Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உறவுகளுடன் தொலைபேசியில் உரையாடலாம்: தூக்கு தண்டனை மீனவர்களுக்கு சலுகை

Posted:

கொழும்பு: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், இலங்கை கோர்ட்டால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களை, இலங்கைக்கான இந்திய ஐ கமிஷனர், யாஷ் சின்ஹா நேற்று சந்தித்து, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என, உறுதியளித்தார். இந்திய அரசின் பிரதிநிதி, தங்களை சந்தித்ததில், தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்திய வெளியுறவுத் துறை உத்தரவின் படி, ஐ கமிஷனர் யாஷ் சின்ஹா நேற்று, கொழும்பு அருகே உள்ள வெளிக்கடை சிறைக்கு சென்றார். சிறையில் உள்ள கண்காணிப்பாளர் அறையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் சந்தித்தார். அப்போது, மீனவர்களை ...

மின் கட்டணம் உயர்வு கருத்து கேட்பு நிறைவு: நவ., 13ல் ஆணை வெளியீடு... 15ம் தேதி முதல் அமல்

Posted:

மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, பொதுமக்கள், கருத்து கேட்கப்பட்டதை அடுத்து, புதிய கட்டண ஆணையை, வரும் 13ம் தேதி வெளியிட, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.இதனால், 15ம் தேதி முதல், தமிழகத்தில், மின் கட்டணம் உயர்வு, அமலுக்கு வரும் என, தெரிகிறது.தமிழ்நாடு மின் வாரியம், நிர்வாக சீர்கேடுகளால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.மின் கட்டணம் உயர்வு தொடர்பாக, சென்னை, நெல்லை, ஈரோட்டில், மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில் ...

துப்பாக்கி ஏந்திய போலீசார் சகாயத்துக்கு பாதுகாப்பு

Posted:

கனிம முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க, மதுரை கலெக்டருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு, 'கன்மேன்' பாதுகாப்பு அளிக்க, சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். எனவே, சகாயம் தற்போதுள்ள பணியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதி : மாற்று வழியை பரிசீலிப்பதாக அமைச்சர் கட்காரி தகவல்

Posted:

ராமேஸ்வரம்: ராமர் பாலம் பாதிக்காத வகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்,'' என, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.சென்னை, விசாகப்பட்டினம் உட்பட கிழக்கு கடற்கரை ஓரம் உள்ள இந்திய துறைமுகங்களுக்கு துாத்துக்குடியில் இருந்து கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இப்போது இலங்கையைச் சுற்றி தான் செல்ல வேண்டும். இதற்கு மாற்றுப்பாதையாக, தனுஷ்கோடிக்கும், மன்னாருக்கும் இடையே உள்ள கடற்பகுதியை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தை, கடந்த ஐ.மு.கூட்டணி அரசு துவக்கியது. இந்த வழியில் ...

மூ.கா., கா.மூ.கா., த.மா.கா.,வா?கட்சிக்கு என்ன பெயர்; வாசன் குழப்பம்

Posted:

தனிக்கட்சி துவங்க அதிரடியாக முடிவெடுத்த வாசன், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழப்பம் அடைந்துள்ளார். பழைய த.மா.கா., பெயரை மறுபடியும் சூட்டுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், என்.ஆர்., காங்கிரஸ் ஸ்டைலில், காமராஜர் மூப்பனார் காங்கிரஸ் (கா.மூ.கா., கே.எம்.சி.,) என, பெயர் சூட்டலாமா என்று யோசித்து வருவதாக தெரிகிறது.பெயர் தேர்வு பணிகள், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில், முழுவீச்சில் நடந்து வருகிறது. பழைய த.மா.கா., பெயரை மீண்டும் பெறுவதில் உள்ள சட்டச் சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், அவர் எடுத்து ...

காதி பொருட்களுக்கு தனிப்பட்ட வர்த்தக உரிமை கிடைக்குமா: ஐரோப்பிய நாடுகள் காப்புரிமை பெற்றுள்ளதால் சிக்கல்

Posted:

புதுடில்லி : மகாத்மா காந்தியடிகள் என்றவுடன் நினைவுக்கு வரும் காதி துணிகள் மற்றும் காதி பொருட்களுக்கான, சர்வதேச வர்த்தக உரிமை போராட்டத்தில், ஜெர்மனி நாட்டுடன் மோதுகிறது இந்தியா. அந்தப் பொருட்களை சொந்தம் கொண்டாடும் ஜெர்மனி, அது போன்ற பொருட்களை முன்னரே, ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்து வைத்துள்ளதால், காதி பொருட்களுக்கான வர்த்தக உரிமை, இந்தியாவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்திய கிராமங்களில், காலம் காலமாக, பெண்களின் அழகு சாதன பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சளுக்கான வர்த்தக குறியீடு மற்றும் வர்த்தக ...

கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

Posted:

புதுடில்லி: டில்லியில், 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, டில்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2010ல், டில்லியில் வீட்டு வேலை செய்த, 60 வயது பெண்ணை, ஆச்சிலால் என்பவர், மது போதையில், பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், அந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த வழக்கில், டில்லி விசாரணை கோர்ட், ஆச்சிலாலுக்கு, ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து, அவர், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா ...

பிரதமர் மோடிக்கு புதிய விமானமா?

Posted:

புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் நீண்ட துாரம் உள்ள வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, தற்போது பயன்படுத்தும், 'போயிங் - 747' ரக விமானங்களுக்கு பதிலாக, புதிய விமானங்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.போயிங் 747:ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள், நீண்ட துாரம் உள்ள வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு, போயிங் - 747 என்ற ஏர் - இந்தியா விமானம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளாக, இந்த விமானம் தான், பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு நடவடிக்கைகளை ஏர் - இந்தியா விமான ...

என்னை திட்டுவதில்தான் முதல்வர் அக்கறை காட்டுகிறார்

Posted:

சென்னை: 'முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு பயந்து என்னை திட்டுவதில்தான், அக்கறை காட்டி வருகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறிஉள்ளார்.இது தொடர்பான, அவரது அறிக்கை:எதற்கும் வாய் திறக்காத, இந்நாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தோட்டத்தில் முன்னாள் முதல்வரை சந்தித்தபோது, வாங்கிக் கட்டிக் கொண்ட காரணத்தினாலோ, என்னவோ, என்னை திட்டி அறிக்கை விடுவதில் மட்டும் அக்கறை காட்டி வருகிறார்.கிரானைட் முறைகேட்டை சட்டப்பூர்வமாக தகர்த்தெறிய தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும், ஜெயலலிதா எடுத்தார் என, தன் அறிக்கையில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அப்படி ...

இந்திய அமெரிக்க வேட்பாளருக்கு மிச்சேல் பிரசாரம்

Posted:

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெறும் பொதுத் தேர்தலில், 25க்கும் மேற்பட்ட இந்தியர்கள், பிரதிநிதிகள் சபை, செனட் சபை, கவர்னர் பதவி, மாகாண மக்கள் பிரதிநிதிகள், மேயர் போன்ற பல பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.அவர்களில், சவுத் கரோலினா கவர்னராக இருக்கும் இந்திய வம்சாவளி பெண், நிக்கி ஹாலே, எம்.பி., அமி பேரா போன்றோரின் வெற்றி, உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனநாயக கட்சியை சேர்ந்த, அதிபர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவில், பார்லிமென்டின் ஒரு சபையான, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்கள், மொத்தம், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் ...

மோடி- ஒபாமா மீண்டும் சந்திக்க வாய்ப்பு !

Posted:

வாஷிங்டன் : இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் இடையே மீண்டும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு வாய்ப்பு இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒபாமா சுற்றுப்பயணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆறுநாட்கள் சுற்றுப்பயணமாக சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™