மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
- அரியானாவில் சாமியார் ஆசிரமத்தில் 10 ஆயிரம் லத்திகள், புல்லட்–புரூப் உடைகளும் சிக்கின
- மோடியின் சுத்தப்படுத்தும் திட்டத்தை ஆதரித்து ரெயில் பெட்டிகளில் குப்பை தொட்டி வைக்கப்படுகிறது
- அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஜப்பான் புறப்பட்டார்
- ஐதராபாத் விமான நிலையத்தில் என்.டி.ராமராவ் பெயர் சூட்டியதை எதிர்த்து வழக்கு: காங்கிரஸ் அறிவிப்பு
- கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்கியதில் முறைகேடு: 300 நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு விசாரணை
- பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: கேரளாவில் கொண்டாட்டம்
- பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக 8500 புள்ளிகளை தொட்டது நிப்டி
- முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்
- சென்டிரல் குண்டு வெடிப்பு: கைதான 3 தீவிரவாதிகளிடம் சிறப்பு புலனாய்வு தீவிர விசாரணை
- ராணுவம் தொடர்பான பிரச்சினைகளில் தவறு நடப்பதை சகிக்க முடியாது: மத்திய மந்திரி எச்சரிக்கை
- 43 நாடுகளின் பயணிகளுக்கு இணையதளம் மூலம் விசா பெறும் வசதி: மத்திய சுற்றுலா அமைச்சகம்
- காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்
- சி.பி.ஐ.க்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை
- சாமியார் ராம்பாலை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை
- பிரதமர் நரேந்திர மோடி நாளை காட்மாண்டு பயணம்
- ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்: பா.ஜனதா மீது சோனியா காந்தி தாக்கு
- நண்டு பிடிக்கச் சென்ற வாலிபரை புலி இழுத்துச் சென்றது
- ஒடிசாவில் பாலம் அருகே 20 மனித மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையருகே ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல்
| கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி Posted: 23 Nov 2014 10:44 PM PST ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா ஆகியோருக்கு 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கை இனிதாக சென்றுகொண்டிருந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சுனிதா. |
| அரியானாவில் சாமியார் ஆசிரமத்தில் 10 ஆயிரம் லத்திகள், புல்லட்–புரூப் உடைகளும் சிக்கின Posted: 23 Nov 2014 10:36 PM PST அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்தியலோகம் எனும் ஆசிரமம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மக்களை சாமியார் ராம்பால் என்பவர் ஈர்த்திருந்தார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரை ஆஜர் ஆகும்படி |
| மோடியின் சுத்தப்படுத்தும் திட்டத்தை ஆதரித்து ரெயில் பெட்டிகளில் குப்பை தொட்டி வைக்கப்படுகிறது Posted: 23 Nov 2014 10:30 PM PST பிரதமர் நரேந்திரமோடி,. பொது இடங்களை மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ''கிளீன் இந்தியா'' எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பிரபலங்கள் உதவியுடன் சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்கிடையே மோடியின் சுத்தப்படுத்தும் திட்டத்தை பயணிகள் ரெயில் பெட்டிகளிலும் நடை முறைப்படுத்த ரெயில்வே அமைச்சகம் |
| அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஜப்பான் புறப்பட்டார் Posted: 23 Nov 2014 09:40 PM PST ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜய வாடா–குண்டூர் இடையே அமைக்கப்பட இருக்கிறது. புதிய தலைநகர் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நுட்ப உதவியுடன் நவீன வசதிகளுடன் அழகுற அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதற்காக தொழில் முனைவர்களை ஈர்க்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் மலேசியா சென்றார். |
| ஐதராபாத் விமான நிலையத்தில் என்.டி.ராமராவ் பெயர் சூட்டியதை எதிர்த்து வழக்கு: காங்கிரஸ் அறிவிப்பு Posted: 23 Nov 2014 09:21 PM PST ஐதராபாத் சம்சாபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு ராஜீவ்காந்தி பெயர் இருந்தது. இந்த பெயரை மாற்றி என்.டி.ராமராவ் பெயரை சூட்டி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தெலுங்கானா முதல்–மந்திரி சந்திர சேகரராவ் உள்பட |
| கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்கியதில் முறைகேடு: 300 நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு விசாரணை Posted: 23 Nov 2014 09:19 PM PST டெல்லி மாநிலத்தில் உள்ள கீழ்கோர்ட்டு நீதிபதிகள் தங்களது கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் ஐ பேடுகளை ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்திக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நீதிபதிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. |
| பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: கேரளாவில் கொண்டாட்டம் Posted: 23 Nov 2014 09:00 PM PST கத்தோலிக்க திருச்சபையில் ஏசுவின் போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று அவர்களுக்காக உழைப்பவர்கள் இதற்காக நிறுவப்பட்டுள்ள மடங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். |
| பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக 8500 புள்ளிகளை தொட்டது நிப்டி Posted: 23 Nov 2014 08:41 PM PST வழக்கமான விடுமுறை தினத்திற்கு பின் இன்று காலை பங்குச்சந்தை வழக்கம் போல் துவங்கியது. தொடக்கம் முதலே மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் விலை உயர்வை சந்தித்தது. பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக தேசிய பங்குச்சந்தை நிப்டி |
| முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார் Posted: 23 Nov 2014 08:29 PM PST முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து |
| சென்டிரல் குண்டு வெடிப்பு: கைதான 3 தீவிரவாதிகளிடம் சிறப்பு புலனாய்வு தீவிர விசாரணை Posted: 23 Nov 2014 07:29 PM PST சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த மே மாதம் 1-ந் தேதி, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்ற பெங்களூர் ரெயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திர மாநிலம் குண்டக்கல்லை சேர்ந்த சுவாதி (வயது 24) என்ற என்ஜினீயர் பலியானார். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். |
| ராணுவம் தொடர்பான பிரச்சினைகளில் தவறு நடப்பதை சகிக்க முடியாது: மத்திய மந்திரி எச்சரிக்கை Posted: 23 Nov 2014 07:25 PM PST இந்திய கடற்படையின் கடல் சார் பாதுகாப்புக்கான அதிநவீன தகவல் மேலாண்மை மற்றும் பகுத்தாய்வு மையத்தின் தொடக்கவிழா நேற்று குர்கானில் நடந்தது. இதில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- |
| 43 நாடுகளின் பயணிகளுக்கு இணையதளம் மூலம் விசா பெறும் வசதி: மத்திய சுற்றுலா அமைச்சகம் Posted: 23 Nov 2014 07:18 PM PST வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இணையதளம் மூலம் விசா பெறும் வசதியை இந்திய சுற்றுலாத் துறை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து மத்திய சுற்றுலாத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- |
| Posted: 23 Nov 2014 06:56 PM PST காஷ்மீர் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதற்கு இடையூறு செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து குப்வாரா மாவட்டத்திற்குட்பட்ட |
| சி.பி.ஐ.க்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை Posted: 23 Nov 2014 06:52 PM PST தற்போது சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்து வரும் ரஞ்சித் சின்காவின் பதவி காலம் அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய இயக்குனரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. |
| சாமியார் ராம்பாலை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை Posted: 23 Nov 2014 06:46 PM PST அரியானா மாநிலம் சார் மாவட்டத்தில் சத்லோக் ஆசிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). கடந்த 2006-ம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. |
| பிரதமர் நரேந்திர மோடி நாளை காட்மாண்டு பயணம் Posted: 23 Nov 2014 03:21 PM PST சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) காட்மாண்டு புறப்பட்டு செல்கிறார். 18-வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் இந்த |
| ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்: பா.ஜனதா மீது சோனியா காந்தி தாக்கு Posted: 23 Nov 2014 01:55 PM PST ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த சோனியாகாந்தி, பாரதிய ஜனதா மீது குற்றம் சாட்டினார் 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. |
| நண்டு பிடிக்கச் சென்ற வாலிபரை புலி இழுத்துச் சென்றது Posted: 23 Nov 2014 07:18 AM PST மேற்கு வங்காள மாநிலத்தின் சுந்தரவனம் காட்டுப்பகுதி வழியாக பாயும் ஒரு ஓடையில் இன்று பிற்பகல் 3 நண்பர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காட்டுப் புதர்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஓடையை நெருங்கிவந்த ஒரு புலி தினேஷ் மொண்டல்(23) என்ற வாலிபரின் மீது |
| ஒடிசாவில் பாலம் அருகே 20 மனித மண்டை ஓடுகள் கண்டெடுப்பு Posted: 23 Nov 2014 07:09 AM PST ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் குஸபத்ரா என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆறு ஓடும் புரி- கொனார்க் சாலையில் ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழே 20 மனித மண்டை ஓடுகள் மற்றும் 3 எருமை மாடு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த மண்டை ஓடுகள் கருப்பு நிறத்தில் காணப்பட்டது. மண்டை ஓடுகளுடன் சில பூஜைப்பொருட்களும் காணப்பட்டன. ஆற்றில் தண்ணீர் வற்றியதால் வெளியே தெரியவந்துள்ளது |
| இந்தியா-பாகிஸ்தான் எல்லையருகே ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 23 Nov 2014 06:51 AM PST பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையருகே சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இங்குள்ள பரேக்கே பகுதி கண்காணிப்பு கோபரத்தில் இன்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |