ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006
- சாத்தான் - கலீல் ஜிப்ரான்
- மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ: ஒரு மாதத்தில் 3 ஆயிரம் பேர் பாதிப்பு
- 315ஐ மூன்றால் வகுக்க தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட்
- இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல
- கூகுளில் இந்தி மொழி குரல் தேடல் அறிமுகம்: விரைவில் தமிழில் தடம் பதிக்க திட்டம்
- சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா
- இந்தியாவிலிருந்து செல்லும் கருப்பு பணம் வெள்ளையாக திரும்புவது இப்படித்தான்...!
- அனைவரும் வங்கி கணக்கு துவங்குவோம்
- இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- மக்களைப் பாதிக்கும் விலைவாசி ஏற்றம்... சமாளிப்பது எப்படி?
- செந்தில் இன் செல்லப்பெண் தனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்..................வாழ்த்தலாம் வாருங்கள் நண்பர்களே !
- முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (70)
- தமிழா! தமிழா!
- தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (323)
- ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -114)
- இராணுவமயமாகின்றது மீரியபெத்த
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- 5000 /2000-கிளுகிளுப்பரசர் (ayyasamy ram அவர்களை)வாழ்த்துவோம்
- 28000 பதிவுகள் 5000 மதிப்பீடுகள் பெற்ற க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்
- கொள்ளைக்காரி ...!! - Mano Red
- பூமிக்குள் பொன் விரல்கள் – விடுகதை
- சிக்கன முதல்வர்: பொதுமக்கள் ஆச்சர்யம்
- கேட்கலாமா - ஒரு பக்க கதை
- ஆரோக்கிய வாழ்விற்கு பத்து கட்டளைகள்
- உணவின் மொழிகள்
- அர்ச்சனாபுரம் - ஆன்மீகம்
- குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா
- வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு
- நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்!
- சித்த மருத்துவக் குறிப்புகள்
| சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006 Posted: 04 Nov 2014 01:01 PM PST ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006 முன்னாள் ஈராக் நாட்டின் அதிபரான சதாம் உசேன் 1937-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி பிறந்தார். இவர் ஜூலை 16, 1979-ல் இருந்து 2003 ஏப்ரல் 9-ந்தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் வரை ஈராக்கின் அதிபராக இருந்தார். ஈராக்கின் 'பாத்' கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ... |
| Posted: 04 Nov 2014 12:59 PM PST மக்கள் ஃபாதர் சமான் (Father Samaan) சொல்லும் வார்த்தைகளையே வழிகாட்டுதலாகக் கொண்டு இருந்தனர். பாவங்களில் இருந்தும் சாத்தானிடம் இருந்தும் தம்மை விடுவிக்கச் சமானால் மட்டுமே முடியும் என்று நம்பினார்கள். சொர்க்கத்திற்கு செல்லும் இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் அவர் சொல்லும் வாசகங்களை, அறிவுரைகளைத் தங்கம், வெள்ளி மற்றும் தங்களின் அறுவடையில் கிடைக்கும் இலாபம் என எதையும் தந்து பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். சாத்தானுக்கு எதிரான போரில் வெல்லும் உத்திகளும் ... |
| மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ: ஒரு மாதத்தில் 3 ஆயிரம் பேர் பாதிப்பு Posted: 04 Nov 2014 11:39 AM PST மெட்ராஸ் ஐ இதுவரை இல்லாத அளவுக்கு மழைக்காலத்தில் அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வழக்கமாக வெயில் கொளுத்தும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாகக் காணப்படும் மெட்ராஸ் ஐ, தற்போது மழைக்காலத்தில் தீவிரமாக பரவி வருகிறது. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் சராசரியாக 70 பேர் வீதம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு பணிபுரியும் ... |
| 315ஐ மூன்றால் வகுக்க தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் Posted: 04 Nov 2014 11:08 AM PST கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், சமீபத்தில் சென்றார்.அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.பின், அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு ... |
| இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Posted: 04 Nov 2014 10:59 AM PST பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமைப் பாணியில் இந்திரா காந்தி போன்றவர் என்றும், மாறாக ராகுல் காந்தி ஒரு தலைவரே அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராஜ்தீப் சர்தேசாய் தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். "2014- இந்தியாவை மாற்றிய தேர்தல்" ("2014 The Election That Changed India")- என்ற இந்த நூலில் அவர் பல உள்விவரங்களையும் பதிவு செய்துள்ளார். "ஆளுமை முனைப்புக் கொண்ட தலைமைப் பாணியில் மோடி ஒருவேளை இந்திரா காந்திக்கு ஒப்பானவராக இருக்கலாம். அதிகார மனப்பண்புடையவர் ... |
| கூகுளில் இந்தி மொழி குரல் தேடல் அறிமுகம்: விரைவில் தமிழில் தடம் பதிக்க திட்டம் Posted: 04 Nov 2014 10:56 AM PST இந்திய மொழிகளில் இணைய தளத்தை உருவாக்கும் பணியில் கூகுள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய மொழிகளில் இணையதள ஒருங்கிணைப்பு (ஐஎல்ஐஏ) எனப்படும் இந்திய பிராந்திய மொழிகள் வளர்ச்சிக்கான குழுவுடன் கூகுள் நிறுவனம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பிராந்திய மொழி பேசுவோரை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். முதல் முறையாக ஆன்லைனை உபயோகிப்போர் அதை முழுமையாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். குறிப்பாக ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மொபைல் சாதனங்கள் மூலம் ஆன்லைனை பயன்படுத்து வோருக்காக ... |
| சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா Posted: 04 Nov 2014 07:45 AM PST பொன்னியின் செல்வனை வாசித்தவரா நீங்கள் அதிர்ச்சி அடைவது உறுதி. http://www.mediafire.com/download/mbzdoa8x8lzhs9i/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.pdf என்றும் அன்புடன் செல்லா |
| இந்தியாவிலிருந்து செல்லும் கருப்பு பணம் வெள்ளையாக திரும்புவது இப்படித்தான்...! Posted: 04 Nov 2014 06:04 AM PST டெல்லி: கருப்பு பணம் இந்தியாவில் இருந்து எப்படி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் தாயகத்துக்கே திரும்பி வருகிறது என்பதை தெரிந்து கொண்டால்தான் கருப்பு பண முதலைகளின் நெட்வொர்க் எவ்வளவு வலிமையானது என்பதை புரிந்து கொள்ள முடியும். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு இந்த கருப்பு பண முதலைகளின் செல்வாக்கு கடல் கடந்தும் இருப்பது ஒரு உதாரணம். சுவிஸ்சில் இருந்தால் லாபம் என்ன? இந்தியாவில், வரி செலுத்தாமல் சேர்க்கும் பணத்தை சுவிட்சர்லாந்து, மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு ... |
| அனைவரும் வங்கி கணக்கு துவங்குவோம் Posted: 04 Nov 2014 05:59 AM PST அனைவரும் வங்கி கணக்கு துவங்குவோம் ![]() |
| இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 04 Nov 2014 05:08 AM PST இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் . ![]() |
| மக்களைப் பாதிக்கும் விலைவாசி ஏற்றம்... சமாளிப்பது எப்படி? Posted: 04 Nov 2014 05:05 AM PST காலை கண் விழித்ததும் நாம் குடிக்கும் பாலின் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது. பாலைக் காய்ச்ச பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தினமும் பயன்படுத்தும் செல்போனின் கட்டணம் உயர்ந்ததுடன், அதற்கு சார்ஜ் போட பயன்படும் மின்சாரக் கட்டணமும் உயரப்போகிறது. பால் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே வந்துவிட்டாலும், பிறவற்றின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்பதே இன்றைய நிலைமை. பற்றாக்குறையை அதிகரிக்கும் பால் விலை! அத்தியாவசிய பொருள்களின் விலையேறும்போது ... |
| Posted: 04 Nov 2014 04:56 AM PST இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ்கா இந்த பாட்டி இன் அன்பு வாழ்த்துகள் செல்லம் எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ்க !! |
| முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Posted: 04 Nov 2014 04:26 AM PST ![]() |
| Posted: 04 Nov 2014 04:12 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 04 Nov 2014 03:56 AM PST அடங்கிப் போகவில்லை , ஆந்தை போல விழித்திருக்கிறோம், இழிநிலை ஏற்பட்டாலும், ஈரம் நெஞ்சில் வற்றவில்லை, உழைக்காமல் இருந்ததில்லை, ஊளையிடும் நரிகளல்ல , எத்தனை முறை தோற்றாலும், ஏற்றம் பெறும் நாள்வரும், ஐயம் இனி எதற்கு , ஒத்துழைப்பு கொடு தமிழா, ஓநாய்களை விரட்டியடிப்போம், விழித்திடு தமிழா! விழித்திடு! |
| தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Posted: 04 Nov 2014 03:54 AM PST 'ஆஸம் ஆஸம்', 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்' 'யூ கய்ஸ் ராக்' என்றெல்லாம் தமிழ் சேனல்கள் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டும்போது, ''இப்போ இந்தக் கூம்பு வடிவத் தக்கையை மிதக்கவிட்டுதான் நான் அமேஸான் காட்டிலிருந்து தப்பிப் பிழைக்கப்போகிறேன்'' என்று தமிழில் பேசுகிறார் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் க்ரில்ஸ். இது எப்படி சாத்தியமானது என டிஸ்கவரி சேனலின் தெற்கு ஆசியாபசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் ராகுல் ஜோரியிடம் கேட்டதில்... ''டிஸ்கவரி சேனல் உலகின் நம்பர் ஒன் கட்டண சேனலாக இருக்கிறது. ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (323) Posted: 04 Nov 2014 03:46 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்! Posted: 04 Nov 2014 03:31 AM PST சென்னை: ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -114) Posted: 04 Nov 2014 03:17 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| Posted: 04 Nov 2014 03:10 AM PST மீரியபெத்த மண்சரிவு மீண்டும் ஒரு சுனாமியை இலங்கையின் மலையகப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. அலை அலையாய் மக்கள் திரண்டு வருவதையும், நாடு முழுவதும் மக்கள் உதவிக் கரம் நீட்டுவதையும் காணும்போது மனித நேயம் சாகவில்லை என்ற நம்பிக்கை நமக்கு புத்துணர்வைத் தருகின்றது. நாங்கள் இவ்விடத்திற்கு வியாழனன்று சென்றிருந்தபோது ஒரு சில அமைச்சர்களும் வந்திருந்தனர். இப்போது எதைப் பார்க்க வருகிறார்கள் இவர்களுக்கு ஓட்டுப்போட்டு நாய் படாத பாடு என்று இளைஞர்களும் பெண்களும் வாய்விட்டுக் கூறியதைக் கேட்டோம். அத்தனை வெறுப்பு ... |
| Posted: 04 Nov 2014 02:58 AM PST இளகிய நெஞ்சம்…!! * மனசில் பொறாமை பூமிக்குள் மறைந்த வேர்களாய் வெளியில் சிரிக்கும் இலைகள். * தேன் கொடுக்கும் பூக்கள் வர்ணிக்க ஆசையா? பேசாத வண்ணத்துப் பூச்சிகள். * இறுகிய உருவமெனினும் இளகிய நெஞ்சம் ஈரம் கசியும் பாறை. |
| Posted: 04 Nov 2014 02:57 AM PST * மாதிரி…!! [ கவிதை ] * வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள் யார் முகத்திலும் வருத்தமில்லை. * உடல் பரிசோதனைச் செய்கிறார்கள் பாதையோரம் குடையின் கீழ்…. * இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள். * |
| 5000 /2000-கிளுகிளுப்பரசர் (ayyasamy ram அவர்களை)வாழ்த்துவோம் Posted: 04 Nov 2014 02:40 AM PST 5000/2000 கிளுகிளுப்பரசர் ayyasamy ram அவர்களைவாழ்த்துவோம் 5000 பதிவுகளை கடந்த 2000 மதிப்பீடுகள் பெற்ற நான் ஸ்டாப் நகைச்சுவை மன்னன் கிளுகிளுப்பரசர் திரு ayyasamy ram அவர்களை வாழ்த்துவோம் ரமணியன் |
| 28000 பதிவுகள் 5000 மதிப்பீடுகள் பெற்ற க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம் Posted: 04 Nov 2014 02:38 AM PST 28000 பதிவுகள் / 5000 மதிப்பீடுகள் பெற்ற க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாழ்த்துக்கள் , கிருஷ்ணம்மா ! மென்மேலும் உயர்க !! ரமணியன் |
| Posted: 04 Nov 2014 02:06 AM PST கர்வமில்லாத காதல் கவிதை அவள், முத்தப் பிழையுடன் மெல்லிய வரிகளில் துல்லியமாக அள்ளிக் கொள்கிறாள்...!! மருதாணி வைத்த களவாணி அவள், கோவத்தில் சிவக்கிறாளா இல்லை மோகத்தில் மிதக்கிறாளா..? மொத்தத்தில் என்னை காதல் யுத்தத்தில் வெல்கிறாள்..!! தேடி வராத தேவதை அவள், மிச்சம் வைக்காமல் மிச்ச உயிரையும் கூச்சமின்றி கேட்டு கூச்சல் போடுகிறாள்...!! அக்கம்பக்கம் குறித்து அக்கறை இல்லாதவள் அவள், மெதுவாய் என் பக்கம் வந்ததும் சொர்க்கம் வந்ததாய் வெக்கம் கொள்கிறாள்...!! பாரதியின் ... |
| பூமிக்குள் பொன் விரல்கள் – விடுகதை Posted: 04 Nov 2014 01:50 AM PST - 1. உச்சியில் கிரீடம், உடம்பெல்லாம் கண்.அது என்ன? - 2. அடி மத்தளம், இலை பெரும்பாய், தோல் சிறியது, காய் துவர்ப்பு, பழம் இனிப்பு._ அது என்ன? - 3. ஊசி போல் இலை இருக்கும், உருத்திராட்சம் போல் காய் காய்க்கும்._ அது என்ன? - 4. பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல, உள்ளே வெளுத்திருக்கும் தேங்காய் அல்ல, உருக்கினால் நெய் வடியும் வெண்ணெய் அல்ல._ அது என்ன? - 5. பூமிக்குள் பொன் விரல்கள்.- அது என்ன? - 6. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும். - 7. காணாமல் பூ பூக்கும், கண்டு ... |
| சிக்கன முதல்வர்: பொதுமக்கள் ஆச்சர்யம் Posted: 04 Nov 2014 01:06 AM PST மகாராஷ்டிரா முதல்வராக, கடந்த வாரம், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். மாநிலம், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை சந்தித்து வரும் நிலையில், முதல்வராக பதவியேற்று உள்ள பட்நாவிஸ், ஆரம்பம் முதலே சிக்கன நடவடிக்கையை கையாள துவங்கி உள்ளார். இவர், நேற்று முன்தினம் மும்பையில் இருந்து நாக்பூருக்கு, தன் மனைவி அம்ருதாவுடன் சென்றார். அப்போது, தனி விமானத்தில் செல்லாமல், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், எகானமி வகுப்பில், பயணம் செய்தார். அத்துடன், விமான டிக்கெட்டிற்கான ... |
| Posted: 03 Nov 2014 10:52 PM PST ![]() |
| ஆரோக்கிய வாழ்விற்கு பத்து கட்டளைகள் Posted: 03 Nov 2014 10:51 PM PST - |
| Posted: 03 Nov 2014 10:50 PM PST ![]() |
| Posted: 03 Nov 2014 10:45 PM PST ![]() |
| குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா Posted: 03 Nov 2014 10:42 PM PST என் ஈகரை உறவுகளுக்கு.... 25.07.12 நாளிட்ட குமுதம் இதழில் 'அம்மா வந்தாள்' என்னும் என் சிறுகதை பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். சுஜாதா முதலிய பெரிய பெரிய ஜாம்பவான்களின் எழுத்துகளைத் தாங்கி வந்த குமுதம் இதழில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மனம் கவர் ஓவியர் ஜெ (ஜெயராஜ்) அவர்களின் ஓவியம் என் கதையை அழகாக்கியுள்ளது என்பது மேலும் ஒரு மகிழ்ச்சி. சிறுகதை அம்மா வந்தாள்... வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் ... |
| வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Posted: 03 Nov 2014 10:41 PM PST - வலைக்கு வழி! - சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக் கொசு வலை கொடுத்திருந்தார்கள். - அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால், வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை என்று சிறை அதிகாரி தெரிவித்தார். - "வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார். - அதற்கு ... |
| நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Posted: 03 Nov 2014 10:39 PM PST நல்லெண்ணெய் சுவையில் இனிப்பு மேலாகவும், கசப்பு, துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் ஜீரணமான பின்பு ஜீரண இறுதியில் இனிப்புச் சுவையாகவே நிற்கும். உடலில் ஜீரணம் செய்யும் ஜாடராக்னி எனப்படும் பசித் தீ தாதுக்களில் பரவியுள்ள நெருப்பு எல்லாவற்றையும் சீர் செய்யும். செய்கையில் சூடான வீரியமுடையது. குடலில் செரிமானம் ஆவதற்கு முன்பே தாதுக்களில் முற்றிலும் சீக்கிரம் பரவும் சக்தி உள்ளது. உடல் அங்கங்களுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், பருமன், தெளிவு, உணவில் திருப்தி, குடல்களில் நெய்ப்பு, போக சக்தி இவற்றை உண்டாக்கும். ஐஆந ... |
| Posted: 03 Nov 2014 10:37 PM PST 1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4.தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5.வாய் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





.jpg)