Tamil Star |
- மீண்டும் விளையாடுவது சந்தேகம் : யுவராஜ் சிங் பேட்டி!
- விரைவில் நம்பர் 1 : சானியா நம்பிக்கை!
- கொடூர சாலை விபத்து சார்ஜாவில் : இந்தியர் உள்பட 4 பேர் பலி!
- அமெரிக்காவில் வினோதம்: ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத சிறுவன்!
- தேர்தல் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சு!
- தேர்தலை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: பொதுபல சேனா கருத்து!
- அமெரிக்காவில் விண்வெளிக்குப் புறப்பட்ட விண்கல ஏவுகணை வெடித்துச் சிதறியது!
- உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்!
| மீண்டும் விளையாடுவது சந்தேகம் : யுவராஜ் சிங் பேட்டி! Posted: 29 Oct 2014 04:29 AM PDT
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தாம் கடைசியாக விளையாடிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, தமது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடர் நாயகன் பட்டத்தை வென்ற இவர் பின்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிக்கிச்சை பெற்று திரும்பினார். அவர் அளித்த பேட்டியில்: அடுத்த உலக கோப்பை விளையாட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் என்று கூறினார். வாய்ப்பு கிடைத்தால் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடுவேன் என்று தமக்கு நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு கிடைக்காவிட்டால் தனது வாழ்க்கையை நோக்கி சென்றுவிடுவேன்' என்று கூறியுள்ளார். வாய்ப்பை இழந்தால் வருத்தத்தை தரும் அதனை ஏற்றுகொள்ள கஷ்டமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விரைவில் நம்பர் 1 : சானியா நம்பிக்கை! Posted: 29 Oct 2014 04:13 AM PDT
மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவுக்கான டபுள்யுடிஏ தரவரிசையில், விரைவில் முதலிடத்துக்கு முன்னேற முடியும் என்று நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான சீசனின் கடைசி போட்டியாக சிங்கப்பூரில் நடந்த டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரில் ஜிம்பாப்வே வீராங்கனை காரா பிளாக்குடன் இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில், ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சானியா இந்த வெற்றி குறித்து கூறியதாவது: உலக பைனல்ஸ் தொடரில் கோப்பை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் திருப்தி அடைகிறேன். இந்த வெற்றியால், எனது நீண்ட நாள் கனவான உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற அந்தஸ்தை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த சீசனில் அந்த லட்சியம் ஈடேறும் என நினைக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஒரே ஆண்டில் கிராண்ட் ஸ்லாம் பட்டம், தங்கப் பதக்கம் மற்றும் உலக பைனல்சில் சாம்பியன் என சிறப்பான வெற்றிகளைக் குவித்ததில் பெருமையடைகிறேன். காரா பிளாக்குடன் இணைந்து விளையாடிய கடைசி தொடரில் மிகப் பெரிய வெற்றியுடன் விடை பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் வாழ்த்தும் பாராட்டும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறு சானியா கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொடூர சாலை விபத்து சார்ஜாவில் : இந்தியர் உள்பட 4 பேர் பலி! Posted: 29 Oct 2014 04:04 AM PDT
சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது ராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்துப் போனார். உயரதிகாரிகளின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் தயாரானபோது, சீருடைகள் தன்னிடம் இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர் சலவைக்கு துணி போட்ட கடைக்கு போன் செய்தார். நள்ளிரவு சுமார் 2 மணி ஆனதால் கடை மூடப்பட்டிருக்கவே அதில் வேலை செய்யும் ஊழியர்களை தேடிச் சென்ற அவர் இருவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக ஓட்டும்படி டிரைவரிடம் கூறினார். அவசரமாக காரை ஓட்டிய டிரைவர், சார்ஜா விமான நிலையம் அருகே சாலையோரமாக பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்கத் தவறினார். லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிய கார் இரண்டு துண்டங்களாகியது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட இருவர் தலை துண்டிக்கப்பட்டு, கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர். ராணுவ அதிகாரி உள்பட பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் வினோதம்: ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத சிறுவன்! Posted: 29 Oct 2014 03:58 AM PDT
லான்டன் ஜோன்ஸ் எனும் 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் ஒழுங்காக சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் உள்ளார். தொடர்ந்து பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட லான்டனின் நிலை குறித்து கவலையடைந்த அவரது பெற்றோர் பல மருத்துவமனைக்கு சென்றும் பயனில்லாமல் போனது. அமெரிக்காவில் உள்ள ஐந்து நகர மருத்துவமனைகளில் லான்டனை பரிசோதித்த மருத்துவர்களால் சிறுவனின் உடலில் எந்த பாதிப்பு என கண்டறிய இயலவில்லை. கடந்த ஆண்டு சுறுசுறுப்பான மாணவனாக விளையாடிக்கொண்டிருந்த லான்டனால் இப்போது பள்ளிக்கு கூட ஒழுங்காக செல்ல முடியாமல் நாள் முழுவதும் சோபாவில் சோர்வாக படுத்திருக்கும் நிலை உள்ளது. லான்டனை பரிசோதித்த குழந்தை நரம்பியல் நிபுணர் மார்க் பாட்டர்சன், உலகிலேயே லான்டனுக்கு மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தல் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சு! Posted: 29 Oct 2014 02:21 AM PDT
இலங்கை தேர்தல் திணைக்களத்தின் அதிகாரமிக்க உயர் அதிகாரி ஒருவருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய பேச்சு வார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தாமரை தடாகம் மகிந்த ராஜபக்ஷ அரங்கில் உள்ள இரகசியமான அறையில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் ஆகியோருடன் இந்த இரகசியமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த இரகசிய பேச்சுவார்த்தை கடந்த 26 ஆம் திகதி நடந்துள்ளது. அன்று நடைபெற்ற அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் மாநாட்டின் போது ஜனாதிபதியுடன் தேர்தல் திணைக்களத்தின் மேற்படி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் பல அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போதிலும் இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் அவர்கள் எவரும் இணைத்து கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனாதிபதி உள்ளிட்டோரும் குறித்த தேர்தல் திணைக்கள அதிகாரியும் ஒட்கா மதுபானம் அருந்தி போதையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றிய தகவல்கள் கசியவில்லை. எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக மிக முக்கியமான இறுதி தீர்மானங்களை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தலை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: பொதுபல சேனா கருத்து! Posted: 29 Oct 2014 02:17 AM PDT
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டதில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடன் வாங்கி அவுஸ்திரேலிய அப்பிள் சாப்பிடும் வரவு செலவுத் திட்டமே அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையே முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜனாதிபதி தேர்தல் என்ற போர்வையில் அரசாங்கம் நாட்டை பாதாளத்தில் தள்ள முயற்சிக்கின்றது. சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி ஜனாதிபதி ஆக எவரேனும் நினைத்தால் அது வெறும் கனவு மட்டுமே. இதற்கு முன்னர் நடைபெற்ற சகல ஜனாதிபதி தேர்தல்களிலும் சிங்கள பௌத்த மக்கள் ஏமாற்றப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிருளப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் விண்வெளிக்குப் புறப்பட்ட விண்கல ஏவுகணை வெடித்துச் சிதறியது! Posted: 29 Oct 2014 02:10 AM PDT
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர களஞ்சியப் பொருட்களோடு விண்வெளி நோக்கி புறப்பட்ட வேளை இடம்பெற்ற தொழிநுட்ப கோளாறு காரணமாக அன்டரஸ் என பெயரிடப்பட்ட ஆளில்லா விண்கல ஏவுகணை வெடித்துச் சிதறியுள்ளது. சுமார் 2200 கிலோ எடையுடன் புறப்பட்ட வேளையில் இன்று அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்! Posted: 29 Oct 2014 02:06 AM PDT
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக்கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது. இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள். சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை 'வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்' என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











