Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்கேட்டிங் வாலிபர் மீது கார் மோதி விபத்து: வாலிபர் உயிர் ஆபத்தான நிலையில்!

Posted: 23 Nov 2014 09:58 PM PST

scating

scatingடொரண்டொ சாலையில் ஸ்கேட்டிங்கில் சென்று கொண்டிருந்த ஒசாவவைச் சேர்ந்த 20 வயது வாலிபர் மீது டாக்ஸி ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டொரண்டோவில் உள்ள King Street East, near Wilson Road, என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சாலையில் ஸ்கேட்டிங் பழகிக்கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது மிக வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோதியதால் அந்த வாலிபர் தூக்கியெறியப்பட்டார். அவருடைய ஸ்கேட்டிங் முற்றிலும் உடைந்துபோனது. கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபோது, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஸ்கேட்டிங் வாலிபரை மோதிய காரை 71 வயதுள்ள ஒரு நபர் ஓட்டிக்கொண்டு வந்ததாகவும், அவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக King Street East பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டமை குறிப்பிடதக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் பெருந்திரளில் இணைவோம்!

Posted: 23 Nov 2014 09:51 PM PST

DS

DSகனடாவில் தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம்! பிறம்ரன் தமிழ் ஒன்றியம், மிசிசாகா தமிழ் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட வயிற்றுவலி: ரகசியம் சொல்கிறார் சச்சின்

Posted: 23 Nov 2014 01:41 AM PST

sachin

sachinஇலங்கைக்கு எதிராக 2003ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியின் போது தான் எதிர்கொண்ட தர்ம சங்கடமான நிலை பற்றி சச்சின் கூறியுள்ளார். சச்சின் தனது சுயசரிதையில் பல சுவாரஸ்யமான விடயங்களை கூறியுள்ளார். அதே போல் 2003ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்-6 சுற்றில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் பற்றி தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள அந்த சுவாரஸ்யமான விடயம் வருமாறு:- இதை சொல்லவே கொஞ்சம் தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆட்டத்திற்கு முன்பாக எனக்கு திடீரென கடுமையாக வயிற்று போக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு அதில் இருந்து ஓரளவு தான் குணமடைந்து இருந்தேன். அதற்குள் வயிற்று கோளாறு பிரச்சினை வந்து விட்டது. இதனால் அதிகமான 'இஸ்டோனிக்' பானங்களை அருந்தினேன். மேலும் சக்தி அளிக்கும் பானத்துடன் உப்பு கலந்தும் குடித்து பார்த்தேன். ஆனால் வயிற்று வலி தணியவில்லை. இதனால் வேறு வழியின்றி துடுப்பெடுத்தாட களமிறங்கிய போது, எனது உள்ளாடைக்குள் 'டிஷ்யூ பேப்பர்' வைத்துக் கொண்டேன். ஆனாலும் களத்தில் என்னால் சவுகரியமாக செயல்பட முடியவில்லை. எப்படியோ இந்த ஆட்டத்தில் 97 ஓட்டங்கள் (120 பந்து) எடுத்து விட்டேன். வயிற்று வலியுடன் விளையாடியது மோசமான ஒரு அனுபவமாகும். எனது திறமையை குறிப்பிட்ட அளவுக்கு தான் வெளிப்படுத்த முடிந்தது. இருப்பினும் நல்ல பலன் கிடைத்தது. அந்த போட்டியில் இந்தியா 183 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலிடத்தை பிடிக்க காத்திருக்கும் சானியா மிர்சா!

Posted: 23 Nov 2014 01:39 AM PST

sania_mirza

sania_mirzaடென்னிஸ் இரட்டையர் உலகத்தர வரிசையில் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என இந்திய டென்னிஸின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட சானியா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் டென்னிஸ் இரட்டையர் உலகத்தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெறுவதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே குறிப்பாக, பெண்களிடையே விளையாட்டைப் பற்றிய உத்வேகத்தை ஏற்படுத்த இந்தியா இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால், முந்தைய நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை தங்களுக்கு பிடித்தமான துறையாக பெண்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இன்னும் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நான் நம்புகிறேன்.

தங்கள் மகள்களும் தொழில் ரீதியான விளையாட்டு வீராங்கனைகளாக வருவார்கள் என்று அவர்களது பெற்றோர்கள் நம்புவதற்கு, நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் டென்னிஸை தேர்ந்தெடுக்கவில்லை. அது எனது நோக்கமாக இருந்தது.

இந்த துறைக்கு நான் வந்த ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு, அவற்றை எல்லாம் கடந்து, வெற்றிகரமாக முன்னேறி வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க குடியரசு கட்சி எச்சரிக்கை: ஒபாமாவுக்கு எதிராக போராடுவோம்!

Posted: 23 Nov 2014 01:32 AM PST

obama

obamaஅமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் தொடர்பில் ஜனாதிபதி பராக் ஒபாமா புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த புதிய நடைமுறைக்கு அமெரிக்க குடியரசு கட்சி கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் அறிவித்தார். இது குறித்து அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான போஹ்னர் கருத்து வெளியிடுகையில், சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பதென்பது இரு கட்சிகளும் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவுகளை பயனற்றதாக்கும் செயலாகும். இந்த விஷயத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வராமல் ஒபாமா தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார். இது எதிர்காலத்தில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும். இந்த பிரச்சினையில் தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான குடியரசு கட்சியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விரும்பவில்லை. ஒபாமாவின் இந்த அறிவிப்பை எதிர்த்து குடியரசு கட்சி எம்.பி.க்கள் நிச்சயமாக போராடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

செல்பி எடுத்து குழந்தைக்கு பால் கொடுப்பதை வெளியிட்ட நடிகை

Posted: 23 Nov 2014 01:28 AM PST

fedding_selfie

fedding_selfieஅமெரிக்க நடிகை ஒருவர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல எடுக்கப்பட்ட செல்பியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை அலீசா மிலானா, சமீபத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போஸ் கொடுத்ததாக அலீசா கூறினாலும் இந்த புகைப்படத்தில் ஆபாசமே மிஞ்சியிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து அலீசா கூறியதாவது, கிம் கர்தஷியன் நிர்வாணமாக போஸ் கொடுப்பதையே இரசிக்கும் அமெரிக்கர்கள் என்னுடைய இந்த போஸை மட்டும் ஏன் குறை கூறுகின்றனர். காசு வாங்கிக்கொண்டு போஸ் கொடுத்த கிம்தர்ஷனை இரசிக்கும் மக்கள் ஒரு விழிப்புணர்ச்சிக்காக நான் கொடுத்த போஸை விமர்சிப்பது முட்டாள்தனம் எனக் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எவரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கப் போவதில்லை! ஜனாதிபதி மஹிந்த

Posted: 23 Nov 2014 01:23 AM PST

rajapaksa

rajapaksaஅரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் செய்தாலும் அவர்களை நாங்கள் ஓரம் கட்டி விடுவோம். அதிகாரத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 ஆக காணப்பட்டது. எனினும் தற்போது இந்த எண்ணிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 127 ஆக உயர்வடைந்துள்ளது. நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் மொத்த எண்ணிக்கை 161 ஆக காணப்படுகின்றது. இதில் ஒரு சிலர் அண்மையில் சென்று விட்டனர். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியினால் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல் ஏற்பட்டமைக்கான காரணம், நாம் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. நாம் எவரையும் பழிவாங்கவில்லை என்ற காரணத்தினால் இவ்வளவு பேர் இணைந்து கொண்டுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணம் தெதுருஓயாவில் நடைபெற்ற நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய கட்சி அரசியலுக்கு பதிலாக அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படும்: ரணில்

Posted: 23 Nov 2014 01:18 AM PST

Ranil

Ranilகட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட அதிகாரசபை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உற்பட ஏனைய அரசியல் கட்சிகளை சம்பந்தப்படுத்தி புதிய ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எண்ணியிருந்தது. எனினும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பர்களின் விளையாட்டு எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பரிதாபம்?

Posted: 23 Nov 2014 01:10 AM PST

child-gun

child-gunவாசிங்டனில் 4-வயது சிறுவன் தன்னுடைய 3-வயது நண்பனான அயல்வீட்டு சிறுவனை எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இருவரும் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்து போது இச்சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராக விதமாக 3-வயது சிறுவனின் வாயில் சுடப்பட்டதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இரு நண்பர்களும் வீட்டு படுக்கை அறையில் விளையாடிக்கொண்டிருக்கையில் திடீரென பலத்த சத்தம் கேட்டதால் ஓடிச் சென்று பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சிறுவனின் வாயில் காயம் பட்டிருந்தது தெரிந்துள்ளது. கதவு இடித்திருக்கலாம் என தந்தை நினைத்துள்ளார். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயம் என உறுதிப்படுத்தினர். 4-வயது சிறுவன் எதிர்பாராக விதமாக 3-வயது சிறுவனை சுட்டிருக்லாம் ஆனால் சம்பவம் புலன்விசாரனை செய்யப்படுவதாக துப்பறிவாளர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சம்பந்தமாகவோ சிறுவர்கள் எங்கிருந்து துப்பாக்கியை எடுத்தனர் என்பது போன்ற விபரங்கள் தெரிய வரவில்லை. இரு குடும்பத்தினரும் விசாரனைக்கு ஒத்துழைக்கின்றனரென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொறொன்ரோ தெருக்கார் சுரங்கப்பாதைக்குள் சிக்கி கொண்ட சாரதி?

Posted: 23 Nov 2014 01:06 AM PST

car

carரொறொன்ரோ நகரத்திற்கு வெளியே இருந்து வந்த சாரதி ஒருவர் தனது வாகனத்தை தவறாக திருப்பியதால் வாகனம் ரொறொன்ரோ டவுன்ரவுனில் உள்ள தெருக்கார் சுரங்கப்பாதைக்குள் சிக்கி கொண்டது. வாகன சாரதி எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணித்து வாகனத்தை சுரங்கப்பாதைக்குள் ஓட்டிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது. வெளியிடத்திலிருந்து ரொறொன்ரோவிற்கு வந்த இந்த வாகன ஓட்டுநர் 510 ஸ்படைனா தெருக்கார்கள் யூனியன் ஸ்ரேசனுடன் தொடுக்கும் குயின்ஸ் குவே மற்றும் பே வீதிக்கு அருகாமையில் உள்ள சுரங்கப்பாதைக்குள் நுழைந்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 4.மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் சனிக்கிழமை காலை தெருக்கார் லைனின் ஒரு பகுதி முடப்பட்டது. நண்பகல் அளவில் பொலிசாரும் கட்டி இழுக்கும் டிரக்கும் சேர்ந்து வாகனத்தை வெளியே எடுத்தனர். கடந்த மாதங்களில் இத்தகைய சம்பவம் நடப்பது இது 3-வது தடவை என தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னரும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதற்கு ஓட்டுநர்களிற்கு இப்பகுதி பரிச்சயமற்றதாக இருந்தமை காரணமாகலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட மாட்டாதென தெரிவித்த பொலிசார் நெடுஞ்சாலை போக்குவரத்து சட்ட குற்றம் சுமத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™