Tamil Star |
- ஒரே மயக்கம், வாந்தியா: 5 இலந்தை பழம் சாப்பிடுங்க
- தண்ணீரை கடக்க முயன்ற சிங்கத்திற்கு முதலை கொடுத்த பயங்கர ஷாக்….
- பெண்ணை காப்பாற்ற போன மனிதர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பரிதாபக்காட்சி….
- நீங்க முன்னப்பின்ன இப்படியொரு ஆலங்கட்டி மழையைப் பார்த்ததுண்டா?
- துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
- பேஸ்புக்கை வீழ்த்திய வாட்ஸ் அப்!
- தாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி
- ரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா!
- ரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்!
- மரத்தை கல்யாணம் கட்டி முத்தமழை பொழிந்த விநோத நபர்!
- மகிந்த மூன்றாவது முறையும் வெல்வார்: அவரது ஆஸ்தான சோதிடர்
- பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை: சிங்கள பத்திரிகை!
- தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்!
- சமூக உதவி கணனியில் தவறு: மில்லியன் டொலர்கள் தவறுதலாக வழங்கப்பட்டடுள்ளதா!
| ஒரே மயக்கம், வாந்தியா: 5 இலந்தை பழம் சாப்பிடுங்க Posted: 29 Nov 2014 05:36 AM PST
இலந்தை பழம் மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். * இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். * மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும். * இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும். * இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும். * வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும். * தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும். * இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தண்ணீரை கடக்க முயன்ற சிங்கத்திற்கு முதலை கொடுத்த பயங்கர ஷாக்…. Posted: 29 Nov 2014 05:27 AM PST |
| பெண்ணை காப்பாற்ற போன மனிதர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பரிதாபக்காட்சி…. Posted: 29 Nov 2014 05:25 AM PST |
| நீங்க முன்னப்பின்ன இப்படியொரு ஆலங்கட்டி மழையைப் பார்த்ததுண்டா? Posted: 29 Nov 2014 05:23 AM PST |
| துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல் Posted: 29 Nov 2014 05:19 AM PST
துளசி செடி ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் துளசியில் பல தீமைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இதன் தீமைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும். துளசியின் தீமைகள் துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளதால், துளசியை அதிகமாக சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும். இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. கர்ப்பணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பும் எளிதாக அமையாது. இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக்கை வீழ்த்திய வாட்ஸ் அப்! Posted: 29 Nov 2014 05:17 AM PST
இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள். எதற்கெடுத்தாலும் பேஸ்புக் என்ற நிலை தான் உள்ளது, பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்களால்(Instant Messaging Application) அதாவது வாட்ஸ் அப், வீ சாட் போன்றவைகளால் பேஸ்புக் பயன்பாடு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் லாபம் கணிசமாக குறைந்ததுடன், அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 700 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ் அப் இன்னும் வளர்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி Posted: 29 Nov 2014 05:13 AM PST
அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் மரணம் அணிக்கு தாங்க முடியாத வேதனை என அணித்தலைவர் கிளார்க் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பந்து தாக்கி மரணம் அடைந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ஹியூக்ஸ் மரணம் அவுஸ்திரேலிய அணிக்கு தாங்க முடியாத வேதனையாகும். ஆழமான வலியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இழப்பை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர் அவுஸ்திரேலிய அணிக்காக மகிழ்ச்சியுடன் விளையாடினார், வீரர்களுடனும் மிகுந்த அன்போடு இருந்தார். 2009–ல் அறிமுகமான அவர் 26 டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டியில் ஹியூக்ஸ் பனியன் எண் 64 ஆகும். அந்த நம்பரை வேறு யாருக்கும் அளிக்க கூடாது என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர்களை சகஜ நிலைக்கு கொண்டு வர அணியின் டாக்டர் மற்றும் மனோதத்துவ நிபுணர் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா! Posted: 29 Nov 2014 05:12 AM PST
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவை போற்றிப் புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா. இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார். இவரது உலக சாதனை குறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கூறுகையில், நாங்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ஓட்டங்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள். அப்போதெல்லாம் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்கள் சாத்தியமே என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது ரோகித் சர்மாவின் 264 ஓட்டங்கள் என்ற உலக சாதனை எட்ட முடியாத ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது. இது மிகவும் அபாரமான ஆட்டத்திறன், இதனை கடந்து செல்வது மிகக் கடினம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ஓட்டங்கள் சாதனை முறியடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே எனது பதில் என்று தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்! Posted: 29 Nov 2014 04:46 AM PST
ஈரானிய பெண்மணி ஒருவர் தனது முகத்தில் இருந்த பர்தா துணியை அகற்றிவிட்டு, ரயிலில் ஆடிப்பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. சமீபத்தில் ஆண்கள் கைப்பந்து போட்டியை ரசித்த ஈரான் பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறைதண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரானின் சுரங்க ரயிலில் பயணித்த பெண் ஒருவர், இசையை கேட்ட ஆர்வத்தில் நடனமாட தொடங்கியுள்ளார். அப்போது தலையை மூடி இருந்த பர்தா, ஆர்வ மிகுதியால் அவர் வேகமாய் ஆட ஆட, தலையில் இருந்து சரிந்து அவரது கழுத்தில் இறங்கி விட்டது. இதை பார்த்த பெண் பயணிகள் சிலர் அவர் ஆடும் போது தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைத்து, அந்த ரயில் பெட்டியில் இருந்து வெகு விரைவாக இறங்கி சென்றுள்ளனர். பேஸ்புக்கில் பதிவு செய்யபட்ட இந்த வீடியோவை, 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவரது செயல் தப்பில்லை என்றாலும் பொது இடங்களில் நடனம் ஆடுவது ஈரானில் தடை செய்யப்பட்டு உள்ளதால், இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரத்தை கல்யாணம் கட்டி முத்தமழை பொழிந்த விநோத நபர்! Posted: 29 Nov 2014 04:43 AM PST
பெரு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரிச்சர்ட் டோரஸ் (Richard Torres) கொலம்பிய நாட்டின் பொகோடாவில் (Bogota) உள்ள தேசிய பூங்காவில் உள்ள மரம் ஒன்றை, தனது நண்பர்கள் கூட்டத்துடன் சென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்காக மணமகன் போல் அலங்கரித்து, அவர் அழைத்து வரப்பட்டார். மேலும் மரத்திற்கு மணப்பெண்ணுக்கு உரிய அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருமண அடையாளமாக மணமகள் மரத்திற்கு மணமகன் முத்தமிட்டபோது, கூடி இருந்தவர்கள் கை தட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு பிறகு மரத்திற்கு கீழே சிறிய பழ விருந்தும் நடைபெற்றது. இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்கே இத்திருமணம் நடந்தது என்றும், ஆயுதங்கள் மூலம் புரட்சி செய்வதை விட்டு விட்டு மரங்கள் நட்டு புரட்சி செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார். ரிச்சர்ட் மரத்துடனான தனது முதல் திருமணத்தை, கடந்த 2013ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகிந்த மூன்றாவது முறையும் வெல்வார்: அவரது ஆஸ்தான சோதிடர் Posted: 29 Nov 2014 04:36 AM PST
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை பெற்ற வெற்றியை விட இம்முறை மிக இலகுவாக வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் அல்ல நான்கு தடைவைகள் இலங்கையை ஆட்சி செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியே அடுத்த ஆட்சியை அமைப்பார். பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால பொலன்நறுவை தொகுதியை மாத்திரமல்ல, பொலன்நறுவை மாவட்டத்திலோ, வடமத்திய மாகாணத்திலோ எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார் எனவும் சுமணதாச அபேகுணவர்தன கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை: சிங்கள பத்திரிகை! Posted: 29 Nov 2014 04:35 AM PST
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதி, ஆடை உற்பத்தி தொழிற்சாலை, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எதிரில் இருக்கும் நிலப்பரப்பு காணி, ட்ரோலார் மற்றும் படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு அச்சகங்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன. இதனை தவிர கொழும்பில் உள்ள பிரதான வெளிநாட்டு வங்கியில் இருந்த 50 கோடியே 50 லட்சம் ரூபா பணத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கு, உள்நாட்டு வங்கியில் இருந்து மூன்று கோடியே 50 லட்சம் ரூபாவுடனான வங்கி கணக்கு என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த பணம் திறைசேரிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்! Posted: 29 Nov 2014 04:28 AM PST
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்- மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு நடத்திய தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், 2014 வழமை போல் எழுச்சி மிக்க மக்கள் வருகையோடு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஒன்ராரியோ மாநிலத்தில். மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட்டில், அகவம், ஒழுங்கு செய்த 27 மாவீரர் நாளின்; நான்கு நிகழ்வுகளிலும். எமது மக்கள் இந்த ஆண்டும் பெருந் திரளாக வருகை தந்து, தமது தாயக உணர்வை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும். காலை 6..30 மணி. மதியம் 12.00மணி, மாலை 4.00 மணி. இரவு 7.00 மணி என்று ஒழுங்கு செய்யக்பெற்றிருந்த நான்கு நிகழ்வுகளும். ஓன்றிணைந்த மக்களது வருகையினால் எழுச்சிபெற்று நடைபெற்றது. எழுச்சி நடனங்கள். வானம் பாடிகளின் தாயக விடுதலைப் பாடல்கள். நாடகம், இளையோரின் நிகழ்ச்சிகள். உரை என்று மாவீரர்களின் நினைவோடு அரங்கம் பேரெழுச்சி பெற்றுத் திகழ்ந்தது. சிவப்பு. மஞ்சள் வர்ணங்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அரங்க அமைப்பும், துயிலும் இல்ல வடிவமைப்பும். தேசத்தின் அடையாள அணிவகுப்பும் என கார்த்திகை மாதம் கார்த்திகைப் பக்களின் ஈகத்தைப் புலப்படுத்தி நிற்க. எமது மக்கள். நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதைச் சரியாகப் புலப்படுத்திய நாள் 27. 11. 14. மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்பத் திடல் ஈழத் தமிழர்களின் தாகத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். என்ற இலட்சிய உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழர் தேசிய நினைவெழுச்சிநாள் மாவீரரை வணங்கும் நாள் என்பதை எமது மக்கள் தமது வருகையின் மூலம் புலப்படு;த்தியுள்ளனர் என்பது இந்த ஆண்டு மாவீரர் நாளின் மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சமூக உதவி கணனியில் தவறு: மில்லியன் டொலர்கள் தவறுதலாக வழங்கப்பட்டடுள்ளதா! Posted: 29 Nov 2014 04:23 AM PST
கனடா- ஒன்ராறியோவில் சமூக உதவிப்பணம் வழங்குவதற்காக புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி முறை தவறான நேரடி வைப்பு மற்றும் காசோலைகளை வழங்கியுள்ளது. குறைந்தது 17,000 கொடுப்பனவுகள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது மொத்தமாக 20-மில்லியன் டொலர்களாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தொகையின் மூன்றில் இரண்டு பகுதி கொடுப்பனவுகள் எவரது வங்கிக் கணக்கிலும் போடப்படவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் 7-மில்லியன் டொலர்கள் வரை தவறுதலாக நேரடி வைப்பில் அல்லது காசோலை மூலம் தபால் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை குறைந்த பாதிப்புடன் தடை செய்து அல்லது மீளப்பெறக் கூடியதாக இருந்ததாகவும் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலானவற்றை மீளப்பெற முடியவில்லை எனவும் தாங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளதாகவும் அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Ontario Works (OW) மற்றும் ஒன்ராறியோ உடல் இயக்க குறைபாட்டு திட்டம் போன்றவற்றிற்கான இந்த புதிய நிர்வாக மென்பொருளை செயல் முறை படுத்துவதற்கு ஒன்ராறியோ மாகாணம் 240-மில்லியன் டொலர்கள் செலவழித்துள்ளது. இச்சமுக உதவி முகாமைத்துவ திட்ட மென்பொருளை அபிவிருத்தி மற்றும் செயல்முறைப்படுத்த நான்கு வருடங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் முதலாவது செயல்பாடு நவம்பர் மாதம் 12-ந்திகதி ஆரம்பமானது. அன்றில் இருந்து குழப்பமும் ஆரம்பித்தது. ஒரு மிகச் சிறிய அளவு பகுதியினருக்கு – சில 17,000 தனிநபர்களிற்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட ஒரு சிறிய சிக்கல் உள்ளதென மாகாணத்தின் சமூகம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் ஹெலெனா ஜக்செக் கூறியுள்ளார். 17,000 கொடுப்பனவுகளில் ஒருவருக்கான சராசரி கொடுப்பனவு 1160.47 டொலர்களாகும். ஆனால் பெரும்பாலானவை பணம் மாறுவதற்கு முன்னர் பிடிபட்டு விட்டதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வைப்பு அல்லது காசோலை சுமார் 6,000 பேர்களிற்கு சென்றுள்ளது. அடிப்படையில் மென்பொருள் மேம்பாடு நடைமுறைப்படுத்தல் படு மோசமானதென ஒட்டாவா இயலாமை ஆதரவு காரியாலயத்தில் பணிபுரியும் டிலன் லினிகர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









துளசி செடி ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் துளசியில் பல தீமைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இதன் தீமைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும். துளசியின் தீமைகள் துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளதால், துளசியை அதிகமாக சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும். இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. கர்ப்பணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பும் எளிதாக அமையாது. இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.






ஈரானிய பெண்மணி ஒருவர் தனது முகத்தில் இருந்த பர்தா துணியை அகற்றிவிட்டு, ரயிலில் ஆடிப்பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. சமீபத்தில் ஆண்கள் கைப்பந்து போட்டியை ரசித்த ஈரான் பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறைதண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரானின் சுரங்க ரயிலில் பயணித்த பெண் ஒருவர், இசையை கேட்ட ஆர்வத்தில் நடனமாட தொடங்கியுள்ளார். அப்போது தலையை மூடி இருந்த பர்தா, ஆர்வ மிகுதியால் அவர் வேகமாய் ஆட ஆட, தலையில் இருந்து சரிந்து அவரது கழுத்தில் இறங்கி விட்டது. இதை பார்த்த பெண் பயணிகள் சிலர் அவர் ஆடும் போது தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைத்து, அந்த ரயில் பெட்டியில் இருந்து வெகு விரைவாக இறங்கி சென்றுள்ளனர். பேஸ்புக்கில் பதிவு செய்யபட்ட இந்த வீடியோவை, 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவரது செயல் தப்பில்லை என்றாலும் பொது இடங்களில் நடனம் ஆடுவது ஈரானில் தடை செய்யப்பட்டு உள்ளதால், இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை பெற்ற வெற்றியை விட இம்முறை மிக இலகுவாக வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் அல்ல நான்கு தடைவைகள் இலங்கையை ஆட்சி செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியே அடுத்த ஆட்சியை அமைப்பார். பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால பொலன்நறுவை தொகுதியை மாத்திரமல்ல, பொலன்நறுவை மாவட்டத்திலோ, வடமத்திய மாகாணத்திலோ எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார் எனவும் சுமணதாச அபேகுணவர்தன கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதி, ஆடை உற்பத்தி தொழிற்சாலை, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எதிரில் இருக்கும் நிலப்பரப்பு காணி, ட்ரோலார் மற்றும் படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு அச்சகங்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன. இதனை தவிர கொழும்பில் உள்ள பிரதான வெளிநாட்டு வங்கியில் இருந்த 50 கோடியே 50 லட்சம் ரூபா பணத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கு, உள்நாட்டு வங்கியில் இருந்து மூன்று கோடியே 50 லட்சம் ரூபாவுடனான வங்கி கணக்கு என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த பணம் திறைசேரிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


கனடா- ஒன்ராறியோவில் சமூக உதவிப்பணம் வழங்குவதற்காக புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி முறை தவறான நேரடி வைப்பு மற்றும் காசோலைகளை வழங்கியுள்ளது. குறைந்தது 17,000 கொடுப்பனவுகள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது மொத்தமாக 20-மில்லியன் டொலர்களாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தொகையின் மூன்றில் இரண்டு பகுதி கொடுப்பனவுகள் எவரது வங்கிக் கணக்கிலும் போடப்படவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் 7-மில்லியன் டொலர்கள் வரை தவறுதலாக நேரடி வைப்பில் அல்லது காசோலை மூலம் தபால் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை குறைந்த பாதிப்புடன் தடை செய்து அல்லது மீளப்பெறக் கூடியதாக இருந்ததாகவும் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலானவற்றை மீளப்பெற முடியவில்லை எனவும் தாங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளதாகவும் அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Ontario Works (OW) மற்றும் ஒன்ராறியோ உடல் இயக்க குறைபாட்டு திட்டம் போன்றவற்றிற்கான இந்த புதிய நிர்வாக மென்பொருளை செயல் முறை படுத்துவதற்கு ஒன்ராறியோ மாகாணம் 240-மில்லியன் டொலர்கள் செலவழித்துள்ளது. இச்சமுக உதவி முகாமைத்துவ திட்ட மென்பொருளை அபிவிருத்தி மற்றும் செயல்முறைப்படுத்த நான்கு வருடங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் முதலாவது செயல்பாடு நவம்பர் மாதம் 12-ந்திகதி ஆரம்பமானது. அன்றில் இருந்து குழப்பமும் ஆரம்பித்தது. ஒரு மிகச் சிறிய அளவு பகுதியினருக்கு – சில 17,000 தனிநபர்களிற்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட ஒரு சிறிய சிக்கல் உள்ளதென மாகாணத்தின் சமூகம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் ஹெலெனா ஜக்செக் கூறியுள்ளார். 17,000 கொடுப்பனவுகளில் ஒருவருக்கான சராசரி கொடுப்பனவு 1160.47 டொலர்களாகும். ஆனால் பெரும்பாலானவை பணம் மாறுவதற்கு முன்னர் பிடிபட்டு விட்டதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வைப்பு அல்லது காசோலை சுமார் 6,000 பேர்களிற்கு சென்றுள்ளது. அடிப்படையில் மென்பொருள் மேம்பாடு நடைமுறைப்படுத்தல் படு மோசமானதென ஒட்டாவா இயலாமை ஆதரவு காரியாலயத்தில் பணிபுரியும் டிலன் லினிகர் தெரிவித்துள்ளார்.