PST உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் டெல்லி மேல்-சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவர் தினத்தை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் |
| மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட்: அடுத்த மாதம் ஏவப்படுகிறது Posted: 29 Nov 2014 04:13 PM PST ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. |
| நிலக்கரி துறையை தனியார் மயமாக்க மோடி அரசு திட்டம்: சோனியா காந்தி Posted: 29 Nov 2014 02:51 PM PST ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடந்து வருகிறது. இந்த தேர்தல் நவம்பர் 25, டிசம்பர் 2, 9, 14, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை அடுத்து வருகிற டிசம்பர் 2ந்தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு நடந்த தேர்தல் தொடர்பான கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஜக்சாலை தொகுதியின் வேட்பாளர் துலால் பூயனை ஆதரித்து பேசினார். |
| ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு: பிரதமர் மோடி தகவல் Posted: 29 Nov 2014 02:24 PM PST பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் |
| டெல்லியில் தேசிய போலீஸ் நினைவிடம்: ராஜ்நாத் சிங் தகவல் Posted: 29 Nov 2014 12:52 PM PST கவுகாத்தி போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசும்போது கூறியதாவது:- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்புக்காக பெரும் அளவிலான போலீசார் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து உள்ளனர். ஆனாலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எந்தவொரு |
| வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் இந்தியா வளர்ச்சி அடைய முடியாது: பிரதமர் மோடி Posted: 29 Nov 2014 10:38 AM PST அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்ல உள்ளார் அது குறித்து அவர் தனது டிவிட்டரில் கூறி இருப்பதாவது; வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் இந்தியா முழுவதும் |
| பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு மக்களவை சபாநாயகர் ஆதரவு Posted: 29 Nov 2014 09:53 AM PST பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறுவதற்கு உரிய விசயங்களில் என்னால் முடிந்தவரை செயல்படுவேன் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். |
| எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு ஆபரேசன் Posted: 29 Nov 2014 08:34 AM PST பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி அரசு மருத்துவமனையான எய்ம்ஸ்-ல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் அமித் குப்தா கூறும்போது ''ஆபரேசன் செய்தபின் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் பயப்படக்கூடிய அளவில் வேறு எந்த பாதிப்புல் |
| விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட பத்திரப் பதிவாளர் கைது Posted: 29 Nov 2014 08:20 AM PST மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஷக்கர்கெடி கிராமத்தைச் சேர்ந்தவர், துளசிராம் காதி. விவசாயியான இவர் கடந்த 2002-ம் ஆண்டு இதே கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை இந்தூர் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்து வைத்திருந்தார். நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பித்து இடத்தை பதிவு செய்ததால் அந்த |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |