மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கடலில் குளித்த கோவை என்ஜினீயரிங் மாணவர் சாவு
- மின்சாரம் தாக்கி தாய்–மகன் பலி: திருப்பதி கோவில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு
- திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ பிரசாரம் செய்த 6 பேர் மீது நடவடிக்கை: ஆந்திர மந்திரி உத்தரவு
- ஐ லவ் யூ ஹூட் ஹூட்: பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்தவர் கைது
- கேரளாவில் கனமழை: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
- சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மேலும் ரூ.60 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
- மராட்டிய புதிய முதல்–மந்திரி நாளை பதவி ஏற்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
- யாரும் ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தல்? மத்திய அரசு முடிவு
- தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கைகளை பரபரப்பு ஆக்கக் கூடாது: அருண் ஜெட்லி பேச்சு
- என் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு
- கருப்பு பணம் குறித்து மும்பையில் 90 பேருக்கு எதிராக விசாரணையை தொடங்குகிறது வருமான வரித்துறை
- நிலோபர் புயல் தாக்குகிறது: குஜராத்தில் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
- ஆந்திராவில் மணல் குவாரி நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி
- 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்
- ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்
- மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் விபத்தில் பலியானதை கண்ட சிறுமி மாரடைப்பால் மரணம்
- காஷ்மீர்: என்கவுண்ட்டரில் 3 போராளிகள் கொல்லப்பட்டனர்
- டெல்லியில் புதிய ஆட்சி: அனைத்து கட்சி கூட்டத்துக்கு கவர்னர் அழைப்பு
- சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது
- உலகின் முதல் சூரியசக்தி விமானம் வாரணாசி வருகிறது
| கடலில் குளித்த கோவை என்ஜினீயரிங் மாணவர் சாவு Posted: 29 Oct 2014 10:55 PM PDT கோவையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் அருண்(வயது 21). கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள எரியாடு பகுதியில் அருணின் நண்பர் திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அருண் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் நேற்று கொடுங்கலூர் சென்றனர். மாலை 5 மணி அளவில் அனைவரும் எரியாடு |
| மின்சாரம் தாக்கி தாய்–மகன் பலி: திருப்பதி கோவில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு Posted: 29 Oct 2014 10:51 PM PDT திருவள்ளூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 30). இவரது ஒரு வயது மகன் மகேஷ். லட்சுமி தனது மகன் மகேசுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். இலவச தரிசனத்தில் அவர் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றார். |
| திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ பிரசாரம் செய்த 6 பேர் மீது நடவடிக்கை: ஆந்திர மந்திரி உத்தரவு Posted: 29 Oct 2014 10:49 PM PDT திருப்பதி கோவிலில் பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபடும் அகிலாண்டம் பகுதி அருகே இந்து மத பிரசாரம் நடந்தது. அமெரிக்காவை சேர்ந்த செயின்ட் இன்டர்நேஷனல் பார்ட்னர் என்ற அமைப்பின் தேசிய இயக்குனர் சுதிர்முண்டிதோக்கா மற்றும் 5 பேர் கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்களின் அமைப்பு பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. |
| ஐ லவ் யூ ஹூட் ஹூட்: பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்தவர் கைது Posted: 29 Oct 2014 10:09 PM PDT ஆந்திராவை கடந்த 12 ஆம் தேதி தாக்கிய ஹூட் ஹூட் புயல் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்புயலின் கோர பிடியில் விசாகப்பட்டினம் சிக்கி உருக்குலைந்த நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அருண்டால்பெட்டைச் சேர்ந்த சகந்தி ராகுல் ரெட்டி என்னும் நபர் தனது பேஸ்புக் பக்கத்தில், 'ஐ லவ் யூ ஹூட் ஹூட், இயற்கை குறிப்பாக ஏமாற்றியவர்களை தண்டித்ததற்காக. கடவுள் |
| கேரளாவில் கனமழை: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி Posted: 29 Oct 2014 09:52 PM PDT கேரள மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், ஆழப்புளா, பத்தனம்திட்டா, வயநாடு, கொச்சி, கோவளம், விழிஞ்சம், கொல்லம் போன்ற இடங்களில் கன மழை பெய்தது. திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியில் காணி ஆதிவாசிகள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு 19–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பெய்த கனமழை காரணமாக |
| சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மேலும் ரூ.60 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை Posted: 29 Oct 2014 05:14 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம் ஆனது. அசாம், ஒடிசா மாநிலங்களிலும் இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. |
| மராட்டிய புதிய முதல்–மந்திரி நாளை பதவி ஏற்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 29 Oct 2014 05:04 PM PDT மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவை பெறுவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக |
| யாரும் ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தல்? மத்திய அரசு முடிவு Posted: 29 Oct 2014 02:59 PM PDT ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள டெல்லி மாநில சட்டசபையை கலைக்க கோரி ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்–மந்திரியுமான கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக |
| தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கைகளை பரபரப்பு ஆக்கக் கூடாது: அருண் ஜெட்லி பேச்சு Posted: 29 Oct 2014 12:43 PM PDT டெல்லியில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| என் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு Posted: 29 Oct 2014 11:13 AM PDT விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்தது தொடர்பாக சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துகள், அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க |
| கருப்பு பணம் குறித்து மும்பையில் 90 பேருக்கு எதிராக விசாரணையை தொடங்குகிறது வருமான வரித்துறை Posted: 29 Oct 2014 10:26 AM PDT கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள மும்பை நகரை சேர்ந்த 90 நபர்களில் கணக்கில் குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளதாக என்பதை அறிய விசாரணை நடத்த முதல்கட்ட நடவடிக்கையை மும்பை வருமானவரித்துறை விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள |
| நிலோபர் புயல் தாக்குகிறது: குஜராத்தில் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் Posted: 29 Oct 2014 03:45 AM PDT அரபிக் கடலின் மத்திய மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிலோபர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதி தீவிரமாக மாறியுள்ள இந்த புயல் தற்போது குஜராத் அருகே நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி குஜராத்தின் நலியா நகருக்கு தென் மேற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் வடக்கு– வட கிழக்கு நோக்கி நகர்கிறது. |
| ஆந்திராவில் மணல் குவாரி நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி Posted: 29 Oct 2014 03:45 AM PDT மணல் கொள்ளையர்களுக்கு முடிவுகட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தின் அரசு புதிய சுரங்கம் மற்றும் கணிமவள கொள்கையை வகுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 80 மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 'மணல் மாஃபியா' கும்பல், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஒரு டன் மணலை 24 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி விற்று வருகின்றன. இந்த பகல் கொள்ளைக்கு முடிவு கட்டவும், மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணல் குவாரிகளை நடத்துவதற்கான குத்தகை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. |
| 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர் Posted: 29 Oct 2014 03:20 AM PDT டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர். குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் |
| ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண் Posted: 29 Oct 2014 02:59 AM PDT அலகாபாத்தில் இருந்து டெல்லி செல்ல வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த பெண் ஒருவர் ராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அலகாபாத்திலிருந்து திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்ற 28 வயது |
| மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் விபத்தில் பலியானதை கண்ட சிறுமி மாரடைப்பால் மரணம் Posted: 29 Oct 2014 02:55 AM PDT பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் இன்று பேல் பிமா கிராமம் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே ஓடிய நாயின் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வலதுபுறமாக திருப்பியபோது, எதிர்திசையில் இருந்து வேகமாக வந்த டிராக்டரின் மீது அந்த மோட்டார் சைக்கிள் பயங்கர சத்தத்துடன் மோதியது. |
| காஷ்மீர்: என்கவுண்ட்டரில் 3 போராளிகள் கொல்லப்பட்டனர் Posted: 29 Oct 2014 02:08 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதப் போராளிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, நேற்று காலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் போராளிகள் தங்களது பதுங்குமிடத்தில் இருந்து வெளியேவந்து, துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். |
| டெல்லியில் புதிய ஆட்சி: அனைத்து கட்சி கூட்டத்துக்கு கவர்னர் அழைப்பு Posted: 29 Oct 2014 01:45 AM PDT டெல்லியில் பிப்ரவரி 17–ந்தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் சட்டசபையை கலைக்க உத்தரவிடக்கோரி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். |
| சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது Posted: 29 Oct 2014 01:26 AM PDT 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூ.43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. |
| உலகின் முதல் சூரியசக்தி விமானம் வாரணாசி வருகிறது Posted: 29 Oct 2014 12:44 AM PDT சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமானம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்ட 'உலகை சுற்றி வரும் சூரிய சக்தி விமான' பரிசோதனையின் ஒரு பகுதியாக இந்த விமானம் இந்தியாவில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |