Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பருவநிலை மாற்றம் குறித்து ஐநா குழு எச்சரிக்கை!

Posted: 02 Nov 2014 10:36 PM PST

images

imagesபுவி வெப்பமாதல், வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும் விதமாக ஆய்வறிக்கை ஒன்றை பருவநிலை மாற்றம் சம்பந்தமான ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயலே முக்கிய காரணம் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியின் வெப்பம் ஆபத்தை உண்டாக்கும் அளவில் அதிகரிப்பதை தடுக்க இந்த நூற்றாண்டில் உலகத்துக்கு தேவையான மின்சாரம் கரிம வெளியேற்றம் இல்லாத உற்பத்தி முறைகளிலிருந்து பெற வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை சமாளிக்க பெரும்பான்மை நாடுகள் தயாராகவே இல்லை என இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான புதிய உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை சர்வதேச நாடுகள் விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது. வெப்பநிலை மாற்றம் உலகம் முழுவதும் ஒரே அளவில் நடைபெறவில்லை. சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2030ம் ஆண்டு கார்பன்-டை-ஆக்ஸைடு உலகில் அதிகரிக்கும் என்கிறது. 2050ம் ஆண்டுக்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை அதிகரிக்க வேண்டும், இல்லையெனில் அதிக மோசமான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாக். எல்லையில் குண்டு வெடித்து 52 பேர் பலி!

Posted: 02 Nov 2014 10:27 PM PST

fire

fireபாகிஸ்தான் வாகா எல்லையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 52 பேர் உடல் சிதறி பலியாயினர். இந்தியா, பாகிஸ்தான் இடையே சாலை வழி எல்லையான வாகா பகுதியில் தினமும் இரு நாட்டு வீரர்களும் மாலை 6 மணி அளவில் தேசியக் கொடியை இறக்குவது வழக்கம். நேற்று இந்நிகழ்ச்சி முடிவடைந்த சிறிது நேரத்தில், பாகிஸ்தான் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. அப்பகுதியில் இருந்த குழந்தைகள், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 52 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் இருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. உடனடியாக, பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாகூரில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக வந்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. வாகாவில் நடந்துள்ள இச்சம்பவம் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வத்திக்கான் பிரதிநிதிகள் கோத்தபாயவை சந்திக்க உள்ளனர்!

Posted: 02 Nov 2014 10:09 PM PST

pope_francis

pope_francisவத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள், பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான ஆரம்ப கட்ட பணிகளை பூர்த்தி செய்வதே வத்திக்கான் பிரதிநிதிகளின் விஜயத்திற்கான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதேவேளை, வத்திக்கான் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்திக்க உள்ளனர். பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்து இந்த பிரதிநிதிகள் அமைச்சர் பீரிஸூடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாப்ரசரின் இலங்கை விஜயம் உறுதி எனவும் திட்டமிட்டபடி இந்த விஜயம் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷிராணிக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.நா. கேள்வி தொடுத்துள்ளது

Posted: 02 Nov 2014 10:04 PM PST

Shirani

Shiraniமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக அவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அரசாங்கம் அநீதியான முறையில் ஷிராணியின் பதவியைப் பறித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம், காலவரையறையற்ற தடுப்புக் காவல், சித்திரவதைகள் தொடர்பிலும் இந்த அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மூலமாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ISIS-ஐ இலக்கு வைத்து கனடாவின் முதலாவது போர்த்தாக்குதல்!

Posted: 02 Nov 2014 09:12 PM PST

jet

jetகனடிய CF-18s போர்விமானங்கள் ISIS ஐ இலக்கு வைத்து தங்களது முதலாவது போரை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தன. இதற்கு 500 தொன்கள் எடையுள்ள லேசர் உதவியுடனான குண்டுத்தாக்குதலை வலூஜா மற்றும் ஈராக் பகுதிகளில் நடாத்தியுள்ளது. இது ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல் எனவும் ஒக்டோபர் 30ந் திகதி ISIS-ற்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பின்னர் இடம்பெறும் முதலாவது தாக்குதல் எனவும் பாதுகாப்பு துறை அமைச்சர் றொப் நிக்கல்சன் ஞாயிற்றுகிழமை இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு நான்கு மணித்தியாலங்களிற்கு இடம்பெற்றதாகவும் இதில் கனடாவின் போலாரிஸ் விமானத்தில் இருந்து வானில் இருந்து விமானங்களிற்கு எரிபொருள் மாற்றும் நடவடிக்கையும் அடங்கியதெனவும் நிக்கல்சன் கூறியுள்ளார். ஏனைய நட்பு நாடுகளுடன் சேர்ந்து அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மனிதர்களிற்கு எதிராக ISIS-இனர் நடாத்தும் அட்டூழியங்களின் பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றதெனவும் கூறியுள்ளார் கடந்த ஒக்டோபர் மாதம் 30-ந்திகதியிலிருந்து 6- CF-18 Hornet போர்விமானங்கள் 2- CP-140 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் என்பன குவைத் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 600 கனடிய போர் வீரர்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா, யு.கே., யுஎஸ் மற்றும் சில வளைகுடா நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற கனடிய போர் விமானங்களும் அனுப்பபட்டுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™