மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மிஸ்டு கால் மூலம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை: இணையதளத்தில் விவரங்கள் பதிவு
- தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட காங். கட்சியின் ரூ.10 கோடி பணம் மாயம்
- திருப்பதி கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவன் கைது
- பத்திரிகையாளரின் மைக்கை தட்டிவிட்ட மருமகன் ராபர்ட் வதேராவை சந்தித்தார் சோனியா காந்தி
- ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்
- மும்பையில் காணாமல் போன 700 சிறுவர் சிறுமியர்களை கண்டுப்பிடிக்காத காவல் துறையினர்
- பா.ஜனதா அரசில் சிவசேனா சேரும்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் வீடுகளில் தான் நடக்கின்றன: ஆய்வில் தகவல்
- கோழிக்கோடு அருகே 2 மகன்களை கொன்று தமிழக டிரைவர் தற்கொலை
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியானது
- மது பார்களை திறக்க மந்திரி ரூ.5 கோடி கேட்டதாக புகார்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு
- வகுப்பு வாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 8-ந்தேதி முதல் இடதுசாரிகள் பிரசாரம்
- பாரதீய ஜனதா தலைவர் ஷாநவாஸ் உசேனுக்கு கொலை மிரட்டல்
- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படும்: ஸ்மிரிதி இரானி தகவல்
- காஷ்மீரில் சாலை மற்றும் ஏரி வழியாக சீன ராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள்
- கருப்பு பணம் விவகாரம்: அதிகாரபூர்வமற்ற பட்டியலை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும்-அருண் ஜெட்லி
- 5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு
- சென்னை-டெல்லி இடையே புல்லட் ரெயில்: ஆய்வுப்பணி சீனாவிடம் ஒப்படைப்பு
- இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா கடும் அதிர்ச்சி
- உ.பி.யில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த வகுப்புவாத கலவரங்களில் 336 பேர் பலி
| மிஸ்டு கால் மூலம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை: இணையதளத்தில் விவரங்கள் பதிவு Posted: 02 Nov 2014 10:19 PM PST பா.ஜனதா கட்சி விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும். |
| தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட காங். கட்சியின் ரூ.10 கோடி பணம் மாயம் Posted: 02 Nov 2014 10:03 PM PST மராட்டியத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்ய ஒரு தொகையை காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்தது. இந்த பணம் பல பகுதிகளுக்கும் பிரித்து எடுத்து செல்லப்பட்டன. |
| திருப்பதி கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவன் கைது Posted: 02 Nov 2014 09:41 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 38,292 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். |
| பத்திரிகையாளரின் மைக்கை தட்டிவிட்ட மருமகன் ராபர்ட் வதேராவை சந்தித்தார் சோனியா காந்தி Posted: 02 Nov 2014 09:28 PM PST அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது, சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு விதிமுறைகளை மீறி குறைந்த விலைக்கு நிலம் விற்கப்பட்டதாக கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்தது. |
| ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள் Posted: 02 Nov 2014 09:16 PM PST ஐதராபாத் தார்நாகா பகுதியில் இக்லு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31–ந்தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் தனது நண்பரை பார்க்க சென்றார். ஆனால் விடுதி அறையில் நண்பர் இல்லை. |
| மும்பையில் காணாமல் போன 700 சிறுவர் சிறுமியர்களை கண்டுப்பிடிக்காத காவல் துறையினர் Posted: 02 Nov 2014 09:13 PM PST தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, மும்பையில் 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் காணாமல் போன சுமார் 700 சிறுவர் சிறுமியர்களின் இருப்பிடத்தை காவல் துறையினர் இன்னும் கண்டறியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பா.ஜனதா அரசில் சிவசேனா சேரும்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை Posted: 02 Nov 2014 09:12 PM PST மராட்டிய சட்டசபையில் மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜனதாவுக்கு 121 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர சிறிய கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 12 பேரின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு உள்ளது. மேலும் 41 உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. |
| பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் வீடுகளில் தான் நடக்கின்றன: ஆய்வில் தகவல் Posted: 02 Nov 2014 08:42 PM PST அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்கள் அவர்களது வீட்டில் தான் அதிக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், கணவர் மற்றும் உறவினர்களால் அனுபவிக்கும் கொடுமை 38 சதவிகிதம் அளவிலும், பெண்களின் |
| கோழிக்கோடு அருகே 2 மகன்களை கொன்று தமிழக டிரைவர் தற்கொலை Posted: 02 Nov 2014 08:18 PM PST நெய்வேலியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். கார் டிரைவர். இவருக்கு 7 வயதிலும், 10 வயதிலும் 2 மகன்கள் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடீஸ்வரன் தனது 2 மகன்களுடன் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்றார். |
| ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியானது Posted: 02 Nov 2014 07:59 PM PST ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வரும் நவ. 25 முதல் டிச.20 வரை ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போட்டியிடும் 45 வேட்பாளர்கள் பட்டியலும், ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டியிடும் 63 |
| மது பார்களை திறக்க மந்திரி ரூ.5 கோடி கேட்டதாக புகார்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு Posted: 02 Nov 2014 07:26 PM PST கேரளாவில் நடந்து வரும் காங்கிரஸ் தலைமையிலான உம்மன்சாண்டி அரசு 2023-ம் ஆண்டுக்குள் கேரள மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர முடிவு செய்தது. இதற்காக மது விற்கப்படுவதை குறைப்பதற்காக ஒரு புதிய மது கொள்கையும் வகுக்கப்பட்டது. |
| வகுப்பு வாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 8-ந்தேதி முதல் இடதுசாரிகள் பிரசாரம் Posted: 02 Nov 2014 06:56 PM PST டெல்லியில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத், இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். |
| பாரதீய ஜனதா தலைவர் ஷாநவாஸ் உசேனுக்கு கொலை மிரட்டல் Posted: 02 Nov 2014 06:27 PM PST பாரதீய ஜனதா தலைவர் ஷாநவாஸ் உசேன் தனக்கு துபாயில் இருந்து டெலிபோனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நேற்று டெல்லி பாராளுமன்ற வீதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''துபாயில் இருந்து போனில் பேசிய மர்ம ஆசாமி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பிரதமர் நரேந்திர |
| மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படும்: ஸ்மிரிதி இரானி தகவல் Posted: 02 Nov 2014 06:14 PM PST கேரள மாநிலம் நெடும்பச்சேரியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) கருத்தரங்கின் நிறைவு விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்மிரிதி இரானி பேசியதாவது:- |
| காஷ்மீரில் சாலை மற்றும் ஏரி வழியாக சீன ராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள் Posted: 02 Nov 2014 06:00 PM PST இந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல் சம்பவங்கள் தற்போது நீர் வழியாகவும் நடக்க தொடங்கியுள்ளது. அதன்படி எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரி வழியாக சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. |
| கருப்பு பணம் விவகாரம்: அதிகாரபூர்வமற்ற பட்டியலை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும்-அருண் ஜெட்லி Posted: 02 Nov 2014 04:16 PM PST பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றியபோது, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார். |
| 5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு Posted: 02 Nov 2014 03:22 PM PST வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு தலா ரூ.20 |
| சென்னை-டெல்லி இடையே புல்லட் ரெயில்: ஆய்வுப்பணி சீனாவிடம் ஒப்படைப்பு Posted: 02 Nov 2014 02:18 PM PST அதிவேக புல்லட் ரெயில் என்பது இந்தியாவில் இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்த கனவு திட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரெயில் பட்ஜெட்டை தாக்கல் |
| இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா கடும் அதிர்ச்சி Posted: 02 Nov 2014 12:13 PM PST இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. |
| உ.பி.யில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த வகுப்புவாத கலவரங்களில் 336 பேர் பலி Posted: 02 Nov 2014 09:17 AM PST கலவரம் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு உள்துறைவிவகார அமைச்சகம் பதில் அளித்திருக்கிறது. அதில் கடந்த 2005 முதல் 2014 வரையில் நடந்த வகுப்புவாத கலவரங்களில் 336 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலங்களில் 1,271 |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |